உக்ரைனின்
டெல்டா முறைமை என்பது போரில் பாவிக்க உருவாக்கப்பட்ட மென்பொருள் அல்லது செயலி. இது
உக்ரேனின் இலத்திரனியல் போரியலின் வளர்ச்சியின் முக்கிய பகுதியாகும். இது முதலில் போர்க்கள
எண்மிய வரைபடச் செயலியாக அதாவது digital map ஆகத் தொடங்கப்பட்டுப் படிபடியாக வளர்ச்சியடைந்துள்ளது.
இது எதிரியின் படைக்கலச் சொத்துக்களின் இருப்பிடங்களை வரைபடமாக்குகிறது. பல்வேறு பிரிவுகளின்
இயக்கங்களையும் போர்முனையில் நடக்கும் செயற்பாடுகளையும் ஆளிலிகளின் செயற்பாடுகளையும்,
படைப்பிரிவுகளின் இயக்கங்களையும் கட்டளை நிலையங்களையும் ஒருங்கின்றது.
பின்னர்
இது ஒரு ஒருங்கிணைந்த கட்டளை அமைப்பாக வளர்ச்சியடைந்தது. இப்போது இது இரசிய இலக்குகளை
விரைவாக அடையாளம் காணவும் தாக்குதல்களை ஒருங்கிணைக்கவும் பேருதவியாக இருக்கின்றது.
2022இல் உக்ரேன் டெல்டா மூலம் ஒரு நாளைக்கு 1,500இற்கு மேற்பட்ட இரசிய இலக்குகளை அடையாளம்
கண்டது.
அமெரிக்காவின்
வலையமைப்பு-மையப் போர் முறைமை
உக்ரேனின்
டெல்டா முறைமை அமெரிக்கா 1990களில் உருவாக்கிய வலையமைப்பு-மையப் போர்முறைமையை Network-Centric Warfare (NCW) அடிப்படையாகக்
கொண்டது. அது தகவல் மேலாண்மையை பாவித்து அதை மேம்பட்ட போர்த் திறனாக மாற்ற முயன்றது.
Cloud
Based System
டெல்டா
முறைமையானது ஆளிலிகள் எனப்படும் ட்ரோன்கள், உணரிகள் என்ற சென்சார்கள், செயற்கைக்கோள்
தரவுகள் மற்றும் மனித அறிக்கைகளை தொடர்ச்சியாக
ஒன்று திரட்டிச் செயற்படும் கட்டளை-மற்றும்-கட்டுப்பாட்டுச் செயலியாகும். இது முகில்
தரவகத்தில் அதாவது cloud data centre செயற்படுகின்றது. இதற்கான வசதிகள் Starlink என்ற
செய்மதிச் தொடர்புச் சேவையைப் பயன்படுத்துகின்றது. இந்த தரவகம் இரசிய இணையவெளித் தாக்குதலில்
இருந்து தப்புவதற்காக உக்ரேன் நாட்டுக்கு வெளியே நிறுவப்பட்டுள்ளது
டெல்டா முறைமை சிறு
மடிக்கணினிகள் மற்றும் கைப்பேசிகளில் இயங்குகிற படியால் போர்க்களத்தில் முன்னணியில்
சிறு குழுக்களாகவும் தனித்தும் செயற்படும் படையினராலும் பாவிக்கக் கூடியதாக இருக்கின்றது.
டெல்டா முறைமையில் உள்ள தொகுதிகள்.
ஒவ்வொரு
தொகுயிலும் Kill Chain எனப்படும் இணையவெளிப் பாதுகாப்பு முறைமை உள்ளது.
தொகுதி-1:
Delta Monitor டெல்டா கணினித்திரை
எதிரி
நிலைகள், நட்பு பிரிவுகள், ட்ரோன் ஊட்டங்கள், செயற்கைக்கோள் படங்கள் மற்றும் சென்சார்
தரவுகளைக் காட்டும் நிகழ்நேர (live telecasting) புவியியல் வரைபட இடைமுகப்பு (Interface).
தொகுதி-2:
பணிக்கட்டுப்பாடு (Mission Control)
இது ஆளிலிகளின்
செயற்பாடுகளை ஒருங்கிணைக்கவும் கட்டுப்படுத்தவும்
2026 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு ஆளிகள் பதிவு செய்யும் படங்களையும்
காணொலிகளையும் திரட்டி அறிக்கையாக கொடுக்க வல்லது. 2026 ஜூன் மாதத்தில் மட்டும், டெல்டா
உக்ரேன் செய்த 200,000 ஆளிலித் தாக்குதல்களைப் பதிவு செய்தது
தொகுதி-3:
பதிலடித் தொகுதி
இது நாள்தோறும்
75,000இற்கும் அதிகமான காணொலிகளையும் படங்களையும் நுண்ணோக்கு (Scan) செய்து எதிரியின்
போர்த்தாங்கிகள் பீராங்கிகள், பதுங்குகுழிகள் போன்றவற்றை இருப்பிடங்களை துல்லியமாக
அறிந்து கொள்கின்றது.
தொகுதி-4
Target Hub:
DELTA
அமைப்பில் Target Hub எனப்படும் தொகுதி எதிரியின் படை அலகுகளின் இருப்பிடத்தை நேரடியாக எண்மிய (டிஜிட்டல்) வரைபடத்தில் அடையாளமிட்டு
அவற்றின் மீதான தாக்குதல் பணிகளை ஒதுக்குகிறது.
இது தாக்கப்படவேண்டிய இலக்குகளைக் கொண்ட பட்டியல்களை உருவாக்குகிறது. தாக்குதல்களுக்கான பணிகளை வழங்கல், மற்றும் அலகுகளுக்கிடையில் தரவை பரிமாற்றத்திற்கு உதவுகிறது.
டெல்டா முறைமை உருவான பின்னர் எதிரியின் இடமறிந்து தாக்குதல் செய்ய மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் எடுக்கின்றன. அதற்கு முன்னர் 20நிமிடத்திற்கும் அதிக நேரம் எடுத்தது.
இந்த
முடுக்கம் உக்ரைனிய படைகள் கொடிய கொலை மண்டலங்களை உருவாக்க அனுமதிக்கிறது, அங்கு கண்காணிக்கப்படும்
பகுதிக்குள் நுழையும் ரஷ்ய பிரிவுகள் விரைவாகக் கண்டறியப்பட்டு, முன்னுரிமை அளிக்கப்பட்டு,
அவை சிதறவோ அல்லது அரண் அமைக்கவோ முடியும் முன் தாக்கப்படுகின்றன. இதனால் உக்ரேன் இரசியப்
போர் முனை ஒரு கொலைமண்டம் என அழைக்கப்படுகின்றது.
தரவு
மூலங்களை டெல்டா ஒருங்கிணைக்கிறது:
• வணிக
மற்றும் படையினரின் ஆளிலிகள்
• செயற்கைக்கோள்
படங்கள்
• தரையில்
உள்ள உணரிகள் (சென்சார்கள்)
•
GPS/இரசியாவின் GLONASS ஆகியவை மூலம் திரட்டப்படும் தகவல்கள்.
• நேட்டோ
நாடுகளிடமிருந்து கிடைக்கும் உளவுத்தகவல்கள்
• உக்ரேனிய
படைத்துறை அதிகாரிகளின் அறிக்கைகள்
இந்த
பல-மூல (multi-source) இணைப்பு உக்ரைனுக்கு காத்திரமான போர்க்கள உள் தகவல்களை வழங்குகிறது.
உக்ரேனின் டெல்டா முறைமை சில மேற்கத்திய முறைமைகளை விட மிகவும் இலகுவாக பயன்படுத்தக் கூடிய பயனர்-நட்பானது என்று நேட்டோ அதிகாரிகள் விவரித்துள்ளனர்.
டெல்டா முறைமையில் பலவீனங்கள்
& சவால்கள்
டெல்டா
பல கட்டமைப்பு சவால்களை (Structural Challenges) எதிர்கொள்கிறது:
இரசிய
இணைய வெளித்தாக்குதல்கள்
அமெரிக்கக்
கட்டுப்பாடில் உள்ள Starlink மீது தங்கியிருப்பது.
சிலவேளைகளில்
அளவிற்கு மிஞ்சிய தரவு. டெல்டா மாதத்திற்கு எட்டு மில்லியன் அறிக்கைகளைக் கையாள்கின்றது.

















