Followers

Showing posts with label ச். Show all posts
Showing posts with label ச். Show all posts

Thursday, 23 February 2023

ஓராண்டுப் போரின் பின்னரும் தளராத உக்ரேனும் வளராத புட்டீனும்



இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் சரிந்து போன இரசியப் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தினார்செஸ்னியக் கிளர்ச்சிக்காரர்களை அடக்கினார்ஜோர்ஜியாவிற்குப் பாடம் புகட்டினார்வேதியியல் குண்டு வீசியதாக குற்றம் சாட்டப்பட்ட சிரியாவைப் பாதுகாத்தார்எகிப்தை மீண்டும் தன் பக்கம் இழுத்தார்; குளிர்கால ஒலிம்பிக் போட்டியைக் கோலகலமாக அரங்கேற்றினார். ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்திலும் நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பிலும் இணைய முயன்ற உக்ரேனைத் தடுக்கும் முயற்ச்சியில் அவர் ஆப்பிழுத்த குரங்கு போல் ஆனாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.



புவிசார் அரசியல் போட்டி

2004-ம் ஆண்டில் இருந்து நேட்டோ நாடுகளும் இரசியாவும் உக்ரேனில் யார் ஆட்சியில் இருப்பது என்பது தொடர்பாக திரைமறைவு சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டன. இரசிய ஆதரவு விக்டர் யனுக்கோவிச்சிற்கு எதிராக உக்ரேனிய மக்களை கிளர்ச்சி செய்யப்பண்ணி அவரை உக்ரேனை விட்டு விரட்டுவதில் நேட்டோ நாடுகளின் சதி இரசியச் சதியை வெற்றி கொண்டது. இரசியா தலைமையிலான யூரே ஏசியன் பொருளாதார ஒன்றியத்தில் உக்ரேனும் ஓர் உறுப்பு நாடாக இருப்பது அவசியம் என்பதாலும் இரசியாவின் கடற்படைக்கு கிறிமியா அவசியம் என்றபடியாலும் இரசிய அதிபர் விளாடிமீர் புட்டீன் உக்ரேன் மீது 2014 போர் தொடுத்து கிறிமியாவைக் கைப்பற்றியதுடன் உக்ரேனின் கிழக்கு பிராந்தியத்தில் பெரும் குழப்பத்தை உருவாக்கினார். இதன் பின்னரும் உக்ரேன் நேட்டோவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் இணையும் முயற்ச்சி தொடர்ந்த படியால் 2022 பெப்ரவரி 24-ம் திகதி உக்ரேன் மீது இரண்டாம் படையெடுப்பை நடத்தினார். உக்ரேன் மீதான புட்டீனின் 2022 படையெடுப்பு 2014 படையெடுப்பைப் போல் இலகுவானதாக அமையவில்லை. அமெரிக்காவும் மற்ற நேட்டோ நாடுகளும் உக்ரேனியப் படையினருக்கு 2014இன் பின்னர் தீவிர பயிற்ச்சி வழங்கியிருந்தனர். மட்டுப்படுத்தப்பட்ட படைக்கலன்களையும் வழங்கியிருந்தனர்.  



பிழையாகிப் போன திட்டங்கள்

உக்ரேன் மீது சிறப்புப் படை நடவடிக்கை என்னும் பெயரில் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் செய்யும் ஆக்கிரமிப்பை ஆரம்பிக்கும் போது புட்டீன் போட்ட பல திட்டங்கள் பிழைத்துப் போயின என்று மேற்கு நாடுகளின் ஊடகங்கள் தொடர்ச்சியாகப் பரப்புரை செய்து கொண்டிருந்தாலும் மேற்கு நாடுகளின் பொருளாதாரத் தடைகளுக்கு எதிராக இரசியாவால் தாக்குப் பிடிக்க முடியும் என்ற புட்டீனின் நம்பிக்கை வீண் போகவில்லை. 2022 பெப்ரவரி ஆரம்பமான உக்ரேன் போரில் ஒரு இலட்சம் படையினரைப் பலிகொடுத்தும் தனது போர்த்தாங்கிகளில் அரைவாசியை இழந்தும் இரசியவால் காத்திரமான வெற்றி எதையும் பெற முடியவில்லை. ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட படையினரை இழந்தும் மின்சார உற்பத்தியில் 40% சிதைந்தும் பல்லாயிரக் கணக்கான வாழ்விடங்கள் அழிக்கப்பட்ட நிலையிலும் உக்ரேனியர்கள் இரசியாவிற்கு எதிராக உறுதியாகப் போராடிக் கொண்டிருப்பதால் எத்தரப்பு போரில் வெல்லும் எப்போது போர் முடியும் எனச் சொல்ல முடியாமல் இருக்கின்றது.



புட்டீன் எண்ணிய எண்ணமெங்கே?

ஆகக் கூடியது இரு வாரங்களில் அல்லது ஆகக் குறைந்தது மூன்று நாட்களில் முடிக்க புட்டீன் திட்டமிட்ட உக்ரேனுக்கு எதிரான படைநடவடிக்கை ஓராண்டாகியும் அவரது இலக்கு எட்டப்படவில்லை. இரசியாவின்று கடுமையான இழப்பை ஏற்படுத்துவதாக உக்ரேன் மார்தட்டுகின்றது. 142,860 இரசியப் படையினரைக் கொன்றதாகவும் மூன்று இலட்சம் இரசியப்படையினரைக் காயப்படுத்தியதாகவும் உக்ரேனியர்கள் சொல்கின்றனர். மேலும் உக்ரேனியர்கள் இரசியாவிற்கு ஏற்படுத்திய இழப்புக்கள்:

போர் விமானங்கள் 298

உலங்கு வானூர்திகள் 287

போர்த்தாங்கிகள் 3310

கவச வண்டிகள் 6545

சேணேவிகள் (Artilleries) 2327

பல்குழல் ஏவுகணைச் செலுத்திகள் 469

படகுகள் 18

எரிபொருள் தாங்கிகளும் மற்ற ஊர்திகளும் 5196

விமான எதிர்ப்பு குண்டுச் செலுத்திகள் 243

ஆளிலி விமானங்கள் 2016

வழிகாட்டல் ஏவுகணைகள் 873

 


ஒராண்டு இறுதியில் உக்ரேன் சென்ற ஜோ பைடன்

20-02-2023 அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜோ பைடன் உக்ரேனுக்கு ஒரு பயணத்தை செய்திருந்தார். உக்ரேனிய மக்களையும், படையினரையும் உற்சாகப் படுத்தும் நோக்கமாக அவர் தனது பயணத்தை மேற் கொண்டிருக்கலாம். மேலும் 500மில்லியன் டொலர் உதவி உக்ரேனுக்கு கிடைக்கவிருக்கின்றது. ஹிமார்ஸ் ஏவுகணைச் செலுத்திகள், ஜவலின் ஏவுகணைகள், சுடுகலன்கள் என பல தரப்பட்டவற்றை உக்ரேனுக்கு அமெரிக்கா கொடுக்க முன்வந்துள்ளது. ஆனால் உக்ரேன் தற்போது வற்புறுத்தும் F-16 போர் விமானங்கள் வழக்கப்படவில்லை. ஏற்கனவே 700 போர்த்தாங்கிகள் கவச வண்டிகள், ஆயிரத்திற்கு மேற்பட்ட சேணேவிகள் (Artilleries), ஐம்பதிற்கு மேற்பட்ட மேம்பட்ட ஏவூர்தி செலுத்திகள் (Rocket Launchers) போன்றவற்றை அமெரிக்கா உக்ரேனுக்கு வழங்கியதாக உக்ரேனில் வைத்து அமெரிக்கத் தலைவர் ஜோ பைடன் சொன்னார்.



உக்ரேனை இரசியா கைப்பற்றினால் போலந்து, ஹங்கேரி, எஸ்தோனியா, லத்வியா, லித்துவேனியா, சுவீடன், பின்லாந்து ஆகிய நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தல். அத்துடன்  உலகின் கோதுமை மற்றும் சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தியில் இரசியாவின் செல்வாக்கு அதிகரிக்கும். இதனால் இந்த நாடுகள் உக்ரேனுக்கு படைக்கலன்களை வழங்குகின்றன. 

புட்டீனின் சரியான கணிப்பீடுகள்

1. தன்னால் பொருளாதாரத் தடைக்கு எதிராக தாக்குப் பிடிக்க முடியும்.

2. இரசியர்கள் தனக்கு ஆதரவாக நிற்பார்கள் என புட்டீன எதிர்பார்த்தது நடக்கின்றது. இரசிய மக்களின் 80% ஆதரவு அவருக்கு உள்ளது. இது எந்த ஒரு முன்னணி நாட்டுத் தலைவருக்கும் இல்லாத ஆதரவு.



உண்மை அறிய முடியாத போர்

உக்ரேன் போரின்போது:

1. பொய் தாராளமாகச் சொல்லப்படுகின்றது.

2. இரண்டு தரப்பிலும் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட உயிரிழப்பு.

3. உக்ரேனியப் பொருளாதாரம் 2022இல் 30% வீழ்ச்சி. 30% மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

4. உணவும் பொருள் விலையும் எரிபொருள் விலையும் உலகில் அதிகரித்துள்ளது.

5. இரசியாவில் இருந்து முளைசாலிகளும் முதலீட்டாளர்களும் வெளியேறிக் கொண்டிருக்கின்றார்கள்.

புட்டீன் வெற்றி பெற்றால்

1. மேற்கு நாடுகள் என அழைக்கப்படும் வட அமெரிக்க மற்றும் மேர்கு ஐரோப்பிய நாடுகளும் நிலை நிறுத்த முயலும் விதிசார் உலக ஒழுங்கிற்கு பேரிழப்பு

2. தேர்தல் மூலம் வெற்றி பெறும் தன்முனைப்பு ஆட்சியாளர்களுக்கு பெரும் ஊக்கம்.

3. சீனா தைவானைக் கைப்பற்ற ஊக்குவிக்கப்படலாம்

4. அணுக்குண்டுகளை வைத்துக் கொண்டு மிரட்ட நினைப்பவர்களுக்கு ஊக்கம்.

5. இரண்டு தரப்பினரும் விட்டுக் கொடுக்க மாட்டாத நிலையில் உள்ளர்.

6. போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பே இல்லை.

7. எத்தரப்பு வெற்றி பெறும் என்று சொல்ல முடியாத நிலை

8. எப்போது போர் முடிவுக்கு வரும் என்று சொல்ல முடியாத நிலை.

9. இரசியாவிடம் படைக்கலன் தட்டுப்பாடு மோசமடைகின்றது. 2023 ஜூன் மாதம் போர் செய்ய முடியாத நிலை ஏற்படலாம். அதைத் தவிர்க்க சீனாவை புட்டீன் மனம் மாறச்செய்து சீனாவிடமிருந்து படைக்கலன்களை இரசியா வாங்க வேண்டும்.

10. நேட்டோ நாடுகளின் சுடுகலன் தட்டுப்பாடு உருவாகின்றது. அவர்கள் தங்கள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.

கருங்கடல் தானிய முன்னெடுப்பு (Black Sea Grain Initiative)

உக்ரேன் போரில் இத்தனை விடாப்பிடிகளுக்கும் நடுவில் இரண்டு நாடுகளும் உணவு ஏற்றுமதி தடையின்றி நடப்பதற்கு ஒத்துக் கொண்டுள்ளன. இரசியாவில் இருந்தும் உக்ரேனில் இருந்தும் கருங்கடலூடாகச் செல்லும் உணவுக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதில்லை என துருக்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றுடன் பங்களிப்புடன் செய்து கொண்ட பேச்சு வார்த்தையில் ஒத்துக் கொண்டன.  உக்ரேனும் இரசியாவும் துருக்கி, பிரான்ஸ், ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளுடாக பேச்சு வார்த்தைகள் பலவற்றை நடத்தி வருகின்றன.

உக்ரேனியர்களுக்கு கிடைத்த தன்னம்பிக்கை

பெலரஸ் நாட்டிலிருந்து உக்ரேன் தலைநகரைக் கைப்பற்றி ஆட்சி மாற்றம் செய்யும் நோக்கத்துடன் முன்னேறிய இரசியப் படையினரை தாம் விரட்டியதாக உக்ரேனியர்கள் பெருமையடைவதுடன் போரில் தம்மால் இரசியாவைத் தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் இருக்கின்றனர். அறுபது கிலோ மீட்டர் நீளமான போர்த்தாங்கிகளையும் கவச வண்டிகளையும் கொண்ட இரசியாவின் பெரும் படையணி 2022 மார்ச் மாதம் உக்ரேனின் வட பகுதியில் இருந்து பின்வாங்கியது. இரண்டு வாரங்களுக்குள் உக்ரேன் போரை முடித்து விடலாம் என நம்பிய இரசியர்களுக்கு ஏமாற்றத்தையும் பலநாட்கள் உக்ரேனியப் படையினர் தாக்குப் பிடிக்க மாட்டார்கள் என எதிர்பார்த்த நேட்டோ நாடுகளுக்கு வியப்பையும் உக்ரேனியர்கள் கொடுத்தனர். உக்ரேனின் மக்கள் குடியிருப்புக்கள் மீதும் குடிசார்-கட்டுமானங்களில் மீதும் புட்டீன் நடத்தும் அட்டூழியத் தாக்குதல்கள் அவரை ஒரு போர்க்குற்றவாளியாக்கி விட்டது. 

சிஐஏயின் பத்து விழுக்காடு தள்ளுபடி

அமெரிக்க உளவுத்துறை அமைப்பான சிஐஏயின் இயக்குனர் பில் பேர்ண்ஸ் இரசிய jஉளவுத்துறைப் பொறுப்பாள சேர்கி நருஸ்க்கின்னை 2022 நவம்பரில் இரசியத் தலைநகர் மொஸ்க்கோவில் சந்தித்து உக்ரேன் போரை முடிவிற்கு கொண்டுவர பேச்சி வார்த்தை நடத்தினார். அவரது பயணத்தில் உக்ரேன் தொடர்பாக தாங்கள் உக்ரேன் இல்லாமல் பேச முடியாது என்பதால் இரசியா அணுக்குண்டுகளைப் பாவித்ஹ்டால் அமெரிக்காவின் எதிர்வினை எப்படி இருக்கும் என்பது பற்றிப் பேசினோம் என்றார் சிஐஏ இயக்குனர் பில் பேர்ண்ஸ். ஆனால் அவர் இரசியா உக்ரேனின் நிலப்பரப்பில் 10%ஐ வைத்துக் கொண்டு போரை நிறுத்துவதை அமெரிக்கா விரும்புவதாக இரசியாவிடம் அவர் சொன்னதாக தகவல் கசிந்துள்ளது. ஆனால் இரசியா அதற்கு தயாராக இல்லை. முழு டொன்பாஸ் பிரதேசமும் கிறிமியா குடா நாடு இரசியாவிற்கு சொந்தமானது என்பதே இரசியாவின் இறுக்கமான நிலைப்பாடாக இருக்கின்றது.

மழுங்குமா புட்டீனின் எரிபொருள் படைக்கலன்?

இரசியப் பொருளாதாரம் புட்டீன் உக்ரேன் மீது தொடுத்த போரினால் பாதிப்படையாமல் உலக எரிபொருள் விலை அதிகரிப்பு கை கொடுத்தது. 2022இறுதி 2023ஆரம்ப மாதங்களில் உலக குளிர்கால நிலை எதிர்பார்த்ததிலும் பார்க்க மிதமானதாக இருந்தது. அத்துடன் மக்கள் வீட்டில் இருந்து பணிசெய்வதை அதிகரித்துள்ளனர். இதனால் 2023உலக எரிபொருள் விலை பெரிதளவில் அதிகரிக்காமல் நிலையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேற்கு நாடுகளின் பணவீக்கம் சீர் செய்யப்பட வாய்ப்புண்டு. உக்ரேன் தோற்கடிக்கப் பட முடியாத நாடு என நேட்டோ நாடுகள் நம்புகின்றன. புட்டீனை அடக்க உக்ரேன் சிறந்த போர் முனையாக உருவெடுத்துக் கொண்டிருக்கின்றது. 2022இல் இரசியாவின் பொருளாதாரம் 2.2%ஆல் வீழ்ச்சியடைந்துள்ளது. 2023இல் 0.3% மட்டுமே வளரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உக்ரேனுக்கு தொடர்ச்சியான் உதவிகள்

நேட்டோ நாடுகள் தாம் உக்ரேனுக்கு வழங்கும் படைக்கலன்களின் தரத்தை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இரசியாவிடம் துல்லியத் தாக்குதல் படைக்கலன்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இரசியப் படையினரால் உக்ரேன் மீது வான் ஆதிக்கம் செய்ய முடியவில்லை. இந்த நிலையில் புட்டீன் 2023 பெப்ரவரி 21-ம் திகதி ஆற்றிய உரையில் அவர் உக்ரேனைக் கைப்பற்றும் முயற்ச்சியில் பின்வாங்கப் போவதில்லை என மார் தட்டியுள்ளார். ஆனால் உக்ரேன் போர்க்கள சூழல் அவருக்கு உகந்ததாக இல்லை. ஆப்கானிஸ்த்தானில் பத்து ஆண்டுகளில் சோவியத் படையினருக்கு ஏற்பட்ட இழப்பிலும் பார்க்க உக்ரேனில் ஓராண்டுப் போரில் இரசியாவிற்கு அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது.  நேட்டோ நாடுகள் இனி உக்ரேனை தமது புதிய படைக்கலன்களை பாவிக்கும் தேர்வுக் களமாக மாற்றினால் இரசியா கிறிமியாவையும் இழக்கும் நிலை ஏற்படலாம். உக்ரேனின் கிழக்குப் பகுதியில் மஹ்மூட் நகரைக் கைப்பற்றும் முயற்ச்சியில் இரசியாவின் கூலிப்படைகள் அளவிற்கு அதிக உயிரழப்பை சந்தித்துள்ளன. இரசியக் கூலிப்படையின் தளபதி இரசியாவின் படைத்தளபதி மீது குற்றம் சுமத்துகின்றார். கூலைப்படைத் தளபதியின் கைகள் ஓங்குவது புட்டீனிற்கே உயிர் ஆபத்தை ஏற்படுத்தலாம். கூலிப்படைத் தளபதி புட்டீனை ஆட்சியில் இருந்து அகற்ற முயற்ச்சிக்கலாம். புட்டீனைச் சுற்றியுள்ளவர்கள் இன்னும் எத்தனை நாட்கள் அவருக்கான ஆதரவைப் பேணுவார்கள் எனச் சொல்ல முடியாது. இரசிய மக்களின் பெரும்பகுதியினர் புட்டீனிற்கு ஆதரவாக தற்போது உள்ளனர். போர் நீடிக்கும் ஒவ்வொரு மாதமும் அந்த ஆதரவுத் தளம் வலிமை இழக்கின்றது. சீன அதிபர் 2023 மார்ச் மாதம் இரசியாவிற்கு செய்யவிருக்கும் பயணத்தில் இரசியாவிற்கு படைக்கலன்களை விற்பனை செய்ய இணங்காவிடில் புட்டீனின் நிலை வலிமை மிகவும் குறையலாம்

அணுக்குண்டு மிரட்டல்

புட்டீன் அடிக்கடி விடுக்கும் அணுக்குண்டு மிரட்டல் உலகின் பெரும்பகுதி அழிவை ஏற்படுத்தும் எனத் தெரிந்தும் அதை அவர் கைவிடவில்லை. இந்திய சீன ஆட்சியாளர்கள் இந்த அணுக்குண்டு மிரட்டலையும் போர் நீடிப்பதையும் விரும்பவில்லை. உலக அரங்கில் புட்டீனுக்கு காத்திரமான ஆதரவுத் தளம் இல்லை. தனது எல்லையில் நேட்டோ நாடு இருக்கக் கூடாது என போரை புட்டீன ஆரம்பித்தார். ஆனால் இரசியாவுடன் எல்லைகளைக் கொண்ட  சுவீடனும், பின்லாந்தும் நேட்டோவில் இணையவிருக்கின்றன. முன்னாள் உளவாளியான புட்டீன் அரசுறவியலாளராக வளரவில்லை.

Sunday, 29 August 2021

தலிபான்களின் ஆதரவில் அல் கெய்தா மீண்டும் தலையெடுக்குமா?

 


தலிபான்களின் ஆதரவில் அல் கெய்தா மீண்டும் தலையெடுக்குமா?

ஆப்கானிஸ்த்தானில் பல் வேறு இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் பத்தாயிரம் வரையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதில் ஹக்கானி அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆறாயிரமும் ஐ.எஸ்-கே அமைப்பைச் சேர்ந்தவர்கள் இரண்டாயிரமும் அல் கெய்தா அமைப்பைச் சேர்ந்தவர்கள் இருநூறும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தலிபான் அமைப்பினர் அல் கெய்தாவுடன் நல்லுறவை வைத்திருக்கின்றனர். ஹக்கானி அமைப்பினர் தலிபான்களுடனும் ஐ.எஸ் கே அமைப்பினருடனும் நல்லுறவை வைத்திருக்கின்றனர். தலிபான்கள்லும் பார்க்க ஹக்கானை அமைப்பினர் காபூல் நகரை கையாள்வதில் வல்லவர்கள். இதனால் தலிபான்கள் தமது நட்பு அமைப்பான ஹக்கானி அமைப்பினரிடம் காபூல் நகரப் பாதுகாப்பை ஒப்படைத்திருந்தனர். இதனால்தான் ஹக்கானி அமைப்புடன் நட்புடைய ஐ.எஸ்-கே அமைப்பினரால் காபூல் விமான நிலையத்தின் மீது தாக்குதல் செய்து 16 அமெரிக்கர்கள் உட்பட பலரைக் கொல்ல முடிந்தது.

அமெரிக்காவின் தெரிவிக்கப்படும் அச்சம்

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் மைக்கேல் மக்கோல் “நாம் 9/11இற்கு முன்பிருந்த நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றோம் – ஆப்கானிஸ்த்தான் மீண்டும் பயங்கரவாத உற்பத்தி நிலம்” என்றார். அமெரிக்கப் படைத்தளபதி அல் கெய்தாவும் ஐ.எஸ்.ஐ.எஸ் தங்கள் வலையமைப்புக்களை ஆப்கானிஸ்த்தானில் துரிதமாக மீளக் கட்டியெழுப்பலாம் என எச்சரித்துள்ளார். அமெரிக்காவும் தலிபான்களும் கட்டார் தலைநகர் டோஹாவில் நடத்திய பேச்சு வார்த்தையில் அல் கெய்தா போன்ற அமெரிக்கா விரும்பாத திவிரவாத அமைப்புக்களின் வளர்ச்சிக்கோ அல்லது செயற்பாட்டிற்கோ தலிபான்கள் ஆப்கானிஸ்த்தானில் இடம் கொடுக்க மாட்டார்கள் என்ற உறுதி மொழி வழங்கியிருந்தனர்.

பஞ்சீர் தலையிடி

காபூலில் இருந்து வட கிழக்காக 150கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மரகத கல் நிறைய உள்ள பஞ்சீர் பள்ளத்தாக்கில் வட கூட்டமைப்பு என்னும் போராளி அமைப்பு திரண்டுள்ளது. ஆப்கானிஸ்த்தானின் துணை அதிபர் அமருல்லா சாலெ  கூட அங்கு போயிருக்கின்றார். தலிபான் தாக்குதலின் போது தப்பி ஓடிய ஆயிரக் கணக்கன அரச படையினரும் அங்கு தப்பி ஓடியுள்ளனர். இவர்களின் பெரும்பாலானவர்கள் தஜிக் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு தஜிக்கிஸ்த்தான் நாடு ஆதரவு வழங்கலாம். தலிபான்களால் கொல்லப்பட்ட முன்னாள் வட கூட்டமைப்பின் தளபதியின் மகனான அஹமது மசூத்தும் பஞ்சீர் பள்ளத்தாக்கில் இருக்கின்றார். இவர்களுக்கு வெளிநாட்டு உதவிகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தலிபான்களை எதிர்க்கும் குழுக்களுக்கு படைக்கலன்களை அனுப்பவில்லை என்கிறது தஜிக்ஸ்தான் நாடு. அது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போலிருக்கின்றது.

தலிபான்களைப் பாராட்டிய அல் கெய்தா ஆதரவு ஊடகம்

தலிபான்களின் வெற்றி உலகெங்கும் உள்ள பல இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களுக்கு பெரும் ஊக்கத்தைக் கொடுத்துள்ளது. இந்தியா வைத்திருக்கும் கஷ்மீர் பிரதேசத்தில் உள்ள திவிரவாத அமைப்புக்கள் அமெரிக்காவிற்கு ஆப்கானிஸ்த்தானில் நடந்தது உங்களுக்கும் நடக்கும் என இந்தியாவைப் பார்த்து சொல்கின்றன. இந்தியா வசம் இருக்கும் கஷ்மீர் பிரதேசதைப் பிரித்து பாக்கிஸ்த்தானுடன் இணைக்க வேண்டும் என்ற கொள்கையுடைய ஹிஸ்புல் முஜாஹிதீன் என்ற அமைப்பு தமக்கு தலிபான்கள் உதவி வழங்க வேண்டும் என பகிரங்கமாக கோரிக்கை விடுத்துள்ளது.  தலிபானின் வெற்றிக்கு அல் கெய்தா தனது ஊடகத்தில் பாராட்டு தெரிவித்தது. “ஆப்கான் வெற்றி கொள்ளப்பட்டுவிட்டது, இது இஸ்லாமின் வெற்றி” என்றது அல் கெய்தா.

அல் கெய்தா – தலிபான் வேறுபாடு

அல் கெய்தா அமைப்பு அமெரிக்காவை அழித்த பின்னர்தான் ஓர் இஸ்லாமிய அரசை அமைக்கலாம் என்ற நம்பிக்கை கொண்டது. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு இஸ்லாமிய அரசை அமைத்த பின்னர் அமெரிக்காவை அழிக்கலாம் எனக் கருதியது. தலிபான் அமைப்பு ஆப்கானிஸ்த்தானில் இஸ்லாமிய அரசை அமைக்க வேண்டும் என்ற கருத்துடையது. அது வெளிநாடுகளில் தாக்குதல் செய்வதில்லை. தலிபான் அமைப்பு பஸ்ருன் இனத்துக்கு உரியது என்ற கருத்து நிலவுகின்றது. அல் கெய்தா இனங்களுக்கு அப்பாற்பட்ட கொள்கையுடையது. அல் கெய்தா சியா மற்றும் சுனி என்ற பிளவையே விரும்புவதில்லை. ஆப்கானிஸ்த்தானில் 14 ஏற்றுக் கொள்ளப்பட்ட இனக்குழுமங்கள் உள்ளன. ஆப்கானிஸ்த்தானில் நாற்பது முதல் ஐம்பது விழுக்காடு பஸ்ருன் இனத்தவர் வாழ்கின்றனர் என மதிப்பிடப்படுள்ளது. ஆப்கானிஸ்த்தானின் வட பகுதியிலும் தென் மேற்குப் பகுதியிலும் பஸ்ருன் இனக்குழுமத்தினர் இல்லை எனச் சொல்லுமளவிற்கு குறைந்த அளவில் வாழ்கின்றனர். தஜிக் இனக்குழும மக்கள் 25விழுக்காட்டினர் உள்ளனர். உஸ்பெக் இனக்குழுமத்தினர் 9 விழுக்காட்டினர் வாழ்கின்றனர். ஆப்கானிஸ்த்தான் நிலப்பரப்பின் நூறு விழுக்காடும் தலிபான்கள் தற்போது தலிபானக்ளின் கட்டுப்பாட்டில் இல்லை. பல நிலப்பரப்புக்கள் உள்ளூர் போர்ப்பிரப்புக்கள் கட்டுப்பாடிலும் பல நிலப்பரப்புக்கள் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாத நிலையில் உள்ளன. 2001-ம் ஆண்டு நடந்த இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கு முன்பு இருந்ததிலும் பார்க்க அதிக அளவு நிலப்பரப்பு ஆப்கானிஸ்த்தானில் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாத நிலையில் இருக்கின்றது. அல் கெய்த தேவை ஏற்படும் போதெல்லாம் புதிய பெயரில் புதிய அமைப்புக்களை உருவாக்குவதுண்டு. அந்த வகையில் ஆப்கானிஸ்த்தானில் கட்டுப்பாடு இல்லாமல் இருக்கும் பிரதேசங்களில் அல் கெய்தா வேறு புதிய பெயரில் இயக்கத்தை ஆரம்பிக்கலாம். அது அமெரிக்காவிற்கு டோஹா நகரில் தலிபான்கள் வழங்கிய உறுதி மொழிக்கு முரணானதல்ல என தலிபான்கள் வாதிடலாம்.

தலிபான்களின் வலி தனி வலி

தலிபான் தனது பொருளாதாரத்திலும் உலக நாடுகள் தம் அரசை அங்கீகரிப்பதிலும் உடனடிக் கவனம் செலுத்தும். இவற்றை நிறைவேற்றுவது தலிபானகளுக்கு பெரும் தலைவலியாக இருக்கும். அல் கெய்தாவிற்கு ஆதரவு வழங்குவது இந்த இரண்டு முயற்ச்சிகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். பஸ்ருன் அல்லாத இனக் குழுமங்களின் எதிர்ப்பை சமாளிக்க வேண்டிய நிலையிலும் தலிபான் இருக்கின்றது. பிரித்தானியா ஆப்கானிஸ்த்தானிற்கு 1919இல் சுதந்திரம் வழங்கிய போது பஸ்ருன் இன மக்கள் பெரும்பான்மையினராக வாழும் நிலப்பரப்பை இரண்டாகப் பிரித்து ஒரு பகுதியை ஆப்கானிஸ்த்தானுடன் இணைத்தது. மற்றப் பகுதியை அப்போது தான் ஆண்டு கொண்டிருந்த தற்போது பாக்கிஸ்த்தானாக இருக்கும் நிலப்பரப்புடன் சேர்த்து வைத்தது. இதே வகையில் தான் குர்திஷ் மக்கள் வாழும் பிரதேசத்தையும் துருக்கி, சிரியா, ஈராக் போன்ற நாடுகளுடன் இணைத்தது. எதிர் காலத்தில் பல்வேறு இனக்குழுமங்கள் தமக்குள் மோதிக் கொள்ளக் கூடிய வகையில் தனது குடியேற்ற ஆட்சிப் பிரதேசங்களை பிரித்தானியா நாடுகளின் எல்லைகளை வகுத்துக் கொண்டது. தலிபான் போராளிகளில் பலர் பாக்கிஸ்த்தானில் பஸ்ருன் இன மக்கள் வாழும் பிரதேசம் ஆப்கானிஸ்த்தானுடன் இணைக்கப்படவேண்டும் என்ற கொள்கையுடையவர்கள். தலிபான் தலைமைக்கு இப்போது பாக்கிஸ்த்தானின் உறவு அவசியம் என்ற நிலையில் பாக்கிஸ்த்தான் ஆப்கானிஸ்த்தான் எல்லையை மாற்றியமைக்க விரும்பும் தலிபான்களை சமாளிப்பது பெரும் பிரச்சனையாக இருக்கும். அந்த நிலையில் இன்னொரு தீவிரவாத அமைப்பை மீள்கட்டி எழுப்புவதில் தலிபான் தலைமை கவனம் செலுத்த முடியாது. அவை மட்டுமல்ல தொழில்நெறிஞர்கள் (Professionals) பலர் ஆப்கானிஸ்த்தானில் இருந்து வெளியேறியுள்ளனர். இதனால் தமது அரசை முகாமை செய்வதில் தலிபான்கள் நெருக்கடியை எதிர் நோக்கலாம்.

குறைந்த அளவிலான அல் கெய்தா

அல் கெய்தாவிற்கும் தலிபான்களுக்கும் இடையில் இருபது ஆண்டு கால நெருங்கிய உறவு உண்டு. அல் கெய்தா அமைப்பினர் தலிபான் அமைப்புக்குள் ஊடுருவியும் உள்ளனர் என நம்பப்படுகின்றது. அமெரிக்க உளவுத் துறையும் வெளியுறவுத் துறையும் “ஆப்பாக்” கொள்கை என ஒன்றை வகுத்திருந்தன. அது ஆப்கானிஸ்த்தானையும் பாக்கிஸ்த்தானையும் ஒரு பிரதேசமாகக் கருதி வகுக்கப்பட்டவை. தலிபானின் வெற்றி மற்ற இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களுக்கு தூண்டுதலாக அமையும். அல் கெய்தாவின் தலைவர்கள் பலர் அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்களால் கொல்லப்பட்டுவிட்டனர். இப்போது ஆப்கானிஸ்த்தானில் அல் கெய்தா போராளிகள் இருநூறு பேர் இருக்கலாம என மதிப்பிடப்பட்டுள்ளது. அல் கெய்தாவிற்கு என்று ஓர் உலகளாவிய தலைவர் என்று சொல்லும்படி யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. நாடுகளுக்கு என்றே தலைவர்கள் இருக்கின்றார்கள். ஐ எஸ் ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு அல் கெய்தாவின் எதிரியாகவே செயற்படுகின்றது. ஆபிரிக்காவின் சஹாராவடி நிலப்பரப்பில் செயற்படும் பொக்கோ ஹரம், அல் ஷஹாப் போன்ற அமைப்புக்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினருடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளனர். அல் கெய்தாவின் கிளை அமைப்பான அரபுக் குடாநாட்டிற்கான அல் கெய்தா யேமனில் முடங்கிப் போயுள்ளது. மேற்கு நாடுகளினதும் இஸ்ரேலினதும் உளவுத் துறையினர் அல் கெய்தாவை தொடர்ந்து கண்காணிதுக் கொண்டிருக்கும் நிலையில் அக் கெய்தாவால் தலையெடுக்க முடியாது.

Thursday, 31 December 2020

2020 ஒரு மீள் பார்வை


சீனா மீது சினம் கொள்ள வைத்த ஆண்டு

சோதிடர்களை சோதித்த ஆண்டு

System சரியில்லை என நிரூபித்த ஆண்டு

அயோக்கிய ஆட்சியாளர்களை அம்பலப்படுத்திய ஆண்டு

பலரது வாழ்க்கை முறைமையை மாற்றிய ஆண்டு

ZOOM ஆண்டு

மாநிலங்களின் உரிமையை இந்தியா பறித்த ஆண்டு

இலங்கை கடனில் மூழ்கிய ஆண்டு


சீனா மீது சினம் ஏற்படுத்திய ஆண்டு

2020-ம் ஆண்டை திரும்பிப் பார்க்கையில் தெரிவதெல்லாம் கொரொனா நச்சுக்கிருமியும் அதனால் பரப்பப்பட்ட கொவிட்-19 தொற்று நோயும்தான். சீனாவில் இருந்து அந்த தொற்று நோய்க் கிருமிகள் பரவியதாக பலரும் நம்பியதால் சீனா மீது உலகெங்கும் வாழ் மக்களில் பலர் சினம் கொண்டுள்ளனர். நோய் உருவாகியதாகக் கருதப்படும் வுஹான் நகரில் இருந்து மற்ற சீனப் பிரதேசஙக்ளுக்கு பயணிப்பதை கடுமையான தடுத்த சீனா வுஹானில் இருந்து மற்ற நாடுகளுக்கு விமானங்கள் செல்வதைத் தடுக்கவில்லை. அதனால் சீனா அதிக முதலீடு செய்துள்ல இத்தாலிக்கும் வுஹானில் இருந்து அதிக விமானப் பறப்புக்கள் செய்யப்படும் நியூயோர்க் நகருக்கும் தொற்று நோய் பெருமளவில் பரவியது. புதிய வகைக் கிருமி ஒன்று பரவுகின்றது என எச்சரித்த சீன மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரும் கொவிட்-19 ஆல் கொல்லப்பட்டார். இதெல்லாம் சீனாவில் சாதாரணமப்பா என்பது போல் சீனா நடந்து கொண்டது.

சோதிடர்களை சோதித்த ஆண்டு

2020-ம் ஆண்டு அமோகமாக இருக்கப் போகின்றது, பிரம்மாண்டமாக இருக்கப் போகின்றது, சுபீட்சமாக இருக்கப் போகின்றது, இது ஒரு ஒளிமயமான ஆண்டு, மன்னர்களும் மக்களும் நேர்மையாக இருக்கப் போகின்ற ஆண்டு, பஞ்சம் என்பதே இருக்காது, ஐந்து கிரகங்கள் சாதகமாகவும் குரு ஆட்சி பெற்றும் இருக்கையில் பிறங்கும் அற்புதமான ஆண்டு என சோதிடர்கள் சொன்னார்கள். ஆனால் 2020 உலகையே கலங்கடித்த ஆண்டு. மக்களின் செயற்பாடுகளை மாற்றியமைத்த ஆண்டு.

System சரியில்லை என நிரூபித்த ஆண்டு

கொவிட்-19 நோய் பரவத் தொடங்கியவுடன் பல நாடுகளின் மருத்துவத் துறையும் சுகாதாரத்துறையும் சரிவர செயற்படவில்லை. தைவான் அரசு ஒரு கொடிய தொற்று நோய் வந்தால் எப்படிச் எதிர் கொள்வது என்ற தயாரிப்பு வேலைகளை முன் கூட்டியே செய்து வைத்து வருமுன் தன் மக்களைக் காப்பாற்றியது. வியட்னாம் நோய் வந்தவுடன் துரிதமாக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து ஒருவர் கூட நோயால் இறக்காமல் பார்த்துக் கொண்டது. இத்தாலி, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் நோயை எதிர் கொள்ளக் கூடிய வகையில் தயார் நிலையில் இருக்கவும் இல்லை வந்தவுடன் துரித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இது ஒரு சாதாரண நச்சுக் கிருமிக் காய்ச்சல் என்றார். மக்கள் ஒன்றுகூடுவதை தடை செய்யும் படி மருத்துவ நிபுணர்கள் சொன்ன போது பிரித்தானிய தலைமை அமைச்சர் பப்பிற்கு போய் தண்ணியடிக்காமல் இருப்பதும் ஒரு வாழ்க்கையா என்றார். பொதுவாக பல நாடுகளின் ஆட்சி முறைமை மோசமான நிலையில் இருக்கின்றது என்பதை கொவிட்-19 நோய் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

அயோக்கிய ஆட்சியாளர்களை அம்பலப்படுத்திய ஆண்டு

இந்தியாவில் மலேரியாக் காய்ச்சலுக்கு கொடுக்கப்படும் மருந்து கோவிட்-19 நோயைக் கட்டுப்படுத்துகின்றது என்ற பிழையான தகவல் வெளிவிடப்பட்டது. அதை பல நாடுகளும் வாங்க முயற்ச்சித்த போது இந்தியா அதன் ஏற்றுமதிக்கு தடை விதித்தது. அமெரிக்க அதிபர் இந்தியா தமக்கு அந்த மருந்தைக் கொடுக்க வேண்டும் அல்லது இந்தியாவிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கப் படும் என மிரட்டினார். பின்னர் அமெரிக்காவிற்கு கொடுக்கப்பட்டது ஆனால் அது கொவிட்-19 நோயைக் கட்டுப்படுத்த மாட்டாது என்ற உணமை அறியப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுகாதார நிறுவனம் உரிய நேரத்தில் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கவில்லை என்ற குற்றச் சாட்டும் முன்வைக்கப்பட்டது. தொற்று நோயைப்பரவ விட்டமைக்காக சீனா மீது உலக அளவில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என ஒஸ்ரேலியா தெரிவித்த படியால் அதற்கு எதிராக சீனா பொருளாதாரத் தடைகளை விதித்தது. இந்தியாவும் சீனாவும் தமது எல்லையில் நடந்த மோதல்கள் தொடர்பாக பொய்யான தகவல்களை வெளிவிட்டனர். உலகெங்கும் கொவிட்-19 தொற்று நோய்க்கான தடுப்பூசியைக் கண்டு பிடிக்கா ஆய்வு செய்யும் உள்ள பல்கலைக்கழங்களிலும் ஆய்வு கூடகங்களிலும் உள்ள கணினிகளில் இருந்து தகவல்களை திருட பல நாடுகளில் இருந்து ஊடுருவல் முயற்ச்சிகள் நடந்தன. யார் முதலில் தடுப்பூசி மருந்தைக் கண்டு பிடிப்பது என்பதில் கடும் போட்டி நடந்தது ஆனால் ஒத்துழைப்புகள் நடக்கவில்லை. போதிய முன்னறிவித்தல் இன்றியும் உரிய வசதிகள் அமைத்துக் கொடுக்காமலும் ஊரடங்கு சட்டம் அறிவித்தமையால் இந்தியாவில் பலர் பாதிக்கப்பட்டனர். பல நூறு மைல்களை பல இலட்சம் பேர் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. குழந்தைகள் அதின்போது இறக்க நேரிட்டச்ச்து. தன் நாட்டு மக்களை சிறப்பாக காப்பாற்றிய சிங்கப்பூர் அரசு வெளிநாட்டில் இருந்து வந்து தொழில் செய்வோரை உதாசீனம் செய்தது.

பலரது வாழ்க்கை முறைமையை மாற்றிய ஆண்டு

போக்கு வரத்துக் கட்டுப்பாடு ஒன்று கூடல் தடை போன்றவற்றால் பலர் பாதிக்கப்பட்டனர். உணவகங்கள், உல்லாச விடுதிகள் போக்குவரத்துத் துறையில் பணி புரிவோர் வருமான இழப்பால் பாதிக்கப்பட்டனர். வீட்டில் இருந்து பணிபுரியும் முறைமை பெருமளவில் அறிமுகப் படுத்தப் பட்டது. மாணவர்கள் கல்விக் கூடங்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தே இணைய வெளி மூலம் கல்வி கற்கும் ஏற்பாடு பரவலாக அறிமுகமானது. ஏழை மாணவர்கள் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டது

 

ZOOM ஆண்டு

அமெரிக்காவில் வாழும் சீனர் ஒருவர் உருவாக்கிய ZOOM என்ற செயலி உலகெங்கும் பாவிக்கப் பட்டது. காணொலி மூலமான தொடர்பாடல் வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுக்கும் கலவி கற்பவர்களுக்கும் பெரிதும் உதவி செய்தது. உலக முடக்கத்தின் போது ZOOM மூலமான தொடர்பாடல் உலக இயக்கத்திற்கு உதவியது.

மாநிலங்களின் உரிமையை இந்தியா பறித்த ஆண்டு

பல தேசங்களின் ஒன்றியமாக உருவாக்கப்பட்ட இந்தியாவில் மாநிலங்களின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப் பட்டு வருகின்றன. மாநிலக் கட்சிகளை சிதைப்பதில் ஆளும் பாரதிய ஜனதாக் கட்சி பகிரங்கமாக செயற்படுகின்ற ஆண்டாக 2020 அமைந்துள்ளது. மேற்கு வங்கத்தின் மம்தா பனர்ஜீ தலைமையிலான திரினாமுல் காங்கிரசுக் கட்சியின் உறுப்பினர்கள் பாஜகவிற்கு தாவினர். பாஜகவின் அமித் ஷா பனர்ஜீயைப் பார்த்து நீ தனித்து நிற்கப் போகின்றாய் என்றார். மக்களாட்சிக்கு பல கட்சிகள் வலிமையாக இருப்பது அவசியம் ஆனால் காங்கிரசுக் கட்சி தலைமையின்றி தடுமாறுகின்றது. ராகுல் காந்தியைத் தவிர மற்ற எல்லோரும் ராகுல் தான் கட்சிக்கு தலைமை ஏற்கவேண்டும் என்கின்றனர். காங்கிரசு கட்சியினர் ராகுல் திறன்படச் செயற்பட வேன்டும் என்கின்றனர். ஆனால் கட்சிக்கு ஒரு திறமை மிக்க தலைவரை அவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. நேரு-காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்களைத் தவிர வேறு யாரும் காங்கிரசுக்கு தலைமை தாங்க கூடாது என்பது எழுதாத சட்டமாக உள்ளது.

இலங்கை கடனில் மூழ்கிய ஆண்டு

கடந்த பல பத்து ஆண்டுகளாக தொடர்ந்து வரவிலும் பார்க்க அதிக செலவு செய்து வந்த இலங்கை அரசுக்கு கொவிட்-19 கடைசி வைக்கோலாக அமைந்துள்ளது. இலங்கையின் கடன்படு திறனை மூன்று நிறுவனங்கள் மிகவும் மோசமான நிலைக்கு தாழ்த்தியுள்ளன. அத்துடன் இலங்கையில் வங்கிகள் ஆபத்தான சூழலில் செயற்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு அதிக அளவில் நிதி உதவு தேவைப்படுகின்றது. 2020இல் இலங்கை சென்ற அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலரை வெறும் கையுடன் திரும்பி அனுப்பியது இலங்கை அரசு. அவர் மிலேனியம் சவால் ஒத்துழைப்பின் மூலம் இலங்கைக்கு 480மில்லியன் டொலர் உதவியை வழங்க தயாராக இருந்தார். அதற்கு பதிலாக இலங்கையை அமெரிக்கப் படைத்துறையினர் கட்டுப்பாடின்றி பாவிக்கும் உரிமையைக் கோரியிருந்தார். சீனாவை அதிருப்திப் படுத்தும் நடவடிக்கையை இலங்கை ஆட்சியாளர்கள் விரும்பவில்லை.

மேற்காசிய அரசுறவியலை மாற்றிய ஆண்டு

இஸ்ரேலுடன் சில அரபு நாடுகள் அரசுறவியல் தொடர்புகளை 2020இல் ஏற்படுத்திக் கொண்டன. ஆனாலும் இஸ்ரேலில் உறுதியான ஆட்சி இல்லை. இரண்டு ஆண்டுகளில் நான்கு தேர்தல்களை இஸ்ரேல் சந்திக்க வேண்டிய சூழல். சவுதி அரேபியா அனுபவமற்ற இளவரசரின் ஆட்சியில் ஆட்டம் காண்கின்றது. ஈரான் படைத்தளபதியினையும் அணு விஞ்ஞானியையும் பாதுகாக்க முடியாமலும் அந்த இழப்பீட்டிற்கு பதிலடி கொடுக்க முடியாமல் தடுமாறுகின்றது. துடுக்குடன் செயற்படும் துருக்கியை அடக்க யாரும் இல்லாத நிலை உருவாகியுள்ளது.

இரசியா

வரலாற்றில் மிகப்பெரிய இணைய வெளி ஊடுருவலை இரசியா அமெரிக்கா மீது செய்து மிகப்பெரிய தகவல் அபகரிப்பைச் செய்தது என்ற குற்றச் சாட்டு இரசியாமீது 2020இல் வைக்கப்பட்டது. அதற்கான அறுவடையை இரசியா 2021இல் செய்யலாம். லிபியாவில் துருக்கியும் இரசியாவும் குட்டையைக் குழப்பின. இரசியா அஜர்பைஜான் – ஆர்மேனிய மோதலில் இரசியா அப்பம் பகிரும் வேலையை வெற்றிகரமாக செய்தது. அங்கு துருக்கியையும் பிரான்ஸையும் இரசியா ஓரம் கட்டியது.

அமெரிக்கா

சீனாவிற்கு எதிரான வர்த்தகப் போரையும் தொழில்நுட்பப் போரையும் 2020இல் அமெரிக்கா தீவிரப்படுத்தியது. சண்டை என்றால் சட்டை கிழியத்தான் செய்யும். அது போல் போர் என்றால் பொருளாதாரம் கிழியும். அடி வாங்கிய சீனாவிலும் பார்க்க அடித்த அமெரிக்காவிற்கு அதிக காயம். 2020இல் ஆறாம் தலைமுறைப் போர்விமானத்தை வெற்றிகரமாகவும் துரிதமாகவும் உருவாக்கிய அமெரிக்கா அடுத்த தலைமுறை பெரு-விமானம் தாங்கிக்கப்பல்களையும் ஆழக்கடல்களில் பாவிக்கத் தொடங்கியது. 2020இல் சீனா தைவானைக் கைப்பற்றாமல் தடுப்பதில் அமெரிக்கா பார்த்துக் கொண்டது.

சீனா

பையப் பையத் தின்றால் பனையையும் தின்னலாம் என்பதை தென் சீனக் கடலில் நிரூபித்த சீனா அதே பாணியை இமய மலைச்சாரலிலும் 2020இல் செய்தது. அமெரிக்கப் படைத்துறை நிபுணர்கள் 2020இல் இரகசியமாக இமையமலைச் சாரலில் இந்தியாவிற்கு ஆலோசனை வழங்கியிருந்தனர். மேற்காசியாவில் குர்திஷ் மக்களைப் பலி கொடுத்தது போல இமய மலைச்சாரலில் தீபெத்திய இளையோர் பலியிடப்படுள்ளார்கள். ஐரோப்பிய ஒன்றியத்துடனும் பல ஆசிய நாடுகளுடனும் சீனா செய்துள்ள வர்த்தக் ஒப்பந்தங்கள் அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் பாதிப்பை ஈடு செய்யலாம். சீனாவில் பெருமுதலாளிகள் உருவெடுப்பதை இட்டு 2020இல் சீனப் பொதுவுடமைக் கட்சி கரிச்னை கொள்ளத் தொடங்கியுள்ளது.

FANG நிறுவனங்க்களின் ஆண்டு

FANG என சுருக்கமாக அழைக்கப்படும் Facebook, Amazon, Netfliz, Google ஆகிய நாற்பெரும் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் தமது வருமாந்த்தை பெருமளவில் 2020இல் பெருக்கிக் கொண்டன. இந்த நிறுவனங்களின் தனியாதிக்கத்தை அமெரிக்க ஆட்சியாளர்கள் தணிக்க வேண்டும் என நினைக்கின்றனர். எண்மியக் கொடுப்பனவுகள் 2020இல் மிகவும் அதிகரிதிருந்தன. நுண்மிய நாணயங்களின் பெறுமதியும் பாவனையும் 2020இல் அதிகரித்திருந்தன. செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியடைந்துள்ளது.

உலகமயமாதல் நிறுத்தப்பட்டு தேசியவாதம் தலை தூக்கியது. சில்லறை வர்த்தகத் துறை பாதிக்கப்பட்டு இணையவெளி வர்த்தகம் வளர்ச்சியடைந்துள்ளது. நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பு சோதனைக்கு உள்ளாகிய வேளையில் குவாட் என்னும் ஒரு படைத்துறைக் கூட்டமைப்பு உருவாக்கப்படுவதற்கான எண்ணக் கரு 2020இல் உருவானது.

சோதனைகள் நிறைந்த ஆண்டான 2020இல் ஆட்சியாளர்கள் படிப்பினை பெறவில்லை.

இரசியாவினுள் உக்ரேனின் ஊடறுப்பும் ஊடுருவலும்

இரசியாவை ஆக்கிரமித்த அந்நியப் படையினர் அழிவைச் சந்திப்பார்கள் என்பது வரலாறு உலகிற்கு உரத்துச் சொல்லும் செய்தியாகும். இருந்தும் 2024 ஓகஸ்ட் ம...