Followers

Sunday 31 January 2021

ஒஸ்ரேலிய சீன பல் முனைப் போட்டி



அமெரிக்கவிற்கும் சீனாவிற்குக் இடையிலான போட்டிக் களமாக பசுபிக் மாக்கடல் இருக்கின்றது. அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடாக ஒஸ்ரேலியா இருக்கின்றது. அமெரிக்காவின் படைத்தளம் இருக்கும் பிலிப்பைன்ஸ் அதன் நெருங்கிய நட்பு நாடாக இருந்தது. அதனால் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் வாழைப்பழங்களை சீனா நிறுத்தப் போவதாக 2016இல் அறிவித்தது. பின்னர் பிலிப்பைன்ஸ் அதிபர் சீனாவிற்கு பயணம் செய்து அமெரிக்காவுடனான தமது நட்பை “விவாகரத்து” செய்வதாக அறிவித்தார். பின்னர் சீனா பிலிப்பைன்ஸ்லி இருந்து அதிக வாழைப்பழங்களை இறக்குமதி செய்வதுடன் பிலிப்பைன்ஸில் 24பில்லியன் டொலர்களை முதலீடு செய்வதாகவும் அறிவித்தது. இதே மாதிரியான மிரட்டலை சீனா அமெரிக்காவின் இன்னும் ஒரு நட்பு நாடான ஒஸ்ரேலியா மீது 2020இன் பிற்பகுதிகளில் ஆரம்பித்தது. ஒஸ்ரேலியாவின் பாதுகாப்பிற்கு அமெரிக்காவும் வர்த்தகத்திற்கு சீனாவும் அவசியமானவை.

ஒத்துழைக்க வேண்டிய இரு நாடுகள்

ஒஸ்ரேலியா சீனாவில் இருந்து 7448கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இருபதினாயிரம் கிலோ மீட்டர் அகலமும் பதினையாயிரம் கிலோ மீட்டர் நீளமும் கொண்ட பசுபிக் மாக்கடலின் இரு நாடுகளும் அமைந்திருக்கின்றன. 1.2மில்லியன் சீனர்கள் ஒஸ்ரேலியாவில் வசிக்கின்றனர். இது ஒஸ்ரேலியாவின் மக்கள் தொகையில் 5.6% ஆகும். நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளுக்கு சீனாதான் அதிக வர்த்தகம் செய்யும் நாடாக இருக்கின்றது. ஒஸ்ரேலியா இதற்கு விதிவிலக்கல்ல. ஒஸ்ரேலிய அதிக வர்த்தகம் செய்யும் நாடு சீனாவாகும். சீனாவுடன் வர்த்தகம் நாடுகளின் பட்டியலில் ஒஸ்ரேலியா ஏழாவது இடத்தில் இருக்கின்றது. ஒஸ்ரேலியாவிலும் பார்க்க சீனா அதிக வர்த்தகம் செய்யும் நாடுகளாக ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், கொங் கொங், தென் கொரியா, தைவான் ஆகியவை இருக்கின்றன. 2019-ம் ஆண்டு ஒஸ்ரேலியாவின் வெளிநாட்டு வர்த்தகத்தில் 27.4% சீனாவுடன் நடந்தது. சீனர்களின் குடிவரவும் உல்லாசப் பயணமும் சீன முதலீடும் ஒஸ்ரேலியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றின. 180,000 சீன மாணவர்கள் ஒஸ்ரேலியாவில் பயில்கின்றதால் பல்கலைக்கழகங்கள் 12பில்ல்யன் டொலர்களை வருமானமாகப் பெறுகின்றன. 2017 நவம்பரில் சீனாவின் அரச ஊடகமான குளோபல் ரைம்ஸ் ஒஸ்ரேலியாவின் பொருளாதாரம் சீனாவில் பெரிதும் தங்கியுள்ளது ஆனால் அது அதற்கேற்ப நன்றியுடையதாக இல்லை என்றது.

இருபத்தியேழு ஆண்டுகளாக தொடர்ச்சியாக பொருளாதார வளர்ச்சியைக் கண்ட ஒஸ்ரேலியா 2019-ம் ஆண்டு 3.8விழுக்காடு தேய்மானம் அடைந்தது.

பட்டுப்பாதைக்கு முட்டுக்கட்டை

புதிய பட்டுப்பாதை எனப்படும் சீனாவின் Belt and Road Initiative திட்டத்தில் ஒஸ்ரேலியாவின் சிட்னி மாகாணமும் முதலில் இணைந்து கொண்டது. சிட்னி விக்டோரியா ஆகிய நகரங்களுக்கு மாகாணத்திற்கு தேவையான உட்கட்டுமானங்களில் சீனாவின் முதலீடு அவசியம் தேவைப்பட்டது. டிசம்பர் 2020இல் சீனா ஒஸ்ரேலியாவில் இருந்து செப்பு உலோகம் எதையும் இறக்குமதி செய்யவில்லை. 2019 டிசம்பரில் ஒஸ்ரேலியாவில் இருந்து சீனா 110.930 மெட்ரிக் தொன் செப்பை இறக்குமதி செய்திருந்தது. இது ஒஸ்ரேலியாவை சீனா பழிவாங்குவதன் வெளிப்பாடாகும். சீனாவிற்கு தேவையான இரும்புத்தாதின் பெரும் பகுதி ஒஸ்ரேலியாவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றது. சீனாவால் உடனடியாக ஒஸ்ரேலியாவில் இருந்து இரும்புத்தாது இறக்குமதி செய்யப்படுவதை நிறுத்த முடியவில்லை. ஆபிரிக்காவில் இருந்து சீனா மாற்று வழிகளைத் தேடுகின்றது. அங்கு உற்பத்தி செய்து இறக்குமதி செய்ய இன்னும் ஐந்து ஆண்டுகள் எடுக்கும். ஒஸ்ரேலியாவில் இருந்து சீனாவிற்கான நிலக்கரி ஏற்றுமதியை சீனத் துறைமுகங்களில் இழுத்தடிப்பு செய்வதன் மூலம் தாமதிக்கச் செய்தது.

ஒஸ்ரேலியாவில் சீனாவின் உளவு நடவடிக்கை.

2018 மார்ச் மாதம் சீனா பல வழிகளில் ஒஸ்ரேலியாவின் உள் விவகாரங்களில் தலையிடுவதாகவும் சீனப் பொதுவுடமைக் கட்சியின் வெளிநாட்டுத் தலையீடு திட்டங்களின் பரிசோதைனைக் களமாக ஒஸ்ரேலியா இருப்பதாகவும் சீனப் படைத்துறையின் மேம்பாட்டிற்கு ஒஸ்ரேலியப் பல்கலைக்கழங்களில் ஆய்வுகள் செய்யப்படுவதாகவும் குற்றச் சாட்டுகள் வெளிவந்தன. 2019இல் சீன உளவாளிகள் ஒஸ்ரேலியாவில் வசிக்கும் 32 வயதான சீனரை ஒஸ்ரேலியாவின் நாடளுமன்ற உறுப்பினராக்குவதற்கு அணுகினார்கள். அவர் ஒஸ்ரேலியாவின் தாராண்மைவாதக் கட்சியின் உறுப்பினராகும். அவருக்கு பெருமளவு பணம் கொடுத்து அவரை நாடாளுமனற உறுப்பினராக்க சீன உளவாளிகள் முயன்றார்களாம்.  இது ஒஸ்ரேலிய அரசு அறிந்த நிலையைல் அந்த சீனர் ஐயத்திற்கு இடமான வகையில் இறந்து போனார். இந்தக் குற்றச் சாட்டை சீனா ஒஸ்ரேலியாவின் நரம்புக்கோளாற்றால் வந்த மன நோய் என விபரித்தது.

சீன இணையவெளி ஊடுருவல்

2013-ம் ஆண்டு ஒஸ்ரேலியாவின் உளவுத் துறைக்கு கட்டிய புதிய தலைமச் செயலகத்தின் திட்ட வரைபை சீனா இணையவெளியூடாக ஊடுருவித் திருடிக் கொண்டதாக குற்றச் சாட்டுகள் வெளிவந்தன. 2019-ம் ஆண்டு மே மாதம் நடை பெற்ற தேர்தலுக்கு முன்னர் ஒஸ்ரேலியப் நாடாளமன்றத்தினதும் பல்வேறு அரசியல் கட்சிகளினதும் கணினித் தொகுதிகள் மீது சீனாவில் இருந்து இணையவெளித் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஒஸ்ரேலிய அரசு அறிவித்தது. 2020-ம் ஆண்டு சீனாவில் இருந்து செய்யப்பட்ட இணையவெளி ஊடுருவல்கள் மூலம் ஒஸ்ரேலியாவின் பாதுகாப்புத்துறையின் 300 Gigabytes அளவிலான தகவல்கள் திருடப்பட்டதாக அமெரிக்க அரசு பகிரங்கமாக அறிவித்தது

மோசமான 2020

2020இன் பிற்பகுதியில் சீன ஒஸ்ரேலிய உறவில் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியதில் முதன்மையானது கொவிட்-19 தொற்று நோயின் பரவலில் சீனாவின் பங்கு தொடர்பாக ஒரு பன்னாட்டு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என ஒஸ்ரேலியா அறிவித்தமையாகும். இரண்டாவது அமெரிக்கா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளுடன் இணைந்து குவாட் அமைப்பை உருவாக்குவதில் ஒஸ்ரேலியா அதிக முனைப்பு காட்டியமை. ஆரம்பத்தில் சீனாவுடனான வர்த்தக உறவைக் கருத்தில் கொண்டு ஜப்பான் முன்மொழிந்த குவாட் ஒத்துழைப்பில் இணைய ஒஸ்ரேலியா தயக்கம் காட்டியது. மூன்றாவது இந்தியாவுடன் ஒஸ்ரேலிய செய்து கொண்ட பாதுகாப்பு ஒப்பந்தம். அதன் படி ஒஸ்ரேலிய படை நிலைய வசதிகளை இந்தியாவும் இந்தியப் படை நிலைய வசதிகளை ஒஸ்ரேலியாவும் பாவிக்கலாம். அதில் சீனாவின் கடற்பாதையில் முக்கிய திருகுப் புள்ளியான மலாக்கா நீரிணைக்கு அண்மையாக உள்ள ஒஸ்ரேலியாவிற்கு சொந்தமான கொக்கோஸ்(கீலிங்) தீவையும் இந்தியாவிற்கு சொந்தமான அந்தமான் நிக்கோபார் தீவுகளையும் இரு நாடுகளும் சீனாவிற்கு எதிரான படை நடவடிக்கைகளுக்கு பாவிக்கும் போது சீனக் கடற்போக்கு வரத்து பெரும் பின்னடைவைச் சந்திக்கும். நான்காவது இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து செய்து வந்த மலபார் போர்ப்பயிற்ச்சியில் 2020 நவம்பரில் ஒஸ்ரேலியாவும் இணைந்து கொண்டது.

ஒஸ்ரேலியா எப்படி சீனாவைக் கையாள்கின்றது என்பதை பேர்லின், ஒட்டாவா, வாஷிங்டன், வெலிங்டன் ஆகிய தலைநகரங்களில் உள்ள ஆட்சியாளர்களும் கொள்கை வகுப்பாளர்களும் உன்னிப்பாகக் கவனிக்கின்றார்கள்.

Monday 25 January 2021

தணியாத இந்திய சீன முறுகல்


சீனா தென் சீனக் கடலை ஒரு துப்பாக்கி வேட்டுக் கூட வெடிக்காமல் ஆக்கிரமித்து அங்கு பல செயற்கை தீவுகளை உருவாக்கியது. அவற்றில் தனது பாரிய படை நிலைகளையும் உருவாக்கியுள்ளது. சீனா தனது சிறிது சிறிதான அணுகுமுறை (Piecemeal approach) நகர்வுகளாலேயே இதைச் சாதித்தது. சீனாவின் நகர்வுகள் சிறியனவாகவும் மிகமிகத் துரிதமாகவும் இருக்கும். இதே நகர்வுகளை இந்திய எல்லையிலும் சீனா செய்து கொண்டிருக்கின்றது.

சிவராத்திரியா வைகுண்ட ஏகாதசியா

இந்திய சீனப் படையினர் 2021 ஜனவர் 24 ஞாயிற்றுக் கிழமை தொடங்கிய தமது பேச்சு வார்த்தையை இரவு துயிலாமால் திங்கள் காலை இரண்டு மணி வரை தொடர்ந்த 16 மணித்தியால மரதன் பேச்சு வார்த்தையை நடத்தினர். சீனா இந்திய எல்லையைத் தாண்டி வருவது; இரு படையினருக்கும் இடையில் முறுகல்கள் கைகலப்புக்கள் கல்லெறிகள் ஏற்படுவது; பின்னர் பேச்சு வார்த்தை, தொடர்ந்து படை விலக்கல்; மீண்டும் சீனப் படைகள் அத்துமீறல். இந்தச் சங்கிலிஹ்ட் தொடர் அடிக்கடி நடக்கும்.

இந்தியாவை சீனா மென்று தின்னும்

2018 பெப்ரவரி மாதம் இந்திய சீன உறவைப் பற்றிய கருத்தறி அவையம் நடத்தி உரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய இந்திய முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் எம் கே நாராயணன்: 1. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வேறுபாடு அதிகரிக்கும். 2. டொக்லம் முறுகல் போல் பல முறுகல்கள் தொடரும் 3. முறுகல் நிலை அதிகரித்தாலும் போர் நடக்கும் அபாயம் இல்லை. 4. சீன தொடர்ந்து இந்தியாவை சீண்டிக் கொண்டே இருக்கு. 5. இந்திய நிலப்பரப்புகளை சீனா நன்னுதல் தொடரும் ஆகிய கருத்துக்களை முன்வைத்தார். இந்திய நிலப்பரப்புகளை சீனா நன்னும் என்பதை சீனா தொடர்ந்து உண்மையாக்கிக் கொண்டிருக்கின்றது.

அருணாச்சலப் பிரதேசத்தில் பெரிய மென்னுதல்

அருணாச்சல பிரதேசத்தின் நாடாளமன்ற உறுப்பினரும் ஆளும் பாரதிய ஜனதாக் கட்சியைச் சார்ந்தவருமான தபீர் கௌ சீனா அருணாச்சலப் பிரதேசத்தில் ஐம்பது கிலோ மீட்டர் நீளமான இரட்டை வழிச் சாலையை அமைத்துள்ளது என்றார். இதைத் தொடர்ந்து இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் சீனா ஊடுருவி நூற்றுக்கு மேற்பட்ட வீடுகளைக் கொண்ட ஒரு கிராமத்தை அமைத்துள்ளது என்ற செய்தியும் வெளிவந்தது. அந்த கிராமத்திற்கு வேண்டிய நீர் வழங்கல், மின் வழங்கல் போன்றவையும் செய்யப்பட்டுள்ளன. சீனாவின் இந்த நிர்மாணம் மிகத்துரிதமாக நடந்த படியால் அதை இந்தியாவால் அவதானிக்க முடியவில்லை. ஒரு வாரத்தில் 25,000 சது மீட்டர் மருத்துவமனையை ஒரு வாரத்தில் கட்டி முடித்த சீனாவால் இந்தக் கிராமத்தை ஓரிரு நாட்களில் கட்டி முடிக்க முடியும். 2020 நவம்பரில் பூட்டானிலும் சீனா எல்லையை தாண்டிச் சென்று ஒரு கிராமத்தை நிர்மாணம் செய்திருப்பது செய்மதி மூலம அறியப்பட்டது. சீனா தனது நாட்டு எல்லைக்குள் தனது வறுமை ஒழிப்புத் திட்டத் தின் கிழ் கட்டப்பட்ட வீடுகள் என்கின்றது.



59 ஆண்டுகளாக தொடரும் முறுகல்களும் மோதல்களும்

1962இல் இந்தியாவும் சீனாவும் போர் புரிந்தன. பெரிய நிலப்பரப்பை சீனா கைப்பற்றினாலும் இந்தியாவின் லடாக் பிராந்தியத்தின் வட மேற்கில் உள்ள 38,850 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பைக் கொண்ட அக்சாய் சின் பகுதியை சீனா தனதாக்கிக் கொண்டது. சீனா கைப்பற்றி வைத்திருக்கும் திபெத் பீட பூமிக்கும் சீனாவின் சர்ச்சைக்குரிய மாகாணமான உய்குருக்கும் இடையில் அக்சாய் சின் இருக்கின்றது. இரண்டு மாகாண மக்களும் சீன அரசுக்கு எதிராக இணைந்து கிளர்ச்சி செய்யாமல் இருக்க அக்சாய் சின் சீனாவிற்கு அவசியமானதாகும். 1962இல் இந்தியப் படையினரை சீனா கலங்கடித்த போதும் 1967-ம் ஆண்டு நடந்த மோதலில் சீனா பின்னடைவைச் சந்தித்தது, அப்போது இந்தியாவின் பாதுகாப்பில் இருந்த சிக்கிமின் நாது லா என்னும் இடத்திலும் சோ லா என்னும் இடத்திலும் இந்திய சீனப் படைகள் மோதிக் கொண்டன. இந்த மோதல்களில் சீனா நானூறுக்கு மேர்பட்ட படையினரைப் பலிகொடுத்துப் பின்வாங்கியது. இந்தியாவின் மேஜர் ஹர்பஜான் சிங் இந்த முறியடிப்புப் போரில் முக்கிய பங்கு வகித்து வீரச்சாவடைந்தார். 1987-ம் ஆண்டு சீனா இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்துடனான எல்லையில் சும்தோரோங் சூ பள்ளத்தாக்கில் ஒரு படை நகர்வைச் செய்தது. அப்போதைய இந்தியப் படைத்தளபதி அந்த இடத்தை ஒரு பாரிய படை நகர்வை மிகத் துரிதமாக மேற்கொண்டார். வல்லூறு என்ற குறியீட்டுப் பெயருடைய அந்த நடவடிக்கை சீனா அதிர்ச்சியைக் கொடுத்தது. சும்தோரோங் சூ பள்ளத்தாக்கின் பல உயரமான இடங்களில் இந்தியப் படைகளும் போர்த்தளபாடங்களும் இறக்கப்பட்டு அவை போருக்கு சாதகமான நிலையை எடுத்துக் கொண்டன. இதனால் சீனாவின் முன்னேற்ற முயற்ச்சி கைவிடப்பட்டது. 2013-ம் ஆண்டு கஷ்மீரின் லடாக் பிராந்தியத்தின் டெப்சாங் என்னும் இடத்தில் சீனா படை முகாம் அமைத்த போது ஒரு முறுகல் இரு நாடுகளுக்கும் இடையில் தோன்றி மோதல் தவிர்க்கப்பட்டது. 2017-ம் ஆண்டு இந்தியாவும் சீனாவும் பூட்டானின் டொக்லம் பகுதியில் போரின் விளிம்பு வரை சென்றன. இரு நாட்டுப் படையினரும் கற்களால் எறிந்து கொண்டனர். 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் லடாக் பிரதேசத்தில் இரு நாடுகளும் படைக்கலன்களின்றி மோதிக் கொண்டன. சீனப் படையினர் முட்கம்பி சுற்றிய பொல்லுகளால் இந்தியப் படையினரத் தாக்கினர். இந்தியப் படையினர் சீனப் படையினரை பள்ளத்தாக்குகளில் தள்ளி விழுத்தினர். இதில் இருபது இந்தியப் படையினரும் எண்ணிக்கை அறியப்படாத சீனப் படையினரும் கொல்லப்பட்ட்னர். பின்னர் இந்தியாவில் இருக்கும் திபெத்தியப் போராளிகள் சீனர்கள் மீது தாக்குதல் நடத்தினர். 2021-ம் ஆண்டு அருணாச்சலப் பிரதேசத்தில் சீனா நூற்றுக்கு மேற்பட்ட விடுகளைக் கொண்ட கிராமம் ஒன்றை அமைத்த செய்தியுடன் ஆரம்பமானது.



படைவிலக்கலும் தாங்கிச் சீண்டலும்.                                      

12-01-2021 சீனா பத்தாயிரம் படையினரை எல்லையில் இருந்து விலக்கி முகாம்களில் தங்க வைத்ததாக செய்திகள் வெளிவந்தன. 15-01-2021 வெள்ளிக் கிழமை நாற்பத்தி ஐந்துக்கும் மேற்பட்ட சீனப் போர்த் தாங்கிகள் இந்தியாவுடனான லடாக் எல்லையை நோக்கி நகர்த்தப் பட்டுள்ளன. இந்தியாவும் தனது தாங்கிப்படையை எல்லையை நோக்கி நகர்த்தியது. இந்தனால் இரு நாட்டு போர்த் தாங்கிகளும் நூறு மீட்டர் இடைவெளியில் நிலை கொண்டது ஓர் ஆபத்தான சூழலை உருவாக்கியது. இரு நாடுகளும் ஐம்பதினாயிரம் படையினரை எல்லையில் வைத்திருப்பது வழக்கம். சீனப் படைவிலக்கல் குளிர்கால நிலைகளைக் கருத்தில் கொண்டு செய்திருக்கலாம். சீனா நிறுத்திய படையினரில் பெரும் பகுதியினர் அந்த சூழலுக்கு புதிதானவர்கள். குளிரான உயர் மலைப்பகுதி. பல சீனப் படையினருக்கு மலை நோய் ஏற்பட்டுள்ளதாகவும் அறியப்படுகின்றது. நிலத்தில் இருந்து 4200 மீட்டர் (13780 அடி) உயரத்தில் இந்திய சீன எல்லையில் ஒரு பகுதி உள்ளது. மலைநோயால் திசை தெரியாமல் நகர்ந்த சீனப் படை வீரர் ஒருவர் இந்திய எல்லைக்குள் சென்றபோது அவரை இந்தியப் படையினர் கைது செய்திருந்தனர். பின்னர் அவர் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மலை நோய் (Mountain sickness) கடல் மட்டத் தில் இருந்து 2400மீட்டரிலும் உயரமான இடங்களில் ஏற்பட வாய்ப்புண்டு. தலைசுற்றல், தலையிடி, காய்ச்சல் போன்றவை இதன் அறிகுறிகளாகும். இந்தியாவின் ஓய்வு பெற்ற படைத்தளபது தீபக் சிங்ஹா: சீனப் படைகள் டெம்ஷாங் போன்ற சீன எல்லைப் பகுதிகளில் போதிய அளவு நிலைகொண்டுள்ளன என்கின்றார். இந்தியப் படையினர் நீண்ட கால போட்டி நிலையெடுப்பிற்கு (standoff) தயாராக உள்ளனர் என்றார் இந்தியப் படைத்தளபதி. 2020 டிசம்பரில் சீனா லடாக் எல்லையில் 100 போர் விமானங்களை நிறுத்த அதற்குப் பதிலடியாக இந்தியா 250 விமானங்களை நிறுத்தியது.

தொல்லைகள் எல்லையில் மட்டுமல்ல

கடந்த சில ஆண்டுகளாக சீனாவிற்கும் பாக்கிஸ்த்தானிற்கும் இடையிலான படைத்துறை ஒத்துழைப்பு இந்தியாவைக் கலவரமடையச் செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ளது. இதற்குப் பதிலடியாக இந்தியா சீனாவுடன் சர்ச்சைக்குரிய கடல் மற்றும் தரை எல்லைகளைக் கொண்ட வியட்னாமுடன் தனது படைத்துறை ஒத்துழைப்பை அதிகரிக்கின்றது. டிசம்பர் 2020இல் இந்திய வியட்னாமியப் படைகளுடன் இணைந்து இந்தியக் கடற்படை தென் சீனக் கடலில் PASSAGE EXERCISE என்னும் குறியீட்டுப் பெயருடன் போர் ஒத்திகை செய்தது. சீனா இந்தியாவை குழம்பிய குட்டையின் மீன் பிடிக்க வேண்டாம் என எச்சரித்தது. இந்தியாவின் நீர்மூழ்கி எதிர்ப்பு கோர்வெட் கப்பல் ஐ.என்.எஸ் கில்டான் இந்த பயிற்ச்சியில் முக்கிய பங்கு வகித்தது. உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான நீர்மூழ்கிக் கப்பலைக் கொண்ட சீனாவிற்கு எதிராக தனது படை வலிமையை அதிகரிக்கும் நிலை இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ளது. 2021 ஜனவரியில் பாக்கிஸ்த்தானும் சீனாவும் இணைந்து நடத்திய போர்ப்பயிற்ச்சியில் இந்தியாவிடமுள்ள ரஃபேல், எஸ்யூ-30 போன்ற போர்விமானங்களைப் போல் தோற்றமுள்ள போர் விமானங்கள் பாவிக்கப்பட்டன. பாக்கிஸ்த்தானிற்கு பல சீனா போர்த்தாங்கிகளை அனுப்பியுள்ளதுடன் 2020 டிசம்பரில் சீனா முப்பது தாக்குதல் ஆளில்லாவிமானங்களை பாக்கிஸ்த்தானுக்கு விற்பனை செய்தது.



ஏவுகணைப் போட்டி

இதற்கிடையில் இந்தியா இரசியாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமையை வாங்கினால் துருக்கிக்கு செய்வது போல் பொருளாதாரத் தடை செய்யப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. 5.5 பில்லியன் விற்பனை. ஆனால் இந்தியப் படையினர் எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமையை இயக்குவதில் பயிற்ச்சி பெற இரசியா சென்றுள்ளனர். சீனாவின் ஏவுகணைத் தொழில்நுட்பத்தை சமாளிக்க இந்தியாவிற்கு எஸ்-400 அவசியம். எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமையை பாக்கிஸ்த்தானுக்கு எதிராக சிறப்பாகப் பாவிக்கலாம். ஆனால் சீனாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளிடமிருந்து இந்தியாவை எஸ்-400 பாதுகாக்க மாட்டாது. இந்தியாவும் ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை விரைவில் பாவனைக்கு கொண்டு வரும்.

இந்தியாவின் கேந்திரோபாய நோக்கங்கள் தெளிவில்லை

இந்தியாவின் காவற் துறை அதிகாரியான என் சி அஸ்த்தானா என்பவர் அணமையில் வெளியிட்ட நூல் ஒன்றில் இந்தியாவிடம் சீனாவையோ பாக்கிஸ்த்தானையோ போரில் வெற்றி கொள்ளக் கூடிய வகையில் தெளிவான கேந்திரோபாய நோக்கங்கள் இல்லை என்றார். நாற்பத்தியெட்டு நூலகளை எழுதிய அஸ்த்தானா சிறந்த படைத்துறை அவதானிப்பாளராகக் கருதப்படுபவர். அவர் இந்திய ஊடகங்கள் பறைசாற்றும் இந்தியப் படைவலிமைக்கும் உண்மை நிலைக்கும் நிறைய வேறுபாடு உண்டு என்கின்றார்.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் வளர்ந்து வரும் தேச வெறி இந்தியாவின் போட்டி நாடுகள் மீதான வன்மத்தை மிகவும் அதிகரித்துள்ளது. ஆனால் இந்தியாவால் பாக்கிஸ்த்தானையும் சீனாவையும் ஒரேயடியாக சமாளிப்பதற்கு வேற்று நாடுகளின் படை உதவி மிக அவசியம்.

Monday 18 January 2021

அமெரிக்க அசிங்கம் உலகெங்கும் பரவுமா?


அமெரிக்க நாடாளுமன்றத்தின் மக்களவையும்ம் மூதவையும் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவை உறுதி செய்யும் கூட்டத்தை தடுக்கும் முகமாக அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள் தாக்குதல் செய்தது உலகைச் சூழவிருக்கும் ஆபத்தின் ஆரம்பக் கட்டமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கொவிட்-19 தொற்று நோயை மோசமாக கையாண்ட நாடுகளின் பட்டியலில் மக்களாட்சி நாடான அமெரிக்கா முதலாம் இடத்திலும் சிறப்பாகக் கையாண்ட நாடுகளின் பட்டியலில் பொதுவுடமையாட்சி நாடான வியட்னாம் முதலாம் இடத்திலும் இருக்கின்றன. உலகெங்கும் பெரும் அழிவை விளைவிக்கக் கூடிய படைத்தளங்களையும் படைக்கலன்களையும் வைத்திருக்கும் ஒரு நாடு ஒரு மனநோயாளியால் ஆட்சி செய்யும் வாய்ப்பு உள்ளதா என்ற அச்சத்தை சிலர் வெளிப்படுத்தியுள்ளனர்.

உலகெங்கும் அமெரிக்க இரசிகர்கள்

“மக்களாட்சி என்பது ஓர் அரசல்ல அது எல்லா மக்களும் தங்கள் பாத்திரத்தை உரிய முறையில் மேடையேற்ற வேண்டிய ஒரு நாடகம்” என்ற அடிப்படியில் அமெரிக்க அரசு கட்டியெழுப்பப்பட்டது. உலகின் எந்த ஒரு நாட்டிலும் தேர்தல் ஊழல் இல்லாமல் நடப்பதில்லை. அமெரிக்கத் தேர்தல்களில் இரண்டு கட்சியினரும் ஊழல் செய்வதுண்டு. எதிர் தரப்பால் ஏற்றுக் கொள்ளப்படாத அளவிற்கு அமெரிக்காவில் ஊழல் நடப்பதில்லை. மற்றத்தரப்பு பெரும் ஊழலில் ஈடுபட்டது ஒரு தரப்பு பெரும் பொய்யை அவிழ்த்து விடுவதில்லை. ஆனால் அது 2020 நவம்பரில் நடந்த அதிபர் தேர்தலில் நடந்துள்ளது. அந்தப் பொய்யைச் சொன்னவர் ஒரு தனிப்பட்ட டிரம்ப் என்பவர் மட்டுமல்ல. அவரின் பொய்யை பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரச உயர் பதவியில் உள்ளவர்களும் சொல்வதுடன் அமெரிக்க நாடாளமன்றத்தில் நடந்த தாக்குதலுக்கு உடந்தையாக இருக்கின்றனர். பலர் அத்தாக்குதலை நியாயப்படுத்து கின்றனர். 2020இல் கொரோனா நச்சுக்கிருமி உலகெங்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது போல் 2021 அமெரிக்க குடியரசுக் கட்சியினரின் பயங்கரவாதம் உலகெங்கும் பரவக் கூடிய ஆபத்து உள்ளது. மேற்கு ஐரோப்பாவில் பலர் அமெரிக்காவை எப்போதும் ஒரு முன்னுதாரணமாக எடுப்பவர்களாக உள்ளனர். உலகெங்கும் உள்ள பல நகரவாசிகளில் பலர் அமெரிக்காவை முன்னுதாரணமாக கொள்ளக் கூடியவர்கள். அமெரிக்கத் திரைப்படங்கள், பாடகர்கள், ஊடகங்கள் உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வல்லவை.

உலகப் பயங்கரவாத வடிவம் பெற்ற வெள்ளைத் தேசியவாதம்

அமெரிக்காவில் ஒரு பகுதியினர் கடும் சினம் கொள்ளும் அளவிற்கு அமெரிக்காவில் கறுப்பின மக்கள், பெண்கள், தன்னினச் சேர்க்கையாளர்கள் போன்ற பல ஒடுக்கப்பட்ட பிரிவினர் தங்களுக்கு உரிய உரிமைகளைப் பெற்றுள்ளனர் என சில அமெரிக்க ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.  அவர்கள் சொல்கின்ற ஒரு பகுதியினர் வலதுசாரி வெள்ளைத் தேசியவாதிகளையே. 2019-ம் ஆண்டு நியூசிலாந்தில் அப்பாவி இஸ்லாமியர்களை ஒரு வெள்ளைத் தேசியவாதி சுட்டுக் கொண்ட போதே அமெரிக்காவில் உருவான வெள்ளைத் தேசியவாதம் உலகெங்கும் ஒரு பயங்கரவாதமாகப் பரவத் தொடங்கி விட்டது என சில சமூகவியலாளர்கள் எச்சரித்திருந்தனர். சமூகச் சிந்தனை மிக்க ஸ்கண்டினேவிய நாடுகளில் கூட வெள்ளைத் தேசியவாதம் 2019இலேயே பரவிவிட்டது. வெள்ளையர் அல்லாதோர் வாழ்கின்ற நாட்டிலும் வெள்ளைத் தேசியவாதம் வேறு வடிவங்களைப் பெறும் ஆபத்தும் உள்ளது. வெள்ளைத் தேசியவாதம் மக்களாட்சியில் வெள்ளையர் அல்லாதவர் அரசுத் தெரிவில் பங்களிப்புச் செய்வதை விரும்பாததால் அவர்கள் மக்களட்சி முறைமை மீது வெறுப்படைந்துள்ளனர். உலகெங்கும் உள்ள பெரும்பான்மைவாதிகளும் மதவாதிகளும் இந்த வெறுப்பை தங்கள் மத்தியில் இனி வளர்த்துக் கொள்ளப் போகின்றார்கள்.

அமெரிக்கா மேன்மையானது.

கருத்துச் சுதந்திரம், ஒன்று கூடல் சுதந்திரம், ஊடக சுதந்திரம், சட்ட அமூலாக்கம், சுதந்திரமான நீதித்துறை, துடிவினை மிக்க குடிசார் அமைப்புக்கள், வெளிப்படைத்தன்மை, ஏற்புத்தன்மைமிக்கதும் பொறுப்பு கூறத்தயங்காததுமான பொதுநிறுவனங்கள் ஆகியவை அமெரிக்காவில் சிறப்பாக அமைந்திருப்பதாலும் எந்த ஒரு எதிரியாலும் தோற்கடிக்கப் படாத நிலையில் இருப்பதாலும் அமெரிக்கா உலகில் மேன்மையானது என அமெரிக்கர்கள் மார் தட்டி நிற்கின்றனர். அவர்கள் முகங்களில் 2021 ஜனவரி 6-ம் திகதி கரி பூசப்பட்டுள்ளது.

முழு உலகிற்கும் பேராபத்து!

அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையைச் சேர்ந்த ரிமதி ஸ்னைடர் “தமது நாடுகளில் ஃபாஸிசத்தையும் நாஜியிஸத்தையும் பொதுவுடமைவாதத்தையும் வளரவிட்ட ஐரோப்பியர்களிலும் பார்க்க அமெரிக்கர்கள் புத்திசாலிகள் அல்லர் ஆனால் ஐரோபியர்களின் அனுபவம் அமெரிக்கர்களுக்கு சிறந்த பாடமாக அமைந்துள்ளது” என்றார். 1995இல் பதினாறு அமெரிக்கர்களில் ஒருவர் படைத்துறை ஆட்சியை விரும்பினர். 2014இல் அது ஆறுபேரில் ஒருவராக மோசமடைந்தது. 2011-ம் ஆண்டு அரைப்பங்கு அமெரிக்கர்கள் தேர்தல் இல்லாமல் நாடாளுமன்றம் இல்லாமல் ஒரு தலைவரால் நாடு ஆளப்படுவதை விரும்பினர். அமெரிக்க இளையோரில் மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே மக்களாட்சி அவசியம் எனக் கருதுகின்றனர். பேரழிவு விளைவிக்க படைக்கலன்களைக் கொண்ட ஒரு நாட்டில் பொறுப்புக்கூறலற்ற ஒரு சர்வாதிகாரி ஆட்சியில் அமர்வது பேராபத்தானது.

யார் இந்த டிரம்பின் ஆதரவாளர்கள்?

அமெரிக்க உளவுத்துறை, அமெரிக்க காவல்துறை ஆகியவற்றின் பங்களிப்பு இல்லாமல் அமெரிக்க நாடளமன்றத்தின் மீது தாக்குதல் செய்ய முடியாது. உலகின் எந்தப் பகுதியிலும் எட்டு மணித்தியாலங்களுக்குள் பெரும் படையணியைக் கொண்டு போய் இறக்கக் கூடிய அமெரிக்காவால் ஒரு சில நிமிடங்களுக்குள் அமெரிக்க நாடாளமன்றத்தில் நடந்த தாக்குதலை முறியடித்திருக்க முடியும். அமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் பயங்கரவாதத்தை 2021 ஜனவரி ஆறாம் திகதி அரங்கேற்றியவர்களில் இரு பிரிவினர் கவனிக்கப் பட வேண்டியவர்கள். நாடாளமன்றத்தைத் தாக்கிய பயங்கரவாதிகள் தம்மை பெருமிதமான இளையோர் (Proud Boys) என அழைத்துக் கொண்டனர். தாக்குதலுக்குப் போகும் வழியில் அவர்கள் முழந்தாளிட்டு ஏசு நாதரைத் தொழுதனர். இவர்கள் பெண்களின் உரிமைகளுக்கும், குடிவரவிற்கும் எதிரானவர்கள். இவர்களில் ஒரு பிரிவினர் நற்செய்தி சார்ந்த கிருத்தவர்கள் (Evengelical Christians). இவர்கள் தங்களது தாக்குதலை புனிதப் போர் எனவும் அழைத்தனர். இவர்களில் ஒரு பெண்மணி (தேர்தல்) திருட்டை நிறுத்தவும் என தேவாலய குரு போதனை செய்த பின்னர் தனக்கு கடவுளிடமிருந்து எரிகின்ற புதர் என்ற சமிக்ஞை கிடைத்த படியால் தான் தாக்குதல் செய்ய விமான மூலம் வாஷிங்டன் போனதாக பத்திரிகை ஒன்றிற்கு கூறியுள்ளார். மேலும் அவர் தான் பைபிளிள் உள்ள எஸ்த்தர் ராணி போல் செயற்படுவதாகவும் சொன்னார். நாடாளமன்றத்தைத் தாக்கிய குடியரசுக் கட்சியின் பயங்கரவாதிகளில் இன்னொரு பிரிவினர் கியூஅனான் (QAnon) என்னும் இணையவெளி மதக்குழுவினர். இவர்கள் ஜோ பைடனின் மக்களாட்சிக் கட்சியினர் சாத்தானை தொழுபவர்கள் என நம்புகின்றனர். இவர்களிடமிருந்து நாட்டைப் பாதுகாக்க வேண்டியது தமது கடமை என இவர்கள் கருதுகின்றனர்.

எய்தவர்கள் வேறு அம்பு வேறு

மேற்படி இரண்டு மதக் குழுவினர்களுக்கும் பின்னால் அமெரிக்காவின் பெரும் செல்வந்தர்கள் பலர் இருக்கின்றனர். கொவிட்-19 தொற்று நோயால் அமெரிக்க அரசின் செலவு மிகவும் அதிகரிதும் வரவு மிகவும் குறைந்தும் இருக்கின்றது. இதனால் அரசு செல்வந்தர்கள் மீது அதிக வரி விதிப்பை ஏற்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது. பொதுவாக ஜோ பைடனின் மக்களாட்சிக் கட்சியினர் ஆட்சியில் அமர்ந்தாலே அதிக வரிகளை விதிப்பார்கள். டிரம்ப் ஆட்சிக்கு வந்தச்தும் பெரும் செல்வந்தர்களின் கூட்டாண்மை நிறுவனங்கள் மீதான வரியைக் குறைத்தார். அமெரிக்க பெரும் செல்வந்தர்கள் ஜோ பைடனின் ஆட்சியை பெரிதும் எதிர்க்கின்றார்கள். அதிலும் இம்முறை வெள்ளை மாளிகை, மக்களவை ஆகிய இரண்டும் மக்களாட்சிக் கட்சியினரின் கையில். மூதவையில் இரு கட்சிகளும் ஐம்பதிற்கு ஐம்பது என்ற நிலையில் இருக்கின்றன. மூதவைக் கூட்டங்களுக்கு துணை அதிபர் தலைமை தாங்குவார். அதனால் தீர்மானிக்கும் வாக்கு மக்களாட்சியின் கையில் உள்ளது. இதனால் மக்களாட்சிக் கொள்கையை குடியரசுக் கட்சியினர் குழி தோண்டிப் புதைக்கப் பார்க்கின்றனர்.

அமெரிக்க சட்ட அமூலாக்கத்திற்கு பொறுப்பான Federal Bureau of Investigation (FBI) இன் அறிக்கையின் படி ஜனவரி ஆறம் திகதி நடந்தது போல் இனியும் நடக்க வாய்ப்புண்டு.

Friday 8 January 2021

டிரம்ப் பதவி நீக்கம் செய்யப் படுவாரா?


அமெரிக்க அரசியல் சட்டதின் ஓட்டைகளுக்குள் புகுந்து விளையாடியவர் அதிபர் டொனால்ட் டிரம்ப். உலகின் வலிமை மிக்க பதவியான அமெரிக்க அதிபருக்கு குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்குதல், தண்டனையைக் குறைத்தல் போன்ற அதிகாரங்களும் உண்டு. டிரம்ப் 2017 ஜனவரியில் பதவிக்கு வந்தவுடன் அவர் தனது சட்டத்துறையினரிடம் அதிகம் உரையாடியது தன்னை தானே மன்னிக்க முடியுமா என்பதுதான். டிரம்ப் தனது பதவிக்காலம் இன்னும் 27 நாட்கள் இருக்கின்றன என்ற வேளையில் தனக்கு வேண்டிய 29 சிறையிலுள்ள குற்றவாளிகளுக்கு மன்னிப்பும் தண்டனைக் காலக் குறைப்பும் வழங்கினார். அதில் வரி ஏய்ப்பிற்காக சிறையிலிடப்பட்ட ட்ரம்பினது சம்பந்தி சார்ல்ச் குஷ்ணரும் ஒருவர்.

தீயாரைச் சேர்வதை விரும்பிய டிரம்ப்

டிரம்பிற்கு சர்வாதிகாரிகளை பிடிக்கும். வட கொரிய அதிபரையும் சீன அதிபரையும் புகழ்ந்தவர். அஞ்செலா மேர்க்கலுடன் மோசமாக நடந்து கொண்டவர். சர்வாதிகாரிகள் எவ்வளவு கடுமையானவராகவும் தரம் தாழ்ந்தவராகவும் இருக்கின்றார்களோ அந்தளவு அவர்களுடன் நான் சுமூகமாக பழகுகிறேன் என்றவர் டிரம்ப். ஆமாம் சாமிகளைத்தான் அமைச்சரவையிலும் உயர் பதவிகளிலும் வைத்திருந்தார். முரண்படுபவர்களை சடுதியாக மாற்றினார். மற்ற எந்த அரசியல்வாதிகளும் செய்யாத அளவிற்கு டிரம்ப் சமூக வலைத்தளங்கள் மூலம் தனது ஆட்சியை நான்கு ஆண்டுகள் நடத்தினார். கடையில் ஃபேஸ்புக், டுவிட்டர், யூரியூப் போன்றவை ட்ரம்பின் கணைக்கை மூடி அவரைச் செயற்பட முடியாமல் தடுத்து விட்டன.

வரியா? வரியில்லயா?

பொதுவாக டிரம்பின் குடியரசுக் கட்சியினர் வரிவிதிப்பைக் குறைப்பை விரும்புபவர்கள். டிரம்பின் எதிர்க்கட்சியான மக்களாட்சிக் கட்சியினர் ஆட்சியில் இருக்கும் போது அதிக வரி விதிக்கப்படும். டிரம்ப் ஆட்சிக்கு வந்ததும் செல்வந்தர்கள் மீதான வரிகளைக் குறைத்தார். கொவிட்-19 தொற்று நோயால் பல அமெரிக்க நடுத்தர குடும்பத்தினர் பாதிப்படைதுள்ள நிலையில் அவர்களுக்கான சமூக நலக் கொடுப்பனவுகளுக்கும் அதிக வரிவிதிப்பு அவசியம். அதனால் புதிய அதிபர் ஜோ பைடன் அதிக வரிகளை விதிப்பேன் என தேர்தல் பரப்புரையின் போது கூறியுள்ளார். இதனால் பல செல்வந்தர்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை


வாஷிங்டன் டிசியின் பாதுகாப்பு

அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் ஒரு மாநிலமாகும். ஆனால் மற்ற மாநிலங்களைப் போல் இந்த மாநிலத்திற்கு என ஓர் அரசு இல்லை. மற்ற மாநிலங்களுக்கென தனித்தனி காவற் துறையும் பாதுகாப்புப் படையும் உள்ளன. வாஷிங்டனுக்கு தனியாக பாதுகாப்புப் படை இல்லை. அதன் பாதுகாப்பிற்கு மாநகர காவல் துறையும் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையான பெண்டகனும் பொறுப்பாகும். நாடாளமன்றத்தின் பாதுகாப்பிற்கு மாநகர காவல் துறை பொறுப்பாகும். 2021 ஜனவரி ஆறாம் திகதி பயங்கரவாதிகள் அமெரிக்க நாடாளமன்றத்தை தாக்கிய போது மாநகர காவல் துறையினரால் அதை சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அவர்களில் சிலர பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகவும் நடந்து கொண்டனர் எனவுக் குற்றம் சாட்டப்படுகின்றது. பயங்கரவாதிகளை சமாளிக்க முடியாத நிலையில் மாநகர முதல்வர் பெண்டகனைத் தொடர்பு கொண்டு பாதுகாப்பு படையினரை அனுப்பச் சொல்லி கேட்ட போது பெண்டகன் படையினரை அனுப்ப மறுத்து விட்டது. செய்தி கேட்ட அயல் மாநிலங்களின் ஆளுநர்கள் சிலர் தமது காவல் படையினரை அனுப்பட்டுமா என பெண்டகனைத் தொடர்பு கொண்டு கேட்ட போது பெண்டகன் அனுப்ப வேண்டாம் என்று சொல்லி விட்டது. உலகில் எங்கு பயங்கரவாதிகள் தாக்கினாலும் உடனே செல்லும் அமெரிக்கப் படையினர் தம் நாட்டில் எதையும் செய்யவில்லை.

டிரம்ப் கூட்டிய கூட்டம்

2021 ஜனவர் ஆறாம் திகதி வெள்ளை மாளிகைக்கு அண்மையாக டிரம்ப் தனது ஆதரவாளர்களைத் திரட்டி ஒரு கூட்டம் நடத்தினார். அதில் அவர் தனது தேர்தல் வெற்றி திருடப்பட்டு விட்டது. தனது துணை அதிபர் மைக் பென்ஸ் தன்னுடன் ஒத்துழைக்காமல் கோழைத்தனமாக நடக்கின்றார் என முழங்கினார். அங்குள்ள மக்களை கப்பிட்டல் ஹில் நோக்கிச் சென்று நாடாளமன்றம் தேர்தல் முடிவை உறுதி செய்வதை தடுக்க வேண்டும் என்றார். அதன் பின்னர் நடந்தவை அமெரிக்க மக்களாட்சியின் கோர முகத்தை அம்பலப் படுத்தியது.

 

டிரம்ப் பயங்கரவாத்தை தூண்டினாரா?

2016-ம் ஆண்டிற்கு முன்னர் தன்னுடன் அதிபர் பதவிக்கு போட்டியிட்ட கிலரி கிளிண்டனை சிறையிலடையுங்கள் என்ற வாசகத்தை அடிக்கடி சொல்லி தேர்தல் பரப்புரை செய்தவர் டிரம்ப் ஆனால் அவரது பதவிக்கால முடிவில் டிரம்பை சிறையில் அடையுங்கள் என்ற வாசகம் பரவலாக அடிபடுகின்றது. அமெரிக்க அதிபர் பதவியில் இருக்கும் போது அவர் மீது நீதிமன்றில் வழக்கு தொடுக்க முடியாது. ஆனால் அவரின் பதவிக்காலம் முடிந்த பின்னர் அவர் மீது வழக்கு தொடுக்க முடியும். ஆனால் டிரம்ப் பதவியில் இருக்கும் போது தனக்கு வேண்டிய பழமைவாதக் கொள்கையுடையவர்களை நீதித்துறையில் நியமித்துள்ளார். 2021 ஜனவரி 6-ம் திகதி அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூட்டம் நடத்த முடியாமல் ஒரு பயங்கரவாதக் கூட்டம் பல பயங்கர நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இந்த பயங்கரவாத நடவடிக்கையின் பின்னணியில் டிரம்ப் இருந்தார் என நிரூபிக்க முடியுமானால் அவர் 2020 ஜனவரி 20-ம் திகதி மதியம் அவரது பதவிக்காலம் முடிந்த பின்னர் அவர் மீது வழக்கு தொடுக்கலாம்.

டிரம்பிற்கு எதிராக வலதுசாரி நாளிதழ்

டிரம்ப் தானாகவே பதவி விலக வேண்டும், டிரம்ப் பதவி நீக்கம் செய்யப்படவேண்டும் டிரம்ப் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்கள் இப்போது முன் வைக்கப்படுகின்றன. அவற்றிற்கு அவரது எதிர்க்கட்சியினரிடையே வலிமையாகவும் ஆளும் கட்சியினரிடையே சிறிதளவும் ஆதரவு உண்டு. தீவிர வலது சாரியான ரூபேர்ட் மெர்டொக்கின் நாளிதளான வால் ஸ்றீட் ஜேர்ணலின் ஆசிரிய குழாம் டிரம்ப் தானாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. ஆனால் ஃபொக்ஸ் நியூஸ் ஊடகம் டிரம்ப்பிற்கு ஆதரவாக தொடர்ந்து செயற்படுகின்றது. அமெரிக்காவின் வெளியுறவுத் துறையில் பணி புரியும் எண்பதிற்கு மேற்பட்டோர் அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு அமெரிக்கப் நாடாளமன்றத்தில் நடந்த தாக்குதலுகான தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

டிரம்ப் பதவியில் இருக்கக் கூடாது என்னும் அமெரிக்கர்

அமெரிக்கர்க்ளில் 57%மானோர் டிரம்ப் உடனடியாக பதவியில் இருந்து அகற்றப் படவேண்டும் எனக் கருதுகின்றனர். அதில் 14% குற்றம் சுமத்துதல் மூலம் பதவி நீக்கம் செய்யப் படவேண்டும் எனக் கருதுகின்றனர். முப்பது விழுக்காட்டினர் இருபத்தி ஐந்தாம் திருத்தம் மூலம் துரிதமாகப் பதவி நீக்கப்படவேண்டும் என நினைக்கின்றனர். பதின்மூன்று விழுக்காட்டினர் டிரம்ப் தானாக பதவி விலக வேண்டும் என நினைக்கின்றனர். ஐம்பத்தி ஐந்து விழுக்காட்டினர் தவறு செய்துவிட்டதாக கருதுகின்றனர். டிரம்பின் குடியரசுக் கட்சியின் எழுபத்தி ஏழு விழுக்காட்டினர் தன் பதவிக்காலம் முடியும்வரை பதவியில் இருக்கலாம் எனக் கருதுகின்றனர். 


டிரம்பை பதவி நீக்க இரு வழிகள்

அமெரிக்க அதிபரை இரண்டு வழிகளில் பதவி நீக்கம் செய்யலாம். ஒன்று குற்றம் சாட்டுதல் மூலம் பதவி நீக்குதல், இரண்டு தரமற்றவர் எனப் பதவி நீக்குதல். அமெரிக்க அதிபர் மீது ஒரு குற்றப்பத்திரிகையை அமெரிக்க நாடாளுமன்றத்தின் மக்களவையில் தாக்குதல் செய்து அவர் குற்றம் புரிந்தார் என மக்களவை உறுப்பினர்களின் பெரும்பானையினர் ஏற்றுக்கொள்ள வேண்டும். பின்னர் குற்றப்பத்திரிகையும் மக்களவைத் தீர்மானமும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் மூதவைக்கு சமர்பிக்க வேண்டும். மூதவை நீதித்துறையினரின் உதவியுடன் விசாரணை செய்யும். பின்பு மூதவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை உறுப்பினர்கள் குற்றம் செய்ததை ஏற்றுக் கொண்டால் அதிபர் பதவி நீக்கம் செய்யப்பட்டு துணை அதிபர் அதிபராகப் பதவி ஏற்றுக் கொள்வார். டிர்ம்பின் பதவிக்காலம் 2021 ஜனவரி 20-ம் திகதி மதியம் வரை இருக்கும் என்பதால் முதவையின் நீதி விசாரணை அதிலும் நீண்ட காலம் எடுக்கும். நூறு உறுப்பினர்களைக் கொண்ட அமெரிக்க நாடாளுமன்றத்தின் மூதவையில் டிரம்பின் குடியரசுக் கட்சியினர் ஐம்பது பேரும் அவரின் எதிர்க்கட்சியான மக்களாட்சிக் கட்சியினர் ஐம்பது பேரும் உள்ளனர். குடியரசுக் கட்சியினரில் ஆகக் குறைந்தது 17பேர் டிரம்ப் குற்றவாளி என வாக்களிக்க வேண்டும். ஆனால் இதுவரை மூவர் மட்டுமே டிரம்ப் பதவி விலக்கப்பட வேண்டும் எனக் கருத்து வெளியிட்டுள்ளனர். டிரம்பை பதவி நீக்க இரண்டாவது வழி இலகுவான வழியாகத் தோன்றும். ஆனால் நிறைவேற்றும் சாத்தியம் குறைவு.  இது அமெரிக்க அரசியலமைப்பின் இருபத்தி ஐந்தாவது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டது. டிரம்ப் பதவியில் இருக்கத் தகுதி அற்றவர் என அமெரிக்காவின் துணை அதிபரும் அவரது அமைச்சர்களில் பெரும்பான்மையினரும் முடிவு செய்தால் அவரைப் பதவியில் இருந்து நீக்கலாம். நாடாளமன்றத்தின் மீதான தாக்குதலை ஆட்சேபித்து டிரம்பின் அமைச்சரவையில் இருந்து இருவர் பதவி விலகி விட்டனர். திறைசேரிக்குப் பொறுப்பான அமைச்சர் இந்த வழியில் பதவி நீக்குவது பற்றி கலந்துரையாடியதாக சொல்லப்படுகின்றது. ஆனால் அவர் பதவி நீக்கத்திற்கு ஆதரவாக இல்லை என்றும் கருதப்படுகின்றது.

அமெரிக்க நாடாளமன்ற மக்களவைத் தலைவர்

அமெரிக்க நாடாளமன்றத்தின் மக்களவையின் தலைவர் நான்சி பெலொசி துணை அதிபர் உடனடியாக டிரம்பை அமெரிக்காவின் அரசியலமைப்பின் இருபத்தி ஐந்தாம் திருத்தத்தின் படி பதவி நீக்க வேண்டும் அல்லது 2021 ஜனவரி 13-ம் திகதி அமெரிக்க நாடளமன்றம் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்குதல் செய்து பதவி நீக்கம் செய்யும் என சூளுரைத்துள்ளார். நாடாளமன்றத் தாக்குதலின் பின்னர் துணை அதிபர் மைக் பென்ஸ் டிரம்ப் மீது கடும் ஆத்திரத்தில் உள்ளார். அமெரிக்க நாடாளமன்றத்தின் மூதவையின் தலைமைப் பொறுப்பு துணை அதிபருக்கு உரியது. அதைப் பயன்படுத்தி மைக் பென்ஸ் தேர்தல் செல்லுபடியற்றது என தீர்ப்பு வழங்க வேண்டும் என டிரம்ப் அவரை நிர்ப்பந்தித்திருந்தார். ஆனாலும் டிரம்பை பதவி நீக்கம் செய்வதற்கு பென்ஸ் ஆதரவாக இல்லை.

தடாலடியாக காலில் விழுந்த டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணப்பட்டுக் கொண்டிருக்கும் போதே டிரம்ப் தான் வெற்றி பெற்றுவிட்டதாக முழங்கினார். பின்னர் தனது வெற்றியை திருடி விட்டதாக புலம்பினார். தனது தோல்வியை ஏற்றுக் கொள்ள மறுத்தார். கடையில் அமெரிக்க நாடாளுமன்றம் கூடி தேர்தல் முடிவை உறுதி செய்வதை தடுக்க முயன்றார். அவருக்கு எதிர்ப்பு அதிகரித்த நிலையில் தனது தோல்வியை ஒப்புக் கொண்டு நகரம் தமிழ்த்திரைப்படத்தில் வடிவேலுவின் சண்டித்தனத்தை நினைவு படுத்துகின்றார்.

வ்


 

Monday 4 January 2021

2021 எப்படி இருக்கப் போகின்றது?

 


தொழில்நுட்பம் என்றுமில்லாத அளவு துரித வளர்ச்சி

மசகு எண்ணெய் விலை மந்தமடையும்

படைத்துறை மேலும் தீவிர வளர்ச்சியடையும்

குறைந்த வட்டியும் பங்குச் சந்தை வளர்ச்சியும்

இலங்கை உதவி கேட்டு கையேந்தும்

இந்தியப் பொருளாதாரம் தடுமாறும்

இந்தியா மீதான சீனத் சீண்டல் தொடரும்

அமெரிக்கா தனிமைப்படுத்தப்படும்

தொழில்நுட்பம் என்றுமில்லாத அளவு துரித வளர்ச்சி

கொவிட்-19ஐ கையாளும் தொழில்நுட்பம். முகமூடிக்குள்ளே microphone, Bluetooth ஆகியை இருக்கும். புற-ஊதாக் கதிர்கள் மூலம் கைப்பேசிகளில் உள்ள நச்சுக்கிருமிகள் அழிக்கப்படும்.

தகவல் இருப்பிடல், தகவல் பரிமாற்ற வேகம் பாரிய வளர்ச்சியைக் காணும்.

தொடர்பாடல் மேலும் இலகுவாகவும் மேலும் அதிகமாகவும் நடக்கும்

இணையவெளியில் நாடுகளிடையேயான ஊடுருவல், திருட்டு, தாக்குதல் போன்றவை தீவிரமடையும்.

செயற்கை நுண்ணறிவு பெரும் வளர்ச்சியைக் காணும்.

கணினிகள் தாமாகவே தமது அறிவை வளர்த்துக் கொள்வது (Machine Learning) மிகத்துரிதமாக வளரும்.

போக்குவரத்தில் தானியங்கிகள் மயமாகும்: Self-driving vehicles, self-navigating ships.

மனித எந்திரங்களின் பாவனை அதிகரிக்கும். தபால் மற்றும் பொதிகளை இயந்திர மனிதர்கள் விநியோகம் செய்வார்கள்.

முகில் (Cloud) தரவு இருப்பிடல் Data storage அதிகரிக்கும்.

ஆறாம் தலைமுறைப் போர்விமானத்தை அமெரிக்கா பாவனைக்கு விடும்

5ஜீ பாவனை அதிகரிக்கும் ஆனால் பரவலான பாவனைக்கு வரமாட்டாது.

நீட்டித்த மெய்மம் Extended Reality (ER): தொலைவிடங்களை பக்கத்தில் கொண்டுவரும். மணமகனும் மணமகனும் வேறு நாடுகளில் இருந்து கொண்டு திருமணம் செய்வர். (சாந்தி முகூர்த்தம்……. இப்போதைக்கு வாய்ப்பில்லை) இணையவெளிக் காதல், மேலும் இலகுவாகும். ஆடைகளை Online shopping செய்யும் போது ஆடைகளை விற்பனை செய்பவர் உங்கள் மெய்நிகர் உருவத்திற்கு ஆடையை அணிவித்து அளவு சரி பார்த்துக் கொள்வார்.

வீட்டில் இருந்து வேலை செய்யும் வசதிகள் தொழில்நுட்பங்கள் வளரும்.

நுண்மிய நாணயங்கள் மூலமான கொடுப்பனவுகள் அதிகரிக்கும். பிட்கொயின் போன்ற நுண்மிய நாணயங்களின் பெறுமதி வளர்ச்சி 2021இல் முடிவுக்கு வரும். பல அரசுகள் நுண்மிய நாணயங்களை அறிமுகம் செய்யும்.வ் 

தகவற் செல்வம்

தகவல் என்பது பெரும் செல்வமாகும். உலகெங்கும் பெரு நிறுவனங்கள் தகவல் திரட்டலில் அதிக அக்கறை காட்டும். இதில் பெரு முதலீடு செய்யப்படும். பேஸ்புக், கூகிள் போன்ற பெரும் நிறுவனங்களின் ஆதிக்கத்தை அமெரிக்க அரசும் மேற்கு ஐரோப்பிய அரசும் தணிக்க முயற்ச்சி செய்யும். சீனாவும் தனது நாட்டில் தனியார் துறை நிறுவனங்களின் பெரு வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும்.

பொருளாதாரம்

பொருளாதார வளர்ச்சி தடுப்பூசியின் வெற்றியில் பெரிதும் தங்கியிருக்கின்றது. ஏற்கனவே உள்ள நச்சுக்கிருமி புதிய வடிவம் பெறலாம். புதிய நச்சுக்கிருமிகள் வராமல் இருக்க வேண்டும். இன்னும் மனிதர்களை தாக்கக் கூடிய 827,000 வகையான நச்சுக்கிருமிகள் விலங்குகளில் இருக்கின்றன. அவற்றை எந்த நாட்டிலாவது உணவாக உட் கொண்டால் மீண்டும் ஒரு பெருந்தொற்று உருவாகலாம். பலநாடுகளிலும் வட்டி விழுக்காடு குறைவாகவே இருக்கும். பங்குச் சந்தை சுட்டிகள் அதிகரிக்கும். தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் அதிக விலை அதிகரிப்பை எட்டும். இலங்கை வெளிநாடுகளில் இருந்து கடன் பெறுவதில் உள்ள சிக்கல் அதிகரிக்க. அது பல நாடுகளிடமும் நிதி உதவி கேட்டு கையேந்த வேண்டிய நிலை ஏற்படும். அமெரிக்கா, சீனா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகள் சிறிய அளவில் நிதி உதவியை வழங்கலாம்.  

பெரும்பாலான நடுவண் வங்கிகள் பணத்தை அச்சிடும். அதை அளவுசார் தளர்ச்சி (Quantitative Easing) என்னும் கௌரவப் பெயரால் அழைப்பர்.

எரிபொருள் விலை இரண்டு முதல் மூன்று விழுக்காடு அதிகரிக்கும். 2021 ஜனவரி முதல் வாரத்தில் நடந்த ஒபெக்+ நாடுகளின் கூட்டத்தில் சவுதி அரேபியாவும் இரசியாவும் முரண் பட்டுக் கொண்டன. கொவிட்-19இற்கான தடுப்பூசி பாவனைக்கு வந்தவுடன் மசகு எண்ணெய் விலை $50இற்கு மேல் அதிகரித்தது.

உல்லாசப் பயணத்துறை, வான் பயணத்துறை போன்றவை 2021இன் பிற்பகுதியில் வளர்ச்சியடையும்.

இந்தியாவின் வங்கிகளின் வாராக்கடன் (அறவிட முடியாத கடன்) பிரச்சனை அதிகரிக்கும். இதனால் மேலும் சில வங்கிகள் மூடப் படுதல் அல்லது நடுவண் வங்கியால் பொறுப்பேற்க்கப்படும். புதிதாக வேலை தேடிவரும் இளையோரைச் சமாளிக்க இந்தியா எட்டு விழுக்காடு பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டும். ஆனால் 2021இல் 2விழுக்காட்டிலும் குறைவாகவே பொருளாதாரம் வளரும். இது உள்நாட்டு குழப்பங்களைத் தோற்றுவிக்கும். இந்தியாவின் ஆளும் பாரதிய ஜனதா கட்சி மாநிலக் கட்சிகளை ஒழித்துக் கட்ட முயல்வதில் தோல்வியடையும்.

படைத்துறை

பெரிய ஏவுகணைகளில் தற்போது உள்ள துல்லியத் தாக்குதல் தொழில்நுட்பங்கள் கைத்துப்பாக்கிகளில் அறிமுகப்படுத்தப்படும். அமெரிக்கா சந்திரனில் அணுவலு உற்பத்திநிலையத்தை அமைக்கவிருக்கின்றது. சீனா படைவலுவைப் பெருக்கும். சீனா படைத்துறைக்கு தேவையான தொழில்நுட்பத்தை அமெரிக்காவிடமிருந்தும் மேற்கு ஐரோப்பிய நாடுகளிடமிருந்தும் பெறுவதில் மேலும் சிக்கல்கள் ஏற்படும். இந்தியா சீனாவின் நெருக்குவாரங்களால் அமெரிக்காவுடன் அதிக படைத்துறை ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்கும்.

குவாட்

ஒஸ்ரேலியா இந்தியா, ஜப்பான், ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளிடையேயான குவாட் எனப்படும் நான்கு நாடுகளிடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பில்  (முக்கியமாக சுதந்திர கடற்போக்குவரத்து) தென் கொரியா, வியட்னாம் ஆகியவற்றுடன் மேலுல் ஒரு சில நாடுகள் இணைண்டு கொள்ளும். ஆனால் நேட்டோ போன்ற ஒரு படைத்துறை ஒத்துழைப்பு ஒப்பந்தம் செய்யப்பட மாட்டாது. அந்த ஒப்பந்தம் செய்யப் பட்டால் ஆசியப் பாதுகாப்பிற்கான அமெரிக்காவின் பொறுப்பும் செலவும் அதிகரிக்கும். ஆனால் சீனாவை மனதில் கொண்டு பல போர் ஒத்திகைகள் நடக்கும்.

மேற்காசியா

வளைகுடா நாட்களிடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஆனால் அவற்றிற்கு துருக்கியுடன் விரோதம் வளரும். இஸ்ரேலுடம் அரபு நாடுகள் அரசுறவை மேலும் வளர்க்கும். அதனால் பலஸ்த்தீன விடுதலை என்பது தொலை தூரக் கனவாகும். ஈரான் மீது நெருக்குதல் அதிகரிக்கும். ஈரானில் தீவிரப் போக்குடையவர்களினதும் அல்லது படைத்துறையைச் சேர்ந்தவர்களினதும் ஆதிக்கம் அதிகரிக்கும். யேமனில் பிரச்சனைகள் தீராது. எதியோப்பியாவில் பிராந்திய மோதல் மோசமாகும். ஈரான் – அமெரிக்க சமரச முயற்ச்சி தோல்வியில் முடிவடையும். லிபியாவில் அமைதி தோன்றி மறையும்.

ஆப்கானிஸ்த்தானில் தலிபான்களின் கை ஓங்கும். தலிபான் ஐ எஸ் மோதல் அதிகரிக்கும். வெனிசுவேலாவில் ஆட்சி மாற்றத்திற்கு அமெரிக்கா முயற்ச்சிக்கலாம்.

 

தைவான் தனது படை வலுவைப் பெருக்குவதுடன் அமெரிக்கப் படைகளை தன் மண்ணில் நிலை கொள்ளும் படி வேண்டும்.

இரசியா

அமெரிக்காவிற்கும் மேற்கு ஐரோப்பியாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பு மேலும் வளர முடியாத நிலை ஏற்படும். டொனால்ட் டிரம்ப் மூட்டிய தீயை எளிதில் அணைக்க முடியாது. அதானால் இரசியாவின் உலக ஆதிக்கம் மேலும் வளரும். இரசியா தனக்கு என ஓர் இடத்தை உலக அரங்கில் நிலை நிறுத்திக் கொள்ளும். இரசிய சார்பு நாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

சீனா தனது பொருளாதார வலிமையைப் பாவிக்கும்

சீனா தனது பொருளாதார வலிமையை அரசுறவியலுக்கு அதிகம் பாவிக்கும். நலிவடைந்திருக்கும் பொருளாதாரஙக்ளைக் கொண்ட பல நாடுகள் சீனாவிற்கான ஏற்றுமதி, சீனாவின் முதலீடு, சீனாவின் கடன் போன்றவற்றை எதிர் பார்த்து நிற்கின்றன. ஏற்கனவே சீனா தனது பொருளாதாரத்தடையை கனடா, ஒஸ்ரேலியா, நோர்வே போன்ற நாடுகள் மீது வெவ்வேறுவகைகளில் விதித்துள்ளது. சீனாவிடம் கடன் வாங்கிய கிரேக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தில் சீனாவிற்கு சாதகமாக நடந்து கொள்கின்றது.

தனிமைப்படும் அமெரிக்கா

ஆசிய நாடுகளின் ரிசெப் என்னும் பொருளாதார ஒப்பந்தமும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் சீனாவிற்கும் இடையிலான பொருளாதார ஒப்பந்தமும் ஏற்கனவே அமெரிக்காவை தனிமைப் படுத்திவிட்டன. மீண்டும் 2024இல் டிரம்ப் ஆட்சிக்கு வந்தால் அல்லது அவரைப் போன்ற ஒருவர் ஆட்சிக்கு வந்தால் என்ன ஆகும் என்பதை பல நாடுகளும் கருத்தில் கொள்ளும். அமெரிக்காவுடன் பொருளாதார ஒத்துழைப்பைச் செய்ய பல நாடுகளும் தயக்கம் காட்ட முனையும் என்பதால் அமெரிக்கா உலக அரங்கில் தனிமைப்படுத்தப் படும் செய்முறை 2021இல் ஆரம்பமாகும்.

2021இல் பல நாடுகள் இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பைச் செய்யும். அதற்கு அலையும் நாடாக பிரித்தானியா இருக்கும்.

இந்திய சீன உறவு மேலும் மோசமாகுமா?

  இந்தியாவிற்கும் சீனாவிற்குமான வர்த்தக மற்றும் அரசுறவியல் உறவு மிக நீண்ட காலமாக இருக்கின்றது. 1954-ம் ஆண்டு ஒக்டோபரில் இந்தியத் தலைமை அமைச்...