Followers

Friday 9 December 2022

இந்தியாவின் படைவலிமையைக் கேள்விக்கு உள்ளாக்கிய உக்ரேன் போர்

 

இந்தியா இதுவரை காலமும் இரசியாவின் படைக்கலன்களில் பெரிதும் தங்கியிருந்தது. இரசியாவிடமிருந்து வாங்கிய தொழில்நுட்பம் இந்திய உள்நாட்டுப் படைக்கல உற்பத்தியில் பாவிக்கப்படுகின்றது. இந்தியாவி போர்த்தளபாட கொள்வனவில் 70% முதல் 85% வரை இரசியாவில் இருந்து பெறப்படுகின்றது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் படைக்கலன்களும் இரசியாவில் இருந்து வாங்கிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செய்யப்படுகின்றன. உக்ரேனில் இரசியா படும் பாட்டைப் பார்க்கும் போது இந்தியப் படையின் வலிமை கேள்விக்கிடமாக உள்ளது.

பாதுகாப்புச் செலவு

ஆண்டு தோறும் உக்ரேன் பாதுகாப்பிற்காக $5.4பில்லியனையும் பாக்கிஸ்த்தான் $10.3பில்லியனையும் செலவிடுகின்றது. அதேவேளை இந்தியா $49.6பில்லியனையும் இரசியா $154பில்லியனையும் பாதுகாப்பிற்காக ஆண்டுதோறும் செலவிடுகின்றன. இந்தியாவின் பாதுகாப்புச் செலவு பாக்கிஸ்த்தானிலும் பார்க்க ஐந்து மடங்காகவும் இரசியாவின் பாதுகாப்புச் செலவு உக்ரேனிலும் பார்க்க 28மடங்கு செலவு செய்கின்றது. உக்ரேனுக்கும் இரசியாவிற்கும் இடையிலான பாதுகாப்புச் செலவு இடைவெளியிலும் பார்க்க பாக்கிஸ்த்தானிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான இடைவெளி மிகச்சிறியதே! உக்ரேனைக் கைப்பற்ற இரசியா படும் பாட்டைப் பார்க்கும் போது பாக்கிஸ்த்தான் வசமுள்ள கஷ்மீரைக் கைப்பற்ற இந்தியா மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும்.

போர்த்தாங்கிகள்.

இந்தியாவின் போர்த்தாங்கிகளின் பெரும்பான்மையானவை இரசியாவின் T-72, T-90 ஆகும். உள்நாட்டு உற்பத்தி அர்ஜுண் தாங்கிகளும் இந்தியாவிடம் உள்ளன. இந்தியாவிடமுள்ள 1100 T-90 MBT போர்த்தாங்கிகளில் 310 இரசியாவில் உற்பத்தி செய்து இறக்குமதி செய்யப்பட்டவை. ஏனையவை இரசியவினதும் பிரான்ஸினதும் உதவியுடன் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட T-90 பீஷ்மா தாங்கிகளாகும். உக்ரேன் போரில் இரசியா தனது 2840 தாங்கிகளில் 1200ஐ இழந்துள்ளது. இந்த இழப்பு உக்ரேனியர்களால் அழிக்கப் பட்டதாலும் சேதப்படுத்தப் பட்டதாலும் கைப்பற்றப் பட்டதாலும் ஏற்பட்டுள்ளது. இரசியாவின் 2030 T-72 தாங்கிகளில் 738ஐயும் 450 T-80 தாங்கிகளில் 261ஐயும் 360 T-90 போர்த்தாங்கிகளில் 27ஐயும் உக்ரேன் போரில் இரசியா இழந்துள்ளது. மேலும் சிலவற்றை உக்ரேனியர்கள் கைப்பற்றியுள்ளனர். எரிபொருள் இன்றி நின்ற இரசிய தாங்கியை உக்ரேனிய விவசாயி உழவு வண்டியில் கட்டி இழுத்து சென்றமை காணொலியாக வெளிவந்து இரசியர்களின் மானத்தை கப்பலேற்றியது. இவற்றில் பெரும்பாலானவை சிறிய ஆளிலி விமானங்கள் மூலமாகவும் அமெரிக்காவின் ஜவலின் ஏவுகணைகளாலும் அழிக்கப்பட்டன. உக்ரேனில் இரசிய தாங்கிகளின் அழிப்பில் பெரும் பங்கு வகித்தவை துருக்கியின் TB-2 ஆளிலி விமானங்களாகும். துருக்கி அவற்றை பாக்கிஸ்த்தானுக்கு விற்பனை செய்துள்ளது. அவை பாக்கிஸ்த்தான் மூலமாக கஷ்மீரில் செயற்படும் தீவிரவாத அமைப்புக்களின் கைகளுக்கும் போய்ச் சேரலாம். அதனால் இந்திய தாங்கிகளின் வலிமை கேள்விக்குறியாகியுள்ளது.

வேல் தர்மா: அரசியல் அலசல்: உக்ரேன் போர் தாங்கிகளை செல்லுபடியற்றதாக்கிவிட்டதா? (puviarasiyal.blogspot.com)

துருக்கி பாக்கிஸ்த்தான் உறவு இந்தியாவிற்கு பாதகமாக அமையும்

உக்ரேன் துருக்கியின் ஆளிலிகளைப் பாவித்து இரசியாவின் பார ஊர்திகளையும் போர்த்தாங்கிகளையும் பெருமளவில் அழித்தது. இந்தியாவிற்கும் துருக்கிக்கும் இடையில் அரசுறவியல் முரண்பாடு உள்ளது. கஷ்மீர் பிரச்சனையில் துருக்கி அதிக அக்கறை காட்டுகின்றது. பாக்கிஸ்த்தானுக்கு துருக்கி தன் ஆளிலிகளை விற்பனை செய்யலாம். உக்ரேன் போர் அனுபவத்தை வைத்து துருக்கி தனது ஆளிலிகளை மேம்படுத்தலாம். அவை பாக்கிஸ்த்தானி கைகளுக்கு மட்டுமல்ல கஷ்மீர் விடுதலைக்கு போராடும் தீவிரவாத அமைப்புக்கள் கைகளுக்கும் போகலாம்.

வானாதிக்கம் செய்ய முடியாத இரசியா

இரசியாவால் இதுவரை உக்ரேனில் வானாதிக்கம் செய்ய முடியவில்லை. அதே நிலை இந்தியாவிற்கும் பாக்கிஸ்த்தானுக்கு எதிரான போரில் உருவாகலாம். சீனாவிற்கு எதிராக தாக்குதல் செய்வதற்கு தஞ்சாவூர் வான்படைத்தளத்தில் இரசியாவின் சுக்கோய்-31 விமானங்களை இரசிய அனுமதியுடன் இந்தியாவில் உருவாக்கி அவற்றிற்கு SU-31 MKI எனப் பெயரிட்டு நிறுத்தியுள்ளது. அவற்றில் 120இற்கு மேற்பட்ட விமானங்களை இந்தியா இரசியாவுடன் இணைந்து உருவாக்கிய பிரம்மோஸ் ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன. இரசியப் போர் விமானங்கள் உக்ரேனில் செய்ய முடியாததை சீனாவிற்கு எதிராக செய்ய முடியுமா? உக்ரேனிடம் அமெரிக்கத் தயாரிப்பு F-16 போர்விமானங்கள் இல்லை ஆனால் பாக்கிஸ்த்தானிடம் 85 F-16 போர்விமானங்கள் உள்ளன.

உக்ரேனிய வான் படையும் இரசிய வான்படையும் பற்றி அறிய இந்த இணைப்பிற்கு செல்லவும்:

https://veltharma.blogspot.com/2022/03/blog-post_6.html

இரசியாவின் வான் பாதுகாப்பு முறைமை

இரசியாவின் எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளை பல சவால்களுக்கு நடுவில் இந்தியா வாங்குகின்றது. இரசியாவின் எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமையையும் தாண்டி உக்ரேனின் விமானங்களும் ஏவுகணைகளும், ஆளிலிகளும் இரசிய நிலப்பரப்பினுள் எல்லையை தாண்டி பல கிமீ வரை சென்று தாக்குதல் நடத்தியுள்ளன. இந்தியாவின் வான் பாதுகாப்பு முறைமை சீனாவின் ஒலியிலும் பார்க்கப் பன்மடங்கு வேகத்தில் பாயும் சீனாவின் ஏவுகணைகளுக்கு தாக்குப் பிடிக்குமா?

ஈரானின் செலவு குறைந்த ஆளிலிகள்(Drones)

உக்ரேனியப் போரில் பெரிதும் நோக்கப்பட்டவை ஈரானிய மலிவான ஆளிலி விமானங்களாகும். இந்தியாவும் பாக்கிஸ்த்தானும். பாக்கிஸ்த்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையில் போர் நடந்தால் ஈரான் பாக்கிஸ்த்தானிற்கு இரகசியமாக தனது ஆளிலிப் போர்விமானங்களை விற்பனை செய்யும். உக்ரேன் போரில் பாவிக்கப்பட்ட Shahed-136 dronesகளிலும் பார்க்க தொழில்நுட்ப மேம்பாடு கொண்ட தனது ஆளிலிகளை ஈரான் பாக்கிஸ்த்தானுக்கு விற்பனை செய்வது இந்தியாவிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

ஜவலினை பிரதி பண்ணிய சீனா!

அமெரிக்காவின்ன் ஜவலின் ஏவுகணைகளைப் போல் சீனாவும் Hongjian-12 என்னும் தோளில்வைத்து ஏவைக் கூடிய தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை உருவாக்கியுள்ளது. அவை பெயர் குறிப்பிடப்படாத நாடு ஒன்றிற்கு 2020இல்ச் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன. அது பாக்கிஸ்த்தானாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது. இவை கஷ்மீர் “மீட்புப் போரில்” இந்தியாவிற்கு பின்னடைவை ஏற்படுத்தலாம்.

2021-ம் ஆண்டு ஜூன் மாதம் அப்போதிய பாக்கிஸ்த்தானிய படைத்துறையின் உச்சத் தளபதி கமார் ஜாவிட் பஜ்வா உக்ரேனுக்கு சென்று உக்ரேன் எப்படி தனது படையினரையும் படைக்கலன்களையும் இரசிய ஆக்கிரமிப்பை எதிர் கொள்ள நிறுத்தியுள்ளது என்பதைப் பற்றி ஆய்வு செய்தார். உக்ரேனின் பல போர்த்தாங்கிகள் உட்பட்ட பல படைக்கலன்கள் எப்படி இயக்கப்படவுள்ளன என்பதையும் அவதானித்தார்.

இரசியாவிற்கு உலக அரங்கில் இருக்கும் வலிமை இந்தியாவிற்கு இல்லை

5900 அணுக்குண்டுகள், ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் நிரந்தர உறுப்புரிமை, உலக எரிபொருள் சந்தையில் காத்திரமான பங்கை வகிக்கும் வலிமை, உலகின் மிகப் பெரிய நிலப்பரப்பு ஆகியவற்றைக் கொண்ட இரசியாவிற்கு இருக்கும் உலக அரங்கில் ஆதிக்கம் செலுத்தக் கூடிய வலிமை இந்தியாவிற்கு இல்லை.

எல்லாவற்றிலும் மேலாக இரசிய படையினரிலும் பார்க்க இந்தியப் படையினர் அதிக நாட்டுப்பற்றுடனும் அர்ப்பணிப்புடனும் போர் புரியக் கூடியவர்கள்


Tuesday 6 December 2022

பாவம் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்

 


2022 டிசம்பர் மாதம் 3-ம் திகதி இலண்டனில் நடந்த நிகழ்வு ஒன்றில் யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர் கணேசலிங்கம் உரையாற்றியிருந்தார். பேராசிரியர் தனது உரையின் போது சொன்னார்: உலகளாவிய ரீதியில் சீனா தனது செல்வாக்கும் சீனா உலகத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கான காத்திரமான நகர்வுகளுக்கூடாக மேற்கொண்டு வருகின்றது.

 
இதற்கு ஆதாரமாக ஏப்ரல் மே பகுதியில் சீனக் கடற்படைக் கப்பல் இலங்கைக்கு பயணம் செய்தமையை பேராசிரியர் மேற்கோள் காட்டினார்.

உலக வரலாற்றின் எந்த ஒரு நாடும் உலகத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரவில்லை. இப்போதும் எந்த ஒரு நாட்டின் கட்டுப்பாட்டின் கீழும் உலகம் இல்லை. இனியும் இருக்கப் போவதில்லை. சீனா எந்த ஒரு கட்டத்திலும் அப்படிச் சொல்லவில்லை. சீனா எல்லாவகையிலும் மிதமான செழிப்பு மிக்க நாடாக்கப் பட வேண்டும் என்ற நோக்கமும் 2049—ம் ஆண்டு சீனக் குடியரசு உருவாகிய நூற்றாண்டு நிறைவடையும் போது சீனா 1. செழுமைமிக்க 2. வலிமையான 3. கலாச்சாரத்தில் வளர்ச்சியடைந்த 3. இசைவிணக்கமான (HARMONIOUS) புதிய சமூகவுடமைக் குடியரசு நாடாக சீனா கட்டியெழுப்பப்பட வேண்டும் என்ற நோக்கமும் சீனக் கனவு என்றார் அதன் அதிபர் ஜீ ஜின்பிங். சீனா உலகத்தை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முயல்கின்றது என அமெரிக்க வெளியுறவுத்துறையோ பாதுகாப்புத்துறையோ சொல்லவில்லை. அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலான நாடாக சீனா மாறிவருகின்றது என்பதை அவர்கள் சொல்வதுண்டு. உலக அரசியல் மற்றும் படைத்துறை ஆய்வாளர்களும் அப்படி எழுதுவதில்லை. சீனாவிற்கு எதிரான கருத்துக்களை உடையவர்கள் “சீனா உலக ஒழுங்கை தனக்கு சாதகமாக மாற்ற முயல்கின்றது” என்பதில் ஒருமித்த கருத்து உடையவர்களாக இருக்கின்றார்கள். உலக ஒழுங்கை தனக்கு சாதகமாக மாற்றுவது வேறு உலகை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவது வேறு. ஐயா பேராசிரியரே உங்கள் மாணவர்களுக்கு சீனா உலகை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முயல்கின்றது எனப் போதிக்காதீர்கள்! தைவானை கைப்பற்றும் போரை ஆரம்பிக்க தயங்குகின்ற சீனாவால் எப்படி உலகத்தை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முடியும்? உலகின் பல பகுதிகளிலுமுள்ள 800இற்கும் மேற்பட்ட அமெரிக்கப் படைத்தளத்தை சீனா அழித்தால்தாலும் சீனாவால் உலகத்தை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர முடியாது. அது ஓர் அணுக்குண்டுப் போரை உருவாக்கி “mUTUALLY ASSURED DISTRUCTION” கோட்பாட்டின் படி இரண்டு நாடுகளும் அழிந்துவிடும் ஐயா! நடுவண் ஆசிய நாடுகளையே சீனா தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர இரசியா அனுமதிக்காது. மேற்கு ஐரோப்பா மீது சீனாவால் படையெடுக்க முடியாது. அணுக்குண்டுப் போரை அமெரிக்காவும் சீனாவும் தவிர்த்து அமெரிக்கா மீது சீனர்கள் படையெடுத்தால் ஒவ்வொரு அமெரிக்கர்களிடமும் ஒன்றிற்கு மேற்பட்ட துப்பாக்கிகள் உள்ளன. அவற்றில் பல தானியங்கித் துப்பாக்கிகள்! சிறிய நாடாகைய சுவிற்ச்சலாந்தையே எந்த ஒரு வல்லரசும் ஆக்கிரமிக்காத படி அதனது பூகோள அமைப்பு இருக்கின்றது என்பது படைத்துறை நிபுணர்களின் கருத்து.  

பேராசிரியர் கணேசலிங்கம் சொன்னார்:

அதே போன்று (உக்ரேன் விவகாரம் போன்று) தைவான் விவகாரமும் சமதளத்தில் உலகளாவிய அரசியலில் அதிகமான செல்வாக்கை ஏற்படுத்தியிருக்கின்றது.

உக்ரேன் போர் உலகப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மை. உக்ரேனும் இரசியாவும் பெருமளவு உணவு ஏற்றுமதி செய்கின்ற நாடுகள். இரசியா பெருமளவு எரிபொருள் ஏற்றுமதி செய்கின்ற நாடு. உக்ரேன் போர் இந்திய இரசிய உறவை மீளுறுதி செய்துள்ளது. அது இரசிய சீன உறவை நெருக்கமாக்கியுள்ளது. இருந்தும் இந்தியாவும் சீனாவும் இரசியாவிற்கு படைக்கலன்களை விற்பனை செய்ய மறுத்து வருகின்றன. தைவான் பிரச்சனை உலக அளவில் உக்ரேன் போருக்கு ஈடான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பேராசிரியர் சொல்வது முற்றிலும் தவறானதாகும். இதை உங்கள் மாணவர்களுக்கு போதிக்காதீர்கள் ஐயா! தைவானை சீனா தன்னுடன் இணைக்கும் போரை ஆரம்பித்தாலும் அது உலக மக்களுக்கான உணவு, உரம் மற்றும் எரிபொருள் போன்ற விநியோகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆக உலக குறைக்கடத்தி விநியோகம் மட்டும் பாதிக்கப்படலாம். அதற்கான மாற்று வழிகளை ஏற்கனவே அமெரிக்கா செய்யத் தொடங்கிவிட்டது.

பேராசிரியர் கணேசலிங்கம் சொன்னார்:

இரசிய மொழி பேசும் நிலப்பரப்பை இரசியா கருத்துக் கணிப்பு மூலம் தன்னுடன் இணைத்துக் கொண்டது.

இதை பேராசிரியர் தொடும் போது அது தொடர்பான சரியான தகவலகளை அவர் சொல்ல வேண்டும். உக்ரேனின் கிழக்குப் பகுதியில் உக்ரேனியர்களே பெரும்பான்மையாக வாழ்ந்து வந்தனர். அங்கு கனிம வளங்கள் கண்டறியப் பட்ட பின்னர் சோவிய ஆட்சிக் காலத்தில் பெருமளவு இரசியர்கள் அங்கு குடியேற்றப்பட்டனர். அதனால் அங்கு இரசியர்கள் பெரும்பான்மையினர் ஆக்கப்பட்டனர். அது இரசிய மொழி பேசும் நிலப்பரப்பு என்பது தவறான கருத்தாகும்.

அண்மையில் புது டில்லியில் நடந்த ஒரு சிறு கூட்டத்தில் தன்னை யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உதவி விரிவுரையாளர் என அறிமுகப்படுதி கொண்ட ஒருவர் ஆங்கிலத்தில் உரையாற்றும் போது: “You know in தமிழ்நாடு சட்டசபை they made a தீர்மானம்” என்றார். இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது பாவம் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் எனத் தோன்றுகின்றது.



உலக ஒழுங்கு என்பது உலகெங்கும் அரசியல் உறுதிப்பாட்டை ஏற்படுத்தும் முறைமை எனப்படுகின்றது. இதில் ஐக்கிய நாடுகள் சபை, உலக வர்த்தக அமைப்பு, பன்னாட்டு நாணய நிதியம் உட்பட்ட பல உலக அமைப்புக்கள், உலக ஊடகத்துறை, உலக படைத்துறைச் சமநிலை, உலகப் போக்குவரத்து போன்றவை முக்கிய பங்கு வகிக்கின்றன. உலக நாடுகள் பலவற்றின் ஆதரவு எந்த வல்லரசுக்கு அதிகம் இருக்கின்றதோ அதற்கு சாதகமாக உலக ஒழுங்கு இருக்கும். 

உலக ஒழுங்கும் சீனாவும்

தற்போது உலக ஒழுங்கு  சீனாவிற்கு உகந்ததாக இல்லை. இதை மாற்றி அமைக்க சீனா எடுக்கும் முயற்ச்சிகள் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் முறுகல் நிலையை அதிகரித்துக் கொண்டிருக்கின்றது.

அமெரிக்க குடியரசுத்தலைவரின் தேசிய பாதுகாப்புச் சபையின் இயக்குனர் Rush Doshi  2022இல் எழுதிய The Long Game என்னும் நூலில் Beijing is pursuing a "grand strategy" to displace American order" என மட்டும்தான் எழுதியுள்ளார். அமெரிக்காவை சீனா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயல்கின்றது என எழுதவில்லை. தற்போது இருக்கும் அமெரிக்கவிற்கு சாதகமான உலக ஒழுங்கில் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் சீனா இல்லை.  உலக அமைப்புக்களில் வாக்கெடுப்பு என்று வரும் போது இலங்கை தனக்கு சாதகமாக வாக்களிக்க வேண்டும் என சீனா விரும்புகின்றது. இந்தியா சீனாவைத் தாக்குவதற்கு என்று தஞ்சாவூரில் வைத்திருக்கும் விமானப்படைத்தளம் அமெரிக்காவின் தியாகோ காசியா படைத்தளம் ஆகியவற்றில் இருந்து சீனா மீது தாக்குதல் நடத்த ஆரம்பிக்கும் போது அவற்றை முன் கூட்டியே அறியக் கூடிய கண்காணிப்பு நிலையங்கள் இலங்கையில் அமைக்க சீனா விரும்புகின்றது. கொழும்பில் சீனா அமைத்துள்ள தாமரைக் கோபுரம் அதற்கு பயன்படுத்தப்பட மாட்டாது எனச் சொல்ல முடியாது.

இந்திய சீன உறவு மேலும் மோசமாகுமா?

  இந்தியாவிற்கும் சீனாவிற்குமான வர்த்தக மற்றும் அரசுறவியல் உறவு மிக நீண்ட காலமாக இருக்கின்றது. 1954-ம் ஆண்டு ஒக்டோபரில் இந்தியத் தலைமை அமைச்...