Followers

Showing posts with label ஜப்பான். Show all posts
Showing posts with label ஜப்பான். Show all posts

Monday, 10 January 2022

சீனாவிற்கு அச்சுறுத்தலாகும் ஜப்பான் ஒஸ்ரேலிய ஒப்பந்தம்

 

பெல்ஜியம், நெதர்லாந்து, போலாந்து, ஆர்ஜெண்டீனா, கனடா, பிரேசில், மெக்சிக்கோ, ஜப்பான், ஒஸ்ரேலியா, இந்தியா ஆகிய நாடுகளை நடு-வலிமை நாடுகள் எனச் சொல்லலாம். இந்த நாடுகள் தமக்கு இசைவான வல்லரசு நாடுகளுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பைச் செய்கின்றன. அவ்வப்போது நடு-வலிமை நாடுகள் தமக்கிடையே பாதுகாப்பு ஒப்பந்தங்களைச் செய்வதுண்டு. இந்தியாவும் ஒஸ்ரேலியாவும் இருபுற அனுமதி ஒப்பந்தங்களை (Reciprocal Access Agreements) 2020-ம் ஆண்டு செய்தன. அதன் படி இரண்டு நாடுகளும் ஒன்றின் தளங்களை மற்றது தனது படைத்துறையின் வான்கலன்களை, கடற்கலன்களை பழுதுபார்க்கவும், பராமரிக்கவும், மீள்நிரப்பல் செய்யவும் பாவிக்க முடியும். இந்தியா இதே போன்ற ஒப்பந்தங்களை அமெரிக்கா, சிங்கப்பூர், பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் செய்திருந்தது. 2022 ஜனவரி 6-ம் திகதி ஜப்பானும் ஒஸ்ரேலியாவும் இருபுற அனுமதி ஒப்பந்தந்தத்தைச் செய்துள்ளன.

ஒஸ்ரேலிய – ஜப்பானிய உறவு

ஒஸ்ரேலியர்களும் ஜப்பானியர்களும் ஒருவரை ஒருவர் வெறுப்பதில்லை. ஜப்பான் கிழக்கில் உள்ள ஒரு மேற்கு நாடாக கருதப்படுகின்றது. ஒஸ்ரேலியா மேற்கு நாட்டவர் குடியேறி ஆட்சி செய்யும் கிழக்கு நாடு. 2017-ம் ஆண்டில் இருந்தே ஒஸ்ரேலியாவும் ஜப்பானும் இருபுற அனுமதி ஒப்பந்தந்தத்தை செய்யும் பேச்சு வார்த்தையை செய்து வந்தன. ஆனால் 2020-ம் ஆண்டு அந்தப் பேச்சு வார்த்தை ஜப்பானில் உள்ள இறப்புத் தண்டனைச் சட்டத்தால் தேக்க நிலையை அடைந்திருந்தது. ஆனால் அதிகரித்து வரும் சீன அச்சுறுத்தலால் இரு நாடுகளும் நெருங்கி ஒத்துழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் ஒஸ்ரேலியாவும் ஜப்பானும் தமக்கிடையிலேயான பாதுகாப்பு ஒத்துழைப்பில் இன்னும் ஒரு மைல் கல்லைத் தாண்டியுள்ளன.

கேந்திரோபாய பங்காண்மை நிலைக்கு உயற்ச்சி

நாடுகளுக்கிடையிலேயான உறவுகளின் உச்ச நிலையை கூட்டு (Alliance) எனவும் அதற்கு அடுதத நிலையை கேந்திரோபாய பங்காண்மை (Strategic Partnership) எனவும். அதனிலும் கீழான நிலையின் உள்ள உறவை பங்காண்மை எனவும். மிகக் குறைந்த உறவை நட்பு நாடு எனவும் வகைப்படுத்தலாம். கூட்டு நாடுகள் எச்சூழலிலும் ஒரு நாட்டுக்கு மற்ற நாடு உதவும். கூட்டு நாடுகளின் வெளியுறவுக் கொள்கை பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருக்கும். எல்லா படைத்துறைத் தொழில்நுட்பத்தையும், உளவுத்தகவல்களையும் அவை தடையின்றிப் பகிர்ந்து கொள்ளும். உதாரணமாக அமெரிக்காவிற்கும் பிரித்தானியாவிற்கும் இடையில் உள்ள உறவு கூட்டு உறவாகும். ஆனால் அமெரிக்கா F-22 போர் விமானத்தை பிரித்தானியாவிற்கு விற்பனை செய்யவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கேந்திரோபாய பங்காண்மையில் பல வகையில் இரு நாடுகள் ஒன்றிற்கு ஒன்று உதவியாக இருக்கும். உதாரணம கட்டார் – அமெரிக்க உறவு. அவை பயங்கரவாதத்திற்கு எதிராகவும் பிராந்திய அமைதி தொடர்பாகவும் ஒத்துழைக்கின்றன. இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு கேந்திரோபாய பங்காணமையை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கின்றது. பங்காண்மையில் இருக்கும் நாடுகள் குறித்த சில வகைகளில் ஒன்றிற்கு ஒன்று உதவியாக இருக்கும். நட்பு நாடுகள் ஒன்றிற்கு ஒன்று உலக அரங்கில் அனுசரணையாக நடந்து கொள்ளும். ஒஸ்ரேலிய ஜப்பானிய உறவு இருபுற அனுமதி ஒப்பந்தம் செய்த பின்னர் கேந்திரோபாய பங்காண்மை நிலைக்கு உயர்ந்துள்ளது.


வலிமை மிக்க கடற்படைகள்

எடை அடிப்படையில் ஒஸ்ரேலியாவின் கடற்படை உலகின் 16வது பெரிய கடற்படையாக இருக்கின்ற போதிலும் புதிய படைக்கலன்கள் உபகரணங்கள் அடிப்படையிலும் கடற்போர் அனுபவத்திலும் ஒஸ்ரேலியக் கடற்படை உலகின் முன்னணிக் கடற்படையாகும். தற்பாதுகாப்பு படையான ஜப்பானின் கடற்படை Kaga, Izumo என்னும் இரண்டு உலங்கு வானுர்திக் கப்பல்களையும் கொண்டுள்ளது. இந்த இரண்டு கப்பல்களாலும் பன்னிரண்டுக்கு மேற்பட்ட அமெரிக்காவின் முன்னணி போர்விமானமான F-35-Bகளைக் காவிச் செல்ல முடியும். 114 கடற்கலன்களைக் கொண்டது ஜப்பானியக் கடற்படை. ஜப்பானின் நாசகாரிக் கப்பல்களினதும் தரைசார் கப்பல்களினதும் மொத்த எண்ணிக்கை பிரித்தானியாவினதும் பிரான்ஸினதும் மொத்த எண்ணிக்கையிலும் அதிகமானது. தாக்குதிறனின் ஜப்பானியக் கடற்படை சீனாவை விஞ்சக் கூடியது எனக் கருதப்படுகின்றது. ஜப்பானிடம் சிறந்த கப்பல் கட்டுமான வசதிகள் உண்டு. ஜப்பானின் கடற்போக்குவரத்திற்கு எந்த விதமான அச்சுறுத்தலும் இல்லாத வகையில் காப்பாற்றும் வலிமை ஜப்பானுக்கு உண்டு எனச் சொல்லப்படுகின்றது. 2011-ம் ஆண்டு ஜப்பானில் நடந்த புவி அதிர்ச்சியின் போது ஜப்பானியக் கடற்படையின் துரித செயற்பாடு உலகத்தை வியப்பில் ஆழ்த்தியது. ஜப்பானிய ஒஸ்ரேலியக் கடற்படை ஒத்துழைப்பு கடற்போர் அனுபவமில்லாத சீனாவிற்கு பெரும் சவாலாக அமையும்.

குவாட் படைத்துறை ஒத்துழைப்பை ஆரம்பிக்கவில்லை

2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24-ம் திகதி வெள்ளை மாளிகையில் அமெரிக்கா, ஒஸ்ரேலியா, இந்தியா, ஜப்பான் ஆகிய குவாட் உரையாடல் நாடுகளின் அரச தலைவர்கள் ஒரு கலந்தாலோசனையை நடத்தினர். அந்த ஒன்று கூடலின் முடிவில் அவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில் படைத்துறை ஒத்துழைப்பு பற்றி குறிப்பிடப்படவில்லை. குவாட் உரையாடல் நாடுகளின் அமைச்சர்கள் அரசுறவியலாளர்கள் கலந்துரையாடுவாரக்ள் எனக் குறிப்பிடப்படடிருந்தது. ஆனால் படைத்துறையைச் சேர்ந்தவர்கள் கலந்துரையாடுவார்கள் என்று குறிப்பிடப்படவில்லை. அதனால் குவாட் ஒரு படைத்துறைக் கூட்டமைப்பாக இன்னும் உருவெடுக்கவில்லை என்பது உறுதியாகின்றது. அது மட்டுமல்ல ஒஸ்ரேலியா அமெரிக்காவுடனும் பிரித்தானியாவுடனும் ஓக்கஸ் என்னும் ஒரு பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டை 2021 செப்டம்பரில் செய்துள்ளது. இந்த நிலையில் ஜப்பான் தன்னுடைய பாதுகாப்பை உறுதி செய்ய பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதன் ஓரு பகுதியாக ஒஸ்ரேலியாவுடன் இருபுற அனுமதி ஒப்பந்தத்தை (Reciprocal Access Agreement) செய்துள்ளது.

கொதிக்குக் கடலில் குதிக்கும் நட்பு

கிழக்குச் சீனக் கடலில் சீனாவிற்கும் ஜப்பானுக்கும் இடையில் ஒரு முறுகல் நிலை நீண்ட காலமாக இருந்து வருகின்றது. 2013 நவம்பரில் கிழக்குச் சீனக் கடலில் சீனா பத்து இலட்சம் சதுர மைல்களைக் கொண்ட கிழக்குச் சீனக் கடலுக்கு மேலான வான் பரப்பை தன்னுடைய வான் பாதுகாப்பு பிராந்தியமாகப் பிரகடனப் படுத்தியது. அதை அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள் ஏற்க மறுத்ததுடன் தமது போர் விமானங்களை தொடர்ச்சியாக அங்கு பறக்க விட்டு தம் ஆட்சேபனையைத் தெரிவித்தன. சீனாவின் இது போன்ற அச்சுறுத்தலால் ஜப்பான் தற்பாதுகாப்பு படையை மட்டும் வைத்திருக்க முடியும் என்ற அதனது அரசியலமைப்பு யாப்பிற்கு புதிய வியாக்கியானங்களைக் கொடுத்து தன் படைவலிமையைப் பெருக்கிக் கொண்டிருக்கின்றது. ஒஸ்ரேலிய ஜப்பானிய நட்பு கிழக்குச் சீனக் கடலில் சீனாவிற்கு பாதகமாக அமையலாம்.

ஆழக் கடல் ஆளப் போகும் ஒஸ்ரேலியா

ஒஸ்ரேலியா அமெரிக்காவிடமிருந்து பெறவுள்ள அணு வலுவில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள் ஒஸ்ரேலியாவில் இருந்து புறப்பட்டு பசுபிக்கடல், தென் சீனக் கடல், கிழக்குச் சீனக் கடல், ஜப்பானியக் கடல் ஆகியவற்றினூடாக ஆர்க்டிக் வலயம் வரை தொடர்ச்சியா தங்குமிடமின்றிப் பயணிக்கக் கூடியவை. அவற்றால் ஜப்பானிய துறைமுகங்களைப் பாவிக்க முடியும். பல தீவுகளைக் கொண்ட ஜப்பானுடனான ஒப்பந்தம் ஒஸ்ரேலியாவின் கடற்கலன்கள் மேற்கூடிய ஐந்து கடல்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் வலிமையை ஏற்படுத்தும்.

மலாக்காவில் சீனா மல்லாக்காக விழுத்தப்படுமா?

சீனாவின் கடற்பாதையில் முக்கிய திருகுப் புள்ளியாகிய மலாக்கா நீரிணைக்கு அண்மையாக உள்ள இந்தியாவிற்கு சொந்தமான அந்தமான் மற்றும் நிக்கோபா தீவுகளை இப்போது இந்தியாவுடன் அமெரிக்கா, ஒஸ்ரேலியா போன்ற நாடுகள் பாவிக்கலாம். அதற்கு அண்மையாக உள்ள ஒஸ்ரேலியாவிற்கு சொந்தமான கொக்கோஸ் மற்றும் கிறிஸ்மஸ் தீவுகளை ஒஸ்ரேலியாவுடன் இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளின் படையினர் பாவிக்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் சீனாவிற்கு எதிரான போர் என்று வரும்போது இந்த நான்கு நாடுகளும் இணைந்து மலாக்கா நீர்ணையூடாக சீனாவின் போக்கு வரத்தை துண்டிக்கலாம் என்ற அச்சுறுத்தல் சீனாவிற்கு ஏற்பட்டுள்ளது. சீனாவின் மீயுயர்-ஒலிவேக ஏவுகணைகள் இலக்குத் தப்பாமல் தாக்குமா?

Sunday, 12 December 2021

சீன அச்சுறுத்தல் ஜப்பானை வல்லரசாக்குகின்றது

 



உலகத்திலேயே சீனர்கள் அதிகம் வெறுக்கும் நாடாக ஜப்பான் இருக்கின்றது. 1937இல் இருந்து 1945வரை ஜப்பானுக்கும் சீனாவிற்கும் இடையில் கடும் போர் நடந்தது. இரண்டாம் உலகப் போரின் ஒரு பகுதியாக நடந்த இப்போரில் மூன்று மில்லியன் சீனப்படை வீரர்களும் பத்து மில்லியன்களுக்கு மேற்பட்ட சீனப் பொதுமக்களும் கொல்லப்பட்டனர். முதலாம் ஜப்பான் – சீனப் போர் 1894-1895 ஆண்டுகளில் நடந்தது. ஜப்பான் ஆக்கிரமித்த ஆசிய நாடுகளில் மோசமான போர்க்குற்றங்கள் நடந்தன. சீனப் பெண்களை ஜப்பானியர்கள் பாலியல் அடிமைகளாக வைத்திருந்தனர். சீனா ஜப்பானின் அட்டூழியங்களை அதன் மக்கள் மனதில் ஆழமாக பதித்து  வைத்துள்ளது. சீனாவில் நடக்கும் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் ஜப்பானிய விளையாட்டு வீரர்களைக் கண்டவுடன் சீனப் பார்வையாளர்கள் கூச்சலிடுவதை வழமையாகக் கொண்டுள்ளனர்.

ஒற்றுமை நிறைந்த வேற்றுமை

சீனாவிற்கும் ஜப்பானிற்கும் இடையில் கலாச்சார மற்றும் மத ரீதியில் பெரும் ஒற்றுமை உண்டு. ஜப்பானியக் கலாச்சாரம் சீனாவிடமிருந்து பெறப்பட்டதே என்றும் சொல்லப்படுகின்றது. ஜப்பான் உலகத்தில் இருந்து தனிமைப் பட்டு இருந்த வேளையில் சீனா உலகெங்கும் தனது பட்டுப்பாதையை நீட்டி பலநாடுகளுடன் வர்த்தக மற்றும் கலாச்சாரப் பரிவர்த்தனை செய்யத் தொடங்கிவிட்டது. ஆனால் ஜப்பானியர்கள் சீனர்கள் தமது நாட்டுக்குள் அந்நியர்களை அனுமத்துப் போதைப் பொருளுக்கு அடிமையானார்கள் எனக் கருதுகின்றனர். இரு நாடுகளும் சீனத் தத்துவ ஞானி கன்ஃபூசியஸ் அவர்களின் சிந்தனை அடிப்படையில் தம் கலாச்சாரங்களை வளர்த்துக் கொண்டாலும் சரித்திரமும் பூகோளமும் இரு நாடிகளையும் பிரித்து வைத்துள்ளது. உலகிலேயே போர் மூளும் அபாயம் கூடிய இடங்களாக தென் சீனக் காடலும் கிழக்குச் சீனக் கடலும் இருக்கின்றன. இதற்கு ஜப்பானிற்கும் சீனாவிற்கும் இடையில் பேச்சு வார்த்தை அவசியம். சீன ஜப்பானியப் போர் நடந்தால் அங்கு அமெரிக்காவும் தலையிடும் கட்டாயம் உள்ளது. ஆசிய பசுபிக் பொருளாதாரக் கூட்டுறவின் உச்சி மாநாட்டின் முன்னர் இரு தலைவர்களும் சந்திப்பார்களா என்பது ஒரு முயற்கொம்பாகவே இருந்தது. சீன அதிபர் ஷி ஜின்பிங் ஜப்பானி எதிர்ப்புப் பரப்புரைகள் மூலமும் கிழக்குச் சீனக் கடலுக்கு அடிக்கடி கடற்கலங்களையும் வான் கலன்களையும் அனுப்பி ஜப்பானைச் சீண்டுவதன் மூலமும் சீனாவில் தனது செல்வாக்ககிப் பெருக்கிக் கொள்கின்றார் என்பது ஜப்பானின் குற்றச்சாட்டு. ஜப்பானியர்கள் போரின் போது செய்ய அட்டூழியங்களைப் பற்றி சீனாவில் அதிகம் பேசுவதால் சீனர்கள் இப்போதும் பழைமையிலேயே வாழ எத்தனிக்கின்றார்கள் எனக் குற்றம் சாட்டும் ஜப்பான் அவர்கள் பழையவற்றை மறந்து புது யுகத்தில் இரு நாடுகளிற்கும் இடையிலான ஒத்துழைப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்கின்றது. ஜப்பானுடன் பேச்சு வார்த்தை நடாத்துவதற்கு சீன இரு நிபந்தனைகளை விதித்திருந்ததாகக் கூறப்படுகின்றது. ஒன்று சர்ச்சைக்குரியதான ஜப்பானின் இறந்த போர்வீரர்களின் யசுக்குனி எனப்படும் நினைவிடத்திற்கு ஜப்பானியத் தலைமை அமைச்சர் பயணம் மேற்கொள்ளக் கூடாது. மற்றது கிழக்குச் சீனக் கடலில் உள்ள சென்காகு அல்லது டயோயு தீவுக் கூட்டங்கள் தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையில் முரண்பாடு இருக்கின்றது என்பதை ஜப்பான் ஒத்துக் கொள்ள வேண்டும்.வ்

கிழக்குசீனக்கடல்

கிழக்குச் சீனக் கடசீனக் கடலில் உள்ள தீவுக்கூட்டத்திற்கு ஜப்பானும் சீனாவும் உரிமை கொண்டாடி வருகின்றன. மக்களற்ற இத்தீவுக் கூட்டங்களை ஜப்பானியர்கள் செங்காகு எனவும் சீனர்கள் டயாகு எனவும் அழைக்கின்றனர். அமெரிக்கா இரு நாடுகளுக்கும் இந்த தீவுக் கூடங்களிள் இறையாண்மை இல்லை எனவும் ஆனால் ஜப்பனிற்கு அவற்றில் நிர்வாகக் கட்டுப்பாடு இருக்கின்றது எனவும் கூறுகின்றது.  2013 நவம்பர் 24-ம் திகதி சீனா இத்தீவுக் கூட்டத்தை உள்ளடக்கிய வான் பிராந்தியத்திற்குள் வரும் விமானங்கள் தனக்கு அறிவித்துவிட்டு வரவேண்டும் என ஒரு தலைப்பட்சமா பிரகடனம் செய்தது. சீனாவின் வான் பாதுகாப்புப் பிரந்தியப் பிரகடனத்தை மறுக்கும் முகமாக அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள் தமது விமானங்களை சீனாவிற்கு அறிவிக்காமல் அப் பிராந்தியத்திற்குள் பறக்க விட்டன. அமெரிக்க அரசு தனது நாட்டு பயணிகள் போக்குவரத்து மற்றும் வர்த்தக விமானங்கள் சீன அரசிற்கு அறிவித்து விட்டு கிழக்குச் சீனக்கடலுக்கூடான பறப்புக்களை மேற்கொள்ளும் படி அறிவுறுத்தியது. 2013 நவம்பர் 24-ம் திகதி கிழக்குச் சீனக் கடலில் உருவான பதட்டத்தைத் தொடர்ந்து செய்யப்படும் முதல் படை நகர்வாக அமெரிக்கா தனது நீர்மூழ்கிகளை வேட்டையாடும் விமானங்களை ஜப்பானிற்கு அனுப்பியுள்ளது. P-8 எனப்படும் இந்த விமானங்கள் torpedoes எனப்படும் ஏவுகணைகளையும் புது ரக கதுவிகளையும்(ராடார்) கொண்டுள்ளன.வ்

அமெரிக்காவின் நம்பகமற்ற தன்மை

ஆப்கானிஸ்த்தானில் இருந்து அமெரிக்கப் படையினர் வெளியேறிய போது அமெரிக்கா நடந்து கொண்ட விதம் அமெரிக்காவின் நம்பகத்தைனமையை கேள்விக்குறியாக்கியுள்ளது. உலக வரலாற்றிலேயே முதல் முதலாக அணுக்குண்டால் தாக்கப்பட்ட நாடான ஜப்பான் ஐக்கிய அமெரிக்காவின் நிர்ப்பந்தத்தின் படி 1947-ம் ஆண்டு மே மாதம் 3-ம் திகதி நிறைவேற்றிய அரசமைப்பு யாப்பின்படி ஜப்பான் வேறு நாடுகளுடனான பிணக்கைப் போர் மூலம் தீர்க்க முடியாது. தனது நாட்டுக் குடிமக்களைப் பாதுகாக்க வேறு நாடுகளுக்குப் படை அனுப்ப முடியாது. ஒரு தன்னைப் பாதுகாக்கும் படையை மட்டுமே வைத்திருக்கலாம். சுருங்கச் சொன்னால் ஜப்பானியப் படையினர் மீது வேறு யாராவது சுட்டால் மட்டுமே ஜப்பானியப் படைகள் திருப்பிச் சுடலாம். இரண்டாம் உலகப் போரில் தோல்வியடைந்த ஜேர்மனியின் அரசியல்யாப்பில் இல்லாத ஒன்று ஏன் ஜப்பானிய யாப்பில் இருக்க வேண்டும் என்பது சில ஜப்பானியர்கள் எழுப்பும் கேள்வியாகும். ஜப்பானின் படைத்துறைச் செலவு ஆண்டுக்கு 49 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்கின்றது. அது சீனாவின் 188 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஈடாக மாட்டாது. அதனால் ஆண்டுக்கு 640 பில்லியன் டொலர்கள் செலவு செய்யும் அமெரிக்காவில் ஜப்பான் தங்கியிருக்க வேண்டிய நிலை. அத்துடன் 23 படையினருக்கு ஜப்பானின் 58,000 படையினர் ஈடாகவும் முடியாது. உலகப் படைவலுப்பட்டியலில் சீனா மூன்றாம் இடத்திலும் ஜப்பான் பத்தாம் இடத்திலும் இருக்கின்றன. 2014-ம் ஆண்டு ஏப்ரம் மாதம் ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபமா சீனா ஜாப்பானிற்குச் சொந்தமான தீவுகளை அபகரிக்க முயன்றால் ஜப்பானைப் பாதுகாக்கும் அமெரிக்க ப்பானிய பாதுகாப்பு உடன்படிக்கையின் படி அமெரிக்கா ஜப்பானைப் பாதுகாக்கும் என உறுதியளித்தார்.  அமெரிக்கா கைவிட்டால் என்ன செய்வது என்ற கேள்வியும் ஜப்பானிய மக்கள் மத்தியில் உண்டு.வ் ஜப்பான் தனது பாதுகாப்பிற்கு அமெரிக்காவில் தங்கியிருந்தது. சீனாவின் மிகையான படைத்துறை வளர்ச்சியும் தொழில்நுட்ப வளர்ச்சியும் அயல் நாடுகளின் மீது சீனா அதிகரிக்கும் ஆதிக்கமும் ஜப்பானை தனது பாதுகாப்பு தொடர்பாக அதிகம் சிந்திக்க வைத்துள்ளது. அமெரிக்காவும் பசுபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் தமது பாதுகாப்புச் செலவை அதிகரிக்க வேண்டும் என விரும்புகின்றது. அதனால் தனது பாதுகாப்புச் செலவைக் குறைப்பதுடன் அந்த நாடுகளுக்கான தனது படைக்கலன் விற்பனையையும் அதிகரிக்கவும் முடியும்.

ஜப்பானின் பாதுகாப்புத்துறையின் வெள்ளை அறிக்கை – 2020

2020 ஜூலை 13-ம் திகதி ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் ஜப்பான் F-35 போர்விமானங்கள், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் F-X போர்விமானங்கள், மூன்று P-1 ரோந்து விமானங்கள் ஏழு SH-60K ரோந்து உலங்கு வானூர்திகள், ஆளில்லாப் போர்விமானப் படையணி, வானில் வைத்து விமானங்களுக்கு எரிபொருள் மீள்நிரப்பும் விமானங்கள், இரண்டு நாசகாரிக் கப்பல்கள், ஒரு நீர்மூழ்கி, ஆளில்லாமல் நீரின் கீழ் இயங்கும் கலன்கள் போன்றவை ஜப்பானியப் படையில் இணைக்கப்படும் என சொல்கின்றது. அமெரிக்க உற்பத்தி F-35 போர்விமானங்கள் 157ஐ வாங்க திட்டமிட்டுள்ளது. அவற்றில் 42 F-35-B விமானங்களும் அடங்கும். F-35-B விமானங்கள் விமானம் தாங்கிக் கப்பல்களில் பயன்படுத்தக் கூடியவகையில் குறுகிய தூர ஓட்டத்துடன் வானில் எழும்பவும் செங்குத்தாக உலங்கு வானூர்தி போல் தரையிறங்கவும் (Short take off and vertical landing STOVL) வல்லன. சீனாவை அதிக கரிசனை கொள்ள வைத்த F-35 விமானங்களை அமெரிக்காவின் Lockeed Martin, Northdrop Grumman பிரித்தானியாவின் BAE System ஆகியவை உட்பட பல நாடுகள் இணைந்து உருவாக்கியுள்ளன. வானாதிக்கம், வான்மேன்மை, இலத்திரனியல் போர், தாக்குதல், வேவு, உளவு, கண்காணிப்பு ஆகியவற்றைச் செய்யக் கூடிய பற்பணிப் போர் விமானங்களாகும்.

ஜப்பானின் விமானம் தாங்கிக் கப்பல்

ஜப்பானிடம் இரண்டு Izumo வகை நாசகாரிக் கப்பல்கள் இருக்கின்றன. இவை உண்மையில் உலங்குவானூர்தி தாங்கிக் கப்பல்களாகும். இவை நீர்மூழ்கி அழிப்புப் பணிகள், கிழக்கு சீனக் கடல் பாதுகாப்புப் பணிகள் போன்றவற்றைச் செய்வதுடன் கட்டுப்பாட்டகம்+கட்டளையகம் ஆகவும் செயற்படக்கூடியவை. 248 மீட்டர் நீளமுள்ள இவற்றை ஜப்பான் மேலும் மேம்படுத்தி அவற்றில் அமெரிக்கத் தயாரிப்பான F-35-B ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை ஜப்பான் உள்ளடகிக் கொண்டிருக்கின்றது. இது ஜப்பானின் வலிமை மிக்க கடற்படையை மேலும் வலிமையுள்ளதாக்கின்றது.

சீனாவிற்கு எதிரான இரு தீவுச் சங்கிலிகளில் ஜப்பான்



சீனாவின் பசுபிக் பிராந்திய ஆதிக்கத்தை தவிற்பதற்கு இரண்டு சங்கிலித் தொடர் தீவிகளை அமெரிக்கா வியூகமாக வகுத்துள்ளது. முதலாவது சங்கிலித்தீவில் ஜப்பானின் யொக்கோசுக்கோ, ஒக்கினோவா ஆகிய தீவுகள், கொரியத் தீபகற்பம், பிலிப்பைன்ஸ் ஆகியவற்றில் இருக்கும் அமெரிக்கப் படைத்தளங்கள் முதற் சங்கிலித் தீவுகள் எனவும் ஜப்பானியத்தீவுகள், குவாம் தீவு, பலௌ தீவு, ஒஸ்ரேலியா, நியூசிலாந்து ஆகியவற்றில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் இரண்டாம் தீவுக் கூட்டம் எனவும் அழைக்கப்படுகின்றன. இரண்டு தீவுச் சங்கிலிகளிலும் ஜப்பான் முக்கியத்துவம் பெறுகின்றது. சீனா தைவானை ஆக்கிரமித்தால் இவ்விரு தீவுச் சங்கிலிகளும் சீனாவின் வர்தகப் போக்குவரத்தை முற்றாக தடை செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதை சீனா அறியும்.

ஜப்பானின் ஆறாம் தலைமுறைப் போர்விமானம்

1997-ம் ஆண்டு அமெரிக்காவின் F-22 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானத்தை ஜப்பான் வாங்க முயன்ற போது அவற்றை விற்பனை செய்ய முடியாது என அமெரிக்கா அறிவித்தது. தனது உயர் தொழில்நுட்பத்தை பாதுகாப்பதற்காக அமெரிக்கா F-22 போர்விமான ங்களை எந்த நாட்டுக்கும் விற்பனைச் செய்யவில்லை. அப்போது ஜப்பான் தனது நாட்டிலேயே உயர்தர விமானங்களை உருவாக்க வேண்டும் என்ற திட்டத்தை ஆரம்பித்தது ஐந்தாம் தலைமுறைப் போர்விமானத்தை உருவாக்கி முடிக்கும் போது அது பிந்தங்கிய ஒரு விமானமாகிவிடும் என்பதால் ஜப்பான் நேரடியாக ஆறாம் தலைமுறைப் போர்விமானத்தை உருவாக்கியது. இதே வழியை பிரித்தானியாவும் பின்பற்றியது. அமெரிக்கா 2020இல் ஆறாம் தலைமுறைப் போர்விமானத்தின் முதல் விமானத்தை உருவாக்கி பரீசித்துள்ளது. ஜப்பானின் F-X என்னும் பெயர் கொண்ட ஆறாம் தலைமுறைப் போர்விமானத்தை உருவாக்குவதில் ஜப்பான் கணிசமான அளவு முன்னேறியுள்ளது. ஆறாம் தலைமுறைப் போர்விமானங்களில் செயற்கை விவேகமும் இயந்திரக் கற்கையும் இணைக்கப்பட்டுள்ளன. அதனால் அவை தாமாகவே இயங்கக் கூடியன. நிலைமைக்கு ஏற்ப தாமே இலக்குகளைத் தெரிவு செய்து தாக்கக் கூடியவை. விமானிகளின்றியும் பறப்புக்களை மேற்கொள்ளக் கூடியவை. லேசர் மற்றும் மைக்குறோவேவ் படைக்கலன்களை இவை கொண்டிருக்கும். எதிரிகளின் கதுவிகளால்(ரடார்களால்) அவற்றைக் கண்டறிய முடியாது. சில வகையான ஆறாம் தலைமுறைப் போர்விமானங்கள் ஒலியிலும் பலமடங்கு வேகத்தில் பறக்கக் கூடியவையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜப்பானிற்கும் வல்லரசுக் கனவு உண்டு

இந்தியா, ஜேர்மனி, தென் ஆபிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளைப் போல ஜப்பானும் ஒரு வல்லரசாக விரும்புகின்றது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் தற்போது உள்ள வல்லரசு நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் போது தானும் ஒரு வல்லரசாக வேண்டும் என ஜப்பான் நினைக்கின்றது. ஜப்பானின் மக்கள் தொகை, பொருளாதார வலு, படை வலு ஆகியவை மற்ற நாடுகளுக்கு சளைத்தவை அல்ல சவால் விடக்கூடியவை. ஜப்பானின் வயோதிபர்களை அதிகமாகக் கொண்ட மக்கள் தொகைக் கட்டமைப்பு ஜப்பானின் ஒரு பாதகமான அம்சமாகும்.

 

அமெரிக்க சீனப் போர் பற்றி அறிய இந்த இணைப்பிற்கு செல்லவும்

https://www.veltharma.com/2020/10/2021.html

இந்தியா ஜப்பானிய உறவின் முக்கியத்துவம் பற்றி அறிய இந்த இணைப்பிற்கு செல்லவும்

https://www.veltharma.com/2014/09/blog-post_8.html

Monday, 22 November 2021

ஜெர்மனியின் தெரிவு ஜப்பானின் பாதையா சுவிஸின் பாதையா?

 


ஜெர்மனியின் புதிய அரசு தனது பொருளாதாரப் பாதையையும் தேசியப் பாதுகாப்பையும் ஒன்றுக்கு ஒன்று ஈடு செய்யும் வகையில் நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும். ஜெர்மனி தனது பாதுகாப்பிற்கு ஒதுக்கும் நிதி போதாது என அதன் நேட்டோ நட்பு நாடான அமெரிக்கா குற்றம் சாட்டுகின்றது. ஜெர்மனி பாதுகாப்பிற்கு அதிக நிதியை செலவிட்டால் அதிக வரி சேகரிக்க வேண்டும். அது பொருளாதாரத்தைப் பாதிக்கும். இரசியாவிற்கும் சீனாவிற்கும் எதிராக கடுமையான நிலைப்பாட்டை ஜெர்மனி எடுத்தால் அந்த இரண்டு நாடுகளுடனான வர்த்தகம் பாதிக்கப்படலாம். ஜெர்மனியின் இந்த நிலைப்பாட்டில் அமெரிக்காவிற்கு உடன்பாடில்லை.

இரசிய – பெலரஸ் படை ஒத்திகை

இரசியா பெலரஸுடன் இணைந்து ஆண்டு தோறும் செய்யும் “மேற்கு” என்னும் பெயர் கொண்ட படைத்துறை ஒத்திகை போல்ரிக் நாடுகளையும் சுவிஸ், பின்லாந்து போன்ற நடுகளையும் ஜெர்மனியையும் கைப்பற்றும் இலக்குடன் செய்யப்படுவதாக இருக்கின்றது என்ற குற்றச் சாட்டு 2017-ம் ஆண்டில் இருந்தே முன் வைக்கப்படுகின்றன. நேட்டோ நாடுகள் செய்யும் ஒத்திகை எப்படி இரசிய ஆக்கிரமிப்பை முறியடிப்பது என்பதை இலக்காகக் கொண்டுள்ளன. மிகப் பெரிய நிலப்பரப்பைக் கொண்ட இரசியாவை கைப்பற்றி ஆளக் கூடிய படை வலிமை உலகின் எந்த ஒரு நாட்டிடமும் இல்லை. ஆனால் மேற்கு நாடுகள் இரசியா பிளவு படுவதை விரும்புகின்றன.

ஜெர்மனியின் பசுமைக் கட்சியும் சமூக மக்களாட்சிக் கட்சியும்

ஜெர்மனியின் பசுமைக் கட்சியும் சமூக மக்களாட்சிக் கட்சியும் தமது மண்ணில் அணுக்குண்டுகள் இருக்கக் கூடாது என்ற கொள்கையைக் கொண்டுள்ளது. அமெரிக்கா ஜெர்மனியில் வைத்துள்ள படைத்தளங்களில் அணுக் குண்டுகளும் உள்ளன. உலக அமைதிக்கும் மனித குலத்தின் இருப்புக்கும் அணுக்குண்டுகள் மிக ஆபத்தானவை. ஆனால் ஜெர்மனியின் போட்டி நாடான இரசியாவிடம் உலகிலேயே அதிக அளவில் அணுக்குண்டுகள் உள்ளன. அத்துடன் சீனாவின் DF-41 போன்ற மீயுயர்-ஒலிவேக ஏவுகணைகள் ஜெர்மனி வரை பாய்ந்து அணுக்குண்டுகளை வீச வல்லன. அணுக்குண்டு ஒழிப்பு என்பது உலக நாடுகள் ஒருங்கிணைந்து செய்ய வேண்டிய ஒன்றாகும். ஜெர்மனி போன்ற உலக வர்த்தகத்தில் தங்கியிருக்கும் பெரிய நாடு ஒன்று தன் பாதுகாப்பிலும் ஒழுங்கான உலக வர்த்தகத்திலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஜெர்மனிய மக்கள் தேர்தலில் வாக்களிக்கும் போது தமது நாட்டின் வெளியுறவுக் கொள்கையையோ அல்லது பாதுகாப்பையோ பெரிது படுத்துவதில்லை. ஆனால் 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆப்கானிஸ்த்தானில் இருந்து நேட்ட்ப்ப் படைகளின் வெளியேற்றம் தொடர்பாக கணிசமான அளவு கருத்துப் பரிமாற்றம் செய்யப்பட்டது. ஜெர்மனியின் சமூக மக்களாட்சிக் கட்சியும், பசுமைக் கட்சியும் பழமைவாத மக்களாட்சிக் கட்சியும்(FDP) இணைந்து அமைத்துள்ள புதிய அரசின் வெளிநாட்டு கொள்கை மற்றும் பாதுகாப்புத் தொடர்பான நிலைப்பாடும் செயற்பாடுகளும் முந்தைய அரசினது கொள்கைகளில் இருந்து எவ்வளவு தூரம் வேறுபடும் என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

பனிப்போரில் பயனடைந்த ஜெர்மனி

ஜப்பானும் ஜெர்மனியும் இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்காவால் தோற்கடிக்கப்பட்ட நாடுகள். பின்னர் அவ்விரண்டு நாடுகளும் அமெரிக்காவின் நட்பு நாடுகளாகின. இரண்டிலும் அமெரிக்கா படைத்தளம் அமைத்து வைத்துள்ளது. இரண்டு நாடுகளும் அமெரிக்காவுடன் இணைந்து தமது பொருளாதாரத்தை முன்னேற்றியுள்ளன. இரண்டு நாடுகளும் தமது பாதுகாப்பிற்கு அமெரிக்காவில் தங்கியுள்ளன. அமெரிக்காவிற்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையிலான பனிப்போரில் ஜெர்மனியின் பாதுகாப்பு முக்கியத்துவம் பெற்றிருந்தது. சோவியத் ஒன்றியத்தை சார்ந்து இருந்த கிழக்கு ஜெர்மனி பனிப்போரின் முடிவில் மேற்கு ஜெர்மனியுடன் ஒன்றிணைக்கப்பட்டது. தற்போது உலக நாடுகளின் படைவலிமைப் பட்டியலில் ஜப்பான் 5-ம் இடத்திலும் ஜெர்மனி 15-ம் இடத்திலும் உள்ளன.

நாட்டின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தும் ஜப்பான்

சீனாவின் அச்சுறுத்தலை எதிர் கொள்ள ஜப்பான் தனது படைவலிமையை அதிகரித்துக் கொண்டே போகின்றது. சின்சே அபே ஜப்பானிய தலைமை அமைச்சராக இருந்த போது 2013-ம் ஆண்டு ஜப்பான் தனது வெளியுறவுத் துறையையும் படைத்துறையையும் மறுசீரமைப்புச் செய்தது. ஜப்பானின் தேசிய பாதுகாப்புச் சபை உருவாக்கப்பட்டு தேசிய பாதுகாப்பு கேந்திரோபாயம் வகுக்கப்பட்டது. அவசர பாதுகாப்பு தேவை ஏற்படும்போது செயற்படுவதற்கென அமைச்சரக்ளைக் கொண்ட ஒரு சபையும் அமைக்கப்பட்டது. 2021-ம் ஆண்டு தலைமை அமைச்சர் ஃபுமியோ கிஷிடா பொருளாதாரப் பாதுகாப்பிற்கான அமைச்சு ஒன்றை உருவாக்கினார். ஜப்பானின் ஏற்றுமதியில் 20% சீனாவிற்கு செல்கின்றது ஆனால் அமெரிக்காவிற்கும் ஜெர்மனிக்கும் போகும் ஏற்றுமதி 8% மட்டுமே. இருந்தும் புவிச்சார் அரசியல் நிலைமைகளை ஜப்பான் கருத்தில் கொண்டு சீனாவிற்கு எதிரான தன் நகர்வுகளை ஜப்பான் மேற்கொள்கின்றது. தைவானை சீனா ஆக்கிரமித்தால் ஜப்பானுக்கு ஏற்படப் போகும் இடர்களுக்கு ஈடாக அல்லது அதிலும் அதிகமான இடர்களை இரசியா உக்ரேனை ஆக்கிரமிப்பதால் ஜெர்மனி உள்ளிட்ட மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்படும்.

சுவிஸ்லாந்தின் பாதுகாப்பு

சுவிற்சலாந்து தனது இயற்கை அமைப்புடன் பல செயற்கைக் கட்டமைப்புக்களைச் செய்தது மட்டுமல்லாமல் நெடுங்காலமாக நடுநிலை நாடாக இருந்து கொண்டு ஆக்கிரமிக்கப்பட முடியாத நிலையில் இருக்கின்றது. பல மலைத் தொடர்களால் சூழப்பட்டுள்ள சுவிஸ் அந்த மலைகளுக்குள் பெரும் படையணி தங்கி இருந்து தாக்குதல் செய்யக் கூடிய குகைகளை அமைத்துள்ளது. அந்த மலைகளின் நுழைவாசல்கள் ஆக்கிரமிப்பாளர்கள் வரும் போது வெடித்துச் சிதறக் கூடிய இரகசிய ஏற்பாடுகளையும் அது செய்துள்ளது. பாலங்களும் பெரும் தெருக்களும் வெடித்துச் சிதறக்கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இப்படி மூவாயிரம் இடங்கள் வெடித்துச் சிதறக்குடியவையாக உள்ளன என சுவிஸ் அரசு சொன்னாலும் உண்மையில் ஆறாயிரம் இடங்கள் வெடித்துச் சிதறக் கூடியவை என நம்பப்படுகின்றது. உலகிலேயே முதலில் எல்லோருக்கும் படைத்துறைப் பயிற்ச்சி வழங்கி அவர்கள் தேவை ஏற்படும் போது கட்டாயமாக படைச் சேவைக்கு அழைக்கும் சட்டம் சுவிஸில் உண்டு. இதனால் ஒன்றரை இலட்சம் நிரந்தரப் படையினரைக் கொண்ட சுவிஸில் தேவை ஏற்படும் போது நாற்பது இலட்சம் படையினர் போர் முனையில் செயற்படுவர். சுவிஸ் சிறந்த முறையில் ஆட்சி செய்யப்படும் நாடாகும். உலகிலேயே அதிகாரப் பரவலாக்கம் உச்ச நிலையில் உள்ள நாடு சுவிஸ். அதன் நடுநிலைத் தன்மையால் பல உலக அமைப்புக்கள் சுவிஸ்ஸில் நிலை கொண்டுள்ளன. அது சுவிஸ் ஒரு சமாதான நாடாக இருக்க மேலும் உதவுகின்றது. ஜெர்மனியும் சுவிற்சலாந்தைப் போல் நடு நிலை பேணிக் கொண்டு படைத்துறைச் செலவை குறைக்க வேண்டும் என்ற கருத்து ஜெர்மனியில் முன்வைக்கப்படுகின்றது. பூகோள அமைப்பும் புவிசார் அரசியல் சூழ்நிலையும் ஜெர்மனிக்கு ஓர் உறுதியான பாதுகாப்புத் தேவை என்பதை வலியுறுத்துகின்றன.

தைவானை சீனா கைப்பற்றுவதை தடுக்கும் வகையில் தைவானை நோக்கி ஜப்பான் தனது ஏவுகணைகளை நிறுத்தியுள்ளது. அத்துடன் சீனாவிற்கு சவால் விடக் கூடிய அளவில் தனது படை வலிமையையும் பெருக்குகின்றது. இரசியா  உக்ரேனை ஆக்கிரமிப்பதற்கு எதிராக என்ன நகர்வுகளை ஜெர்மனி செய்கின்றது? தம்மை ஆக்கிரமித்து பல கொடுமைகள் செய்த ஜப்பான் மீது சீனர்களுக்கு ஜப்பான் மீது கடுமையான வெறுப்பு உள்ளது. தம்மை ஆக்கிரமித்த ஜெர்மனியை தோற்கடித்த இரசியர்களுக்கு ஜெர்மனி மீது அந்த அளவு வெறுப்பு இல்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

Wednesday, 9 December 2020

ஜப்பானுக்கு எதிராக புட்டீனின் குங்ஃபூ நகர்வு



வட மேற்கு பசுபிக் கடலில் இரசியாவிற்கும் ஜப்பானிற்கும் இடையில் பிராந்தியம் என்கின்றனர். இத்தீவுகள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான பிணக்கு நூறு ஆண்டுகளுக்கு மேல் தொடர்கின்றது. 2020 டிசம்பர் முதலாம் திகதி அத்தீவுகளில் இரசியா தனது எஸ்-300 ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளை நிறுத்தியது பிணக்கை தீவிரப்படுத்தியுள்ளது.


இரண்டு போர்களும் பல ஒப்பந்தங்களும்

1786-ம் ஆண்டு இரசியப் பேரரசி கதரீன் கியூரில் தீவுக் கூட்டம் தனது நாட்டின் ஒரு பகுதி எனப் பிரகடனம் செய்திருந்தார். 1855-ம் ஆண்டு இரசியாவும் ஜப்பானும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி கியூரில் தீவுக் கூட்டங்களின் நான்கு தீவுகள் ஜப்பானுக்கு உரியவை என்றும் ஏனைய வட பகுதி தீவுகள் இரசியாவிற்கு உரியவை என்றும் ஒத்துக் கொள்ளப்பட்டது. 1905-1906 இல் நடந்த ஜப்பானுக்கும் இரசியாவிற்கும் இடையிலான போரில் இரசியா தோல்வியடைந்ததால் கியூரில் தீவுக் கூட்டத்தின் சக்லின் தீவின் தென் பகுதி ஜப்பானுக்கு சொந்தமானது என ஒத்துக் கொள்ளப்பட்டது. பின்னர் இரண்டாம் உலக போரின் முடிவில் இரசியா (சோவியத் ஒன்றியம்) முழு கியூரில் தீவுக் கூட்டத்தையும் தனதாக்கிக் கொண்டது. அங்கிருந்த ஜப்பானிய மொழி பேசும் மக்கள் வெளியேற்றப்பட்டனர். இரண்டாம் உலகப் போரின் பின்னர் உலக அமைதியை நிலைநாட்ட 1951-ம் ஆண்டு நடந்த சன் ஃபிரான்சிஸ்க்கோ மாநாட்டில் ஜப்பான் கியூரில் தீவுகள் மீதான எல்லா உரிமைகளையும் கைவிட வேண்டும் என்று முடிவு செய்ததுடன் கியூரில் தீவுகளின் மீதான இரசியாவின் (சோவியத் ஒன்றியத்தின்) இறையாண்மையையும் அங்கு ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அதில் சக்கலின் தீவு தொடர்பாக ஒரு முடிவு எட்டப்படவில்லை. அது இரு நாடுகளுக்கும் சொந்தமானவை எனக்கருதப்பட்டது.



பனிப்போர்க்காலம்

1956-ம் ஆண்டு சோவியத் ஒன்றியமும் ஜப்பானும் மீண்டும் ஓர் உடன்படிக்கையை செய்து கொண்டன. அதன் படி கியூரில் தீவுக் கூட்டத்தின் சிறுபகுதியான சிக்கோட்டன், ஹபோமாய் ஆகிய தீவுகள் ஜப்பானிற்கு வழங்கப்பட்டன. 1960-ம் ஆண்டு ஜப்பானும் அமெரிக்காவும் பாதுகாப்பு உடன்படிக்கையை செய்து கொண்டதை விரும்பாத சோவியத் ஒன்றியம் ஜப்பானின் அந்நியப் படைகள் இருக்கும் வரை கியூரில் தீவில் ஜப்பானுக்கு இடமில்லை எனவும் 1956-ம் ஆண்டு செய்த ஒப்பந்தத்தை இரத்துச் செய்வதாகவும் அறிவித்தது. கியூரில் தீவுக் கூட்டங்களில் அமெரிக்கப் படைகள் நிலை கொள்ளலாம் என சோவியத் கரிசனை கொண்டிருந்தது.

சோவியத் வீழ்ச்சிக்குப் பின்னர்

1991 சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் இரசியாவும் ஜப்பானும் கியூரில் தீவுக் கூட்டங்கள் தொடர்பாக தொடர் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டன.

இதுருப், குணசீர், சிக்கோட்டன், ஹபோமை ஆகிய நான்கு தீவுகள் தொடர்பாக 2000-ம் ஆண்டில் விளடிமீர் புட்டீன் ஜப்பானுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். 2013-ம் ஆண்டு ஒரு தீவிர பேச்சு  வார்த்தையை இரு நாடுகளும் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கையில் இரசியா உக்ரேனுக்கு எதிராக செய்த நடவடிக்கைகளுக்கு ஆட்சேபனை தெரிவிக்கும் முகமாக ஜப்பான் பேச்சு வார்த்தையை நிறுத்திக் கொண்டது.

ஜப்பானின் புதிய தலைமை அமைச்சர்

ஜப்பானின் புதிய தலைமை அமைச்சர் யோசிகிடே சுகா பதவிக்கு வந்த பின்னர் 2020 செப்டம்பரில் இரசிய அதிபர் புட்டீனுடன் தொடர்பு கொண்டு கியூரில் தீவுப் பிரச்சனையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டாம் எனத் தெரிவித்தார். அத்துடன் இரசிய ஜப்பானிய வர்த்தகத்தை விரிவு படுத்தும் விருப்பத்தைத் தெரிவித்தார். அவரின் எண்ணத்தை விளடிமீட் புட்டீன் தனது கவனத்தில் எடுத்துக் கொண்டார்.

 

இரசியாவின் பசுபிக் வாசலில் அந்நியரா?

இரசியாவில் இருந்து பசுபிக் நாடுகளுக்கும் தெற்காசிய நாடுகளுக்கும் வர்த்தகம் நடை பெறுவதற்கு இரசியாவின் கிழக்கெல்லையில் உள்ள கியூரில் தீவுக் கூட்டம் முக்கியமான ஒன்றாகும். நடுவண் ஆசிய நாடுகளில் சீனாவின் ஆதிக்கத்தை இரசியா எதிர் கொள்வதற்கும் கியூரில் தீவுக் கூட்டம் இரசியாவிற்கு அவசியமானதாகும்.

புட்டீனின் குங்குஃபூ அடி

சிரியா, உக்ரேன் ஆகிய நாடுகளில் செய்தது போல் தனது திடீர் படை நகர்வுகள் மூலம் பிராந்திய நலன்களை தூக்கி நிறுத்துவதில் மீண்டும் ஒரு முறை புட்டீன் வெற்றி கண்டுள்ளார். கியூரில் தீவில் தனது படை நிலைகளை வலுப்படுத்தியதன் மூலம் புட்டீன் ஜப்பானுடன் செய்யும் பேச்சு வார்த்தைகளில் தனது நிலையை வலிமையாக்க செய்த நகர்வுதான் கியூரில் தீவுகளில் எஸ்-300 ஏவுகணை ஏதிர்ப்பு முறைமைகளை நிறுத்தியது. இரசியாவுடன் இதுவரை மட்டுப்படுத்தப் பட்ட வர்த்தகத்தை செய்யும் ஜப்பான் தனது பொருளாதாரத்தை மேம்படுத்த இரசியாவுடன் அதிக வர்த்தகம் செய்ய விரும்புகின்றது என்பதை புட்டீன் ஜப்பானிய தலைமை அமைச்சருடனான பேச்சு வார்த்தையின் போது உணர்ந்து கொண்டுள்ளார். குங்குஃபு சண்டை வீரரான புட்டீன் எதிரியின் வலுவற்ற புள்ளியை அறிந்து தாக்குதல் செய்கின்றார்.


இரசியாவினுள் உக்ரேனின் ஊடறுப்பும் ஊடுருவலும்

இரசியாவை ஆக்கிரமித்த அந்நியப் படையினர் அழிவைச் சந்திப்பார்கள் என்பது வரலாறு உலகிற்கு உரத்துச் சொல்லும் செய்தியாகும். இருந்தும் 2024 ஓகஸ்ட் ம...