Followers

Showing posts with label QUAD+. Show all posts
Showing posts with label QUAD+. Show all posts

Sunday, 3 October 2021

குவாட் அமைப்பின் கூட்டறிக்கை சொல்லும் செய்தி

 


வெள்ளை மாளிகையில் குவாட் உரையாடல் நாடுகளான ஒஸ்ரேலியா, இந்தியா, ஜப்பான், ஐக்கிய அமெரிக்கா செப்டம்பர் 24-ம் திகதி கூடிக் கலந்தாலோசித்து ஒரு கூட்டறிகையை வெளிவிட்டமை வெறும் உரையாடல் மட்டும் கொண்ட ஒரு “மினக்கெட்டான் வேம்படி” தான் இந்த குவாட் என்ற நையாண்டிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. “உரையாடலில்” இருந்து “ஒத்துழைப்பு” என்ற நிலைக்கு குவாட் மாறியுள்ளது. ஆனாலும் “சீனா”, “படைத்துறை ஒத்துழைப்பு”, “தைவான்” ஆகிய இரண்டு பதங்களும் கூட்டறிக்கையில் காணப்படவில்லை.

குவாட் அமைப்பின் கூட்டறிக்கையை இந்த இணைப்பில் காணலாம்:

QUAD Joint Statement

குவாட் கூட்டறிக்கை

குவாட் அமைப்பின் கூட்டறிக்கையில் கொவிட்-19 என்பது 12 தடவையும் ஒத்துழைப்பு என்பது 10 தடவையும் இந்தோ-பசுபிக் என்பது ஆறு தடவையும் ஆப்கானிஸ்த்தான் என்பது 3 தடவையும் வட கொரியா என்பது ஒரு தடவையும் பயங்கரவாதம் என்பது இரண்டு தடவையும் உள்ளன. 5G என்பதப் பற்றி ஒரு பந்தியே உள்ளது. முதற் பந்தியிலேயே திறந்ததும் சுதந்திரமானதுமான இந்தோ பசுபிக் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றை வைத்துக் கொண்டு எந்தத் துறைகளில் குவாட் ஒத்துழைக்க வாய்ப்புக்கள் உள்ளன என்பதை நன்கு அறிய முடியும்.




கலங்கிய மோடிக்கு கைகொடுக்குமா குவாட்?

2020 மே மாதம் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் லடாக் பிரதேசத்தில் நடந்த மோதலின் போது இந்திய தலைமை அமைச்சர் மோடி மிகவும் கலங்கிய நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் முறையிட்டார். சொல்லி அழுதாரோ தெரியவில்லை. இந்தியா குவாட் அமைப்பில் இணைவதால் சீனாவிடமிருந்து இந்தியாவை குவாட் பாதுகாக்கும் இன இந்திய மக்களை இந்தியாவின் “பொய் ஹிந்த்” யூடியூப் சனல் கும்பல்கள் தொடர்ச்சியாக நம்பவைத்துக் கொண்டிருக்கின்றன. அருணாச்சலப் பிரதேசம் போன்ற இந்தியப் பிரதேசங்களை சீனா ஆக்கிரமிப்பதற்கு போர் தொடுத்தால் இந்தியாவுடன் இணைந்து ஒஸ்ரேலியா, ஜப்பான், ஒஸ்ரேலியா ஆகிய நாடுகள் சீனாவிற்கு எதிராக போர் செய்யுமா என்பதை குவாட் அமைப்பின் தற்போதைய நிலைப்பாடு உறுதி செய்யவில்லை.

Trump: “Modi was in a bad mood”


படைத்துறை ஒத்துழைப்பு பற்றி கூட்டறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. குவாட் அமைப்பில் உள்ள நான்கு நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்கள் பல் வேறு அரசுறவியலாளரகள், அரச தலைவர்கள் இனிவரும் காலங்களில் சந்தித்து உரையாடுவாரகள் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்சரகள், இந்தோ-பசுபிக் பிராந்திய படைத்தளபதிகள் மட்டத்தில் சந்திப்போ கலந்துரையாடலகளோ நடக்கும் என அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. படைத்துறை ஒத்துழைப்பு இல்லாமல் இந்தியாவை சீனாவிடமிருந்து எந்த வகையில் குவாட் பாதுகாக்கும் என்பது கேள்விக் குறியே! கூட்டறிக்கையின் நான்காம் பத்தியில் பிராந்திய ஒருமைப்பாட்டை ஆதரிப்போம் என்ற வாசகம் காணப்படுகின்றது. இரண்டாம் பத்தி:

2. Together, wecommit to promotinga free, openrules-based order, rooted ininternational law to advancesecurity and prosperity and counter threats to bothin the Indo-Pacific and beyond.We support the rule of law, freedom of navigation and overflight, peaceful resolution of disputes, democratic values, and territorial integrity. We commit to work together and with a range of partners. We reaffirm our strong support for ASEAN’s unity and centrality as well as the ASEAN Outlook on the Indo-Pacific. Full of potential, the Quad looks forward to the future; it seeks to uphold peace and prosperity and strengthen democratic resilience, based on universal values.

மோடி மிரட்டப்பட்டாரா என்பது பற்றிய முந்தைய பதிவை இந்த இணைப்பில் காணலாம்:

சீனாவின்மிரட்டலுக்கு மோடி அஞ்சினாரா?


2018 ஜூலை மாதம் 23-ம் திகதி Foreign Policy சஞ்சிகையில் India is the Weakest Link in Quad என்றதலைப்பில் ஒரு கட்டுரை வெளிவந்தது. அதில் குவாட் ஒரு படைத்துறைக் கூட்டமைப்பாக உருவாகும் எனவுக் கூறப்பட்டிருந்தது.

விதிகளை அடிப்படையாகக் கொண்ட பன்னாட்டு ஒழுங்கிற்கு commit என்ற பதம் பாவிக்கப்பட்டுள்ளது. பிராந்திய ஒருமைப் பாட்டிற்கு support என்ற பதம் பாவிக்கப்பட்டுள்ளது. குவாட் என்பது நேட்டோ போன்றது என்போர் இவற்றைக் கவனிக்க வேண்டும். குவாட் என்ற அமைப்பிற்கான அமைப்பு விதிகளோ அல்லது ஆய்வி வீச்சளவோ (Terms of references) இன்னும் உருவாக்கப்படவில்லை. எந்த ஒரு புரிந்துணர்வு பதிவுக்குறிப்பு (memorandum of understanding) கூடக் கைச்சாத்திடவில்லை. குவாட் என்பதை ஒரு முறைசாரா அமைப்பாகவே பன்னாட்டு அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றார்கள். அந்த வகையில் நேட்டோவும் குவாட்டும் மலையும் மடுவும் போன்றவை.

குவாட்டின் இலக்கு சீனாதான்

குவாட் முழுக்க முழுக்க சீனாவை எதிர்கொள்ளத்தான் என அத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் பகிரங்கமாக அறிவிக்காத போதிலும் குவாட் அமைப்பு சீன ஆதிக்கத்தை சமாளிப்பதற்கு என உருவாகிக் கொண்டிருக்கின்றது. Centre for New American Security என்னும் நிறுவனத்தின் முதன்மை நிறைவேற்று அதிகாரி Richard Fontaine “நான்கு நாடுகளுக்கும் இடையில் ஒரு தீவிரமான பங்காண்மை மலர்ந்து கொண்டிருக்கின்றது என்பதை பார்க்காமல் இருப்பதற்கு நீங்கள் உங்கள் கண்களை கடுமையாக முடிக் கொள்ள வேண்டும்” என்கின்றார். 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் இந்தோ பசுபிக் நாடுகள் பாதிப்படைந்த போது அதைச் சாட்டாக வைத்து அந்த நாடுகளுக்கு உதவி செய்யும் போர்வையில் சீனப் படைகள் செல்வதைத் தடுக்க ஒஸ்ரேலியா, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் ஒத்துழைத்து அந்த நாடுகள் மீண்டு எழுவதற்கு உதவி செய்தன. அதை அடிப்படையாக வைத்து நான்கு நாடுகளும் பல வகையிலும் ஒத்துழைக்க வேண்டும் என முன்னாள் ஜப்பான் தலைமை அமைச்சர் சின்சோ அபே முன்வைத்த திட்டமே குவாட் அமைப்பை உருவாக்கும் எண்ணக் கருவிற்கு வழிவகுத்தது. ஆனால் சீனாவின் பொருளாதாரத்தைச் சார்ந்து வளர்ந்து கொண்டிருந்த ஒஸ்ரேலியாவும் சீனாவுடன் பகைமையை வளர்ப்பதைத் தவிர்க்க விரும்பிய இந்தியாவும் குவாட்டில் முழுமையாக ஈடுபடத் தயக்கம் காட்டின. இதனால் கிடப்பில் பத்து ஆண்டுகளுக்கு மேல் அத்திட்டம் வைக்கப்பட்டிருந்தது. 2017இல் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் நடந்த டொக்லம் முறுகலின் பின்னர் இந்தியாவின் நிலைப்பாடு மாறியது. டொனால் டிரம்ப் குவாட் அமைப்பை உருவாக்கும் முயற்ச்சியை மீள் ஆரம்பித்தார். சீனாவின் படைத்துறை, பொருளாதாரம், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் எட்டிய துரித வளர்ச்சியும் சீனாவின் பிராந்திய ஆதிக்க நகர்வுகளும் குவாட்டை மீள உருவாக்க வழிவகுத்தது.

நாளைய இந்தியா இன்றைய சீனா ஆகலாம்?

அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் மத்திய தரைக்கடலில் ஆதிக்கம் செலுத்துவது போல் சீனாவும் தென் சீனக் கடலில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முயல்கின்றது. அதைத் தடுப்பது குவாட் அமைப்பின் நோக்கம் என்பதும் தொழில்நுட்பம், கடல்சார் சட்டம், மருத்துவம் போன்ற துறைகளில் குவாட் நிச்சயமாக ஒத்துழைக்கும். அது நேட்டோபோல் ஒரு படைத்துறை ஒத்துழைப்பு நாடாக உருவாகுவது சீனாவின் எதிர்கால நடவடிக்கைகளில் தங்கியுள்ளது. நேட்டோ போன்ற ஒரு கூட்டமைப்பை இந்தியாவுடன் உருவாக்க அமெரிக்கா விரும்பவில்லை என்பதையே AUKUS என்ற ஒஸ்ரேலியா, பிரித்தானியா அமெரிக்கா ஆகிய நாடுகளைக் கொண்ட அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளமை சுட்டிக் காட்டுகின்றது. நேட்டோ அமைப்பு தனது படைத்துறை தொழில்நுட்பங்களை ஒவ்வொரு நாடும் மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளும். இந்தியாவுடன் ஒரு முழுமையான படைத்துறைத் தொழில்நுட்ப பகிர்வைச் செய்ய அமெரிக்கா தயங்குகின்றது. இன்று சீனாவால் அமெரிக்காவின் உலக ஆதிக்கத்திற்கு எழுந்துள்ள சவால் இன்னும் இருபது ஆண்டுகளிற்கு பின்னர் இந்தியாவால் எழுவதற்கு வாய்ய்பு உண்டு.

மலபார் போர்ப்பயிற்ச்சி

2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் அரபிக் கடலில் இந்தியாவுடன், ஒஸ்ரேலியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளின் கடற்படைகள் இணைந்து நடத்திய போர்ப்பயிற்ச்சியை குவாட்டின் ஒரு பகுதியாகப் பார்க்க முடியும். ஆனால் குவாட் நாடுகள் சீனாவிற்கு எதிரான கூட்டணி நாம் என பகிரங்கமாக அறிவித்து சீனாவை உசுப்பேற்ற விரும்பவில்லை என்பதை நன்கு அறிய முடிகின்றது. அதேவேளை சீனாவை அழிக்க உருவான கூட்டணிதான் குவாட் என்பது அப்பட்டமான அபத்தம்.

குவாட் கூட்டல் (QUAD+)

குவாட் கூட்டமைப்பில் தற்போது உள்ள ஒஸ்ரேலியா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஐக்கிய அமெரிக்காவைத் தவிர மேலதிகமாக தென் கொரியா, நியூசிலாந்து, வியட்னாம் ஆகிய நாடுகள் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளன. பிலிப்பைன்ஸில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் அதுவும் இணைந்து கொள்வதற்கு வாய்ப்புண்டு. புவிசார் சூழலை வைத்துப் பார்க்கும் போது ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் முக்கிய திருகுப்புள்ளியான மலபார் நீரிணையை ஒட்டியுள்ள மலேசியாவின் ஒத்துழைப்பு குவட்டின் நோக்கத்தை நிறைவேற்ற மிக அவசியம்.

 

Wednesday, 25 November 2020

தைவானைச் சுற்றி ஆசியப்படை வலுப்பெருக்கல் போட்டி


இந்திய-சீன மற்றும் இந்திய-பாக்கிஸ்த்தான் படைத்துறைப் போட்டி தீவிரமடைவதற்கான காரணம் அமெரிக்கா தைவானைப் பாதுகாப்பதற்கு செய்யும் நடவடிக்கைகளாகும். அமெரிக்கக் கடற்படையின் Rear Admiral Michael Studeman 21/11/2020 தைவானிற்கு ஒரு பயணத்தை மேற்கொண்டதாக தைவானில் இருந்து செய்திகள் கசியவிடப்பட்டுள்ளன. இவர் அமெரிக்கப் படையின் ஆசிய பசுபிக் கட்டளையகத்தின் உளவுப் பிரிவின் உயர் அதிகாரியாவார்.  இதற்கு முன்னர் அமெரிக்கப் படையினர் தைவானியப் படையினருக்கு பயிற்ச்சி வழங்குவதாகவும் செய்திகள் வெளிவந்திருந்தன. கடந்த ஓராண்டாக அமெரிக்கா பல பில்லியன் டொலர்கள் பெறுமதியான படைக்கலன்களை தைவானிற்கு விற்பனை செய்தது சீனாவைக் கடும் சினத்திற்கு உள்ளாக்கியுள்ளது. 

1995-96 தைவான் நெருக்கடி
1994 பில் கிளிண்டன் தைவானிய அதிபர் லீ டெங் கூ அமெரிக்கா செல்ல அனுமதி மறுத்தார். சீனாவுடனான உறவைக் கருத்தில் கொண்டே அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் அமெரிக்க நாடாளமன்றம் 1995 மே மாதம் மக்களவையில் 396-1 என்ற பெரும்பான்மையுடனும் மூதவையில் 97-1 என்ற பெரும்பான்மையுடனும் அவருக்கு பயண அனுமதி வழங்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது. 1979 ரிச்சர்ட் நிக்சன் அமெரிக்க சீன அரசுறவை நிலை நிறுத்திய போது தைவானும் சீனாவின் ஒரு பகுதி என ஒத்துக் கொள்ளப்பட்டது. 1995 ஜூலை தான் படித்த கோர்ணல் பல்கலைக் கழகத்தில் தைவானின் மக்களாட்சி பற்றி தைவானிய அதிபர் லீ டெங் கூ உரையாற்றினார். இதனால் ஆத்திரமடைந்த சீனா தைவானை இலக்கு வைத்து 1995-ஜூலை முதல் தொடர் ஏவுகணைச் சோதனை, கடற்படைப் போர் ஒத்திகை போன்றவற்றைச் செய்தது. சீனப் படைகள் ஃபிஜீயன் மாகாணத்திற்கு பெருமளவில் நகர்த்தப்பட்டனர். அவர்களை வைத்து ஈரூடக தாக்குதல் ஒத்திகையச் செய்தது. தைவானை கைப்பற்றும் நகர்வுகளைச் சீனா செய்வதை அறிந்த அதிபர் பில் கிளிண்டன் USS NIMITZ, USS INDEPENDENT என இரு விமானம் தாங்கிக் கப்பல்களின் தலைமையில் இரு பெரும் கடற்படைப்பிரிவுகளை தைவான் நீரிணைக்கு அனுப்புகின்றார். அந்த இரண்டு கடற்படைப் பிரிவுகளையும் தம்மால எதிர் கொள்ள முடியாது என உணர்ந்த சீனா தனது தைவான் ஆக்கிரமிப்பு முயற்ச்சியைக் கைவிட்டது. இது சீனாவின் மூக்குடைபட்ட ஒரு நிகழ்வாகும். சினம் கொண்ட சீனா அவசரமாக இரசியாவிடமிருந்து பல தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்கள், எழுபத்தாறு SU-30-MKK, இருபத்தினான்கு SU-30-MK2 ஆகிய போர்விமானங்கள் போன்றவற்றை வாங்குகின்றது. அமெரிக்காவிற்கு இணையாக சீனா தனது படைவலுவை உயர்த்த முடிவு செய்து. அதன் நீண்ட காலத் திட்டத்தால் அது இன்று அமெரிக்காவிற்கு சவால் விடக்கூடிய ஒரு படைத்துறையைக் கொண்டுள்ளது. அமெரிக்கா இன்று சீனாவின் வளர்ச்சியை இட்டு கரிசனை கொண்டுள்ளது. சீனாவின் படைத்துறை வளர்ச்சி அது தென் சீனக் கடலில் உள்ள தீவுகளை தனதாக்கி அங்கு தன் படை நிலைகளை நிறுவ வழிவகுத்தது. அதைத் தடுக்க அமெரிக்காவால் முடியவில்லை. அந்த தீவுகளுக்கு மேலாக அமெரிக்கா தனது போர் விமானங்களைப் பறக்க விடுவதும் அத்திவுகளுக்கு அண்மையில் தனது கடற்படைக் கலன்களை அனுப்புவதும் மட்டுமே அமெரிக்காவால் செய்ய முடிந்தது. இது பிலிப்பைன்ஸ் ஆட்சியாளர்களை அமெரிக்காமீது அதிருப்தி கொள்ள வைத்தது. 

சீனாவின் அயல் நாடுகளின் கரிசனை

சீனாவின் கிழக்குப் பக்கம் ஜப்பானும் தென் கொரியாவும் சீன அச்சுறுத்தலைச் சமாளிக்க இரண்டு வழிகளைக் கையாள்கின்றன. ஒன்று தனது படைவலிமையைப் பெருக்குவது இரண்டாவது அமெரிக்காவுடன் படைத்துறை ஒத்துழைப்பை அதிகரிப்பது. மேற்குப் புறம் இந்தியா சீனப் படைத்துறை வளர்ச்சியால் அதிக கரிசனை கொள்கின்றது. சீனா அருணாச்சலப் பிரதேசம் தனது நாட்டின் ஒரு பகுதி எனச் சொல்கின்றது. ஆரம்பத்தில் இந்தியா இரசியாவுடன் படைத்துறை ஒத்துழைப்பையும் இரசியாவிடமிருந்து பெருமளவு படைக்கலன் கொள்வனவையும் செய்கின்றது. சீனா தொடர்ச்சியாக இந்திய எல்லையில் செய்யும் அத்து மீறல்களால் இந்தியா தனது பாதுகாப்பையிட்டு முழுமையான மனநிறைவு அடையவில்லை. அமெரிக்க இந்திய படைத்துறை ஒத்துழைப்பு உருவாக்கி அதிகரிக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்தியாவின் படை வலிமை அதிகரிப்பால் பாக்கிஸ்த்தானைச் சிந்திக்க வைக்கின்றது. அதுவும் தன் படைவலிமையை அதிகரிக்கின்றது. இந்தியா தனக்கும் சீனாவிற்கும் இடையில் உள்ள படை வலிமை இடைவெளியை அமெரிக்க உறவால் நிரப்ப முயல பாக்கித்தானும் தனக்கும் இந்தியாவிற்கும் இடையில் உள்ள படைவலிமை இடைவெளியை சீன உறவால் நிரப்ப முயல்கின்றது.

குவாட் உரையாடல்

சீனாவின் பொருளாதார, படைத்துறை, தொழில் நுட்ப வளர்ச்சியும் பசுபிக் பிராந்தியத்தில் உள்ள சிறிய நாடுகளுக்கு கடன் கொடுத்து அவற்றின் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதும் ஜப்பானையும் ஒஸ்ரேலியாவையும் கரிசனை கொள்ள வைக்கின்றது. இதனால் ஜப்பான் நான்குமுனை உரையாடல் (Quadilateral Dialogue) என்னும் அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, ஒஸ்ரேலியா ஆகிய நாடுகளைக் கொண்ட உரையாடலைத் தொடக்குகின்றது. இதன் நோக்கம் இந்து மாக்கடலிலும் பசுபிக் மாக்கடலிலும் சுதந்திரமான கடற்போக்குவரத்தை உறுதி செய்ய நான்கு நாடுகளும் ஒத்துழைத்தல் எனச் சொன்னாலும் அதன் உண்மையான நோக்கம் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் படைவலிமையை எதிர்கொள்வதற்கான ஒத்துழைப்பாகும்.

தைவான் சீனாவின் மணிமுடி

சீனாவின் தொழில்நுட்ப வலுவின்மையான புள்ளிகளில் semiconductors உற்பத்தியும் ஒன்று. தகவல் தொழில்நுட்பத்தின் உயிர்நாடியான அந்தத் துறையில் அமெரிக்கா, தென் கொரியா, தைவான் ஆகியவை உலகில் முன்னணியில் திகழ்கின்றன. தைவானை சீனாவின் ஒரு பகுதியாக்குதல் சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்தும்.  

உலகெங்கும் துறைமுகங்களைத் தேடித் தேடி அபிவிருத்து செய்யும் சீனாவிற்கு 15 துறைமுகங்களைக் கொண்ட தைவான் பெரும் வாய்ப்பாகும். தைவானை சீனா கைப்பற்றினால் பசுபிக் பிராந்தியத்தில் அதன் ஆதிக்க வளர்ச்சிக்கு ஏதுவாக அமையும். 2019 ஜனவரியில் சீன அதிபர் ஜீ ஜின்பிங் தைவான் சீனாவினது ஒரு பகுதி என்றும் தேவை ஏற்படின் படைகளைப் பாவித்தாவது அதை சீனாவின் ஒரு பகுதியாக்குவோம் என முழங்கினார். தைவானின் தனித்துவத்தை காப்பாற்றுவோம் என அமெரிக்கா உறுதி பூண்டுள்ளதாக அறிவித்தது. அது தைவானியர்களின் சுதந்திரத்தில் கொண்ட அக்கறையால் அல்ல பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்கவே.

சீனாவிற்கு எதிராக இந்தியாவை இழுத்த அமெரிக்கா

தைவானை நோக்கி சீனாவின் படைநகர்வுகளிற்கு பதிலடியாக 2018-ம் ஆண்டு அமெரிக்கா மூன்று தடவை தனது கடற்படையை சீனாவிற்கும் தைவானிற்கும் இடையில் உள்ள தைவான் நீரிணைக்கு அனுப்பவேண்டியிருந்தது. சீனா தைவானைக் கைப்பற்ற முயற்ச்சித்தால் ஒரு அமெரிக்க சீனப் போர் நிச்சயம் ஊருவாகும். இதில் சீனாவிற்கு பாதகமான சூழலை ஏற்படுத்த இந்தியா சீனா எல்லையில் சீனாவிற்கு எதிராக படை நகர்த்தலைச் செய்ய வேண்டும் என்ற திட்டம் இரகசியமாக ஆலோசிக்கப்பட்டது. சீனா தைவான் போரில் ஈடுபடும் வேளையில் பாக்கிஸ்த்தான் வசமுள்ள கஷ்மீரை இந்திய கைப்பற்ற திட்டமிட்டது. அமித் ஷா பாக்கிஸ்த்தானும் சீனாவும் கைப்பற்றி வைத்திருக்கும் கஷ்மீரை எப்படியும் மீட்போம் என இந்தியப் பாராளமன்றத்தில் முழங்கினார். அதை எப்படியோ அறிந்த சீனா தைவான் போரின் போது இந்தியா அப்படி ஒரு படை நகர்வை மேற்கொண்டால் பாக்கிஸ்த்தானும் சீனாவும் இணைந்து இந்தியாவிற்கு எதிராக ஒரு போர் செய்ய முடிவு செய்துள்ளன. பாக்கிஸ்த்தான் வசமுள்ள கஷ்மீரினூடாக சீன அமெரிக்க பொருளாதாரப் பாதை செல்கின்றது.

இரு குழுக்கள்

பாக் + சீனா ஒரு புறம் அமெரிக்கா+ஜப்பான்+இந்தியா+ஒஸ்ரேலியா+ தென் கொரியா + வியட்நாம் இன்னொரு புறம் என்ற போட்டி நிலை ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் தீவிரமாகிக் கொண்டிருக்கின்றது. குவாட் பாதுகாப்பான கடற் போக்கு வரத்தை உறுதி செய்தல் என்னும் பெயருடன் ஒரு படைத்துறை ஒத்துழைப்பு. இது நேட்டோ போல் நெருக்க மாக இருக்காது. அமெரிக்கா நேட்டோ நாடுகளைப் பாதுகாக்க எடுத்த பொறுப்பைப் போல் சீனாவின் அயல்நாடுகளை சீனாவிடமிருந்து பாதுகாக்க முழுப்பொறுப்பு எடுக்காது. ஆனால் தனது தீவிர ஒத்துழைப்பை வழங்கும்.

இரசியாவின் நிலைப்பாடு

2014-ம் ஆண்டு கிறிமிய இணைப்பின் பின் நெருங்கி வந்த இரசிய சீன உறவு 2019இல் இருந்து நெருக்கம் குறைந்து கொண்டு போகின்றது. மத்திய ஆசியாவில் சீனா செய்யும் நகர்வுகளை இட்டு இரசியா கரிசனை கொண்டுள்ளது. இரசியா சீனாவிற்கு வழங்க ஒத்துக்கொண்ட எஸ்-400 என்ற வான் பாதுகாப்பு முறைமையை விநியோகிப்பதை தாமதப் படுத்தியுள்ளது. சீனாவின் நட்பு நாடாக வட கொரியாவும் கம்போடியாவும் மட்டும் இருக்கின்றன.

ஜோ பைடனின் தலைமையில் அமெரிக்கா

அமெரிக்க இந்திய படைத்துறை ஒத்துழைப்பில் ஜோன் பைடனும் அதிக அக்கறை காட்டுவார். டிரம்ப் இந்தியாவிற்கு எதிராக வர்த்தகப் போர் செய்ய தயாராக இருந்தார். பைடன் அதில் அக்கறை காட்டமாட்டார். ஆனால் இந்தியாவின் மனித உரிமை மீறல்களிற்கு எதிராக நிற்பார். கமலா ஹரிஸ் இந்தியப் பெண்களுக்கு ஆதரவான நிலைப்பாடு இந்துத்துவாவாதிகளைச் சினமடையச் செய்யலாம். சீனாவுடன் டிரம்பின் வர்த்தகப் போர். பைடனும் தொடர்வார். ஆனால் அமெரிக்காவிற்கு பாதகம் ஏற்படாத வகையில் அவரது நடவடிக்கைகள் இருக்கும். தைவானை அவரும் காப்பாற்றுவார். டிரம்ப் இருந்திருந்தால் தைவானில் இரகசியமாக இருக்கும் அமெரிக்கப் படைகள் அதிகரிக்கப் பட்டிருக்கலாம். ஜோன் பைடன் உலக தாராண்மைவாத்தை கையில் எடுப்பாரானால் ஆதிக்கப் போட்டி மற்றும் படைத்துறைப் போட்டி ஒரு புறம் இருக்க வர்த்தக ஒத்துழைப்பை சுமூகமாகச் செய்யும் முயற்ச்சியில் இறங்குவார். ஆசியான் நாடுகளும் சீனா, ஒஸ்ரேலியா, தென் கொரியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுமாக இணைந்து மொத்தம் பதினைந்து நாடுகள் Regional Comprehensive Partneship (RCEP) என்னும் பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை செய்தது. இதுவும் ஆதிக்கப் போட்டி ஒரு புறமிருக்க நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் சுமூகமாக நடக்க வேண்டும் என்ற எண்ணத்துடனே செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் வளர்ச்சி சீனாவின் ஆதிக்க மனப்பான்மையை குறைக்க உதவாது. அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை ஊரை அடிச்சு உலையில் போடுவது என்றால் சீனாவின் வெளியுறவுக் கொள்கை “உன் வீட்டுக்கு வந்தால் என்ன தருவாய், என் விட்டுக்கு வரும்போது என்ன கொண்டு வருவாய் என்பதே”



Sunday, 15 November 2020

பங்களாதேசம் பணிகின்றதா துணிகின்றதா?

 


பங்களாதேசத்தை சூழவுள்ள புவிசார் அரசியல் போட்டி பல மாற்றங்களை கடந்த பத்து ஆண்டுகளாக கண்டு கொண்டிருப்பதுடன் அப்போட்டி தற்போது தீவிரமடைகின்றது. அந்த போட்டியில் ஈடுபட்ட நாடுகளிடையே வெளிப்படைத்தன்மை இல்லை. போட்டிக்கான காரணிகளையும் போட்டியாளர்களின் நகர்வுகளையும் சரியாக அறிந்து அதற்கு ஏற்ப தனது நிலையைத் தெரிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் பங்களாதேசம் இருக்கின்றது. உலகின் மூன்றாவது பெரிய இஸ்லாமிய நாடான பங்களாதேசம் மத தீவிரவாதத்தை சமாளிக்கும் அனுபவத்தைப் பெற்றுள்ளது. இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் சீனா தான் மட்டும் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற வெளிப்படுத்தாத கொள்கையுடன் செயற்படுவது பங்களாதேசத்தையும் பாதிக்கின்றது. இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் சீனா தனது முத்துமாலைத் திட்டத்தை தொடக்கிய போது வெளிப்படாத சீனக் கேந்திரோபாய நோக்கங்களை தற்போது உணரக் கூடியதாக இருக்கின்றது.

தங்மென மின்னத்தொடங்கியுள்ள வங்கப் பொருளாதரம்

2005-ம் ஆண்டில் இருந்து பங்களாதேசத்தின் பொருளாதாரம் காத்திரமான பொருளாதார வளர்ச்சியைக் கண்டு வருகின்றது. பங்களாதேச மக்களில் 43.8 விழுக்காட்டினர் வறுமை கோட்டின் கீழ் இருந்தனர். 2016-ம் ஆண்டு 14.8 விழுக்காட்டாகக் குறைந்துள்ளது. மக்களின் கல்வியறிவு, ஆயுள் எதிர்பார்ப்பு, உணவு கொள்வனவு போன்றவை காத்திரமான மேம்பாட்டைக் கண்டுள்ளது. தெற்காசிய நாடுகளில் வேகமாக வளரும் பொருளாதாரமாக பங்களாதேசமும் மிக மெதுவாக வளரும் பொருளாதரங்களாக பாக்கிஸ்த்தானும் ஆப்கானிஸ்த்தானும் இருக்கின்றன. சீனாவில் தொழிலாளர்களின் ஊதியம் அதிகரித்தமையை வாய்ப்பாக வைத்து பல உலக ஆடை அணிகலன் உற்பத்தி நிறுவனங்கள் பங்களாதேசத்தில் தமது உற்பத்திகளைச் செய்கின்றன. அரிசியும் சணலும் பங்களாதேசத்தின் பாரம்பரிய உற்பத்திப் பொருட்களாகும். ஆரம்பத்தில் பங்களாதேசப் பொருளாதாரம் சணல் ஏற்றுமதியில் பெரிதும் தங்கியிருந்தது.

பெருமை மிக்க வங்கம்

வங்க தேசம் என்பது பங்களாதேசத்தையும் இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தையும் அதைச் சுற்றியுள்ள பிரதேசங்களையும் கொண்ட ஒரு நாடாக இருந்தது. 23 கோடி மக்களால் பேசப்படும் வங்காள மொழி இந்தியாவில் இந்திக்கு அடுத்த படியாக அதிக மக்கள் பேசும் மொழியாகும். ஆசியாவில் சிறந்த இலக்கியங்களை கொண்ட மொழிகளுள் வங்க மொழியும் ஒன்றாகும். இந்தியாவினதும் பங்களாதேசத்தினதும் நாட்டுப் பாடல்களை (தேசிய கீதம்) வங்கக் கவிஞர் ரவீந்திர நாத் எழுதியுள்ளார். வங்க மொழி கிழக்குப் பாக்கிஸ்த்தானின் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையே பிரிவினையை வளர்த்து பங்களாதேசம் தனிநாடாக பிரிந்து செல்ல வழிவகுத்தது.13-ம் நூற்றாண்டில் இஸ்லாமிய ஆக்கிரமிப்பால் பல வங்காளி மக்கள் காளியம்மனை முழுமுதற் கடவுளாக வழிபடும் மதத்தில் இருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டனர். அதனால் தற்போது பங்களாதேசம் இருக்கும் பிரதேசம் இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையாகவும் தற்போதைய மேற்கு வங்கம் இந்துக்களைப் பெரும்பான்மையாக கொண்ட பிரதேசமாகவும் உருவாகின. இதனால் பாக்கிஸ்த்தான் இந்தியாவில் இருந்து பிரியும் போது மேற்கு வங்கம் இந்தியாவுடனும் தற்போதைய பங்களாதேசம் பாக்கிஸ்த்தானுடனும் இணைக்கப்பட்டன.



இந்தியாவும் பங்களாதேசமும்

பங்களாதேசம் இந்தியாவுடன் 54 நதிகளை பகிர்ந்து கொள்கின்றது. இந்தியாவில் இருந்து பங்களாதேசத்திற்கு செல்லும் கங்கை, பிரம்மபுத்திரா, ஆகிய நதிகள் பங்களாதேசத்தின் 1.72மில்லியன் சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்புடை நீர்ப்பிடி பிரதேசத்திற்கு நீர் வழங்குகின்றது. பங்களாதேசத்தின் உணவு உற்பத்தி பிரம்மபுத்திரா, கங்கை நதிகளின் வடிநிலத்திலேயே பெரிதும் தங்கியுள்ளது. இந்தியாவிற்கும் பங்களாதேசத்திற்கும் நீர்ப்பங்கீடு, எல்லை போன்றவை தொடர்பான பல முரண்பாடுகள் உள்ளன. இந்தியாவுடன் உறவை சீர் செய்ய பல இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புக்களுக்கு எதிராக பங்களாதேசம் பல நடவடிக்கைக்களை மேற்கொண்டது. மேற்கு வங்கத்தில் இருக்கும் இந்து வங்காளிகளுக்கும் பங்களாதேசத்தில் இருக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் நெருங்கிய உறவு உண்டு. வங்காளிகள் மதத்திலும் பார்க்க இன மற்றும் மொழி உணர்வுகளால் அதிகம் பிணைக்கப் பட்டுள்ளார்கள். பங்களாதேசப் பிரிவினைக்கு முன்னர் கிழக்கு பாக்கிஸ்த்தானில் உள்ள வங்காளிகளுக்கு அட்டூழியம் நடந்த போது மேற்கு வங்காளத்தில் உள்ள வங்காளிகள் கிளர்ந்து எழுந்தனர். பங்களாதேசமும் இந்தியாவும் 4000கிலோ மீட்டர் நீளமான எல்லையைக் கொண்டுள்ளன. இது உலகின் ஐந்தாவது நீளமான எல்லையாகும். மியர்மார், வங்கக்கடல் தவிர பங்களாதேசத்தின் மூன்று திசைகளில் இந்திய எல்லைகள் இருக்கின்றன. இந்தியாவின் அசாம், திரிபுரா, மிசொரம், மெகாலாயா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் பங்களாதேசத்துடன் எல்லைகளைக் கொண்டுள்ளன. சீனாவின் வடகிழக்கு மாநிலங்கள் ஏழையும் இந்தியாவின் முதன்மை நிலப்பரப்பையும் இணைக்கும் சில்குரி இணைப்புப் பாதை மிகவும் சிறியது என்றபடியால் அது கோழிக்கழுத்து என அழைக்கப்படுகின்றது. இதை சீனா கைப்பற்றினால் அசாம், திரிபுரா, மிசொரம், மெகாலாயா, நாகலாந்து, மணிப்புரி ஆகிய மாநிலங்கள் இந்தியாவில் இருந்து துண்டிக்கப்படும். அப்படி ஒன்று நடக்கும் போது இந்திய பங்களா தேசத்தின் ஊடாகவே தனது விநியோகங்களை அந்த ஏழு மாநிலங்களுக்கும் செய்ய முடியும். அந்த மாநிலங்களை சீனா முழுமையாக கைப்பற்றாமல் இருக்க பங்களாதேசத்தின் உதவி இந்தியாவிற்கு அவசியமாகும்.

பங்களாதேசத்தின் பொருளாதாரம்

அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் பங்களாதேசத்தில் இருந்து தமது நாடுகளுக்கு இறக்குமதி செய்யும் பல பொருள்களுக்கு வரிச்சலுகை வழங்கியுள்ளன. அதற்கு போட்டியாக் சீனாவும் பங்களாதேசத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் பலவற்றிற்கு இறக்குமதி வரிச்சலுகை வழங்கியுள்ளது. அமெரிக்காவிற்கு பங்களாதேசம் ஆறு பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான பெறுமதியுள்ள பொருட்களை ஏற்றுமதி செய்கின்றது. பங்களாதேசம் சீனாவில் இருந்து 14பில்லியன் டொலர்கள் பெறுமதியான இறக்குமதியை செய்கின்ற வேளையில் அமெரிக்காவில் இருந்து ஒரு பில்லியன் டொலருக்கும் குறைவான இறக்குமதியையே செய்கின்றது. பங்களாதேசம் அதிக அளவு ஏற்றுமதி செய்யும் நாடாக அமெரிக்காவும் அதிக அளவு இறக்குமதி செய்யும் நாடாக சீனாவும் இருக்கின்றது. சீனாவிற்கு செய்யும் ஏற்றுமதியிலும் பார்க்க பல மடங்கு ஏற்றுமதியை பங்களாதேசம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு செய்கின்றது. அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ஒஸ்ரேலியா ஆகிய நாடுகளுக்கு செய்யும் ஏற்றுமதி பங்களாதேசத்தின் மொத்த ஏற்றுமதியில் மூன்றில் இரண்டு பங்கிற்கு மேல் இருக்கின்றது. பங்களாதேசத்தில் முதலீடு செய்யும் நாடுகளில் தென் கொரியா, சீனா, இந்தியா, எகிப்த்து, பிரித்தானியா ஆகிய நாடுகள் முன்னணியில் இருக்கின்றன. பக்களாதேசம் விடுதலை பெற்றதில் இருந்து சீனா மூன்று பில்லியன் நிதி உதவியை அதற்கு வழங்கியுள்ளது.



பங்களாதேசமும் சீனாவும்

1971-ம் ஆண்டு சீனா ஒரு வல்லரசு நாடாக ஐக்கிய நாடுகள் சபையில் இணைந்தவுடன் பாதுகாப்புச்சபையில் செய்த முதல் இரத்து (வீட்டோ) அதிகாரம் பங்களாதேச விடுதலைக்கு எதிரானதாகவே இருந்தது. பின்னர் பங்களாதேசம் ஐநா சபையில் உறுப்புரிமை பெறுவதை சீனா தனது இரத்து அதிகாரத்தின் மூலம் தடை செய்தது. சுதந்திரமடைந்த பங்களாதேசம் சீனாவின் எதிரிகளான இந்தியாவுடனும் இரசியாவுடனும் நெருங்கிய உறவை ஏற்படுத்தியது. 1976இல் சீனா பங்களாதேசத்தை ஒரு நாடாக அங்கீகரித்தது. 1980களின் நடுப்பகுதியில் சீனா பல படைக்கலன்களை பங்களாதேசத்திற்கு வழங்கியது. 1986-ம் ஆண்டு பங்களாதேசமும் சீனாவும் தங்களுக்கு இடையிலான உறவை கேந்திரோபாய பங்காண்மையாக மாற்றிக் கொண்டன. 2008-ம் ஆண்டிற்கு முன்னர் பங்களாதேசத்திற்கு வழங்கிய கடன்களை சீனா இரத்து செய்தது. சீனாவிடமிருந்து பெற்ற கடன்கள் மூலம் பங்களாதேசம் தனது உட்கட்டுமான அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகின்றது. சீனாவின் முத்து மாலைத் திட்டத்தில் பங்களாதேசத்தின் சிட்டகொங் துறைமுகமும் சீனாவால் அபிவிருத்தி செய்யப்பட்டதுடன் அங்கிருந்து சீனாவிற்கு மியன்மாரூடாக ஒரு நெடுஞ்சாலையும் நிர்மாணித்தது.

சீன-மியன்மார்-பங்காள-இந்திய பொருளாதாரப் பாதை

சீனா, மியன்மார், பங்களாதேசம், இந்தியாவை உள்ளடக்கிய பொருளாதாரப் பாதை ஒன்று இது சீனாவின் பட்டி – பாதை முன்னெடுப்பு என்னும் புதிய பட்டுப்பாதை திட்டத்தில் ஒன்றாக இல்லாமல் தனியாக திட்டமிடப்படுகின்றது. சீனாவின் புதிய பட்டுப்ப்பாதை திட்டத்தை இந்தியா புறக்கணிப்பதால் இந்த ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. நாடுகளுக்கு இடையிலான அரசுறவு நீயா நானா போட்டியாகவோ அல்லது உனக்கு அவன் வேண்டுமா என்பதாகவோ பார்க்கப்படுவதில்லை. தேவை ஏற்படின் நாம் எதிரிகள் என நினைப்பவர்கள் தங்களுக்குள் ஒத்துழத்துக் கொள்வாரகள்.

சீனாவிற்கு பங்களாதேசம் அச்சப்பட தேவையில்லை

பங்களாதேசம் உருவாகும் போது கடுமையாக எதிர்த்த அமெரிக்காவிலும் சீனாவிலும் பங்களாதேசம் தங்கி இருக்க வேண்டியது தவிர்க்க முடியாத ஒன்று. பங்களாதேசம் உருவாக ஒத்துழைத்த இந்தியாவுடன் மட்டும் தான் அது உறவை வைத்திருக்க வேண்டும் என்பதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த நிலையில் சீனா அபிவிருத்தி செய்யவிருந்த பங்களாதேசத்தின் மதர்பாரி துறைமுகத்தின் அபிவிருத்தி ஜப்பானிடம் வழங்கப்பட்டமை பங்களாதேசம் வெளி அழுத்தங்களுக்கு பணிந்து செய்ததாக கருதப்படுகின்றது. சீனாவிடமிருந்து இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல் போல் பங்களாதேசம் கரிசனைக்குரிய அச்சுறுத்தலை எதிர்கொள்ளவில்லை. சீனாவின் தென் சீனக் கடலைத் தவிர உலகின் மற்றப் பகுதிகளில் எல்லாம் சீனா செய்யும் நகர்வுகள் புவிசார் பொருளாதார நகர்வுகளாகவே இருக்கின்றன. சீனாவின் உலக நகர்வுகளின் படைத்துறை விரிவாக்கம் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் சீனா தனது கடற்போக்கு வரத்துக்கு ஏற்படவிருக்கும் அச்சுறுத்தல் தொடர்பாக அதிக கரிசனை கொண்டு பல நகர்வுகளைச் செய்து வருகின்றது. தனது கடல் மற்றும் தரைப்பிராந்தியத்தில் தனக்கு ஒரு சிறந்த கவசம் இருக்க வேண்டும் எனக்கருதுகின்றது.

பங்களாதேசம் குவாட் கூட்டமைப்பிற்கு பணியத் தேவையில்லை.

பங்களாதேசம் தனது நாட்டில் சீனாவின் படைத்தளம் அமைக்க அனுமதிக்காதவரை சீனாவின் போட்டி நாடுகளுக்கு அது அஞ்சத் தேவையில்லை. அதையே இலங்கையும் செய்கின்றது. இலங்கை சீனாவிற்கு விட்டுக் கொடுப்பதிலும் பார்க்க குறைந்த அளவு விட்டுக் கொடுப்பையே பங்களாதேசம் செய்கின்றது. ஜப்பான், இந்தியா, ஒஸ்ரேலியா, அமெரிக்கா, தென் கொரியா, வியட்னாம் ஆகிய நாடுகளைக் கொண்ட ஒரு படைத்துறைக் கூட்டமைப்பில் இணைய வேண்டிய அவசியம் பங்களாதேசத்திற்கு இல்லை. அமெரிக்கா, ஆனால் இந்த நாடுகள் பங்களாதேசத்தை சீனா பக்கம் சாராமல் இருக்கச் செய்யும் நகர்வுகளுக்கு பங்களாதேசம் இணங்கிச் செயற்படுவது பணிவு அல்ல. போரில் ஈடுபடும் என அஞ்சப்படும் இரண்டு நாடுகளின் கூட்டமைப்பில் ஒன்றில் இணைவது துணிகரமான செயலாகும்.

பின்லாந்து, சுவீடன், சுவிஸ் போன்ற நாடுகள் நான்கு வல்லரசுகளின் போட்டிகளுக்கு இடையில் பக்கம் சாரா நிலையை பேணுவது போல் பங்களாதேசத்தாலும் பேண முடியும்.

Friday, 23 October 2020

குவாட்டில் (QUAD) இலங்கை இணையுமா?


குவாட் என்னும் பெயரில் இரண்டு அமைப்புக்கள் உள்ளன. ஒன்று குவாட் குழு. அது அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், கனடா ஆகியவற்றைக் கொண்ட வர்த்தகக் கூட்டமைப்பு. மற்றது குவாட் பாதுகாப்பு உரையாடல் என்னும் பெயர் கொண்டது. இது ஜப்பான், அமெரிக்கா, இந்தியா, ஒஸ்ரெலியா ஆகைய நாடுகளைக் கொண்ட ஒரு முறைசாரா கேந்திரோபாய அமையம் ஆகும். இதை ஆங்கிலத்தில் Quadrilateral Security Dialogue என்றும் சுருக்கமாக QUAD என்றும் அழைப்பர். 2007-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பில் மேலும் சில நாடுகள் இணைய விரும்புவதால் அதை QUAD+ எனவும் அழைக்கின்றனர். இது சீனாவை அடக்க உருவாகவிருக்கும் ஒரு படைத்துறைக் கூட்டமைப்பின் முன்னோடி. சீனாவின் நடுத்தர காலக் கொள்கை ஆசியாவில் சீனாவின் ஒரு துருவ ஆதிக்கமும் உலக அரங்கில் அமெரிக்காவினதும் சீனாவினதும் இருதுருவ ஆதிக்கமும் எனவும் நீண்ட காலக் கொள்கை உலகில் சீனாவின் ஒரு துருவ ஆதிக்கம் எனவும் கருதப்படுகின்றது. இதைத் தடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் உலக நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சீனாவை நெருங்கிச் சென்ற இரசியா தனது நெருக்கத்தை நிறுத்தி சீனாவிற்கான தனது ஏவுகணை எதிர்ப்பு முறைமையையும் நிறுத்தியுள்ளது.

இலங்கை உலக அரங்கில் பகிரங்க கொள்கை ஒன்றையும் திரைமறைவுக் கொள்கை ஒன்றையும் வைத்திருக்கின்றது. தன்னுடைய திருவோட்டை நிரப்புவதற்கு ஏற்ப அவ்வப்போது தன் கொள்கையை திரித்துக் கொள்ளும். இலங்கைக்கு எதிரான நிலைப்பாடுடைய அரசுறவியலாளர்கள் கொழும்பு சென்றால் அவருக்கு பதின்ம வயதுப் பெண்கள் (சிலருக்கு ஆண்கள்) உட்பட பரிமாறி அவர்களை நன்கு விருந்தோம்பும். இதையறியாமல் சில தமிழ் அரைவேக்காட்டு ஆய்வாளர்கள் இலங்கை சிறந்த வெளிநாட்டுக் கொள்கையை வைத்திருக்கின்றது மற்ற உலக நாடுகளை தனது அறிஞர்களைப் பயன்படுத்தி சிறப்பாகக் கையாள்கின்றது எனப் பிதற்றுவார்கள்.

சிங்கள பௌத்தப் பேரினவாதிகள் சீனாவை தங்களது எல்லாச்சூழலிலும் உதவும் நண்பனாகப் பார்க்கின்றனர். இந்திய இந்துக்களை இந்தியாவில் பௌத்த மதத்தை ஒழித்துக் கட்டியவர்களாவே பார்க்கின்றனர். தாராண்மைவாதம் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியினால் இலங்கையில் பராமரிக்கப் பட்டு வந்தது. ரணிலின் தில்லுமுல்லுக்களால் அது இலங்கையில் இப்போது படுதோல்வியடைந்துள்ளது. உலக அரங்கிலேயே ஓரம் கட்டப்பட்ட தாராண்மைவாதம் இனி ஒரு புதிய வடிவத்தில் வரமுயற்ச்சிக்கலாம். இந்தியா சிங்கள பௌத்த பேரினவாதிகளுக்கு தன்மீது இருக்கும் பகைமையை நீக்க கடந்த சில ஆண்டுகளாக பெரு முயற்ச்சி செய்கின்றது. அது இன்னும் வெற்றியளிக்க வில்லை. இந்தியாவை ஏமாற்றும் கலையில் சிங்கள பௌத்த பேரினவாதிகள் விற்பன்னர்களாக இருக்கின்றார்கள். சிங்கள பொதுவுடமைவாத தீவிரவாதிகளையும் தமிழ்பிரிவினைவாதிகளையும் அழிப்பதில் இந்தியா கூலி வாங்காத கூலிப்படையாக இலங்கைக்காக செயற்பட்டது. இலங்கையின் நலனைக் கருத்தில் கொண்டு இந்தியா அதைச் செய்யவில்லை தனது பிராந்திய நனலைக் கொண்டே செய்தது என்பதை சிங்கள பௌத்த பேரினவாதிகள் நன்கறிவர்.

சென்ற நூற்றாண்டில் ஐரோப்பாவில் இரு படைத்துறைக் கூட்டமைப்புக்கள் உருவானது போல் இந்த நூற்றாண்டில் ஆசியாவில் இரு படைத்துறைக் கூட்டமைப்புக்கள் உருவாகிக்கொண்டிருக்கின்றன. ஒன்றில் சீனாவும் வட கொரியாவும் கம்போடியாவும் இருக்கும். மற்றதில் அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, தென் கொரியா, ஒஸ்ரேலியா, நியூசிலாந்து, வியட்னாம், இந்தோனேசியா, சிங்கப்பூர் ஆகியவை உட்பட மேலும் ஒரு சில நாடுகள் இருக்கும். சுவீடன், சுவிஸ்லாந்து போன்ற நாடுகள் எந்த ஒரு படைத்துறைக் கூட்டமைப்பிலும் இல்லாமல் இருந்தன. அது போல் ஆசியாவிலும் பல நாடுகள் இருக்க முடியும். தற்போதைய சூழலில் பிலிப்பைன்ஸ் என்ன செய்யும் என சொல்ல முடியாமல் இருக்கின்றது. ஆனால் அங்கு உள்ள அமெரிக்கப் படைத்தளம் தற்போதைக்கு அகற்றப்பட மாட்டாது. அமெரிக்கா தலைமையிலான சீனாவிற்கு எதிரான கூட்டமைப்பு தற்போது குவாட் என அழைக்கப்பட்டாலும் அது வேறு பெயரைப் பெறும். குவாட் என்பது நான்கு நாடுகளைக் கொண்ட ஒரு பேச்சு வார்த்தை அமைப்பு மட்டுமே.

இலங்கை எந்தக் கூட்டமைப்பில் சேரும் எனற கேள்விக்கான விடை அது எதிலும் சேராது ஆனால் சீனாவுக்கு எதிராக எந்த ஒரு நகர்வையும் செய்ய மாட்டாது. எந்தச் சூழலிலும் இலங்கைக்கு ஆதரவாக ஐநா பொதுச் சபையில் இலங்கைக்காக இரத்து அதிகாரத்தைப் பாவிக்கும் ஒரு நாட்டின் நட்பு இலங்கைக்கு அவசியம். பொதுநலவாய நாடுகள், ஐநா துணை அமைப்புக்கள் போன்றவற்றில் இலங்கைக்கு இந்தியாவின் ஆதரவு அவசியம். இலங்கை சீனாவிற்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான படைத்துறைக் கூட்டமைப்பில் இணைந்தால் சீனா இலங்கையில் உள்ள பௌத்த சிங்கள பேரினவாதிகளைப் பயன்படுத்தி தனக்கு ஏதுவான ஓர் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும். இலங்கை சீனா தலைமையிலான படைத்துறைக் கூட்டமைப்பில் இணைந்தால் இலங்கை மீது பொருளாதாரத் தடை பாயும். சீனாவிற்கான இலங்கையின் ஏற்றுமதி அது சிங்கப்பூருக்கு செய்யும் ஏற்றுமதியிலும் பார்க்க குறைவானது. இலங்கை சீனா தலைமையிலான படைத்துறைக் கூட்டமைப்பில் இணைவதை ஐரோப்பிய ஒன்றியமும் கடுமையாக எதிர்க்கும். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், கனடா, ஜப்பான், இந்தியா, தென் கொரியா, ஒஸ்ரேலியா ஆகிய நாடுகளுக்கு இலங்கை செய்யும் ஏற்றுமதி அதன் மொத்த ஏற்றுமதியில் 75%இலும் அதிகமானதாகும். அந்த நாடுகள் இலங்கைக்கு பொருளாதாரத் தடை விதித்தால் இலங்கை மிக மோசமான நிலைக்குத் தள்ளப்படும். ஆகையால் இலங்கை எந்த ஒரு படைத்துறைக் கூட்டமைப்பிலும் சேரமாட்டாது.

சீனாவிற்கும் மற்ற நாடுகளுக்கும் ஏற்படும் போட்டியில் இலங்கை சீனா பக்கம் நிற்கும். அப்போது அமெரிக்கா இந்தியா ஆகிய நாடுகள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக களமிறங்கும். எமக்கு உரிமைகளைப் பெற்றுத்தரும். சர்வதேசம் எம் பின்னால் நிற்கின்றது. இந்தியா எனது நண்பன் என்பவையெல்லாம் மனப்பால் மட்டுமே.

இலங்கையும் அமெர்க்காவும் Status of Forces Agreement (SOFA) செய்தாலும் ஆதற்கு இணையான வசதிகளை இலங்கை சீனாவிற்கு ஏற்படுத்திக் கொடுக்கும்.


இரசியாவினுள் உக்ரேனின் ஊடறுப்பும் ஊடுருவலும்

இரசியாவை ஆக்கிரமித்த அந்நியப் படையினர் அழிவைச் சந்திப்பார்கள் என்பது வரலாறு உலகிற்கு உரத்துச் சொல்லும் செய்தியாகும். இருந்தும் 2024 ஓகஸ்ட் ம...