Followers

Showing posts with label பசுபிக். Show all posts
Showing posts with label பசுபிக். Show all posts

Sunday, 12 December 2021

சீன அச்சுறுத்தல் ஜப்பானை வல்லரசாக்குகின்றது

 



உலகத்திலேயே சீனர்கள் அதிகம் வெறுக்கும் நாடாக ஜப்பான் இருக்கின்றது. 1937இல் இருந்து 1945வரை ஜப்பானுக்கும் சீனாவிற்கும் இடையில் கடும் போர் நடந்தது. இரண்டாம் உலகப் போரின் ஒரு பகுதியாக நடந்த இப்போரில் மூன்று மில்லியன் சீனப்படை வீரர்களும் பத்து மில்லியன்களுக்கு மேற்பட்ட சீனப் பொதுமக்களும் கொல்லப்பட்டனர். முதலாம் ஜப்பான் – சீனப் போர் 1894-1895 ஆண்டுகளில் நடந்தது. ஜப்பான் ஆக்கிரமித்த ஆசிய நாடுகளில் மோசமான போர்க்குற்றங்கள் நடந்தன. சீனப் பெண்களை ஜப்பானியர்கள் பாலியல் அடிமைகளாக வைத்திருந்தனர். சீனா ஜப்பானின் அட்டூழியங்களை அதன் மக்கள் மனதில் ஆழமாக பதித்து  வைத்துள்ளது. சீனாவில் நடக்கும் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் ஜப்பானிய விளையாட்டு வீரர்களைக் கண்டவுடன் சீனப் பார்வையாளர்கள் கூச்சலிடுவதை வழமையாகக் கொண்டுள்ளனர்.

ஒற்றுமை நிறைந்த வேற்றுமை

சீனாவிற்கும் ஜப்பானிற்கும் இடையில் கலாச்சார மற்றும் மத ரீதியில் பெரும் ஒற்றுமை உண்டு. ஜப்பானியக் கலாச்சாரம் சீனாவிடமிருந்து பெறப்பட்டதே என்றும் சொல்லப்படுகின்றது. ஜப்பான் உலகத்தில் இருந்து தனிமைப் பட்டு இருந்த வேளையில் சீனா உலகெங்கும் தனது பட்டுப்பாதையை நீட்டி பலநாடுகளுடன் வர்த்தக மற்றும் கலாச்சாரப் பரிவர்த்தனை செய்யத் தொடங்கிவிட்டது. ஆனால் ஜப்பானியர்கள் சீனர்கள் தமது நாட்டுக்குள் அந்நியர்களை அனுமத்துப் போதைப் பொருளுக்கு அடிமையானார்கள் எனக் கருதுகின்றனர். இரு நாடுகளும் சீனத் தத்துவ ஞானி கன்ஃபூசியஸ் அவர்களின் சிந்தனை அடிப்படையில் தம் கலாச்சாரங்களை வளர்த்துக் கொண்டாலும் சரித்திரமும் பூகோளமும் இரு நாடிகளையும் பிரித்து வைத்துள்ளது. உலகிலேயே போர் மூளும் அபாயம் கூடிய இடங்களாக தென் சீனக் காடலும் கிழக்குச் சீனக் கடலும் இருக்கின்றன. இதற்கு ஜப்பானிற்கும் சீனாவிற்கும் இடையில் பேச்சு வார்த்தை அவசியம். சீன ஜப்பானியப் போர் நடந்தால் அங்கு அமெரிக்காவும் தலையிடும் கட்டாயம் உள்ளது. ஆசிய பசுபிக் பொருளாதாரக் கூட்டுறவின் உச்சி மாநாட்டின் முன்னர் இரு தலைவர்களும் சந்திப்பார்களா என்பது ஒரு முயற்கொம்பாகவே இருந்தது. சீன அதிபர் ஷி ஜின்பிங் ஜப்பானி எதிர்ப்புப் பரப்புரைகள் மூலமும் கிழக்குச் சீனக் கடலுக்கு அடிக்கடி கடற்கலங்களையும் வான் கலன்களையும் அனுப்பி ஜப்பானைச் சீண்டுவதன் மூலமும் சீனாவில் தனது செல்வாக்ககிப் பெருக்கிக் கொள்கின்றார் என்பது ஜப்பானின் குற்றச்சாட்டு. ஜப்பானியர்கள் போரின் போது செய்ய அட்டூழியங்களைப் பற்றி சீனாவில் அதிகம் பேசுவதால் சீனர்கள் இப்போதும் பழைமையிலேயே வாழ எத்தனிக்கின்றார்கள் எனக் குற்றம் சாட்டும் ஜப்பான் அவர்கள் பழையவற்றை மறந்து புது யுகத்தில் இரு நாடுகளிற்கும் இடையிலான ஒத்துழைப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்கின்றது. ஜப்பானுடன் பேச்சு வார்த்தை நடாத்துவதற்கு சீன இரு நிபந்தனைகளை விதித்திருந்ததாகக் கூறப்படுகின்றது. ஒன்று சர்ச்சைக்குரியதான ஜப்பானின் இறந்த போர்வீரர்களின் யசுக்குனி எனப்படும் நினைவிடத்திற்கு ஜப்பானியத் தலைமை அமைச்சர் பயணம் மேற்கொள்ளக் கூடாது. மற்றது கிழக்குச் சீனக் கடலில் உள்ள சென்காகு அல்லது டயோயு தீவுக் கூட்டங்கள் தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையில் முரண்பாடு இருக்கின்றது என்பதை ஜப்பான் ஒத்துக் கொள்ள வேண்டும்.வ்

கிழக்குசீனக்கடல்

கிழக்குச் சீனக் கடசீனக் கடலில் உள்ள தீவுக்கூட்டத்திற்கு ஜப்பானும் சீனாவும் உரிமை கொண்டாடி வருகின்றன. மக்களற்ற இத்தீவுக் கூட்டங்களை ஜப்பானியர்கள் செங்காகு எனவும் சீனர்கள் டயாகு எனவும் அழைக்கின்றனர். அமெரிக்கா இரு நாடுகளுக்கும் இந்த தீவுக் கூடங்களிள் இறையாண்மை இல்லை எனவும் ஆனால் ஜப்பனிற்கு அவற்றில் நிர்வாகக் கட்டுப்பாடு இருக்கின்றது எனவும் கூறுகின்றது.  2013 நவம்பர் 24-ம் திகதி சீனா இத்தீவுக் கூட்டத்தை உள்ளடக்கிய வான் பிராந்தியத்திற்குள் வரும் விமானங்கள் தனக்கு அறிவித்துவிட்டு வரவேண்டும் என ஒரு தலைப்பட்சமா பிரகடனம் செய்தது. சீனாவின் வான் பாதுகாப்புப் பிரந்தியப் பிரகடனத்தை மறுக்கும் முகமாக அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள் தமது விமானங்களை சீனாவிற்கு அறிவிக்காமல் அப் பிராந்தியத்திற்குள் பறக்க விட்டன. அமெரிக்க அரசு தனது நாட்டு பயணிகள் போக்குவரத்து மற்றும் வர்த்தக விமானங்கள் சீன அரசிற்கு அறிவித்து விட்டு கிழக்குச் சீனக்கடலுக்கூடான பறப்புக்களை மேற்கொள்ளும் படி அறிவுறுத்தியது. 2013 நவம்பர் 24-ம் திகதி கிழக்குச் சீனக் கடலில் உருவான பதட்டத்தைத் தொடர்ந்து செய்யப்படும் முதல் படை நகர்வாக அமெரிக்கா தனது நீர்மூழ்கிகளை வேட்டையாடும் விமானங்களை ஜப்பானிற்கு அனுப்பியுள்ளது. P-8 எனப்படும் இந்த விமானங்கள் torpedoes எனப்படும் ஏவுகணைகளையும் புது ரக கதுவிகளையும்(ராடார்) கொண்டுள்ளன.வ்

அமெரிக்காவின் நம்பகமற்ற தன்மை

ஆப்கானிஸ்த்தானில் இருந்து அமெரிக்கப் படையினர் வெளியேறிய போது அமெரிக்கா நடந்து கொண்ட விதம் அமெரிக்காவின் நம்பகத்தைனமையை கேள்விக்குறியாக்கியுள்ளது. உலக வரலாற்றிலேயே முதல் முதலாக அணுக்குண்டால் தாக்கப்பட்ட நாடான ஜப்பான் ஐக்கிய அமெரிக்காவின் நிர்ப்பந்தத்தின் படி 1947-ம் ஆண்டு மே மாதம் 3-ம் திகதி நிறைவேற்றிய அரசமைப்பு யாப்பின்படி ஜப்பான் வேறு நாடுகளுடனான பிணக்கைப் போர் மூலம் தீர்க்க முடியாது. தனது நாட்டுக் குடிமக்களைப் பாதுகாக்க வேறு நாடுகளுக்குப் படை அனுப்ப முடியாது. ஒரு தன்னைப் பாதுகாக்கும் படையை மட்டுமே வைத்திருக்கலாம். சுருங்கச் சொன்னால் ஜப்பானியப் படையினர் மீது வேறு யாராவது சுட்டால் மட்டுமே ஜப்பானியப் படைகள் திருப்பிச் சுடலாம். இரண்டாம் உலகப் போரில் தோல்வியடைந்த ஜேர்மனியின் அரசியல்யாப்பில் இல்லாத ஒன்று ஏன் ஜப்பானிய யாப்பில் இருக்க வேண்டும் என்பது சில ஜப்பானியர்கள் எழுப்பும் கேள்வியாகும். ஜப்பானின் படைத்துறைச் செலவு ஆண்டுக்கு 49 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்கின்றது. அது சீனாவின் 188 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஈடாக மாட்டாது. அதனால் ஆண்டுக்கு 640 பில்லியன் டொலர்கள் செலவு செய்யும் அமெரிக்காவில் ஜப்பான் தங்கியிருக்க வேண்டிய நிலை. அத்துடன் 23 படையினருக்கு ஜப்பானின் 58,000 படையினர் ஈடாகவும் முடியாது. உலகப் படைவலுப்பட்டியலில் சீனா மூன்றாம் இடத்திலும் ஜப்பான் பத்தாம் இடத்திலும் இருக்கின்றன. 2014-ம் ஆண்டு ஏப்ரம் மாதம் ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபமா சீனா ஜாப்பானிற்குச் சொந்தமான தீவுகளை அபகரிக்க முயன்றால் ஜப்பானைப் பாதுகாக்கும் அமெரிக்க ப்பானிய பாதுகாப்பு உடன்படிக்கையின் படி அமெரிக்கா ஜப்பானைப் பாதுகாக்கும் என உறுதியளித்தார்.  அமெரிக்கா கைவிட்டால் என்ன செய்வது என்ற கேள்வியும் ஜப்பானிய மக்கள் மத்தியில் உண்டு.வ் ஜப்பான் தனது பாதுகாப்பிற்கு அமெரிக்காவில் தங்கியிருந்தது. சீனாவின் மிகையான படைத்துறை வளர்ச்சியும் தொழில்நுட்ப வளர்ச்சியும் அயல் நாடுகளின் மீது சீனா அதிகரிக்கும் ஆதிக்கமும் ஜப்பானை தனது பாதுகாப்பு தொடர்பாக அதிகம் சிந்திக்க வைத்துள்ளது. அமெரிக்காவும் பசுபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் தமது பாதுகாப்புச் செலவை அதிகரிக்க வேண்டும் என விரும்புகின்றது. அதனால் தனது பாதுகாப்புச் செலவைக் குறைப்பதுடன் அந்த நாடுகளுக்கான தனது படைக்கலன் விற்பனையையும் அதிகரிக்கவும் முடியும்.

ஜப்பானின் பாதுகாப்புத்துறையின் வெள்ளை அறிக்கை – 2020

2020 ஜூலை 13-ம் திகதி ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் ஜப்பான் F-35 போர்விமானங்கள், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் F-X போர்விமானங்கள், மூன்று P-1 ரோந்து விமானங்கள் ஏழு SH-60K ரோந்து உலங்கு வானூர்திகள், ஆளில்லாப் போர்விமானப் படையணி, வானில் வைத்து விமானங்களுக்கு எரிபொருள் மீள்நிரப்பும் விமானங்கள், இரண்டு நாசகாரிக் கப்பல்கள், ஒரு நீர்மூழ்கி, ஆளில்லாமல் நீரின் கீழ் இயங்கும் கலன்கள் போன்றவை ஜப்பானியப் படையில் இணைக்கப்படும் என சொல்கின்றது. அமெரிக்க உற்பத்தி F-35 போர்விமானங்கள் 157ஐ வாங்க திட்டமிட்டுள்ளது. அவற்றில் 42 F-35-B விமானங்களும் அடங்கும். F-35-B விமானங்கள் விமானம் தாங்கிக் கப்பல்களில் பயன்படுத்தக் கூடியவகையில் குறுகிய தூர ஓட்டத்துடன் வானில் எழும்பவும் செங்குத்தாக உலங்கு வானூர்தி போல் தரையிறங்கவும் (Short take off and vertical landing STOVL) வல்லன. சீனாவை அதிக கரிசனை கொள்ள வைத்த F-35 விமானங்களை அமெரிக்காவின் Lockeed Martin, Northdrop Grumman பிரித்தானியாவின் BAE System ஆகியவை உட்பட பல நாடுகள் இணைந்து உருவாக்கியுள்ளன. வானாதிக்கம், வான்மேன்மை, இலத்திரனியல் போர், தாக்குதல், வேவு, உளவு, கண்காணிப்பு ஆகியவற்றைச் செய்யக் கூடிய பற்பணிப் போர் விமானங்களாகும்.

ஜப்பானின் விமானம் தாங்கிக் கப்பல்

ஜப்பானிடம் இரண்டு Izumo வகை நாசகாரிக் கப்பல்கள் இருக்கின்றன. இவை உண்மையில் உலங்குவானூர்தி தாங்கிக் கப்பல்களாகும். இவை நீர்மூழ்கி அழிப்புப் பணிகள், கிழக்கு சீனக் கடல் பாதுகாப்புப் பணிகள் போன்றவற்றைச் செய்வதுடன் கட்டுப்பாட்டகம்+கட்டளையகம் ஆகவும் செயற்படக்கூடியவை. 248 மீட்டர் நீளமுள்ள இவற்றை ஜப்பான் மேலும் மேம்படுத்தி அவற்றில் அமெரிக்கத் தயாரிப்பான F-35-B ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை ஜப்பான் உள்ளடகிக் கொண்டிருக்கின்றது. இது ஜப்பானின் வலிமை மிக்க கடற்படையை மேலும் வலிமையுள்ளதாக்கின்றது.

சீனாவிற்கு எதிரான இரு தீவுச் சங்கிலிகளில் ஜப்பான்



சீனாவின் பசுபிக் பிராந்திய ஆதிக்கத்தை தவிற்பதற்கு இரண்டு சங்கிலித் தொடர் தீவிகளை அமெரிக்கா வியூகமாக வகுத்துள்ளது. முதலாவது சங்கிலித்தீவில் ஜப்பானின் யொக்கோசுக்கோ, ஒக்கினோவா ஆகிய தீவுகள், கொரியத் தீபகற்பம், பிலிப்பைன்ஸ் ஆகியவற்றில் இருக்கும் அமெரிக்கப் படைத்தளங்கள் முதற் சங்கிலித் தீவுகள் எனவும் ஜப்பானியத்தீவுகள், குவாம் தீவு, பலௌ தீவு, ஒஸ்ரேலியா, நியூசிலாந்து ஆகியவற்றில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் இரண்டாம் தீவுக் கூட்டம் எனவும் அழைக்கப்படுகின்றன. இரண்டு தீவுச் சங்கிலிகளிலும் ஜப்பான் முக்கியத்துவம் பெறுகின்றது. சீனா தைவானை ஆக்கிரமித்தால் இவ்விரு தீவுச் சங்கிலிகளும் சீனாவின் வர்தகப் போக்குவரத்தை முற்றாக தடை செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதை சீனா அறியும்.

ஜப்பானின் ஆறாம் தலைமுறைப் போர்விமானம்

1997-ம் ஆண்டு அமெரிக்காவின் F-22 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானத்தை ஜப்பான் வாங்க முயன்ற போது அவற்றை விற்பனை செய்ய முடியாது என அமெரிக்கா அறிவித்தது. தனது உயர் தொழில்நுட்பத்தை பாதுகாப்பதற்காக அமெரிக்கா F-22 போர்விமான ங்களை எந்த நாட்டுக்கும் விற்பனைச் செய்யவில்லை. அப்போது ஜப்பான் தனது நாட்டிலேயே உயர்தர விமானங்களை உருவாக்க வேண்டும் என்ற திட்டத்தை ஆரம்பித்தது ஐந்தாம் தலைமுறைப் போர்விமானத்தை உருவாக்கி முடிக்கும் போது அது பிந்தங்கிய ஒரு விமானமாகிவிடும் என்பதால் ஜப்பான் நேரடியாக ஆறாம் தலைமுறைப் போர்விமானத்தை உருவாக்கியது. இதே வழியை பிரித்தானியாவும் பின்பற்றியது. அமெரிக்கா 2020இல் ஆறாம் தலைமுறைப் போர்விமானத்தின் முதல் விமானத்தை உருவாக்கி பரீசித்துள்ளது. ஜப்பானின் F-X என்னும் பெயர் கொண்ட ஆறாம் தலைமுறைப் போர்விமானத்தை உருவாக்குவதில் ஜப்பான் கணிசமான அளவு முன்னேறியுள்ளது. ஆறாம் தலைமுறைப் போர்விமானங்களில் செயற்கை விவேகமும் இயந்திரக் கற்கையும் இணைக்கப்பட்டுள்ளன. அதனால் அவை தாமாகவே இயங்கக் கூடியன. நிலைமைக்கு ஏற்ப தாமே இலக்குகளைத் தெரிவு செய்து தாக்கக் கூடியவை. விமானிகளின்றியும் பறப்புக்களை மேற்கொள்ளக் கூடியவை. லேசர் மற்றும் மைக்குறோவேவ் படைக்கலன்களை இவை கொண்டிருக்கும். எதிரிகளின் கதுவிகளால்(ரடார்களால்) அவற்றைக் கண்டறிய முடியாது. சில வகையான ஆறாம் தலைமுறைப் போர்விமானங்கள் ஒலியிலும் பலமடங்கு வேகத்தில் பறக்கக் கூடியவையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜப்பானிற்கும் வல்லரசுக் கனவு உண்டு

இந்தியா, ஜேர்மனி, தென் ஆபிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளைப் போல ஜப்பானும் ஒரு வல்லரசாக விரும்புகின்றது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் தற்போது உள்ள வல்லரசு நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் போது தானும் ஒரு வல்லரசாக வேண்டும் என ஜப்பான் நினைக்கின்றது. ஜப்பானின் மக்கள் தொகை, பொருளாதார வலு, படை வலு ஆகியவை மற்ற நாடுகளுக்கு சளைத்தவை அல்ல சவால் விடக்கூடியவை. ஜப்பானின் வயோதிபர்களை அதிகமாகக் கொண்ட மக்கள் தொகைக் கட்டமைப்பு ஜப்பானின் ஒரு பாதகமான அம்சமாகும்.

 

அமெரிக்க சீனப் போர் பற்றி அறிய இந்த இணைப்பிற்கு செல்லவும்

https://www.veltharma.com/2020/10/2021.html

இந்தியா ஜப்பானிய உறவின் முக்கியத்துவம் பற்றி அறிய இந்த இணைப்பிற்கு செல்லவும்

https://www.veltharma.com/2014/09/blog-post_8.html

Saturday, 18 September 2021

AUKUS: ஆங்கில முக்கூட்டணிக்கு சீனா அஞ்சுமா?

 


 ஒஸ்ரேலியா(A), பிரித்தானியா(UK),  அமெரிக்கா(US) ஆகிய மூன்று ஆங்கில நாடுகளும் இணைந்து ஒரு பாதுகாப்பு உடன்பாட்டை எட்டியுள்ளன. அந்த நாடுகளின் முதலெழுத்துக்களை இணைத்து இந்த மூன்று ஆங்கிலம் பேசும் நாடுகளின் கூட்டணியை AUKUS என அழைக்கின்றனர். மூன்று நாடுகளின் அரசுத் தலைவர்கள் 2021 செப்டம்பர் 15-ம் திகதி மெய்நிகர் கூட்டம் ஒன்றில் கலந்துரையாடி இந்த கூட்டணி உருவாக்கப்பட்டது. இந்த மூன்று நாடுகளின் கூட்டணி இணையவெளிப் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, துளிமத் தொழில்நுட்பம் (Quantum Technology), கடல் நீரடிப் பாதுகாப்பு போன்ற துறைகளில் ஒத்துழைப்பதாகவும் இணையவெளிக் கலந்துரையாடலில் ஒத்துக் கொள்ளப்பட்டது. ஏற்கனவே இந்த மூன்று நாடுகளுடன் கனடாவும் நியூசிலாந்தும் இணைந்து ஐந்து கண்கள் (Five Eyes) என்னும் உளவுக் கூட்டமைப்பை அமைத்துள்ளன. 

"ஜெய்ஹிந்த்" கும்பல்களின் உளறல்

AUKUS ஒத்துழைப்பு பற்றிய செய்தி வந்தவுடன் "ஜெய்ஹிந்த்" கும்பல்கள் தங்கள் youtube Channelsகளில் "சீனா அச்சம்", "கலக்கத்தில் சீனா" என்ற தலைப்பில் உளற ஆரம்பித்துவிட்டன. AUKUS சீனாவிற்கு எதிரான கூட்டணியா என்ற கேள்விக்கு அதில் சம்பந்தப்பட்டவர்கள் பதிலளிக்கவில்லை. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பெரும் கடற்பரப்பில் மூன்று நாடுகளின் படைத்துறையை ஒருங்கிணைப்பதே தமது நோக்கம் என்றனர். ஒஸ்ரேலியாவை சீன அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பது இந்த AUKUS ஒத்துழைப்பின் முக்கிய நோக்கம் என்று சொல்லலாம். ஒஸ்ரேலியாவிற்காக இந்த மூன்று நாடுகளும் உருவாக்கவிருக்கும் அணுவலுவில் இயங்கும் நீர் மூழ்கிக் கப்பல்கள் தென் சீனக் கடல்வரையும் பயணிக்க வல்லன. டீசலில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலிலும் பார்க்க அணுவலுவில் இயங்கும் நீர்மூழ்கிக்கப்பல்கள் வேகமாகப் பயணிக்க வல்லன, நீண்ட நேரம் நீருக்கடியில் இருக்க வல்லன, புலப்படுவதற்கு கடினமானவை. 

சீனாவின் எதிர்வினை

AUKUS உருவாக்கப்பட்டதுடன் அமெரிக்காவிற்கான சீனத் தூதுவர் மூன்று நாடுகளையும் தங்கள் பனிப்போர்க்காலத்து கருத்தியல் தப்பெண்ணங்களை கைவிட வேண்டும் என்றார். மேலும் அவர் நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு அவற்றிற்கிடையிலான நல்லெண்ணங்களை வளர்க்க வேண்டுமே தவிர மூன்றாம் நாடு ஒன்றை அச்சுறுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கக் கூடாது என்றார். "கலக்கத்தில் சீனா" என்பதிலும் பார்க்க கரிசனை கொண்ட சீனா என்பதே பொருத்தமாக இருக்கும் என்பதை சீனத் தூதுவரின் கருத்தில் இருந்து அறியக் கூடியதாக இருக்கின்றது.

UNDERSEA FIBRE OPTIC CABLES கடலடி ஒளியிழை வடம்

கடலடியில் வைக்கப்பட்டுள்ள ஒளியிழை வடம் மேற்கு நாடுகளின் குடிசார் மற்றும் படைத்துறைத் தொடர்பாடலுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். இவற்றை துண்டிக்காமலும், ஒற்றாடல் செய்யாமலும் இருக்க அவற்றுக்கான பாதுகாப்பு அவசியமாகும். அவற்றைப் பாதுகாப்பதற்கு சிறந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் தேவைப்படுகின்றது. அதற்கான ஒத்துழைப்பு AUKUS இன் நோக்கங்களில் ஒன்றாகும் .

போட்டிக் களமாகும் ஆசிய-பசுபிக் பிராந்தியம்

தனது Queen Elizabeth விமானம் தாங்கிக் கப்பலை தென் சீனக் கடலூடாக ஜப்பானுக்கு அனுப்பி ஜப்பானுடன் ஒரு போர் ஒத்திகையை பிரித்தானியக் கடற்படை செய்தது. ஆசிய-பசுபிக் என்னும் பெரும் கடற்பரப்பில் சீனாவின் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் AUKUS கூட்டணி உருவாகியுள்ளது. அதன் முதற்பணியாக அணுவலுவில் இயங்கக் கூடிய நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்குவதாகும். சீனாவில் இருந்து 7448கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒஸ்ரேலியாவில் 1.2மில்லியன் சீனர்கள் வாழ்கின்றார்கள். சீனா கடந்த சில ஆண்டுகளாக ஒஸ்ரேலியாவை தன் பிடிக்குள் கொண்டு வர பல வழிகளில் முயல்கின்றது. ஒஸ்ரேலியா சீனாவிற்கு 150மில்லியன் டொலர் பெறுமதியான ஏற்றுமதியை சீனாவிற்கு 2020இல் செய்திருந்தது. ஒஸ்ரேலியா ஆகக் கூடிய ஏற்றுமதியை அதாவது மொத்த ஏற்றுமதியில் 39%ஐ சீனாவிற்கே செய்கின்றது.  சீனர்களின் குடிவரவும் உல்லாசப் பயணமும், சீன முதலீடும் ஒஸ்ரேலியாவில் கற்கும் சீன மாணவர்களும் ஒஸ்ரேலியப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவி செய்தன. கொவிட்-19 தொற்று நோய் சீனாவில் இருந்து உருவாகியதா என்பது தொடர்பாக ஒரு பன்னாட்டு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என ஒஸ்ரேலியா பகிரங்கமாக அறிவித்தமை சீன ஒஸ்ரேலிய உறவை மோசமாக்கியது. அதைத் தொடர்ந்து சீனா ஒஸ்ரேலியா மீது பல பொருளாதார மிரட்டல்களை ஒஸ்ரேலியாவில் இருந்து செய்யப்படும் இறக்குமதிகள் மீதான தடை என்னும் பெயரில் விடுத்தது. 

தற்போது உள்ள அணுவலுவில் இயங்கும் நீர்மூழ்கிக்கப்பல்களின் எண்ணிக்கையைப் பார்ப்போமானால் அமெரிக்கா-68, இரசியா-29, சீனா-12, பிரித்தானியா-11, பிரான்ஸ்-8, இந்தியா-1.

நியூசிலாந்து ஏன் இல்லை?

ஆசிய பசுபிக் பிரந்திய ஒத்துழைப்பில் பசுபிக் பிராந்தியத்தின் இன்னொரு முக்கிய நாடாகிய நியூசிலாந்து ஏன் இல்லை என்ற கேள்வியும் எழுகின்றது. நியூசிலாந்து மக்கள் அணுக்குண்டுகளை எதிர்ப்பவர்கள். நியூசிலாந்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் இருந்த பாதுகாப்பு ஒப்பந்தம் அணுக்குண்டுகள் தாங்கிய அமெரிக்க கப்பல்களும் விமானங்களும் நியூசிலாந்திற்கு வரக்கூடாது என நியூசிலாந்து 1985இல் தடை விதித்தபின்ன முடிவிற்கு வந்தது. நியூசிலாந்து விலகியிருப்பதற்கு அல்லது தவிக்கப்பட்டதற்கு இது காரணமாக இருக்கலாம். இன்னும் ஓர் ஆங்கிலக் குடும்ப நாடாகிய கனடா அதன் பூகோள் இருப்பிடம் காரணமாக தவிர்க்கப்பட்டிருக்கலாம். 

இலாபம்தான் அமெரிக்காவின் இலக்கு

சீனாவை சமாளிக்க அமெரிக்கா தனது படைகளை ஒஸ்ரேலியாவில் குவிப்பதிலும் பார்க்க ஒஸ்ரேலியாவிற்கு தனது படைக்கலன்களையும் தொழில்நுட்பங்களை விற்பனை செய்வது அமெரிக்காவிற்கு இலாபகரமான ஒன்றாகும். சீனா கடந்த பத்து ஆண்டுகளாக தனது கடற்படை வலிமையை ஜப்பான், இந்தியா, ஒஸ்ரேலியா ஆகிய நாடுகளை விஞ்சும் வகையில் விரிவு படுத்தியும் புதுமைப்படுத்தியுள்ளது. இந்த நாடுகளால் சீனாவைத் தனித்து சமாளிக்க முடியாது என்ற நிலையில் சீனாவிற்கு எதிராக பல கூட்டணிகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. 

1. அமெரிக்க இந்தியக் கூட்டணி

சீனாவின் படைவலு பெருகி வருவதால் அச்சம் கொண்ட இந்தியா அமெரிக்காவுடன் LEMOA என்ற ஒப்பந்தத்தைச் செய்து கொண்டது. தனது நாட்டிலோ அல்லது அயல்நாடுகளிலோ வல்லரசு நாடுகளின் படையினர் இருக்கக் கூடாது என்ற கொள்கையை நீண்ட காலமாக கடைப்பிடித்து வந்த இந்தியா அமெரிக்காவுடன் The Logistics Exchange Memorandum Agreement (LEMOA) என்ற ஒப்பந்தத்தை இந்தியா செய்து கொண்டது. அதன் படி அமெரிக்கப் படையினர் இந்தியாவில் உள்ள படைத்தளங்களை தேவை ஏற்படும் போது பாவிக்கலாம்.  அதே போல் இந்தியாவும் அமெரிக்காவின் படைத்தளஙகளை தமக்கு தேவை ஏற்படும் போது பாவிக்கலாம். 

குவாட்(QUAD) ஒன்று கூடாத கூட்டணி

சீனாவின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிய நாடுகளான ஜப்பான், இந்தியா, ஒஸ்ரேலியா ஆகிய நாடுகளுடன் அமெரிக்கா இணைந்து செயற்படுவதற்கான உரையாடல் ஒன்று முன்னாள் ஜப்பானிய அதிபர் சின்சே அபேயால் தொடக்கி வைக்கப்பட்டது.  முதலில் இந்தியா அதில் இணைந்தால் சீனாவை அது சினம் கொள்ளவைக்கும் என தயங்கியது. ஒஸ்ரேலியாவும் சீனாவுடன் செய்யும் வர்த்தகம் பாதிக்கப்படும் என கரிசனை கொண்டு தயங்கியது. சீனா இந்திய எல்லைப் பகுதியில் தொடர்ந்து செய்யும் அத்து மீறல்களாலும் ஒஸ்ரேலியாவில் சீனாவின் மறைமுகத் தலையீடுகளாலும் இரு நாடுகளும் அந்த உரையாடலில் பங்கேற்றன. இதை ஒரு படைஅதைத் தொடர்ந்து இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து செய்யும் மலபார் போர்ப்பயிற்ச்சியில் ஒஸ்ரேலியாவும் இணைந்து கொண்டது. ஆனாலும் இது ஒரு பாதுகாப்பு உரையாடல் மட்டுமாக இருக்கின்றது. ஒரு படைத்துறைக் கூட்டணியாக உருவாகவில்லை. 

ஒன்று போனால் ஒன்று வரும்

ஒஸ்ரேலியாவிற்கு தேவையான நீர்மூழ்கிக் கப்பல்களை பிரான்ஸ் உருவாக்குவதாக 2016இல் இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்து கொண்டன. இந்த வருமான வாய்ப்பு தமக்கு கிடைக்காததால் அமெரிக்காவும் பிரித்தானியாவும் ஏமாற்றமடைந்திருந்தன. பிரான்ஸால் டீசலில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலை மட்டும் உருவாக்க முடியும். தற்போது அமெரிக்கா, இரசியா, சீனா, பிரித்தானியா, இந்தியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் மட்டுமே அணுவலுவில் இயங்கும் நீர்மூழ்கிக்கப்பல்களை வைத்திருக்கின்றன. அமெரிக்காவும் பிரித்தானியாவும் இணைந்து ஒஸ்ரேலியாவிற்கு நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்க ஒத்துக் கொண்டமையினால் ஒஸ்ரேலியாவிற்கு பிரான்ஸ் உருவாக்க இருந்த 12 நீர்மூழ்கிக்கப்பல் ஒப்பந்தம் காற்றில் பறக்க விடப்பட்டுளது. பிரான்ஸ் தனக்கு துரோகமிழைக்கப்பட்டதாக பகிரங்கமாக குற்றம் சுமத்தி தன் சினத்தை வெளிப்படுத்தியுள்ளது. பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரான்ஸின் முதுகில் குத்திவிட்டார்கள் என்றார். பிரான்ஸும் தென் சீனக் கடலுக்கு தன் கடற்படையை அனுப்பியிருந்தது. தனது ஆட்சேபனையாக அமெரிக்காவில் கடற்படையுடன் நடக்கவிருந்த ஒரு நிகழ்வையும் பிரான்ஸ் இரத்துச் செய்துள்ளது. அமெரிக்காவிற்கும் ஒஸ்ரேலியாவிற்குமான தனது தூதுவர்களை உரையாடலுக்காக அழைத்துள்ளது. இது இத்துடன் முடியுமா அல்லது பிரான்ஸின் சினம் அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவுடனான நட்பைப் பாதிக்குமா, நேட்டோ ஒத்துழைப்பை பாதிக்குமா, ஐரோப்பிய ஒன்றியமும் பிரான்ஸைப் பின்பற்றுமா போன்ற கேள்விகளுகான பதிலை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சீனா பிரான்ஸிற்கு தன் நட்புக்கரத்தை நீட்டலாம். 

புதிய AUKUS கூட்டணியால் சீனாவை அடக்க முடியாது. அது  உலக ஆதிக்கத்திற்கான தனது பாதையில் அமைதியான எழுச்சி என்னும் போர்வையில் தொடர்ந்து பயணிக்கும். 

இரசியாவினுள் உக்ரேனின் ஊடறுப்பும் ஊடுருவலும்

இரசியாவை ஆக்கிரமித்த அந்நியப் படையினர் அழிவைச் சந்திப்பார்கள் என்பது வரலாறு உலகிற்கு உரத்துச் சொல்லும் செய்தியாகும். இருந்தும் 2024 ஓகஸ்ட் ம...