Followers

Showing posts with label தமிழர்கள். Show all posts
Showing posts with label தமிழர்கள். Show all posts

Sunday, 27 March 2022

வெளிநாடு வாழ் தமிழர்கள் இலங்கையில் முதலிடலாமா?

 


நெசவு செய்யும் திறமைமிக்க தொழிலாளி ஒருவர் தனது வீட்டில் ஒரு நெசவுத்தறி போட கடன் கேட்டால் அவருக்கு கடன் கொடுக்க நிதி நிறுவனங்கள் முன்வரலாம். இன்னொரு நெசவுத் தொழிலாளி தனது வருமானத்தில் தினமும் மது அருந்தி கைநடுக்கம் ஏற்பட்ட பின்னர் அவரால் போதிய அளவு நெய்ய முடியாத நிலையில் அவரது வருமானம் குறைந்து உணவிற்கு திண்டாடும் போது அவர் தனக்கு கடன் தரச் சொல்லி கேட்டால் யாரும் கடன் கொடுக்க மாட்டார்கள். இலங்கையும் இனக்கொலைப் போருக்கு அளவிற்கு மிஞ்சி கடன் பட்டு பின் பட்ட கடனுக்கு வட்டி கொடுக்க புதிய கடன் பட்டு விட்டு மேலும் கடன் பட முடியாத நிலையில் அங்கு வந்து முதலீடு செய்யுங்கள் என்று சொன்னால் இனக்கொலைக்கு உள்ளான இனத்தைச் சேர்ந்தவர்களை கேட்க முடியுமா? சொல்லுவார் சொல்ல கேட்ப்பார்க்கு மதியென்ன?

யோக்கியன் வாறான் செம்பை எடுத்து வை

எனக்கு தெரிந்த ஒருவர் இலங்கை நாணயம் பெறுமதி இழந்துள்ளமையால் அங்கு இப்போது முதலீடு செய்வது உகந்தது என எண்ணி முதலீடு செய்வது பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கையில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு சுமந்திரன் புலம்பெயர்ந்த தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு தான் பாலமாக இருக்கத் தயார் என அறிவித்தவுடன் தன் முடிவை மாற்றிக் கொண்டார். பாலமே இந்தளவு கேவலமானதாக இருக்கையில் அதை நம்பி பயணித்தால் என்ன நடக்குமோ என அவர் அஞ்சுகின்றார். 13-ம் திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றி விட்டு அதற்கும் அப்பால் சென்று இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு வழங்கினால் புலம்பெயர் தமிழர்கள் உதவுவார்கள் என்றாராம் சுமந்திரன். 2009 நடந்த போரின் போது மருத்துவமனைகளும் சட்ட பூர்வமான குண்டு வீச்சு இலக்கு எனச் சொல்லிய கோத்தபாய ராஜபக்ச கூட்டிய கூட்டத்தில் தான் சுமந்திரன் இந்தக் கருத்தை முன்வைத்தார். பாலம் மட்டும் கேவலமானதல்ல பாலம் சொல்லும் படகான 13 ஓட்டை மிகுந்தது அதை நம்பி யாரையா இறங்குவார்? புலிகள் இனச்சுத்தீகரிப்பு செய்தனர் ஆனால் சிங்களவர் இனக்கொலை செய்தனர் என்பதற்கு ஆதாரம் இல்லை என்ற யோக்கியரின் கூற்றை நம்பி யார் இலங்கையில் முதலீடு செய்வார்.

ஒரு நாளில் ஒரு இலட்சம் டொலர் இழப்பீடா?

இலங்கை நாணயத்தின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கையில் ஒரு ஒருவர் ஒரு மில்லியன் டொலரை முதலீடு செய்யும் போது முதலில் டொலரை ரூபாவாக மாற்றும் போது ஒரு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். அதன் பின்னர் ரூபாவின் பெறுமதி மேலும் பத்து விழுக்காடு வீழ்ச்சியடைந்தால் முதலிட்டவருக்கு ஒரு இலட்சம் டொலருக்கு மேல் இழப்பீடு ஏற்படும். தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் இலங்கையின் பொருளாதாரம் இனி வீழ்ச்சியடைய இடமில்லை. இலங்கையில் செய்த முதலீட்டை இலகுவில் மீண்டும் வெளிநாட்டுக்கு கொண்டு வர முடியாது. இலங்கைப் பொருளாதாரம் இனி மீழவும் எழும் (Rebound) என யாரும் சொல்லாத நிலையில் நிதித்துறையில் அறிவில்லாத சுமந்திரன் எந்த ஒரு நிதி ஆலோசனையும் பெறாமல் எப்படி புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் செய்யும் முதலீட்டிற்கான பாலமாக தன்னை முன்னிறுத்த முடியும்?

தரம் தாழ்த்திய நிறுவனங்கள்

இலங்கையில் பொருளாதார சூழலை அடிப்படையாக வைத்து. S&P, Fitch, Moody ஆகிய நிறுவனங்கள் இலங்கைய தரம் தாழ்த்திக் கொண்டே இருக்கின்றன. அவை இன்னும் இலங்கையின் தரத்தை மீளவும் உயர்த்த முன்னர் சுமந்திரன் ஏன் அங்கு முதலீடு செய்வது பற்றி சிந்திக்கின்றார்? பிரித்தானிய தொழிற்கட்சியைச் சேர்ந்த தமிழர் ஒருவர் சுமந்திரனைச் சந்திக்கும் போது இலங்கைக்கு ஜீஎஸ்பி+ வரிச்சலுகையை நிறுத்தும் படி மேற்கு நாட்டு அரசுகளிடம் பரப்புரை செய்வது பற்றி பேசிய போது இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் எதையும் தான் செய்ய மாட்டேன் எனச் சொல்லிய சுமந்திரன், மனித உரிமைக் கழகத்தில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்க போராடிய சுமந்திரன் இப்போது இலங்கைக்கான முதலீட்டு தரகராக செயற்படுகின்றாரா?

அரசியல் உறுதிப்பாடில்லாத இலங்கை

ஒரு நாட்டில் முதலீடு செய்வதாயின் அங்கு அரசியல் உறுதிப்பாடு இருக்க வேண்டும். இலங்கையில் பொருட்கள் விலை ஏற ஏற மக்கள் அரசுக்கு எதிராக போராடுவது அதிகரிக்கும். அத்துடன் 13-ம் திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றினால் அதற்கு எதிராக பௌத்த அமைப்புக்களும் பிக்குகளும் ஆட்சிக்கு எதிராக கொதித்து எழுவர். வலிமையற்று தலையெடுக்க முடியாமல் இருக்கும் எதிர்க்கட்சிகள் இனவாத தீயை மூட்டுவார்கள். கடந்த கால வரலாற்றைப் பார்க்கும் போது ஆட்சியாளர்களை சுட்டுக் கொல்லவும் சிங்களவர்கள் தயங்க மாட்டார்கள். அதனால் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டு படைத்துறையினர் ஆட்சியைக் கைப்பற்றும் சாத்தியம் உண்டு. இத்தகைய இடர்(Risk) மிகு சூழலில் எந்த முட்டாள் இலங்கையில் முதலீடு செய்ய பாலமாக இருப்பான்?

பணச்சலவைக்கு வழியா?

2009 ஆண்டில் நடந்த போரின் பின்னரும் வெளிநாடுவாழ் தமிழர்களை இலங்கையில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கப் பட்டது. இலங்கையில் பெருந்தொகை பணத்தைக் கொள்ளை அடித்து வைத்திருந்தவர்கள் அவற்றை வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்கு ஒரு வழியாக அது இருக்கலாம் எனச் சொல்லப்பட்டது. அதன் படி வெளிநாடு வாழும் இலங்கையர் ஒரு மில்லியன் டொலரை வெளிநாட்டு வங்கி ஒன்றில் இலங்கையில் கொள்ளை அடித்தவர்களின் பெயரில் வைப்பிலிட்டால் அதற்கு உரிய இலங்கை ரூபாக்களை கொள்ளையர்கள் அந்த வெளிநாட்டுப் பேர்வழியின் பெயரில் இலங்கையில் வைப்பிலிடுவார்கள். ராஜபக்சேக்களின் வெளிநாட்டு சொத்து பற்றி இந்த இணைப்பில் காணலாம்:

https://www.theguardian.com/world/2015/mar/20/sri-lanka-says-mahinda-rajapaksa-officials-hid-more-than-2bn-in-dubai

விளடிமீர் புட்டீனினதும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எதிராக பொருளாதார தடை என்னும் பெயரில் அவர்களின் சொத்துக்களை முடக்குவது போல் இலங்கை ஆட்சியாளர்களுக்கும் நடக்கலாம் என்ற அச்சத்தில் அவர்கள் இப்போது இருக்கின்றார்கள். வெளிநாடுகளில் இருக்கும் அவர்களது பணத்தை உள்நாட்டுக்கு கொண்டு வருவதற்கு இப்போது இன்னொரு முதலீட்டு அழைப்பு விடப்படுகின்றதா? அதற்கான தரகர் வேலையை பார்ப்பவர் யார்?

இலங்கை நடுவண் வங்கியும் மூலதனக் கணக்கும்

இலங்கை நடுவண் வங்கி இலங்கையில் இருந்து மூலதனம் வெளியேறுவதற்கு எதிராக பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இலங்கையில் முதலிடுபவர்கள் தேவை ஏற்படும் போது அந்த முதலீட்டை வெளியே எடுத்து வர முடியாது. திரவத்தன்மை (liquidity) குறைந்த முதலீட்டை சுமந்திரனின் முட்டாள்தனமான ஆலோசனையைக் கேட்ட்டு யாரும் செய்ய மாட்டார்கள்.

தமிழர்களுக்கு பாதுகாப்பற்ற இடத்தில் அவர் முதலீட்டுக்கு?

இனக்கலவரம் என்று அவ்வப்போது தோற்றுவித்து தமிழர்கள் சொத்தை கொள்ளை அடிப்பதையும் அழிப்பதையும் சிங்களவர்கள் தங்கள் பொழுது போக்காக கொண்டுள்ளனர். தமிழர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நாட்டில் அவர்கள் முதலீட்டுக்கு பாதுகாப்பு கொடுக்க அறிவுகெட்ட சுமந்திரனால் முடியுமா? இலங்கை அரசு தமிழர்களின் முதலீட்டை அரசுடமையாக்க மாட்டாது என சிங்களத்தின் வால் பிடியான சுமந்திரனால் உத்தரவாதம் கொடுக்க முடியுமா? 

பழைய சத்தியஜித் ராயின் திரைப்படமொன்றில் ஒரு செல்வந்த வயோதிபர் கடும் நோய் வாய்ப்பட்டுவிட்டார். மருத்துவர் இனி ஆள் தப்பாது என்று சொல்லி விடுவார். அந்த நிலையில் அவரது குடும்பத்தினர் சோதிடரை அணுகுவார்கள் அவர் பார்த்துவிட்டு இவருக்கு ஆயுள் முடிந்து விட்டது ஆனால் ஒரு வழி இருக்கிறது என்றார். குடும்பத்தவர்கள் ஆவலுடன் என்ன எனக் கேட்கும் போது சோதிடர் சாதகத்தில் நல்ல மாங்கல்ய வலிமையுள்ள ஒரு பெண்ணை இவருக்கு திருமணம் செய்து வைத்தால் அந்தப் பெண்ணின் பலனால் இவர் தப்புவார் என்பார்கள். அது போலத்தான் எந்த நேரமும் மண்டையைப் போடலாம் என்ற நிலையில் இருக்கும் இலங்கைப் பொருளாதாரத்திற்கு சுமந்திரன் சொல்லும் அறிவுரை. ஆனால் புலம் பெயர் தமிழர்கள் வாழ வழியற்று இருக்கும் ஏழைப் பெண்களல்ல.

Monday, 21 February 2022

நிலாந்தனின் உருட்டல்களும் பேராசிரியர் கணேசலிங்கத்தின் புரட்டல்களும்

 


இந்திய வான் படையினர் Geopolitics என்னும் சஞ்சிகையை மாதம் தோறும் வெளியிடுகின்றனர். அதன் நவம்பர் 2017 பதிப்பு “கடலோரக் கண்காணிப்பு” என்னும் தலைப்பில் ஓர் அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டது. அதில் இந்தியாவின் கரையோரத்தில் உள்ள இந்தியாவிற்கு சொந்தமான தீவுகளும் இந்திய மீனவர்களும் இந்தியாவின் கரையோரப்பாதுகாப்பிற்கு முக்கியமானவர்கள் எனக் குறிப்பிட்டிருந்தது. அதில் எங்கும் ஈழத்தமிழர்கள்தான் இந்தியாவின் பாதுகாப்பு எனக் குறிப்பிடப்படவில்லை. அந்த சஞ்சிகையின் எந்த ஒரு பதிப்பிலும் ஈழத்தமிழர்கள் இந்தியாவின் பாதுகாப்பிற்கு வேண்டியவர்கள் எனக் குறிப்பிடவில்லை. இந்தியாவின் எந்த ஒரு பாதுகாப்புத்துறை ஆய்வாளர்களும் எப்போதாவது ஈழத்தமிழர்கள்தான் இந்தியாவிற்கு பாதுகாப்பு எனக் குறிப்பிட்டுள்ளார்களா?

இந்தியாவின் மு திருநாவுக்கரசு

மு திருநாவுக்கரசு என்பவர் மட்டும் இந்தியாவிற்கு ஈழத்தமிழர்கள்தான் பாதுகாப்பு எனச் சொல்லிக் கொண்டே இருக்கின்றார். அவரது காணொலிப்பதிவுகளில் அவர் அப்படிச் சொல்லும் போது அவர் தனது கண்களை உருட்டிப் புரட்டிக் கொண்டுதான் சொல்லுவார். அதைப் பார்ப்பவர்களுக்குத் தெரியும் அவர் சொல்வது உருட்டலும் புரட்டலும். என்று. தன்னை இந்திய வெளியுறவுக் துறையின் பேச்சாளர் போல கருதிக் கொண்டு அவர் எப்போதுக் கருத்து வெளியிடுவார். உலகில் மிகச்சிறந்த மீயுயர்-ஒலிவேக ஏவுகணைகளைக் கொண்ட நாடு சீனா அது தனது DF-41 ஏவுகணையைச் இந்தியாமீது வீசினால் அதை எப்படி ஈழத்தமிழர்கள் தடுப்பார்கள்? திருநாவுக்கரசு சுதுமலையில் ஏறி நின்று கையைக் காட்டினால் DF-41 ஏவுகணை திரும்பிச் சென்று பீஜிங்கில் விழுமா? உலகிலேயே அதிக கடற்படைக்கலன்களைக் கொண்ட சீனாவின் விமானம் தாங்கிக் கப்பலும், நாசகாரிக்கப்பல்களும், கரையோரத்தாக்குதல் கப்பல்களும் நீர்மூழ்கிக் கப்பல்களும் வங்காள விரிகுடாவிற்கு வந்து இந்தியாமீது தாக்குதல் நடத்தினால் அதை எப்படி ஈழத்தமிழர்களால் தடுக்க முடியும்? திருநாவுக்கரசு கீரிமலையில் நின்று கொண்டு வாயால் ஊத சீனக் கப்பல்கள் அழிந்து விடுமா? சீனா உருவாக்கிக் கொண்டிருக்கும் ஏவூர்திகளில் மீயுயர்-ஒலிவேக ஏவுகணைகள் பாவனைக்கு வந்தால் தமிழர்கள் என்ன செய்வார்கள்? இந்தியாவின் பகை நாடுகள் எந்த எந்த படைக்கலன்களால் இந்தியாவைத் தாக்கும் போது தமிழர்கள் அவற்றை எப்படி எதிர் கொண்டு இந்தியாவைப் பாதுகாப்பார்கள் என விளக்கம் கொடுக்கும் அளவிற்கு திருநாவுக்கரசுக்கு படைத்துறை அறிவு இருக்கின்றதா? அவரது சரித்திர அறிவு மட்டும் புவிசார் அரசியல் ஆய்வு செய்யப் போதுமானதா?

நிலாந்தனின் உருட்டல்கள்

இந்திய வெளியுறவுத்துறையின் பேச்சாளராக தன்னை கருதிக் கொள்ளும் திருநாவுக்கரசுக்கு நிலாந்தன் என்பவர் கொள்கை பரப்புச் செயலாளராக தன்னைத் தானே நியமித்துக் கொண்டிருப்பது போலத் தோன்றுகின்றது. நிலாந்தன் இந்தியாவின் வால் பிடிக் கும்பல்களான ஆறு தமிழ் கட்சிகள் “ஈழத் தமிழர் தேசியப் பிரச்சனைக்கான தீர்வும் தேசிய, பிராந்திய, சர்வதேச நிலவரங்களும்” என்னும் தலைப்பில் நடந்திய மாநாட்டில் அவர் ஆற்றிய உரையில் திருநாவுக்கரசு சொன்னது போல் ஈழத்தமிழர்களுக்கு சர்வதேசம் என்றால் அது இந்தியாதான் என்றார். ஈழத்தமிழர்களை இந்தியாவில் காலடியில் ஒரு கூட்டுப் புழுவாக கேவலப்படுத்துகின்றனர். இது நிலாந்தனின் முதலாவது உருட்டல். இரண்டாம் உருட்டல் நிலாந்தனின் இன்னொரு வாசகம்: “ஈழத்தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் இந்தியாவிற்கு பாதுகாப்பு இல்லை.” ஈழத்தமிழர்களுக்கு பாதுகாப்பாக இருந்தவர்களை இந்தியா ஏன் அழித்தது என்ற கேள்விக்குப் பதில் கூறும் அறிவு நிலாந்தனுக்கு இருக்கின்றதா? நிலாந்தனின் அடுத்த உருட்டல்: “ஒரு சிறிய அரசற்ற தேசிய இனத்தின் விடுதலைக்கான இறுதித் தீர்வை பக்கத்தில் இருக்கும் பெரிய அரசுதான் இறுதியிலும் இறுதியாக தீர்மானிக்கின்றது.” இதற்கு அவர் பல உதாரணங்களைச் சொல்கின்றார். அதில் ஈடுகால உதாரணமாக உக்ரேனைச் சொல்லுகின்றார்: “இரசியாவின் செல்வாக்கு மண்டலத்தை மீறி சிந்திக்க உக்ரேனால் முடியவில்லை. கிறிமியாவாலும் சிந்திக்க முடியவில்லை.” இது நிலாந்தனின் மிகப் பெரிய உருட்டல். இரசியாவின் எல்லையில் உள்ள உக்ரேனிலும் பார்க்க மிகச் சிறிய போல்ரிக் நாடுகளான லித்துவேனியா, லத்வியா, எஸ்த்தோனியா ஆகிய நாடுகள் இரசியாவை மீறி இரசியாவின் எதிரணியில் இணைந்து இறைமையுள்ள சுதந்திர நாடுகளாக இருப்பது நிலாந்தனுக்கு தெரியாதா? கியூபாவை அமெரிக்காவால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதை நிலாந்தன் ஏன் மறைத்தார். சீனாவுடன் எல்லையைக் கொண்டு சீனாவின் பகை நாடாக வியட்னாம் இருப்பதை நிலாந்தன் அறிய மாட்டாரா? நிலாந்தன் போன்றவர்களை ஆய்வாளர்களாக வியட்னாமியர்கள் ஏற்றுக் கொள்ளாததுதான் அவர்களின் உறுதியான இருப்புக்கு காரணமாக இருக்கலாம். நிலாந்தனின் நோக்கம் தமிழர்களை இந்திய நிகழ்ச்சி நிரலுக்குள் உட்படுத்துவது மட்டுமே. நெல்சன் மண்டேலா வெள்ளையர்களை மன்னித்தாராம் சொல்கின்றார் நிலாந்தன். அதனால்தான் இன்னும் தென் ஆபிரிக்காவில் கறுப்பின மக்கள் விடுதலை பெறவில்லை என்பதை திருநாவுக்கரசின் கொ.ப.செ அறியமாட்டார். ஜப்பானியர்கள் தம்மை அழித்த அமெரிக்கர்களை மன்னித்தார்கள் என உருட்டுகின்றார் நிலாந்தன். அமெரிக்கா ஜப்பான் தொடர்பான தனது கொள்கையை மாற்றியது போல் ஈழத் தமிழர்கள் தொடர்பான கொள்கையை எப்போது மாற்றினார்கள் நாம் மன்னிப்பதற்கு? நிலாந்தன் எம்மை சிங்களவர்களை மன்னிக்கச் சொல்கின்றாரா? இதுதானா கொடுத்த காசுக்கு மேலாக கூவுவது என்பது?

பேராசிரியர் கே ரி கணேசலிங்கத்தின் புரட்டல்கள்

நிலாந்தன் திருநாவுக்கரசின் உருட்டுப் புரட்டல்களை பரப்புகின்றார் என்றால் பேராசிரியர் கணேசலிங்கம் நிலாந்தனின் அலட்டல்களை பரப்புரை செய்கின்றார். “ஈழத் தமிழர் தேசியப் பிரச்சனைக்கான தீர்வும் தேசிய, பிராந்திய, சர்வதேச நிலவரங்களும்” என்ற மாநாட்டில் உரையாற்றும் போது மூன்று எடுகோள்களை முன்வைத்தார்:

1. ஈழத் தமிழர்களின் தேசியப் பிரச்சனைக்கு உரிய தீர்வு இலங்கைத் தீவுக்குள் சாத்தியமற்றது. பிராந்திய சர்வதேச மட்டத்திலான தீர்வுகளும் தீர்வுக்கான அணுகு முறைகளுமே எங்களுக்கு யதார்த்தமானதாக இருக்கின்றது.

2. கடந்த கால உடன்படிக்கைகள் அனைத்தும் தீர்வுக்கான எத்தனங்களாக இருந்தனவே அன்றி இலங்கைத் தீவுக்குள் ஒரு தெளிவான தீர்வை நோக்கிய எண்ணத்தை இந்த இனத்துக்கு ஏற்படுத்திக் கொடுக்கவில்லை.

3. 2007இற்குப் பின்னர் இந்தோ பசுபிக் உபாயம் இந்து சமுத்திரத்தையும் பசுபிக் விளிம்பு நாடுகளுக்கும் அந்த விளிம்பு நாடுகளில் இருக்கும் ஒடுக்கப்படுகின்ற தேசிய இனங்களுக்கும் ஒரு வாய்ப்பான காலப்பகுதியாக அமைந்திருக்கின்றது.

ஒரு வரியில் சொல்லுவதானால் ஈழத்தமிழர்களுக்கான தீர்வு இந்தியாவிடம் தான் இருக்கின்றது என புரட்டுகின்றார் கணேசலிங்கம். அவரது அடுத்த புரட்டல்: “இன்று ஜெர்மனியர்களும் பிரான்ஸ்காரர்களும் இரசியாவிற்கும் உக்ரேனுக்கும் இடையிலான போரை தடுக்க முயற்ச்சிக்கின்றார்கள். பின்புலத்தில் அவர்களுடைய பொருளாதார இருப்பு அடிப்படையானது.” ஆனால் புவிசார் அரசியல் ஆய்வாளர்களின் கருத்துப்படி இரசியா ஒரு Economic Fortressஐ உருவாக்கிவிட்டுத்தான் உக்ரேனுக்கு எதிரான நகர்வுகளைச் செய்கின்றது. இரசியவின் பொருளாதாரத்தை Sanction Proofஆக மாற்றிவிட்டுத்தான் புட்டீன் செயற்படுகின்றார் என்பதை அறியக் கூடிய பொருளாதார அறிவு கணேசலிங்கத்திற்கு இல்லையா?

திருநாவுக்கரசால் மந்திரித்து விடப்பட்ட கோழிபோல அமைந்திருந்தது கணேசலிங்கத்தின் இன்னொரு கொக்கரிப்பு:

  • ·   ழத் தமிழர்கள்தான் இந்தப் பிராந்தியத்தில் இந்தியாவிற்கு ஓரளவில் பாதுகாப்பு அரணைக் கொடுக்கக் கூடிய சக்திகளாக இருக்கின்றார்கள். ஏறக்குறைய நான் நினைக்கின்றேன் இந்தியர்களுடைய பாதுகாப்பு என்பது ஈழத்தில் இருக்கின்ற மக்களுடைய, ஈழத்தமிழ் மக்களுடைய இருப்போடுதான் ஐக்கியப் பட்டிருக்கின்றது.

பேராசிரியர் கணேசலிங்கத்திற்கு படைத்துறை அறிவு அறவே கிடையாது என்பதை அவரது ஒரு சொற்றொடர் காட்டுகின்றது: “பிரான்ஸின் சுக்கோய் (Sukhoi) விமானம்”. இதுவும் அவரது உரையில் இடம்பெற்றுள்ளது. சமூகத்தின் வரிப்பணத்தில் தான் வசிப்பதாகச் சொன்னார் கணேசலிங்கம். வரிசெலுத்துபவர்கள் value for moneyயை எப்போதும் பார்ப்பார்கள் உங்களின் அறிவின் பெறுமதி சுக்கோய் விமானத்தை உற்பத்தி செய்வது இரசியா என்று கூடத் தெரிந்து கொள்ளாத நிலையில் இருப்பதை யாரிடமய்யா சொல்லி அழுவது. புவிசார் அரசியலைப் பற்றி ஆய்வு செய்வதற்கு படைத்துறை மற்றும் பொருளாதாரத் துறை பற்றிய அறிவு அவசியமய்யா. இரண்டும் உங்களிடம் இல்லை. உங்களுக்காக வரி செலுத்துபவர்களுக்காக அவற்றைப் பற்றி அறிந்து கொள்ள முயற்ச்சி செய்யுங்கள்.

கூலிப்படையாக இந்தியா

SWRD பண்டாரநாயக்கா மட்டுமே இந்தியா தொடர்பாக சிறந்த வெளிநாட்டுக் கொள்கையைக் கொண்டிருந்தார். ஜே ஆர் ஜெயவர்த்தனேயும் மஹிந்த ராஜபக்சேயும் இந்தியா தொடர்பான வெளியுறவுக் கொள்கையைத் தவறானதாக இருந்தன என்பது கணேசலிங்கத்தின் இன்னும் ஒரு புரட்டல். ஆனால் ஜே ஆரும் மஹிந்தவும் ஈழத் தமிழர்களை அழிக்க இந்தியாவைத் தமது கூலிப்படையாக கையாண்டனர் என்ற உண்மையை பாவம் அவர் மறைக்க முயல்கின்றார்.

பல புரட்டல்களைச் செய்த பேராசிரியர் கணேசலிங்கம் ஆறு கட்சிகளின் தலையில் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்:

  • ·         காலையில் கூட ஒரு சிங்களப் பேராசிரியரோடு உரையாடினேன். 13ஐ நிராகரித்து விட்டு நாம் இந்தியாவைத் திருப்திப்படுத்துவோம். இந்தியாவின் நெருக்கீட்டில் இருந்து தென்னிலங்கை அரசியல் தலைவர்கள் - எங்களுடைய தலைவர்கள் - தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள் என்றார் அவர். மிக ஆணித்தரமாக அவருடைய வாதமும் நியாய்ப்பாடுகளும் இருந்தன. நான் நினைக்கின்றேன் அவர்களிடம் இது சார்ந்து ஒரு தெளிவான உபாயம் ஏற்பட்டுவிட்டது.

Tamilnet இணையத்தளத்தினர் நடத்திய ஓர் உரையாடலில் சொல்லப்பட்ட வாசகம்: “இந்தியாவிற்கு திராணி இருந்தால் 13ஐ முழுமையாக நிறைவேற்றட்டும். இந்தியாவால் அது முடியாத வேலை!” அதை கணேசலிங்கம் உண்மை என உறுதி செய்துள்ளார். 13 என்னும் கூரையில் ஏற முடியாத இந்தியாவிடம் இணைப்பாட்சி (சமஷ்டி) என்னும் கோபுரத்தை இந்திய வால் பிடிகளான ஆறு கட்சிகள் வேண்டி நிற்கின்றன.

அமெரிக்காவுடன் மோடி நட்பை அதிகரிப்பதை கணேசலிங்கம் தூக்கிப் பிடித்து உரையாற்றினார். அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இன்று நிலவும் நட்பு சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் 1979இல் உருவான நட்பைப் போன்றது என்பதை கணேசலிங்கம் அறிய மாட்டாரா? இன்னும் சில ஆண்டுகளில் அமெரிக்க - இந்திய நட்பு மோசமான பகைமையாக மாறாது இருக்கும் என்பதை பேராசிரியர் உறுதி செய்வாரா?

நிலாந்தனும் கணேசலிங்கமும் இந்தியாவைப் பற்றி தாழ்த்தி ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. ஜே ஆர் ஜெயவர்த்தனே 1985-86இல் இந்திய வெளியுறவுச் செயலராக இருந்த ரொமேஸ் பண்டாரியின் மகளிற்கு செய்த கல்யாணப்பரிசுடன் இந்தியாவின் ஈழத்தமிழர்கள் தொடர்பான கொள்கை தலைகீழாக மாறியது. அதிலிருந்து இன்றுவரை இந்தியா ஈழத்தமிழர்களுக்கு பல கொடுமைகளைச் செய்து கொண்டே இருக்கின்றது. இந்தியா தனது கொள்கையை மாற்றாமல் இந்தியா பற்றி தமிழர்களுக்கு யாரும் போதிக்கத் தேவையில்லை. 2009-ம் ஆண்டுக்கு முன்னர் விடுதலைப் புலிகளுடன் இருந்து “அரசியல் ஆய்வு” செய்து கொண்ந்தியாவின் உளவாளிகளாகச் செயற்பட்டவர்களை இந்தியா இலங்கை அரசுக்கு வேண்டு கோள் விடுத்து  அவர்களைப் பாதுகாப்பாக மீட்டுச் சென்றது. அவர்கள் தங்கள் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க கூவுகின்றார்கள் என்பதை தமிழர்கள் உணர்ந்து கொள்வார்கள்.

Wednesday, 5 January 2022

பல்துருவ ஆதிக்கமும் தமிழர்களும்

 

உலகத்தில் செல்வாக்கும் ஆதிக்கமும் செலுத்துவதற்கு பல நாடுகள் போட்டி போடுதல் பல்துருவ ஆதிக்கம் எனப்படும். இரண்டு நாடுகள் அதில் ஈடுபட்டால் அது இருதுருவ ஆதிக்கம் என்றும் ஒரு நாடுமட்டும் அதில் சிறந்து விளங்கினால் அது ஒரு துருவ ஆதிக்கம் எனவும் அழைக்கப்படுகின்றது. பனிப்போரின் பின்னர் சோவியம் ஒன்றியம் வீழ்ச்சியடைந்துடன் அமெரிக்கா ஒரு துருவ ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது என வாதிடுவோர் உண்டு. அணுக்குண்டு வைத்திருக்கும் வல்லரசு நாடுகள் பல்துருவ ஆதிக்கம் செலுத்துகின்றன என்போரும் உண்டு. அணுக்குண்டு வைத்திருந்தால் மட்டும் போதாது அதனால் மற்ற வல்லரசு நாட்டில் கணிசமான அழிவை ஏற்படுத்தக் கூடிய வகையில் அவற்றை எடுத்துச் சென்று வீசக் கூடிய வலிமையும் இருக்க வேண்டும் எனவும் கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன.

பொருளாதாரமும் துருவ ஆதிக்கமும்

உலகெங்கும் இருந்து மலிவு விலையில் மூலப் பொருள்களைப் பெற்று அதிலிருந்து குறைந்த செலவில் உற்ப்பத்தி செய்யும் பொருள்களை அதிக விலைக்கு உலகெங்கும் விற்பனை செய்வதே உலக ஆதிக்கத்தின் முதன்மை நோக்கம். முதலில் பிரித்தானியா தனது கைத்தொழில் புரட்சி மூலம் இதைச் செய்து உலக ஆதிக்கத்தைச் செய்தது. அதன் கடற்படை வலிமை அதற்கு உறுதுணையாக அமைந்தது. அதேவழியை அமெரிக்கா பின்பற்றி வெற்றிகண்டது. பிரித்தானியாவில் இருந்த கனிம வழங்களிலும் பார்க்க அதிக அளவு கனிம வளம் அமெரிக்காவில் இருக்கின்றது. அதனால் உலகில் பிரித்தானியா செய்த ஆதிக்கத்திலும் பார்க்க அதிக ஆதிக்கத்தை அமெரிக்காவால் செய்யக் கூடியதாக இருக்கின்றது. பிரித்தானியாவின் குடியேற்ற ஆட்சிக் கொள்கை முறியடிக்கப்பட்டதை தனக்கு ஒரு பாடமாக எடுத்த அமெரிக்கா புதிய குடியேற்றவாதம் எனப்படும் தனக்கு உகந்த ஆட்சியாளர்களை கேந்திர முக்கியத்துவம் வாய்த பிரதேசங்களில் ஆட்சியைல் அமர்த்தும் உபாயத்தை நிறைவேற்றியது. பின்னர் அது சவாலை எதிர்கொள்ளும் போது புதிய தாராண்மைவாதம், உலகமயமாதல் என தனது உபாயங்களை மாற்றிக் கொண்டுள்ளது.

ஒரு துருவ ஆதிக்கம் ஒரு போதும் இருந்ததில்லை

உலக வரலாற்றில் ஒரு துருவ ஆதிக்கம் ஒரு போதும் இருந்ததில்லை என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது. சூரியன் மறையாத வல்லரசு எனச் சொல்லுமளவிற்கு கனடா முதல் நியூசீலாந்து வரை உலகின் பெரும் நிலப்பரப்பை கைப்பற்றி வைத்திருந்த பிரித்தானியாவால் பிரான்ஸ், ஸ்பெயின், ஜேர்மனி, இரசியா, சீனா ஜப்பான், சீனா போன்ற நாடுகளைக் கைப்பற்ற முடியவில்லை. சோவியத் ஒன்றியத்தின் பின்னர் பல நாடுகளில் தனது மறைமுக ஆதிக்கத்தை செய்த அமெரிக்காவால் நடுவண் ஆசிய நாடுகள், இரசியா, கியூபா, சீனா ஆகிய நாடுகளில் ஆதிக்கம் செய்ய முடியவில்லை. 1815இல் இருந்து 1945-ம் ஆண்டு வரை உலகம் பல்துருவ ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. அந்தக் கால கட்டத்தில் இருந்த வல்லரசு நாடுகளிடையேயான நட்புறவையும் பகைமையையும் பொறுத்து ஆதிக்கச் சமநிலையும் மாறிக் கொண்டே இருந்தது. நெப்போலியனின் வீழ்ச்சிக்குப் பின்னர் 19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து பிரித்தானியா, இரசியா, பிரசியா, பிரான்ஸ், டென்மார்க்-ஹங்கேரி ஆகியவை உலக வல்லரசுகளாக இருந்தன. கிறிமியாவை துருக்கியிடமிருந்து மீளப் பெற எடுத்த முயற்ச்சி அப்போது இருந்த பல் துருவ உலகச் சமநிலையில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. பின்னர் ஹிட்லர் தலைமையில் ஜேர்மனி மற்ற வல்லரசு நாடுகளை ஆக்கிரமிக்க எடுத்த முயற்ச்சியால் உருவான இரண்டாம் உலகப் போர் பல் துருவ உலக ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. அதன் பின்னர் சோவியத் ஒன்றியமும் அமெரிக்காவும் உலக ஆதிக்கத்திற்கு போட்டி போட்டன.


முத்துருவ ஆதிக்கம் நிச்சயமாக உருவாகிவிட்டது

மேற்கு ஐரோப்பிய நாடுகள் தற்போது எதிர்கொள்ளும் பொருளாதாரப் பிரச்சனைகளையும் தேசியவாதப் பிரச்சனைகளையும் சமாளித்து எழுச்சியுறும் போது அவை அமெரிக்கா தலைமையில் ஒரு குழுவாக உலக அரங்கில் செயற்படும் போது அவற்றுக்கு சவால் விடக் கூடிய வகையில் இரசியாவோ அல்லது சீனாவோ உருவாகுவதற்கு இரண்டு நாடுகளும் ஒத்துழைக்க வேண்டியுள்ளது. ஆனால் இரசியாவும் சீனாவும் அமெரிக்காவை தமது அணுக்குண்டுகள் தாங்கிச் செல்லும் மீயுயர்-ஒலிவேக ஏவுகணைகளால் தாக்கக் கூடிய வலிமையை பெற்றுவிட்டனவோ அப்போது முத்துருவ ஆதிக்கம் தோன்றிவிட்டது. சிரியாவில் பஷார் அசாத் வேதியியல் குண்டுகளைத் தாக்கினால் அது செங்கோட்டைத் தாண்டுவது போலாகும்; அதைத் தண்டிக்கும் முகமாக சிரியாமீது தாக்குதல் செய்யப்படும் என அமெரிக்க அதிபர் சூளுரைத்திருந்தார். ஆனால் அதையும் மீறி சிரியாவில் வேதியியல் குண்டு வீச்சு செய்யப்பட்ட போது அசத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாமல் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் தடுத்துவிட்டார். சீனா தென் சீனக் கடலில் செயற்கை தீவை அமைப்பதை தடுப்போம் என அமெரிக்கா செய்த சூளுரையையும் மீறி சீனா தீவுகளை அமைத்ததுடன் அவற்றைப் படைத்தளங்களாகவும் மாற்றிவிட்டது. அமெரிக்கா, இரசியா, சீனா ஆகிய மூன்று நாடுகளும் தற்போது உலக ஆதிக்கத்தில் போட்டி போடுகின்றன. சோவியத் ஒன்றியத்தால் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட சவாலிலும் பார்க்க மோசமான சவால் சீனாவால் 2020களில் அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ளது. சோவியத் ஒன்றியத்திலும் பார்க்க வலுவான பொருளாதாரத்தை சீனா கொண்டுள்ளது. சோவியத்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் நடந்த வர்த்தகத்திலும் பார்க்க பல மடங்கு வர்த்தகம் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் நடக்கின்றது.

இரசிய சீன ஒத்துழைப்பு மட்டுப்படுத்தப் பட்டதாக இருக்கும்

2030இல் மேற்கு ஐரோப்பிய நாடுகளினதும் வட அமெரிக்க நாடுகளான ஐக்கிய அமெரிக்காவும் கனடாவும் படைத்துறை ரீதியிலும் பொருளாதார ரிதியிலும் தமக்கு இடையிலேயான ஒத்துழைப்பை மிகவும் உயர்ந்த நிலைக்கு கொண்டு போக வேண்டிய நிர்ப்பந்தந்தத்தை இரசியாவினதும் சீனாவினதும் படைத்துறை வளர்ச்சி ஏற்ப்படுத்தியுள்ளது.. இரசியாவினது படைத்துறை வளர்ச்சியும் சீனாவினுடைய பொருளாதார வளர்ச்சியும் இரண்டு நாடுகளது தொழில்நுட்ப ஒத்துழைப்பும் ஒரு குறித்த அளவிற்கு மேல் போக முடியாது. இரசியாவும் சீனாவும் ஒன்ற்றின் வளர்ச்சியை மற்றது ஐயத்துடன் பார்க்க வேண்டிய நிலை உருவாகும்.

இருதுருவ ஆதிக்கமும் தமிழர்களும்

1980களில் அமெரிக்காவிற்கும் இரசியாவிற்கும் இடையில் நடந்த இருதுருவ ஆதிக்கப் போட்டி தீவிரமடைந்தது. அப்போது சீனா அமெரிக்காவுடன் இணைந்து “அமைதியான எழுச்சி” என்னுக் கொள்கையுடன் செயற்பட்டது. பங்களாதேசம் பிரிக்கப் பட்ட பின்னர் இரசியாவுடன் ஒத்துழைக்கும் இந்தியாவை அடக்குவதற்கு இலங்கையில் தனக்கு என சில படைத்துறை வசதிகளை ஏற்படுத்த அமெரிக்கா முயன்றது. அதைத் தடுக்க இந்தியா தமிழர்களைத் தனது துருப்புச் சீடாக பயன்படுத்தியது. தமிழர்கள் இலங்கையின் ஒருமைப்பாட்டிற்கு மிக அச்சுறுத்தலாக உருவாகினர். 1991இல் சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்த பின்னரும் அமெரிக்க இந்திய முறுகல் இலஙகையில் தொடர்ந்தது. அமெரிக்க ஆதிக்கம் உலகில் அதிகரித்தும் இரசியா ஆதிக்கம் சரிந்தும் சீன ஆதிக்கம் அதிகரிக்கும் நிலை 1999-ம் ஆண்டு உருவானது. அப்போது அமெரிக்காவும் இந்தியாவும் சீனாவிற்கு எதிராக ஒன்றுபட வேண்டிய நிலை உருவானது. 2000-ம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்க வெளியுறவுச் செயலராக இருந்த ஹிலரி கிளிண்டன் இந்தியாவிற்கு மேற்கொண்ட பயணம் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் புவிசார் உறவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. பின்னர் இந்தியாமீதான பொருளாதாரத் தடை அமெரிக்காவால் நீக்கப்பட்டது. இரு நாடுகளினதும் ஒத்துழைப்பு ஈழத் தமிழர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி 2009இல் பேரழிவில் முடிந்தது.

வரவிருக்கும் பல்துருவ ஆதிக்கம்

இந்தியாவின் பொருளாதார மற்றும் படைத்துறை வளர்ச்சி ஒரு சிறந்த தொழில்நுட்ப வளர்ச்சியை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. இது தொடர்ந்தால் இன்னும் பத்து ஆண்டுகளில் இந்தியாவும் உலகில் ஆதிக்கம் செலுத்தக் கூடிய ஒரு நாடாக மாறும். உலகெங்கும் வாழும் இந்தியர்கள் இந்தியாவின் உலக ஆதிக்கத்தில் பெரும் பங்காற்றுவார்கள். ஐரோப்பிய ஒன்றியம் தனது பாதுகாப்பிற்கு அமெரிக்காவில் தங்கியிருக்கும் கொள்கையை மாற்றி தனக்கு என ஒரு படையை உருவாக்க வேண்டும் என்ற கொள்கையை வலுவடையும் போது. அது ஒரு உலகப் பெருவல்லரசாக உருவாகும். ஏற்கனவே பிரான்ஸ் என்ற வல்லரசு ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராக உள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், 2030அளவில் அமெரிக்கா, இரசியா, சீனா, இந்தியா என்ற ஐந்து துருவங்கள் உலகில் உருவாகும் போது தமிழர்கள் தமக்கு என ஒரு நட்பு நாட்டை பெற்றுக் கொள்வது இலகுவாக்கப்படும். தற்போது பல நாடுகளில் இளையோராக இருக்கும் தமிழர்கள் அப்போது சிறப்பாக செயற்பட்டால் ஈழவிடுதலை சாத்தியமாகும். இதனால் தான் 2008 மாவிரர் நாள் உரையில் இனி எமது விடுதலைப் போராட்டத்தை புலம் பெயர் இளையோர் முன்னெடுப்பார்கள் என எதிர்வு கூறப்பட்டது.

Tuesday, 28 December 2021

புதிய அரசியலமைப்பு யாப்பும் தமிழர்களும்

 

இலங்கைக்கு என புதிதாக ஒரு அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு விட்டது. அது 2022 ஜனவரியில் இலங்கை குடியரசுத் தலைவர் கோத்தபாயாவிடம் சமர்ப்பிக்கப்படும் என்றெல்லாம் செய்திகள் வெளிவந்துள்ளன. 2020 செப்டம்பர் -02-ம் திகதி கோத்தபாய ரொமேஷ் டி சில்வா(குடியரசுத் தலைவர் சட்டத்தரணி) தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழுவை அமைத்திருந்தார். இன்னும் அந்த ஒன்பது பேர் கொண்ட குழுவினரிடையே புதிய அரசியலமைப்பு தொடர்பாக பல முரண்பாடுகள் காணப்படுகின்றன. அதிகாரப்பரவல்லாக்கல் தொடர்பில் ஒன்பது பேர் கொண்ட குழுவில் கடும் முரண்பாடு காணப்படுகின்றது.

சுதந்திர இலங்கையின் 73 ஆண்டுகால வரலாற்றில் அது மூன்று அரசியலமைப்பு யாப்புக்களை கண்டுள்ளது. 2022-ம் ஆண்டு வரவிருப்பது நான்காவது யாப்பாக அமையலாம். வரவிருக்கும் யாப்பின் உள்ளடக்கம் பகிரங்கப்படுத்தப்படவில்லை. அதற்கான தயாரிப்பு வேலைகள் பகிரங்கமாக விவாதிக்கப்படவில்லை.

தமிழ்ர்களைப் பாதுகாக்காத சோல்பரி யாப்பு

முதலாவது சோல்பரி யாப்பு பிரித்தானிய குடியேற்ற ஆட்சியாளர்களால் வரையப்பட்டது. அதில் பெரும்பான்மை மக்களுக்கு ஐம்பது விழுக்காடு நாடாளுமன்ற உறுப்புரிமையும் சிறுபான்மை மக்களுக்கு ஐம்பது விழுக்காடு உறுப்புரிமையும் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஜீ ஜீ பொன்னம்பல அவர்கள் இலண்டன் சென்று அரசியல் யாப்பை வரைந்த சோல்பரி பிரபுவிடம் கோரிக்கை விடுத்தார். இந்தக் கோரிக்கையை மற்ற தமிழ்த் தலைவர்கள் ஏன் விடுக்கவில்லை என்ற கேள்வியை சோல்பரி பிரபு பொன்னம்பலத்திடம் முன்வைத்தார். பொன்னம்பலம் கொழும்பில் உள்ள மற்ற அரசியல் தலைவர்களுக்கு அக்கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து சோல்பரிப் பிரபுவிக்கு தந்தி அனுப்புமாறு வேண்டினார். ஆனால் பொன் இராமநாதன் பொன் அருணாச்சலம் ஆகியோரின் அடுத்த வாரிசான அருணாச்சலம் மகாதேவா நாம் 50/50 உறுப்புரிமை தேவையில்லை நாம் சிங்களவர்களுடன் ஒன்றுபட்டு வாழ்வோம் என சோல்பரிப் பிரபுவிற்கு தந்தி அனுப்ப பொன்னம்பலம் ஏமாற்றத்துடன் திரும்பினார். அந்நியர் தயாரித்த இலங்கை அரசியலமைப்பு யாப்பிலும் தமிழர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. சிங்களம் பேசும் தெலுங்கு அரசியல்வாதிகளும் தமிழ் பேசும் தெலுங்கு அரசியல்வாதிகளும் இணைந்து சிங்கள பேரினவாத அரசு இலங்கையில் உருவாக்கப்பட்டது. சோல்பரி அரசியலமைப்பில் சிறுபான்மை இனத்தவர்களுக்கு பாதுகாப்பாக அதன் 29(2) பிரிவு இருக்கும் எனக் கூறப்பட்டது. ஆனால் சிங்களத்தை ஆட்சி மொழியாக்குவது, இந்தியாவில் இருந்து வந்து குடியேறிய மக்களின் குடியுரிமையை பறிப்பது, இலட்சக்கணக்கான தமிழர்களை நாடற்றவர்கள் என்னும் நிலைக்குத் தள்ளிய சிறிமா-சாஸ்த்திரி ஒப்பந்தம் ஆகியவை செய்யப்பட்டன.

பிழைகள் நிறைந்த சில்வா அரசியலமைப்பு யாப்பு

1972-ம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சியில் கொல்வின் ஆர் டி சில்வா இலங்கை குடியரசுக்கான அரசியலமைப்பு யாப்பை வரைந்தார். அதில் தமிழர்கள் தரப்பில் வைத்த எந்த ஒரு கோரிக்கையும் உள்ளடக்கப்படவில்லை. பேரினவாத ஒற்றையாட்சி யாப்பாக வரைந்து இலங்கையை ஒரு மக்களாட்சி சமூகவுடமை குடியரசாக உருவாக்கினர். இந்த யாப்பு நிறைவேற்றப்படுவதை தமிழர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். யாழ் நாவலர் மண்டபத்தில் அந்த யாப்பின் பிரதி ஒன்றை தந்தை செல்வா தீயிட்டுக் கொழுத்தினார். அங்கு உரையாற்றிய மூதூர் தங்கத்துரை, காசி ஆனந்தன் போன்றோர் தீவிரவாதத்தை தூண்டும் வகையில் உரையாற்றினர். பின்னர் தமிழர் தரப்பிலிருந்து ஐந்து அம்ச குறைந்த பட்ச கோரிக்கை ஒன்றை தலைமை அமைச்சர் சிறிமாவோ பண்டாரநாயக்காவிற்கு தமிழர்களால் அனுப்பப்பட்டது. அதற்கு பதில் வரவே இல்லை. மாறாக சீனாவில் இருந்து படையினருக்கு என பெருமளவு கவச வண்டிகள் இறக்குமதி செய்யப்பட்டு அவை தமிழர்களின் நிலப்பரப்புக்களின் உள்ள படைமுகாம்களில் நிறுத்தப்பட்டன. அமெரிதலிங்கம், சிவசிதம்பரம், நவரத்தினம் ஆகியோர் புதிய அரசியலமைப்பு யாப்பின் அவசரநிலைப் பிரகடனத்தை மீறி துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தார்கள் என்பதால் கைது செய்யப்பட்டு அறக்கூறவை அற்ற சிற்ப்பு நீதிமன்றம் ஒன்றை அவசரநிலைச் சட்டத்தின் படி நியமித்து விசாரணை நடந்த போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஜீ ஜீ பொன்னம்பலம், எம் திருச்செலவம், புள்ளநாயகம் ஆகியோர் உட்பட 63 சட்டடதரணிகள் அந்த நீதிமன்றத்தில் வாதாடினார்கள். அரசியலமைப்புச் சட்டத்தில் அவசரகாலப் பிரகடனம் தொடர்பான வாசகம் பிழை என்றும் குடியரசுத் தலைவருக்கு சட்டவாக்கல் அதிகாரம் இல்லை என்றபடியால் அவர் பிரகடனம் செய அவசர காலச் சட்டம் செல்லுபடியற்றது என ஜீ ஜீ பொன்னம்பலம் வாதடினார். எம் திருச்செல்வம் இலங்கை தமிழர்கள் மீது இலங்கை அரசுக்கு நியாய ஆதிக்கம் இல்லை, அவர்கள் இறைமை உள்ள தனித் தேசிய இனம் என வாதாடினார். அரசு தரப்பில் சட்டமா அதிபர் சிவா செல்லையா வாதாடினார். அவசரகாலச் சட்டம் செல்லுபடியற்றது என தீர்ப்பு வழங்கப்பட்டது. பின்பு சிறிமா அரசு ஒரு மேன்முறையீடு செய்து தனக்கு தேவையானதை சாதித்துக் கொண்டது.

தமிழர்களால் ஜே ஆருக்கு என தயாரித்த யாப்பு

இலங்கையை சிங்கப்பூர் போல் தனது செய்மதி நாடாக மாற்றுவதற்கு ஓர் அதிகாரம் மிக்க ஆட்சியாளர் தேவை என உணர்ந்த அமெரிக்கா தனது கையாட்களான நீலன் திருச்செல்வம், பேராசிரியர் ஏ ஜே வில்சன் ( தந்தை செல்வாவின் மகளின் கணவர்) ஆகியோர் மூலமாக இலங்கையை அமெரிக்கா போல் அதிகாரம் மிக்க குடியரசுத் தலைமையின் கீழ் ஆட்சி செய்யும் நாடாக மாற்றப்பட்டது. அந்த அரசியலமைப்பு யாப்பிலும் தமிழர்களின் கோரிக்கை ஏதும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

நல்லாட்சி அரசு அமைக்க முயன்ற யாப்பு

மைத்திரி-ரணில் நல்லாட்சி என்னும் பெயரில் நடத்திய காட்டாட்சியில் ஒரு புதிய அரசியலமைப்பு வரையும் முயற்ச்சி செய்யப்பட்டது. மைத்திரி-ரணிலை அமெரிக்காவின் பணிப்பின் பேரில் ஆட்சி நாற்காலியில் ஏற்றுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கிய பங்கு வகித்தது. எந்த அடிப்படையில் மைத்திரி-ரணிலுடன் இணைகின்றீர்கள் என வினவப்பட்ட போது இதயத்தால் இணைகின்றோம் என மதியாபரணம் சுமந்திரன் பதிலளித்தார். சிங்களத்தில் ஏக்க ராஜ்ஜிய எனவும் தமிழில் ஒருமித்த நாடு எனவும் அந்த யாப்பில் இருக்கும் என்றும் ஒற்றையாட்சிக்குள் இணைப்பாட்சி(சமஷ்டி) இருக்கும் எனவும் தமிழர்கள் சார்பில் யாப்பு வரைபில் செயற்பட்ட மதியாபரணம் சுமந்திரன் குழப்பியபடியால் அவரை தமிழர்கள் சுத்துமாத்து சுமதிரன் என கேலி செய்யத் தொடங்கினர்.

சிங்களவர்களுக்கு உரிமையில்லையாம்

துருக்கியின் TRT தொலைக்காட்சிக்கு பொது பல சேனாவைச் சேர்ந்த  திலாந்தே விதானகே பேட்டியளிக்கும் போது சிங்கள மக்கள் உரிமையற்று இருக்கின்றார்கள் என்ற படியால் அவர்களின் உரிமையற்று இருப்பதாகவும் அவர்களின் உரிமை புதிய அரசியலமைப்பு யாப்பில் உறுதி செய்யப்பட வேண்டும் எனவுக் கருத்து தெரிவித்திருந்தார். புதிய யாப்பில் தமிழர்களுக்கு மேலும் பாதகமானதாகவே அமையும் என்பது அவரது கருத்தில் இருந்து தெரியவருகின்றது.

13-ம் இல்லை இணைப்பாட்சியும் இல்லை

அமெரிக்கா இணைப்பாட்சி (சமஷ்டி) அடிப்படையில் தமிழர்களுக்கு உரிமை பெற்றுத்தரும் என ஒரு குழுவினரும் பதின்மூன்றாம் திருத்தத்தை பாதுகாக்க வேண்டும் என இந்திய வாற்பிடிக் குழுவினரும் என இரு பிரிவினர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்றனர். சுமந்திரன் சிங்கள் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய போட்டியில் நாங்கள் இணைப்பாட்சி (சமஷ்டி) கோரவில்லை இப்போதுள்ள 13-ம் திருத்தத்தில் மிகச்சிறிய மாற்றத்தையே கோருகின்றோம் எனத் தெரிவித்திருந்தார். பின்பு தனக்கே உரியவகையில் அதைச் சுத்துமாத்து செய்தார். புதிய அரசியலமைப்பு யாப்பில் 13இல்லாமல் போகலாம், 13 உள்ளடக்கப்பட்டு அது தொடர்ந்தும் நடை முறைப்படுத்தப் படாமல் போகலாம். தமிழர்களுக்கு நன்மையளிக்கக் கூடிய எந்த ஒரு வாசகமும் புதிய யாப்பில் உள்ளடக்கப்பட்டால் அதற்கு எதிராக பிக்குகள் கிளர்ச்சி செய்வார்கள். இந்தியாவில் உள்ள அதிகாரப் பரவலாக்கத்திலும் அதிகமான அதிகாரப் பரவலாக்கம் இலங்கையில் செய்யப்படுவதை தமிழினவிரோதியும் பேரினவாதியுமான இந்தியா கடுமையாக எதிர்க்கும். சிங்களக் கட்சிகள் மக்களிடையே செல்வாக்கை இழக்கும் போதெல்லாம் இனவாதத்தை கையில் எடுப்பது வழமை. தற்போது பிளவுபட்டு செல்வாக்கு இழந்த எதிர்க்கட்சிகளும் மோசமான பொருளாதார நிலையால் செல்வாக்கிழந்த ஆளும் கூட்டணிக் கட்சிகளும் தமிழர்களுக்கு எந்த நன்மையும் புதிய யாப்பில் உள்ளடக்க அனுமதிக்க மாட்டார்கள்.

தற்போது உள்ள பொருளாதார நெருக்கடியை சாதகமாக வைத்து அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து இலங்கை ஆட்சியாளர்கள் மீது அழுத்தம் கொடுப்பார்கள் என சில தமிழ் அரசியல்வாதிகள் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு காத்திருக்கின்றனர். அமெரிக்காவுடன் இலங்கை SOFA என்ற அமெரிக்கப் படையினரை இலங்கையில் அனுமதிக்கும் ஒப்பந்தத்தையும் இந்தியாவுடன் CEPA என்ற பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தையும் இலங்கை செய்தபின்னர் இரு நாடுகளும் முன்பு போல தமிழர்களை அம்போ என விட்டு விடும். சர்வதேசம் எம்மை ஏமாற்றி விட்டது என சம்பந்தர் மீண்டும் அங்கலாய்ப்பார். இந்திய வாற்பிடிகள் தொடர்ந்தும் காணி பொலிஸ் வேண்டும் பராசக்தி காணி பொலிஸ் வேண்டும் என பஜனைக் கச்சேரியை இறக்கும்வரை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பார்கள். 


Friday, 24 December 2021

தமிழர்களுக்கு தேவை ஒரு ஜே ஆர் ஜயவர்த்தன

 


2009இல் பின்னடைவைச் சந்தித்த தமிழர்களின் விடுதலைப் போராட்டம் இப்போது ஒரு சிக்கலான புவிசார் அரசியல் போட்டியில் மாட்டுப்பட்டுள்ளது. அதைக் கவனமாக வெளியே எடுத்து வெற்றியடையச் செய்யக் கூடிய அரசில் அறிவு, அரசியல் அனுபவம், அரசியல் வஞ்சனை, சம்பந்தப்பட்டவர்களை அணைத்து கெடுக்கும் நரித்தனம், எதிரியை ஏமாற்றும் மதிநுட்பம் எதுவும் தற்போது உள்ள எந்த ஓரு தமிழ் அரசியல்வாதிகளிடமும் இல்லவே இல்லை.

மாறும் உலக ஒழுங்கில் தமிழ் ஈழம்

மேற்கு நாடுகள், இந்தியா, ஜப்பான், ஒஸ்ரேலியா ஆகியவற்றிடையேயான ஒத்துழைப்பு ஈழத் தமிழர்களுக்கு ஒரு பாதகமான நிலையை ஏற்படுத்தியுள்ளது. ஈழத் தமிழர் தொடர்பான இந்த நாடுகளின் நிலைப்பாடு இந்தியாவின் நிலைப்பாட்டை தாண்டி செல்ல முடியாத ஒரு நிலை உருவாகி வருகின்றது. தம்மை தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்கள் எனச் சொல்லிக் கொள்பவர்களும் தமிழ் நாடாளுமன்ற அரசியல்வாதிகளும் அரசியல் ஆய்வாளர்கள் என தம்மை நினைத்துக் கொள்பவர்களும் ஈழத் தமிழர்கள் மீதான இந்திய ஆதிக்கத்திற்கு விட்டுக் கொடுத்துதான் நாம் தப்பிப் பிழைக்க முடியும் என்கின்றனர். 2019-ம் ஆண்டு டிரம்பின் ஆட்சியில் சிங்களவர்கள் தங்கள் பிரச்சனைகளுக்கு இந்தியா மூலமாகத்தான் அமெரிக்காவை அணுக வேண்டும் என அமெரிக்கா விடுத்த நிர்ப்பந்தத்தை சிங்களவர்கள் தமது இறைமைக்கு அது பேரிடர் எனச் சொல்லி கடுமையாக எதிர்த்தபடியால் அமெரிக்கா அந்த நிலைப்பாட்டைக் கைவிட்டது. மேற்கு நாடுகளுடன் தொடர்பில் இருக்கும் தமிழர்கள் அந்த மாதிரியான எதிர்ப்பை காட்டவில்லை. காட்டும் துணிவு அவர்களிடம் இல்லை. 13இற்கும் தமிழர்களை அடக்க வேண்டும் என்ற வஞ்சனையுடன் அதை ஜெனீவா மனித உரிமைக்கழகம் வரை இந்தியா கொண்டு சென்றுள்ளது. இந்தியாவில் உள்ள அதிகாரப் பரவலாக்கத்திலும் பார்க்க அதிகமான அதிகாரப் பரவலாக்கத்தை இலங்கையில் செய்யக் கூடாது என்பதில் இந்தியா உறுதியாக இருக்கின்றது. இந்தியாவில் உள்ள அதிகாரப் பரவலாக்கம் இலங்கைக்கு பொருத்தமற்றது என்றும் இந்தியா எப்போதும் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே இருக்கும் என்றும் உலக அரங்கில் பகிரங்கமாக எடுத்துக் காட்டும் துணிவு யாருக்கும் இல்லை. இதை ஈழத் தமித்தரப்பினர் சரியாகச் செய்யாத வரை இந்தியா ஈழத்தமிழர்கள் தொடர்பாக தனது நிலைப்பாட்டை மாற்றப் போவதில்லை. இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்றச் சொல்லும்படி ஈழத்தமிழர் தரப்பினர் மேற்கு நாடுகளுக்கும் ஜப்பான், ஒஸ்ரேலியா போன்ற நாடுகளுக்கும் உறுதியாக வேண்டுகோள் விடுக்க வேண்டும். தமிழ் அரசியல்வாதிகள் அடி வாங்கிய பின் அழுது கொண்டு போய் ஆசிரியரிடம் முறைப்பாடு செய்யும் அப்பாவி மாணவர்களின் நிலையிலேயே இருக்கின்றனர்.

இலங்கையில் அமெரிக்கா செய்த மூன்று நகர்வுகள்

1980களின் பிற்பகுதியில் இலங்கை ஒரு புவிசார் அரசியல் நெருக்கடியில் சிக்குப்பட்டது. பிலிப்பைன்ஸ்ஸில் அப்போது ஏற்பட்ட உறுதிப்பாடற்ற நிலை அங்கு பெரும் படைத்தளத்தை வைத்திருந்த அமெரிக்காவிற்கு சவாலாக அமைந்த படியால் அதற்கு மாற்றீடாக அது இலங்கையைத் தேர்ந்தெடுத்தது. இந்திரா காந்தியின் அமெரிக்காவிற்கு எதிரான நிலைப்பாடும் இந்தியாவின் படைத்துறை வளர்ச்சியும் 1971இல் வங்காளதேச விடுதலையில் அமெரிக்கா பின்னடைவைச் சந்தித்தமையும் இந்தியாவை கையாள்வதற்கு இலங்கை அமெரிக்காவிற்கு தேவை என்ற நிலையை ஏற்படுத்தியது. அப்போதைய தொழில்நுட்ப நிலையில் அமெரிக்க கடற்படைக் கலன்களுக்கு தேவை ஏற்படும் போது எரிபொருள் மீள் நிரப்பல் செய்ய ஒரு துறைமுகம் அமெரிக்காவிற்கு தேவைப்பட்டது. அதற்கு அது திருக்கோணாமலை துறை முகத்தை தெரிவு செய்தது. அமெரிக்கர்களுக்கு சொந்தமான சிங்கப்பூர் நிறுவனத்திடம் திருகோணமலையில் எரிபொருள் மீள் நிரப்பு நிலையம் ஒன்றை அங்குள்ள பிரித்தானியா உருவாக்கி பாவிக்கப்படாமல் இருந்த எண்ணெய் குதங்களை பாவித்து கப்பல்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் திட்டம் தீட்டப்பட்டது. பிரித்தானியா தனது குடியேற்ற ஆட்சிக்காலத்தில் தெற்காசியாவில் முதல் முதலாக இலங்கையிலேயே தனது வானொலி ஒலிபரப்பு நிலையத்தை ஆரம்ப்த்தது. இலங்கையின் பூகோள அமைப்பு வானலைத் தொடர்பாடலுக்கு உகந்ததாக இருக்கின்றது. அதனால் அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கிடையிலேயான அதி-தாழ் அலைவரிசை (ultra-law wave) தொடர்பாடல் நிலையத்தை அமெரிக்காவ்ன் குரல் (Voice of America) அஞ்சல் நிலையம் என்ற போர்வையில் சிலாபத்தில் அமைக்க அமெரிக்கா திட்டமிட்டது. இந்தியாவைப் போல் அதிக இறக்குமதிக் கட்டுப்பாடு உள்ள இலங்கையை ஒரு திறந்த பொருளாதாரமாக மாற்றி அதைச் சிங்கப்பூரைப் போல் பொருளாதார வளர்ச்சியடையச் செய்து இந்தியர்களை அவர்களின் அரசின் பொருளாதரக் கொள்கையில் வெறுப்படையச் செய்வதும் அமெரிக்காவின் மூன்றாவது உபாயமாக இருந்தது.

இலங்கையை விழிப்புடன் கண்காணித்த இந்திரா

இலங்கையில் அமெரிக்கா மிக இரகசியமாகச் செய்யும் நகர்வுகளை இலகுவாக அறியும் திறன் இந்திரா காந்தி தலைமையிலான இந்தியாவிற்குச் அப்போது இருந்தது. சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான அரசுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி என்னும் ஜனதா விமுக்தி பெரமுனை 1971-ம் ஆண்டு போரை ஆரம்பித்த போது அதை முன் கூட்டியே அறியாத சிறிமா திரையரங்கைல் ஆங்கிலப் படம் ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அது தொடங்க முன்னரே பழுதடைந்த படியால் அவசர தரையிறக்க அனுமதி வேண்டி கூர்க்கா படையினர் நிறைந்த இரு துருப்புக் காவி கப்பல்களை கொழும்பு துறைமுகத்தில் இந்திரா காந்தி தங்க வைத்திருந்தார். திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த சிறிமா படம் பார்ப்பதையும் இடையில் நிறுத்தி விட்டு இந்திரா காந்திக்கு தொலை பேசி அழைப்பு விடுத்து அவசர உதவி கோரினார்.  அதற்கு பதிலளித்த இந்திரா எங்கள் படையினர் ஏற்கனவே கொழும்பில் நிற்கின்றார்கள் என்றார். பின்பு முப்பதிற்கும் மேற்பட்ட உலங்கு வானூர்திகள் இலங்கை வந்து காட்டுக்குள் இருந்த கிளர்ச்சிக்காரர்களின் நிலைகள் மீது குண்டு வீசி அழித்தன. இலங்கையில் அமெரிக்காவின் இரகசிய நகர்வுகளை உரிய நேரத்தில் அறிந்திருந்தார்.

தேடாமலே கிடைத்த பொல்லு

தமிழர் நிலங்களில் சிங்களக் குடியேற்றம், அம்பாறை அபகரிப்பு, 1974 இலங்கை அரசு செய்த தமிழாராய்ச்சிப் படுகொலை, 1981இல் யாழ் நூல் நிலைய எரிப்பு போன்றவை இலங்கை தமிழர்களை பிரிவினைப் போராட்டத்தை தூண்டியிருந்தது. அமெரிக்கா பக்கம் சாயும் இலங்கையை மிரட்டுவதற்கான காரணிகளை இந்திரா காந்தி தேடி அலைய வேண்டிய நிலை இருக்க வில்லை. பங்களாதேசத்திற்கு உதவி செய்தது போல் ஈழத் தமிழர்களுக்கும் இந்திரா காந்தி உதவி செய்வார் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் காத்திருந்தனர். தமிழர்களுக்காக போராடியவர்களில் சிலருக்கு தமிழ் ஈழத்தையோ தமிழர்களின் சுயநிர்ணய உரிமையையோ இந்திரா ஆதரிக்க மாட்டர் என்று தெரிந்தும் அவருடன் இணைந்து சிங்களத்திற்கு எதிராக செயற்பட்டனர். இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான வன்முறையை ஜே ஆர் ஜெயவர்த்தனேயின் அரசு கட்டவிழ்த்து விட்டது. 1983-ம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக சிங்களம் அட்டூழியம் செய்தது. அதை இந்திரா காந்தி இனக்கொலை என்றார். இந்திய சட்டவாளர் சபையும் (Indian Bar Council) அதை இனக்கொலை என்றது. இலங்கையில் இருந்து பலர் இந்தியாவிற்கு சென்று தஞ்சமடைந்தனர். அவற்றை எல்லாம் வைத்து இலங்கைக்கு எதிராக உலக அரங்கில் இந்திரா காந்தி பெரிய பரப்புரைகளைச் செய்தார். வெளிநாடுகளுக்கு செல்லும் போது ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கும் போது இலங்கைப் பிரச்சனையை முன்வைக்க தவறுவதில்லை. இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதால் இந்தியாவில் வாழும் தமிழர்கள் கொதித்து போயிருக்கின்றார்கள் என்பதையும் தெரிவிக்க தவறுவதில்லை. தனது நாட்டின் உறுதிப் பாட்டிற்கு பங்கம் எனவும் எடுத்துரைப்பார். இலங்கையில் வான் மார்க்கமாக தரையிறக்குவதற்கு என முப்பதினாயிரம் படையினரையும் இந்திரா காந்தி தயார் நிலையில் வைத்திருந்தார்.

இந்திராவின் பலவிதமான நகர்வுகளுக்கு மத்தியிலும் ஜே ஆர் ஜெயவர்த்தனே தமிழர்களுக்கு எதிரான அட்டூழியங்களை கூட்டிக் கொண்டே போனார். தனது தயவில் அமைச்சராக இருந்த சௌ. தொண்டமானை புது டில்லிக்கு ஜே ஆர் அனுப்பி இந்தியப் படைகள் வருவது மலையத் தமிழர்களுக்கு மிகவும் ஆபத்தானது எனச் சொல்ல வைத்தார். இந்த நிலையில் இந்திரா காந்தி கொல்லப்பட ராஜீவ் காந்தி இந்திய தலைமை அமைச்சரானார். இருவருக்குமிடையில் தொடர்ச்சியாக பேச்சு வார்த்தை நடந்து கொண்டே இருந்தது. ஆசியாவின் கிழக் குள்ள நரி என விபரிக்கப்பட்ட ஜே ஆர் ஜயவர்த்தனே ராஜீவ் காந்தியையும் அவரது அரசுறவியலாளர்களையும் கையாளும் தந்திரத்தை சிறப்பாக மேற் கொள்ளத் தொடங்கினார். அவரது முதலாவது வெற்றி அவரது வேண்டுகோளின் பேரில் ராஜீவ் காந்தி இலங்கைக்கான சிறப்புத் தூதுவர் ஜீ பார்த்தசாரதியை பதவி நீக்கம் செய்ததே. வங்களாதேச விடுதலைப் போரில் ஹென்றி கிஸ்ஸிங்கரை திணறடித்த அரசுறவியலாளர் ஜீ பார்த்தசாரதி. அதன் பிறகு வந்த வெளியுறவுத் துறைச் செயலர் ரொமேஸ் பண்டாரியின் மகளின் திருமணத்திற்கு தாராளமான பங்களிப்பு செய்து அவரைத் தனது கைக்கூலியாக்கினார் ஜே ஆர். அப்போது கொழும்பில் உள்ள வெளிநாட்டு அரசுறவியலாளர்கள் JR cornered Rajiv – ஜே ஆர் ராஜீவை முடக்கிவிட்டார் என்ற வாசகம் பரவலாக அடிபட்டது. இலங்கையில் ஒரு தனிநாடு அமைக்கும் எண்ணம் இந்தியாவிற்கு இல்லை என்பதை புரிந்து கொண்டு தனது காய்களை ஜே ஆர் நகர்த்தினார். யாழ் குடா நாட்டை மட்டும் பிரித்துக் கொடுக்க தான் தயார் என ஒரு போலியான முன்மொழிவை தமிழ்ப்போராளிகள் முன் வைத்தார். அதை ராஜீவும் இந்திய அரச வளாகத்தின் தென் மண்டலத்தில் உள்ளவர்களும் விரும்ப மாட்டார்கள் என்பதை அறிந்தே அப்படி ஒரு நகர்வைச் செய்தார். இந்தியாவிற்கு ஒரு விட்டுக் கொடுப்பைச் செய்தால் அது தமிழ்ப்போராளிகளை அழிக்கும் என்பதை உணர்ந்த ஜே ஆர் ராஜீவுடன் ஓர் ஒப்பந்தத்தையும் செய்து இலங்கை அரசியல் யாப்பிற்கு 13வது திருத்தத்தைச் செய்தார். அதனால் இந்திய படையினர் ஜே ஆரின் கூலி வாங்காத கூலிப் படையாக வந்து தமிழ்ப் போராளிகளின் படைக்கலன்களை பறித்தது கொடுக்க மறுத்தவர்களிற்கு எதிராகவும் அப்பாவிகளுக்கு இலங்கையில் சிங்களவர்கள் கூடச் செய்யாத வன்முறைகளைச் செய்தது. IPKF என்பது Indian Peace Keeping Force அல்ல Innocent People Killing Force என சிங்கள ஊடகங்கள் கிண்டலடித்தன. பின்னர் 13-ம் திருத்தத்தை நடைமுறைப் படுத்தாமல் இழுத்தடிப்பதிலும் ஜே ஆர் வெற்றி கண்டார்.

இலங்கை தமிழ் அரசியல்வாதிகளுக்கு பன்னாட்டு மட்டத்தில் செயற்படும் அனுபவமோ அறிவோ துளியளவும் கிடையாது. சிங்கள அரசியவாதிகள் அடிக்கடி வெளிநாடுகளுக்கு போய் வருவார்கள். வெளிநாடு அரசியல்வாதிகளையும் சந்திப்பார்கள். அவர்களது அதிகாரிகள் வெளியுறவுத் துறையில் வெளிநாடுகளில் பயிற்ச்சி பெற்றதுடன் நீண்ட காலம் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்களாகவும் இருக்கின்றார்கள். ஓரு இறைமையை வேண்டி நிற்கின்ற இனத்தின் அரசுறவியலாளர்களாக செயற்படக்கூடிய எவரும் தமிழர்களிடையே இல்லை. தமிழர்களின் அந்த வலிமையற்ற நிலையை அறியாமல் சிலர் தமிழர்களுக்கு என ஒரு வெளிநாட்டு கொள்கை தேவை ஒரு சிந்தனைக் கலம் (Think Tank) தேவை என்கின்றனர்.

தமிழர்களுக்கு தேவை ஜே ஆர் ஜயவர்த்தன போன்ற வஞ்சகம், கபடம், துணிவு, அர்ப்பணிப்பு மிக்க ஒரு தலைவர்.

Sunday, 31 October 2021

சுரேஸ் பிரேமச்சந்திரனின் கருத்தால் கலங்கிப் போயுள்ளேன்!

 


Tamil Advocacy Group ஒழுங்கு செய்த முதலாவது கலந்துரையாடலில் திரு சுரேஸ் பிரேமச்சந்திரன் சொன்ன ஒரு வாக்கியம்: ஈழத்தமிழர் தொடர்பாக India ஒரு role play பண்ணும் நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ இந்தியா தனது role ஐ play பண்ணும்

இரண்டாம் கலந்துரையாடலில் சொன்ன இரு வாக்கியங்கள்:

ஈழத் தமிழர்களின் பிரச்சனையில் இந்தியாவை Involve பண்ண வைக்க வேண்டும்.இந்த 3 வாசகங்களைக் கேட்டதில்

இந்தியாவை மீறி வேறு யாரும் தமிழர்கள் பிரச்சனையைக் கையாள முடியாது

 இருந்து நான் கலங்கிப் போயிருக்கின்றேன்.

நேரு கொத்தலாவலை ஒப்பந்தத்தில் India’s role எமக்குத் தெரியும்

சிறீமா சாஸ்த்திரி ஒப்பந்தத்தில் India’s role எமக்குத் தெரியும்

சௌமியமூர்த்தி தொண்டமான் – ஜீஜீ பொன்னம்பலத்தை ஒன்றுபடமல் பிளவு படுத்தியதில் India’s role எமக்குத் தெரியும்.

தமிழ் மீனவர்களுக்கு பல வசதிகள் உள்ள கச்சதீவு தாரைவார்ப்பில் India’s role எமக்குத் தெரியும்.

1980களில் வேண்டுமென்றே பல போராளி அமைப்புகளை உருவாக்கியதில் India’s role எமக்குத் தெரியும்.

விடுதலைப்புலிகளுக்கும் – ரெலோவிற்கும் இடையில் நடந்த மோதலில் India’s role எமக்குத் தெரியும்.

யாழ் மருத்துவமனைப் படுகொலை உட்பட்ட பல கொலைகளில் India’s role எமக்குத் தெரியும்.

படைக்கலன்களைக் கொடுங்கள் உங்களுக்கு நாம் பாதுகாப்பு என்ற தமிழர்களுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான கனவான் ஒப்பந்தத்தின் பின்னர் இலங்கையில் நடந்த இனக்கொலையில் India’s role எமக்குத் தெரியும்.

2007-09 வரை நடந்த இனக்கொலைப் போரில் எத்தனை ஆயிரம் இந்தியப்படையினர் ரோல் பிளே பண்ணினார்கள் என்பதும் எமக்குத் தெரியும்.

அப்போரின் போது இந்தியக் கடற்படையினர் எமது கடற்பரப்பை சுற்றி நின்று பிளே பண்ணிய ரோல் எமக்குத் தெரியும்.

ரணில் தலைமை அமைச்சராகவும் சந்திரிக்கா அதிபராகவும் இருந்த வேளையில் இடைக்கால தன்னாட்சி அதிகார சபையை வழங்க சிங்களம் முன்வந்த போது அதைக் குழப்ப ரணில் ஆட்சியைக் கலைத்து ஜேவிபியையும் இணைத்து மஹிந்தவை தலைமை அமைச்சர் ஆக்கியதில் India’s role எமக்குத் தெரியும்.

ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களின் வீடுகள் அழிப்பில் India’s role எமக்குத் தெரியும்.

மூன்று இலட்சம் அப்பாவிகள் கொலையில் India’s role எமக்குத் தெரியும்.

2009 போரின் பின்னர் ஜெனிவா மனித உரிமைக் கழகத்தில் இலங்கையை கண்டிக்க ஐரோப்பிய ஒன்றியம் கொண்டு வந்த தீர்மானத்தை இலங்கையை பாராட்டும் தீர்மானமாக மாற்றி நிறைவேற்றியதில்  India’s role எமக்குத் தெரியும்.

அதன் பின்னர் இலங்கை தொடர்பாக ஜெனீவாவில் முன் வைக்கப்படும் தீர்மானங்களில் India’s role எமக்குத் தெரியும்.

சுரேஸ் பிரேமசத்திரன் இந்தியா role play பண்ணும், பண்ண வைக்க வேண்டும் என்கின்றார்.

எங்களுக்கு நன்மையளிக்க India’s role என்று எங்களுக்கு ரீல் விடுகின்றார் திரு சுரேஸ் பிரேமச்சந்திரன். பாவம் ஐயா நீங்கள்

இந்தியா இனியும் role play பண்ணி இன்னும் எத்தனை இலட்சம் தமிழர்களை இந்தியா பலியெடுக்கப் போகின்றதோ என்பதை எண்ணி நான் கலங்கிப் போயுள்ளேன்.

பிரம ஹத்தி பிடித்த இந்தியாவை role play வைக்க வேண்டும் என்பவர்களுக்கு சித்தப் பிரமை என்பது மட்டும் உண்மை.

இந்தியா role play பண்ணுவதென்றால் இன்னும் ஓர் அமைதிப்படை என்னும் பெயரில் கொலைவெறி நாய்களின் படையா? இன்னும் ஒரு மண்டையன் குழுவா? 

ஐயோ தமிழினம் தாங்காதய்யா!


Wednesday, 23 September 2020

தமிழீழக் கட்சிகளும் இந்தியாவும்

ழ் 

அதிமுகவை பாஜக ஆட்டுவிப்பது போல் இந்திய ஈழத் தமிழ் கட்சிகளை ஆட்டுவிக்கப் போகின்றது. அண்ணா திமுகாவை கட்டுப்பாட்டுக்குள் பாரதிய ஜனதாக் கட்சி எடுத்தது போல் ஈழத் தமிழ் கட்சிகளை இந்திய மத்திய அரசு தன் கட்டுப்பாட்டுக்குள் எடுக்க  முயல்கின்றது

தற்போது பாஜகவின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் அண்ணா திமுக இருக்கின்றது. நடுவண் அரசின் எல்லாத் திட்டங்களுக்கும் ஆதரவு கொடுக்கின்றது. அன்று ஜிஎஸ்ரி வரி முதல் இன்று வேளாண் சட்டங்கள் வரை தமிழ்நட்டுக்கான நன்மைகளைக் கருத்தில் கொள்ளாமல் அண்ணா திமுக பாஜக அரசுக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கின்றது.  

செல்வி ஜெயலலிதா பிழைக்க மாட்டார் எனத் தெரிந்தவுடன் பாஜக அரசு அண்ணா திமுகாவிற்குள் பிளவைக் கொண்டு வருகின்றது. திருமதி சசிகலா நடராஜ சிறையில் அடைக்கப்படுகின்றார். அநாதை போல் நின்ற பன்னீர்செல்வதிற்க்கு பாஜக கை கொடுக்கின்றது. எடப்பாடி பழனிச்சாமியா பன்னீர்செல்வமா என்ற பிரச்சனை வந்தபோது இருவருக்கும் இடையில் அவர்களே உடன்பாட்டை செய்து வைக்கின்றனர். உடன்பாடு செய்த பாஜாக அண்ணா திமுகவின் சட்டாம் பிள்ளையாகிவிட்டது.

ஒன்றை ஒன்று முட்டிக்கொள்ளும் இரண்டு மாடுகளான பன்னீரையும் எடப்பாடியையும் தமிழக ஆட்சி என்னும் வண்டியை இழுக்கும் இரு மாடுகளாக்கிவிட்டு வண்டி ஓட்டியாக பாஜக தன்னை ஆக்கிக் கொண்டது. இரண்டு மாடுகளுக்கும் மூக்கணாங்கயிறு தேவைப்படவில்லை ஆடிட்டரின் பூநூலே போதுமானதாக இருக்கின்றது. வண்டி ஓட்டியில் கையில் சாட்டைகளாக சிபிஐ என்னும் நடுவண் அரசின் புலனாய்வுத்துறை மற்றும் வருமான வரித்துறை இருக்கின்றன. பாஜகவுடனான நிர்ப்பந்தக் கூட்டணியால் 2019 மே மாதம் நடந்த இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கான தேர்தலில் அண்ணா திமுக தோல்வியைச் சந்தித்து ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது.

பாஜகவின் தந்திரம்: நானே பிளவு படுத்தி பின் நானே ஒன்று படுத்தி சட்டாம் பிள்ளையாவது.

ஈழத்திலும் பிளவு,

2020இல் நடந்த இலங்கை நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் தமிழர்கள் தரப்பில் போட்டியிட்டன. யாரும் எதிர்பாராத வகையில் திரு விக்கினேஸ்வரன், திருமதிஅனந்தி சசிதரன் போன்றோர் கட்சிகளை தொடக்கினர். சுரேஸ் பிரேமச்சந்திரன் புது டில்லி போய் வந்தவுடன் ஒரு கூட்டணி ஒன்று உருவானது. பல கட்சிகள், மதப் பிளவு, சாதிப் பிளவு பிராந்தியப் பிளவுகள் ஈழத்தமிழ் மக்களிடையே உருவானது. 2020 நாடாளுமன்றத் தேர்தலில் என்றுமே இல்லாத அதிக அளவு கட்சிகள் மற்றும் குழுக்கள் போட்டியிட்டதை பார்த்தோம்.

ரணிலின் கையில் அதிகாரம் இருந்த போது அவரின் கைப்பிள்ளையான சுமந்திரன் எல்லாவற்றையும் கட்டி ஆண்டார். இப்போது ரணில் செல்லக்காசாகிய நிலையில் சுமந்திரனே கட்டிவைக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார். இப்போது இந்தியா எல்லோரையும் ஒன்று படுத்துவது போல் நாடகமாடி களத்தில் இறங்கியுள்ளது. அதற்கான களமாக தியாகி திலீபனின் நினைவேந்தல் பாவிக்கப்படுகின்றது.

 கொழும்பைக் கையாள மீண்டும் தமிழர்கள் வேண்டும்

இந்தியாவிற்கு உகந்த ஆட்சி கொழும்பில் இல்லை. பல தமிழ் கட்சிகளுக்கு பிரச்சனை கொடுக்கும் ஆட்சியாக ராஜபக்சேக்களின் ஆட்சி இருக்கின்றது. அவர்களின் பல அரசியல் நடவடிக்கைகளுக்கு அரச படையினலும் காவற்றுறையினரும் ஈடுபடலாம். தற்போதைய பாராளமன்றக் காலம் முடிந்த பின்னர் அடுத்த தேர்தலில் மக்கள் முன் போய் தங்கள் சாதனை எனச் சொல்லும் படி எதையும் ஈழத் தமிழ்கட்சிகளால் செய்ய முடியாது. பன்னாட்டு புதிய தாராண்மைவாத ஒழுங்கு இப்போது செயலிழந்துள்ளது. அதனால் பன்னாட்டரங்கிலும் ஈழத் தமிழ் கட்சிகளுக்கு ஆறுதல் இல்லை. அநாதைகளாக அவர்கள் இருக்கின்ரார்கள்.

சீனா சரணம் கச்சாமி நிலையில் இலங்கை

மோசமடைந்திருந்த இலங்கையின் பொருளாதாரம் கொவிட்-19 தொற்று நோய் தாக்கத்தின் பின்னர் மேலும் மோசமடைந்துள்ளது. அதற்கு இலகு கடன் சீனாவால் மட்டுமே கொடுக்க முடியும். இந்தியாவே சீனாவின் ஆதிக்கத்தில் உள்ள வங்கிகளில் கடன் பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. உன் வீட்டுக்கு வந்தால் என்ன தருவாய் என் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருவாய் என்ற வெளிநாட்டுக் கொள்கையுடைய சீனா இலங்கைக்கு கடன் கொடுத்து அதை தன் பொறிக்குள் சிக்க வைத்துக் கொள்ளும்.

சீனாவிடம் கடன் பட்டு இந்தியாவின் பிராந்திய நலன்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடிய வகையில் இலங்கை சீனாவுடன் இணைந்து செயற்பட்டால் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க இந்தியாவிற்கு தமிழர்கள் தேவைப்படும். எழுபதுகளின் பிற்பகுதியில் தமிழ்ப் போராளிக் குழுக்களை பல கூறுகளாகப் பிரித்து கையாண்டது. அவ்வப்போது அவர்களை ஒன்றுபடுத்துவது போல் நாடகமும் ஆடியது. பின்னர் அவர்களது படைக்கலன்களைப் பறித்தெடுத்தது. அதன் திருத்திய பதிப்பின் முதலாம் அத்தியாயத்தை இப்போது இந்தியா எழுதத் தொடங்கிவிட்டது. தமிழ்க் கட்சிகளை ஒன்று படுத்துவது போல் இந்தியா களத்தில் இறங்கியுள்ளது.  2021 மே மாதத்திற்கு முன்னர் நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டமனத்திற்கான தேர்தலில் பாஜக எப்படியாவது கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என துடிக்கின்றது. ஈழத் தமிழர்களுக்கு தான் ஆதரவு போல இனி வரும் மாதங்களில் பாஜக சிலபோலி நடவடிக்கைகளை மேற்கொள்ளும். மோடி எனது நண்பர் என்றவரும் மோடி என் பின்னால் இருக்கின்றார் என்பவரும் மோடியைப் புகழ்ந்து கருத்துக்களை இனி வரும் சில மாதங்களில் வெளிவிடுவார்கள். 

இரசியாவினுள் உக்ரேனின் ஊடறுப்பும் ஊடுருவலும்

இரசியாவை ஆக்கிரமித்த அந்நியப் படையினர் அழிவைச் சந்திப்பார்கள் என்பது வரலாறு உலகிற்கு உரத்துச் சொல்லும் செய்தியாகும். இருந்தும் 2024 ஓகஸ்ட் ம...