Followers

Monday 20 April 2020

ஆபிரிக்கர்களை அநியாயமாக நடத்திய சீனா

சீனாவின் குவான்சோ மாகாணத்தில் ஐந்து நைஜீரியர்கள் கொவிட்-19 நோயால் பாதிக்கப் பட்டதைத் தொடர்ந்து அங்கு உள்ள எல்லா ஆபிரிக்கர்கள் மீது கடுமையான கெடு பிடிகள் ஆரம்பமாகின.

வீடுகளில் இருந்தும் விடுதிகளில் இருந்தும் ஆபிரிக்கர்கள் வெளியேற்றப்பட்டனர்.

ஆபிரிக்கர்கள் கடைகளில் பொருட்கள் வாங்கச் சென்ற போது விரட்டப்பட்டனர்.

நோயால் பாதிக்கப்படாத ஆபிரிக்கர்களும் தனிமைப் படுத்தப் பட்டனர்.

சிறு பிள்ளைகளைக் கொண்ட ஆபிரிக்க் குடும்பங்கள் கூட தெருவில் உறங்க வேண்டிய நிலை உள்ளானது.

சீனக் காவற்றுறையினர் ஆபிரிக்கரகளுடன் கடுமையாக நடந்து கொண்டனர். வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆபிரிக்கரக்ள் தெருக்களில் நின்ற போது அவர்கள் காவற்றுறையினரால் விரட்டப்பட்டனர்.

ஆபிரிக்கர்களின் கடவுட் சீட்டுக்கள் பறிக்கப்பட்டன.

நைஜீரிய தொலைக்காட்சி:




பீஜிங்கில் உள்ள பல ஆபிரிக்க நாட்டுத் தூதுவர்கள் இவை பற்றி சீன வெளியுறவுத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளனர். 

பல கட்டிடங்களிலும் மக்டொனால்ட் உட்படப் பல உணவகங்கலும் கறுப்பர்கள் வேண்டாம் என அறிவிப்புக்கள் தொங்க விடப்பட்டன.

மத்தியூ ஸ்கொட் என்ற அமெரிக்கரின் பிட்ஸா உணவகத்திற்கு மாவட்ட அதிகாரிகள் தொலைபேசி அழைப்பு விடுத்து வெளிநாட்டவர்கள் அதிலும் குறிப்பாக கறுப்பர்களை உணவகத்தினுள் அனுமதிக்க வேண்டாம் என உத்தரவிட்டனர்.

ஆபிரிக்கர்கள் தம்மை சீனர்கள் மானிட நேயத்திற்குப் புறம்பாக நடத்தியமையை காணொலிகளில் பதிவு செய்து இணையவெளியில் பரவ விட்டுள்ளனர்.

தனிமைப் படுத்தப்பட்ட நைஜீரியர் ஒருவர் சீன மருத்துவ தாதியை தாக்கிய காணொலியை சீனரக்ள் இணைவெளியில் பரவ விட்டனர். அதில் பின்னூட்டமிட்ட சீனரகள் பலர் ஆபிரிக்கர்களை மிருகங்கள் எனவும் கழிவுகள் எனவும் கருத்துத் தெரிவித்தனர்.  


All African Community in Guangzhou 

என்ற அமைப்பு சீனா ஆபிரிக்காவுடன் போர் செய்கின்றது எனக் குற்றம் சாட்டியது. 



நைஜீரியாவிலும் கானாவிலும் உள்ள சீன அரசின் தூதுவர்களை அந்த நாடுகளின் வெளியுறவுத் துறையினர் அழைத்து விளக்கம் கேட்டனர்.


அடிஸ் அபாபாவில் உள்ள ஆபிரிக்க ஒன்றியத்தின் தலைவரும் சீனத் தூதுவரை அழைத்து விளக்கம் கேட்டுள்ளார். 



2020 ஏப்ரல் 10-ம் திகதி நைஜீரியப் பாராளமன்ற அவைத் தலைவர் சீனத் தூதுவரிடம் “நீங்கள் எப்படி எம்மக்களை நடத்துகின்றீர்கள் என்பது நீங்கள் எப்படி எமது தூதுவர்களை நடத்துகின்றீரகள் என்பதை விட முக்கியமானது” என்றார். 


சகாரா-சார் நாடுகளில் சீனா 2005-ம் ஆண்டில் இருந்து முன்னூறு பில்லியன் டொலர்களை முதலிட்டுள்ளது. அந்த முதலீடுகளை சாக்காக வைத்து பத்து மில்லியன்களுக்கு மேற்பட்ட சீனர்கள் ஆபிரிக்காவில் பணி புரிகின்றனர். பல ஆபிரிக்க ஆட்சியாளர்களுக்கு சீனா அதிக வட்டிக்கு கடன் கொடுத்து அவர்கள் ஊழல் மூலம் பணம் திரட்ட வழிவகுக்கின்றது. 

ஜிபுக்தி, கிரிகிஸ்த்தான், லாவோஸ், மாலைதீவு, மங்கோலியா, பாக்கிஸ்த்தான், தஜிகிஸ்த்தான் ஆகிய நாடுகள் தமது மொத்த தேசிய உற்பத்தியில் 45%இலும் அதிகமான கடனை சீனாவிடமிருந்து பெற்றுள்ளன. இந்த நாடுகளின் ஆட்சியாளர்களின் நேர்மைத் தன்மை கேள்விக்குரியது. சீனா தனது பட்டியும் பாதையும் முன்னெடுப்பு என்ற பெயரில் உள்ள புதிய பட்டுப்பாதை திட்டத்தின் கீழ் இந்த நாடுகளை முழுமையாக சுரண்ட முற்படுகின்றது. 


ஆபிரிக்கர்கள் சீனாவில் கேவலமாக நடத்தப் படுகின்றனர் என்ற செய்தி உலகெங்கும் அடிபடத் தொடங்கிய நிலையில் சீன வெளியுறவுத் துறைப் பேச்சாளர் இது தொடர்பாக சீன அரசு Guangzhou பிராந்திய அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பாடலில்  இருப்பதாகவும் ஆபிரிக்கர்கள் எமது சகோதரர்களும் பங்காளிகளும் ஆவர்கள் என்றார். இலங்கையில் இனக்கொலை, போர்க்குற்றம், மனித உரிமை மீறல் எதுவுமே நடக்கவில்லை என தொடர்ந்து உலக அரங்கில் பொய் சொல்லிக் கொண்டிருக்கும் சீனாவிடமிருந்து தமிழர்கள் உண்மையை எதிர்பார்க்க மாட்டார்கள். அதை உலகமும் உணரட்டும்.





No comments:

Post a Comment

இந்திய சீன உறவு மேலும் மோசமாகுமா?

  இந்தியாவிற்கும் சீனாவிற்குமான வர்த்தக மற்றும் அரசுறவியல் உறவு மிக நீண்ட காலமாக இருக்கின்றது. 1954-ம் ஆண்டு ஒக்டோபரில் இந்தியத் தலைமை அமைச்...