Followers

Friday, 4 March 2022

உக்ரேனில் காதாநயகனான துருக்கியின் ஆளிலிவிமானம்

ழ் 


ஒவ்வொரு போரிலும் ஒரு படைக்கலன் போரின் திசையை மாற்றி வியக்கவைக்கும். இதுவரை நடந்த இரசிய உக்ரேன் போரில் கதாநாயகனாகத் திகழ்வது துருக்கியின் Bayraktar TB-2 ஆளிலிப் போர்விமானமாகும். இவற்றில் இருந்து வீசப்படும் மலிவான ஏவுகணைகள் இரசியாவின் நான்கு மில்லியன் டொலர் பெறுமதியான இரசிய தாங்கிகளை அழித்துக் கொண்டிருக்கின்றன. இரசியப் படையினரின் முன்னேற்றத்தைத் தடுப்பதில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன. அமெரிக்காவும் பிரித்தானியாவும் கொடுத்த ஜவலின், NLAW ஆகிய தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளிலும் பார்க்க துருக்கியின் Bayraktar TB-2 இரசியாவிற்கு அதிக இழப்பை குறைந்த ஆபத்துடன் ஏற்படுத்துகின்றன.

பலரதப்பு பாராட்டு

படைத்துறை ஊடகங்களில் இருந்து நிதித்துறை ஊடகங்கள் வரை பல ஊடகங்கள் Bayraktar TB-2ஐப் பற்றி சிறப்புக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் ஆளிலிப் போர்விமானங்களை துருக்கி வாங்க முற்பட்ட போது அவை துருக்கியுடன் தொடர்பில் உள்ள இஸ்லாமியத் தீவிரவாதிகளின் கைகளுக்குப் போய்ச் சேரும் என்பதால் அமெரிக்கா விற்பனை செய்ய மறுத்தது. அதைத்தொடர்ந்து துருக்கி தானே அவற்றை உற்பத்தி செய்யத் தொடங்கியது. முதலில் குர்திஷ் போராளித் தலைவர்களைக் கொல்ல துருக்கி தனது ஏவுகணை தாங்கிச் செல்லும் ஆளிலிகளிப் பயன்படுத்தியது. அதில் கிடைத்த அனுபவம் துருக்கியை உலகின் முன்னணி ஆளிலி உற்பத்தி நாடாக்கியது. தற்போது Bayraktar TB-2 துருக்கியின் “தேசம் பெருமை” ஆக கருதப்படுகின்றது.

வழிகாட்டல் ஏவுகணைகள்

துருக்கியின் Bayraktar TB-2 ஆளிலி விமானங்கள் 25கி.மீ(15.5மைல்) தொலைவில் உள்ள இலக்குகளையும் இனம் காணக்கூடிய சிறந்த ஒளிப்பதிவுக் கருவிகளைக் (Camera) கொண்டவை. இனங்காணல், வேவுபார்த்தல், போன்றவற்றைச் செய்யக் கூடிய வகையில் அவற்றில் உள்ள ஒளிப்பதிவுக் கருவிகளின் துளைகள் (aperture) அகலமானவையாக உள்ளன. அந்த ஒளிப்பதிவுக் கருவிகள் மிக உயரமான இடத்தில் குளிரான சூழலிலும் சிறப்பாகச் செயற்படும். மணித்தியாலத்திற்கு 80மைல் வேகத்தில் நான்கு திறன் – வழிகாட்டல் ஏவுகணைகளைச் (Smart laser guided missiles) சுமந்து கொண்டு பறக்கக் கூடியவை. தாங்கிச் செல்லக் கூடிய மொத்த எடை 121 இறாத்தல். இயந்திர வலு 105 குதிரைவலு.  25,000 அடி உயரத்தில் தொடர்ந்து 24 மணித்தியாலங்கள் பறக்கக் கூடியவை, Tactical Block 2 என்பதன் சுருக்கமே TB2. அவற்றின் மற்ற சிறப்பம்சங்கள்:

     Low Light (LL-NIR) Camera
    Common FOVs for IR, HDTV and LL-NIR Cameras
    Laser Range Finder and Target Designator
    Laser Pointer and Illuminator
    Internal Boresight Unit
    All-Digital Video Pipeline
    Advanced Image Processing
    Multi Target Tracking
    Simultaneous Target Tracking on IR, HDTV
    and LL-NIR Videos
    Accurate Target Geo-Location
    Determination of Coarse and Speed of
    Moving Target
    Inertial Measurement Unit (IMU)
    Accurate Stabilization
Bayraktar TB-2 ஆளிலிவிமானம் நிலக்கட்டுப்பாட்டகம், தரவுமுனையம், தூரக்காட்சியமைப்பு (remote display) முனையம் ஆகிய மூன்று பகுதிகளைக் கொண்டது. அமெரிக்காவின் பிரபலமான MQ-9 Reaper ஆளிலிவிமானத்துடன் ஒப்பிடுகையில் பாரம் குறைந்ததும் மலிவானதுமாகும். உக்ரேனிடம் 25 Bayraktar TB-2 ஆளிலிவிமான ங்கள் உள்ளன. மேலும் பலவற்றை உக்ரேன் துருக்கியிடமிருந்து வாங்கவிருக்கின்றது.

களம் பல கண்ட Bayraktar TB-2

துருக்கியின் Bayraktar TB-2 ஆளிலிகள் சிரியா, லிபியா ஆகிய நாடுகழ்ளின் போர் முனையில் இரசிய தாங்கிகளுக்கும் கவச வண்டிகளுக்கும் எதிராக சிறப்பாகச் செயற்பட்டவை.. அஜர்பைஜானுக்கும் ஆர்மினியாவிற்கும் இடையில் நடந்த போரில் துருக்கியின் Bayraktar TB-2 ஆளிலிகள் ஆர்மினியாவிடமிருந்த பல இரசியத் தாங்கிகளைத் துவம்சம் செய்த போது உலகப் படைத்துறை நிபுணர்கள் ஆச்சரியப்பட்டனர். அதன் பின்னர் கனடா துருக்கிக்கு Bayraktar TB-2இற்கான ஒளிப்பதிவுக் கருவிகளை விற்பனை செய்வதை தடை செய்தது. அதனால் சிறந்த ஒளிப்பதிவுக் கருவிகளை துருக்கியே உற்பத்தி செய்கின்றது.

இரசியாவின் S-400 தோற்கடிக்கப்பட்டதா?

இரசியா உக்ரேன் – பெலரஸ் எல்லையில் தனது S-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமையை உக்ரேனின் வான்வெளியை கண்காணிக்க நிறுத்தியுள்ளது. இருந்தும். Bayraktar TB-2 ஆளிலிவிமானம் இரசிய போர்த்தாங்கிகளையும் கவச வண்டிகளையும் தாக்கியழிக்கின்றது. சிறிய Bayraktar TB-2 ஆளிலிவிமானங்களை இரசியாவின் S-400ஆல் அழிக்க முடியாதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

துருக்கி ஆளிலி விமானத்துறையில் பெறும் அனுபவமும் வெற்றியும் அது இனி வெளிநாடுகளில் போர்விமானங்களை வாங்கத் தேவையில்லை என்ற நிலையை உருவாக்கியுள்ளது. அமெரிக்கா துருக்கி உட்பட பல நாடுகளுடன் இணைந்து உருவாக்கிய F-35 ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை துருக்கி இரசியாவிடமிருந்து S-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமையை வாங்குவதால் துருக்கிக்கு விற்பனை செய்ய மறுத்து விட்டது. இதனால் துருக்கி தானே TF-X என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமானத்தை உருவாக்குகின்றது. அத்திட்டம் 2025இல் நிறைவேறும் எனச் சொல்லப்படுகின்றது. துருக்கிக்கும் பாக்கிஸ்த்தானுக்கும் இடையில் வளரும் நட்பு இந்தியாவைச் சிந்திக்க வைக்கும்.

No comments:

Post a Comment

இரசியாவினுள் உக்ரேனின் ஊடறுப்பும் ஊடுருவலும்

இரசியாவை ஆக்கிரமித்த அந்நியப் படையினர் அழிவைச் சந்திப்பார்கள் என்பது வரலாறு உலகிற்கு உரத்துச் சொல்லும் செய்தியாகும். இருந்தும் 2024 ஓகஸ்ட் ம...