சீனாவின்
முன் இரண்டு உதாரணங்கள் எப்போதும் மின்னிக் கொண்டே இருக்கும். ஒன்று அமெரிக்காவிற்கு
படைத்துறையி சவாலாக விளங்கிய சோவியத் ஒன்றியம் மற்றது அமெரிக்கா கரிசனை கொள்ளுமளவிற்கு
பொருளாதாரப் பெருவல்லரசாக எழுச்சியடைந்த ஜப்பான். சோவியத் ஒன்றியம் தன் வரவுக்கு மிஞ்சிய
அளவில் படைத்துறைச் செலவை செய்து அமெரிக்காவிற்கு போட்டியாக, சில துறைகளில் அமெரிக்காவை
மிஞ்சக்கூடிய அளவிற்கு, படைக்கலன்களை உருவாக்கியது. ஜப்பான் தனது நாட்டின் தனியார்
துறையை கட்டுப்பாடின்றி கடன் படுவதை கண்காணிக்காமல் விட்டது.
கோபுரத்தை
அழிக்கச் சென்று சாய்ந்த சோவியத் கோபுரம்
பொருளாதாரப்
பிரச்சனை மீது அதிக கவனம் செலுத்தாத சோவியத் ஒன்றியம் செலவு மிக்க ஆக்கிரமிப்பு போரைச்
செய்தது. 1978இல் ஆப்கானிஸ்த்தானில் அமெரிக்கா ஒரு
தொலைத் தொடர்புக் கோபுரத்தை அமைத்தது. அது 2001இல்
இரட்டைக் கோபுரத் தாக்குதல் வரை செல்லும் என அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை.
அமெரிக்கா 1978இல் ஆப்கானிஸ்த்தானில் அமைத்த
தொலைதொடர்புக் கோபுரம் சோவியத் ஒன்றியத்தை உளவு பார்க்க உருவாக்கப்பட்டது. இதனால்
ஆத்திரமடைந்த சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்த்தானில் படை எடுத்தது. இதுவும் சோவியத்
ஒன்றியம் என்ற கோபுரத்தின் வீழ்ச்சிக்கு ஒரு காரணியாக அமைந்தது.
சீனாவின்
அமைதியான எழுச்சி
சோவியத்தின்
உதாரணத்தை கருத்தில் கொண்ட சீனா தனது வளர்ச்சிக்கு அமைதியான எழுச்சி எனப் பெயரிட்டுக்
கொண்டது, அதன் படி மற்ற நாடுகளில் ஆட்சிகளைக் கவிழ்ப்பது, ஆக்கிரமிப்பது போன்றவற்றில்
ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொண்டது. சீனா தனது உளவுத்துறைக்கு பெரும் செலவைச் செய்யவில்லை.
சீனா தனது ஒரே ஒரு பெரிய அயல் நாடாகிய இந்தியாவிடமிருந்து தனக்கு அச்சுறுத்தல் இல்லாமல்
இருக்க தீபெத்தை 1950இல் தன்னுடன் இணைத்துக் கொண்டது. தனக்கு கவசமான தீபெத்தை இந்தியா
ஆக்கிரமிக்கலாம் என்ற ஐயத்தில் இந்தியா மீது 1962இல் போர் தொடுத்தது. அசாம் மாநிலத்தை
சீனா கைப்பற்றிய போது இந்தியர்கள் வங்கிகளில் உள்ள நாணயத்தாள்களைக் கூட எரித்துவிட்டு
தலை தெறிக்க ஓடினார்கள். தான் ஆக்கிரமித்த இந்தியாவின் பெரும் நிலப்பரப்பை கைவிட்ட
சீனா அக்சாய் சின் என்னும் பகுதியை மட்டும் தன்வசம் இன்றுவரை வைத்திருக்கின்றது. அக்சாய்
சின் தீபெத்தையும் உய்குர் மாகாணத்தையும் இணைக்கின்ற பிரதேசமாகும். அது இந்தியா வசம்
இருந்தால் இரண்டிலும் தீவிரவாதிகளை இந்தியா வளர்த்து விடலாம் என்பதை இந்தியா கருத்தில்
கொண்டு அக்சாய் சின் பிரதேசத்தை வைத்திருக்கின்றது. அதற்கு அச்சுறுத்தல் வராமல் இருக்க
அந்த எல்லைப் பகுதியை எப்போதும் கொதிநிலையில் சீனா வைத்திருக்கின்றது. 1979இல் வியட்னாமுடன்
சீனா ஒரு எல்லைப் போர் செய்தது. போரால் பொருளாதாரம் சீரழியும் என்பதால் சீனா போர்களைத்
தவிர்த்து வருகின்றது.
தைவான்
போரைத் தவிர்த்த சீனா
தைவானின்
அதிபராக இருந்த லீ தெங் குயீயை அவர் கல்வி கற்ற அமெரிக்கப் பல்கலைக்கழகம் உரையாற்ற
அழைத்தமைக்கு ஆட்சேபனை தெரிவிக்கும் முகமாக 1995இல் தைவானைக் கைப்பற்ற சீனா பெரும்
படை நகர்த்தலைச் செய்தது. அதைத் தடுக்க அப்போது அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளிண்டன்
USS Nimitz என்ற விமானம் தாங்கிக் கப்பலையும் அமெரிக்காவின் ஏழாவது கடற்படைப் பிரிவையும்
தைவான் நீரிணைக்கு அனுப்பினார். தைவானைக் கைப்பற்றுவதென்றால் அமெரிக்காவுடன் போர் புரிய
வேண்டும் என உணர்ந்த சீனா பொருளாதாரப் பேரழிவைக் கொண்டுவரக்கூடிய போரைத் தவிர்த்தது.
அமெரிக்காவின் இரண்டு கடற்படைப் பிரிவுகளை அழிக்கக்.கூடிய வலிமை அப்போது சீனாவிடம்
இருக்கவில்லை.
ஜப்பானிடமிருந்து
சீனா கல்லாதும் கற்றதும்
சீனாவும்
ஜப்பானும் மன்னராட்சி நாடுகளாக இருந்தன. பின்னர் ஜப்பான் அரசியலமைப்புக்குட்பட்ட மன்னராட்சியாக
மாறி மக்களாட்சியை ஏற்படுத்திக் கொண்டது. சீனா அப்படிச்செய்யாமல் இருந்தபடியால் அங்கு
பொதுவுடமைப் புரட்சி ஏற்பட்டது. ஜப்பான் அமெரிக்கா உட்பட பல நாடுகளுக்கு தொடர்ச்சியாக
பல ஆண்டுகள் ஏற்றுமதியைச் செய்து உலகப் பொருளாதார வல்லரசாக 1980களின் உருவானது. 1980களின்
பிற்பகுதியில் பல அமெரிக்க நிறுவனங்களையும் சொத்துக்களையும் ஜப்பானிய நிறுவனங்கள் வாங்கின.
அதை இரண்டாவது பேர்ள் துறைமுகத் தாக்குதல் (Pearl Harbour Attack) என அமெரிக்க தேசியவாதிகள்
விபரித்தனர். பின்னர் அமெரிக்காவின் டொலருக்கு எதிராக ஜப்பானிய நாணயமான யென்னின் பெறுமதி
பெருமளவில் அதிகரித்தது. ஆனாலும் ஜப்பானிய நிறுவனங்கள் தொடர்ச்சியாக பெருமளவு கடன்
பட்டு தமது ஏற்றுமதியை தொடர்ந்து செய்து கொண்டே இருந்தன. அதனால் ஜப்பானியப் பொருளாதாரம்
பெரும் பின்னடைவை இன்றுவரை சந்தித்துக் கொண்டிருக்கின்றது.
சீனாவின் மூன்று செங்கோடுகள்
ஜப்பானிய
தனியார் துறையினர் அதிக கடன் பட்டது போல் சீனத் தனியார் துறையினரும் அதிக கடன் பட்டுக்கொண்டிருக்கின்றனர்.
அதிலும் சீனாவில் தொடர்ச்சியாக கட்டிடங்களின் விலைகள் ஏறிக் கொண்டிருந்த படியால் கட்டிடத்
துறையினரால் அதிக கடன் படக் கூடியதாக இருந்தது. உலகிலேயே அதிக கடன் பட்ட கட்டிடம் கட்டும்
நிறுவனங்களில் 80% சீனாவில் உள்ளன. இதனால் சீன நடுவண் வங்கியான சீன மக்கள் வங்கியும்
சீனாவின் கட்டிடத் துறை அமைச்சும் இணைந்து கட்டிடத்துறையில் உள்ள நிறுவனங்களுக்கு 2020இல்
மூன்று நிபந்தனைகளை விதித்தன. அவை மூன்று செங்கோடுகள் என
அழைக்கப்படுகின்றன:
1. ஒரு
நிறுவனத்தின் கடன் அதன் சொத்துக்களின் பெறுமதியின் 70%ஐத் தாண்டக் கூடாது.
2. நிறுவனத்தின்
மூலதனத்திலும் (Equity) பார்க்க அதன் கடன் குறைவானதாக இருக்க வேண்டும்.
3. நிறுவனத்தின்
காசுக்கையிருப்புக்கும் குறுங்காலக் கடனுக்கும் உள்ள விகிதம் ஒன்றாக இருக்க வேண்டும்
அதாவது சமனாக இருக்க வேண்டும்.
சீனா
இந்த மூன்று செங்கோடுகளை அறிமுகம் செய்தமைக்கு முக்கிய காரணம் வீடமைப்புக் குமிழி உருவாகக்
கூடாது என்பதற்காகவே. ஒரு நாட்டில் தொடர்சியாக வீடுகளின் விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்துக்
கொண்டு போக அந்த நாட்டில் உள்ள நிறுவனங்கள் அதிக கடன் பட்டு அதிக வீடுகளைக் கட்டிக்
கொண்டே போக ஒரு கட்டத்தில் நாட்டில் அளவிற்கு அதிகமாக வீடுகள் கட்டப்படும். அவற்றை
வாங்க யாரும் இல்லாத நிலை ஏற்படும். அப்போது வீட்டு விலைகள் பெருமளவு வீழ்ச்சியடையும்.
அதை வீடமைப்புக் குமிழி என அழைக்கப்படுகின்றது. கட்டிடங்களையும் வீடுகளையும் கட்டிய
நிறுவனங்கள் பட்ட கடனை அடைக்க முடியாமல் போகும். அதனால் வங்கிநொடிப்பு (Bankrupcy)
நிலையை அடையும். அந்த கட்டிட நிறுவனங்களுக்கு கடன் கொடுத்த வங்கிகளும் அவற்றில் பங்குகளை
வாங்கியவர்களும் பாதிக்கப்படுவார்கள். அது பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படும்.
நிலைமை மோசமானால் பல வங்கிகள் கூட வங்கிநொடிப்பு நிலையை அடையலாம்.
சீனாவின்
செங்கோட்டை மீறிச் செயற்பட்டதால் Evergrande என்னும் கட்டிட நிறுவனம் 2021 செப்டம்பரில்
பெரும் கடன் நெருக்கடியை சந்தித்துள்ளது. அது வங்கிநொடிப்பு நிலையை அடையும் இடரை எதிர்
நோக்குகின்றது. சீன அரசின் செங்கோட்டைத் தாண்டிய Evergrande நிறுவனத்திற்கு சீன அரசு
நிதி உதவி செய்து அதை மீட்க மாட்டாது எனக் கருதப்படுகின்றது. சீனாவின் முன்னணி கட்டிடம்
கட்டும் நிறுவனங்கள் முப்பதின் அரைப்பங்கு நிறுவனங்களுக்கு மேற்பட்டவை சீன அரசின் மூன்று
செங்கோடுகளையும் தாண்டி நிதி நெருக்கடியில் உள்ளன என்று இலண்டனில் இருந்து வெளிவரும்
Financial Times பத்திரிகை ஆய்வு செய்து கட்டுரை ஒன்றைப் பிரசுரித்துள்ளது.
சீனர்கள்
நீண்ட காலத் திட்டமிடுவதில் வல்லவர்கள். சீன நிறுவனங்கள்?
No comments:
Post a Comment