பலஸ்த்தீனிய
இஸ்லாமிய புனிதப் போர் அமைப்பினர் ஐந்து பேரும் அக்சா மாவீரர் படையின் முன்னாள் கட்டளைத்
தளபதி ஜகாரியா ஜுபெய்தி ஆகியோர் இஸ்ரேலின் உயர் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக்க ஜிபோவா
சிறையில் இருந்து 2021 செப்டம்பர் 5-ம் திகதி அதிகாலை ஒரு மணியளவில் தப்பி ஓடினார்கள்.
அவர்கள் சுரங்கம் வெட்டி அதனூடாக தப்பி ஓடினார்கள் எனப்படுகின்றது. ஜகாரியா ஜுபெய்தி
Intifada என்னும் கல்லெறி போராட்டத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுபவர் என்பது மட்டுமல்ல
பல தற்கொலைத் தாக்குதல்களுக்கு உபாயங்கள் வகுத்தவரும் ஆவர். 1976-ம் ஆண்டு பிறந்த ஜுபெய்தி
இஸ்ரேலிய அரசால் மிகவும் தேடப்பட்டவராக இருந்தவர். பின்னர் 2007-ம் ஆண்டு இஸ்ரேலின்
பொதுமன்னிப்பு உடன்பட்டு தனது படைக்கலன்களை பலஸ்த்தீனிய தேசிய அதிகார சபையிடம் கையளித்தவர்.
ஆனால் அவருக்கு வழங்கிய மன்னிப்பை 2011 டிசம்பரில் இரத்துச் செய்தது.
தப்பி
ஓடியவர்களில் நால்வர் இரட்டை ஆயுள் தண்டனை பெற்றவர்கள். ஜகாரியா ஜுபெய்தியின் மீதும்
மற்றொருவர் மீதும் வழக்கு நடந்து கொண்டிருக்கின்றது. 1998-ம் ஆண்டின் பின்னர் முதல்
தடவையாக இஸ்ரேலிய சிறையில் இருந்து பலஸ்த்தீனியர்கள் தப்பி ஓடியுள்ளனர். மொனடேல் யக்கூப்
நபீட் , யக்கூப் காசிம், யக்கூப் முகம்மது கத்ரி, நயீம் கமாம்ஜீ, மக்மூட் அப்துல்லா
ஆடா, என்பன ஜகாரியா ஜிபெய்தியுடன் தப்பிச் சென்ற மற்றக் கைதிகளின் பெயர்கள் என அல்
ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. அவர்களுடைய கழிப்பறையில் இருந்து சுரங்கம் தோண்டுவதற்கு
வெளியார் உதவி கிடைத்திருக்க வேண்டும் எனக் கருதப்படுகின்றது.
இஸ்ரேலின்
உயர் பாதுகாப்புச் சிறையில் இருந்து பலஸ்த்தீனிய போராளிகள் தப்பிச் சென்றது இஸ்ரேலுக்கு
மிகவும் அதிர்ச்சியளிக்கும் செயல் என பல போராளி அமைப்புக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளன.
இது மன உறுதியுடன் தொடர்ச்சியாகப் போராடினால் எதையும் சாதிக்கலாம் என்ற நம்பிக்கையை
தமக்கு தருவதாக பல போராளிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இவர்களைப் போல் ஐயாயிரத்துக்கு
மேற்பட்ட பலஸ்த்தீனியர்கள் இஸ்ரேலிய சிறைகளில் வைக்கப்பட்டுள்ளனர். காசா நிலப்பரப்பில்
ஹமாஸ் போராளிகள் இனிப்பு பரிமாறினர்.
இஸ்ரேலிய
தலைமை அமைச்சர் இந்த சிறைத் தப்பி ஓட்டத்தை ஒரு கடுமையான நிகழ்வு (Serious
Incident) என்றார். உண்மையில் இது இஸ்ரேலுக்கு ஒரு மோசமான மூக்குடைப்பு.
சீனாவின்
ஏற்றுமதி சார் பொருளாதார வளர்ச்சியால் அங்கு வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின்
தொகை மொத்த மக்கள் தொகையின் 3.3விழுக்காடாக உள்ளது. இதை இந்தியாவின் 29.3 விழுக்காடு
வறியோர் தொகையுடன் ஒப்பிடுகையில் ஆச்சரியமாக இருக்கின்றது. இருந்தும் சீன அதிபர் ஜீ
ஜின்பிங் சீனாவில் சமத்துவமின்மை ஒழிக்கப்படவேண்டும் என உறுதியாகச் சொல்லி இருக்கின்றார்.
பொதுவுடமை மற்றும் சமூகவுடமையை வலியுறுத்தி வந்த சீனா 1979இல் அவற்றில் இருந்து விலகி
அரை முதலாளித்துவ நாடாக தன்னை மாற்றி பொருளாதாரச் சீர்திருத்தத்தை அறிமுகம் செய்தது.
அதனால் (அரசால் கட்டுப்படுத்தப்பட்ட, தனிமைப்படுத்தப்பட்ட, திறனற்ற) சீனப் பொருளாதாரம்
பெரும் வளர்ச்சியை கண்டு கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் சீன அதிபர் ஜீ ஜின்பிங்
நாட்டின் பல்வேறு பிராந்தியங்களிடையேயும் பல்வேறு மக்களிடையேயும் சமமான வருமானப்பங்கீடு
சமூகவுடமையின் முக்கிய அம்சங்களாக இருப்பதுதான் சீனப்பாணி நவீனமயமாக்குதலாகும் என்கின்றார்.
சீன மக்களின்
செல்வ நிலை உயர்த்தப்பட வேண்டும்
சீனப்
பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழும் ஏற்றுமதியும் உட்கட்டுமான அபிவிருத்தியும் இப்போது
தடைகளைச் சந்தித்துள்ளன. சீனாவின் பொருளாதார வளர்ச்சி இனி சீன மக்களின் கொள்வனவில்
தங்கியிருக்க வேண்டும். அதற்கு சீனமக்களின் வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும். அமெரிக்கர்களின்
சராசரி தனிநபர் வருமானம் சீனர்களின் தனிநபர் வருமானத்திலும் 5.78 மடங்கு அதிகமானதாக
உள்ளது. அதனால் உலகின் செல்வந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா ஐந்தாவதாகவும் சீனா
57வதாகவும் உள்ளன. அமெரிக்காவின் மொத்த தேசிய உற்பத்தியில் அமெரிக்கர்களின் கொள்வனவின்
பங்கு எழுபது விழுக்காடாகும். சீனாவில் அது 39 விழுக்காடாக உள்ளது. பொருளாதாரத்தில்
முன்னணியில் இருக்கும் நாடுகளில் அது 55 விழுக்காட்டிற்கும் அதிகமாக இருக்கின்றது.
அமெரிக்காவின் ஏற்றுமதி அதன் இறக்குமதியிலும் பார்க்க ஐந்து விழுக்காடு குறைவாகும்.
அதனால் அமெரிக்காவின் மொத்த தேசிய உற்பத்தியில் ஐந்து விழுக்காடு குறைக்கப்படுகின்றது.
சீனப் பொருளாதாரம் உலக அரங்கில் உறுதியாக நிற்பதற்கு அது ஏற்றுமதியில் தங்கியிருப்பது
குறைக்கப்பட்டு உள்நாட்டு மக்களின் கொள்வனவில் தங்கியிருக்க வேண்டும். அதற்கு சீன மக்களின்
செல்வ நிலை உயர்த்தப்பட வேண்டும். சீனத் தலைமை அமைச்சர் லீ கெக்க்யாங் இதற்காக ஒரு
புதிய திட்டத்தை முன் வைத்துள்ளார். சீனாவில் உற்பத்திக் காரணிகளை திறன்படச் செயற்படுத்தல்,
அதிக வருமானம் உள்ளவர்களிடம் வரி அறவிட்டு குறைந்த வருமானமுள்ளவர்களுக்கு உதவி செய்தல்,
செல்வந்தர்கள் தாமாகவே வருமானம் குறைந்தவர்களுக்கு உதவி செய்தல். சீனாவின் புதிய திட்டம்
“பொதுச் செழுமை” என அழைக்கப்படுகின்றது. சீனப் பொதுவுடமைக் கட்சி தனது செயற்திட்டங்களில்
பொதுச் செழுமை முதலிடம் வகிக்கின்றது. சீன அதிபர் ஜீ ஜின்பிங் 2021-ம் ஆண்டின் முதல்
எட்டு மாதங்களில் ஆற்றிய உரைகளில் 65 தடவை “பொதுச் செழுமை” என்ற பதம் பாவிக்கப்பட்டுள்ளது
அரை முதலாளித்துவ
சீனா?
1978-ம்
ஆண்டு “திறந்த கதவு” கொள்கை என்னும் பெயரில் சீனா வெளிநாட்டு முதலீடுகளையும் வேற்று
நாடுகளுடனான வர்த்தகத்திர்கும் வழிவகுத்த1979-ம் ஆண்டு பொருளாதார சீர்திருத்தத்தை ஆரம்பித்த
சீனா 1979இல் அமெரிக்காவுடன் உறவையும் உருவாக்கியது. அதே ஆண்டில் சீனாவில் பல சுதந்திர
வர்த்தக வலயங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அப்போது ஆரம்பித்த சீனப் பொருளாதார வளர்ச்சி இன்றுவரை
வளர்ந்து கொண்டே இருக்கின்றது. உலக சரித்திரத்தில் எந்த ஒரு நாடும் 40 ஆண்டுகள் தொடர்ச்சியான
வளர்ச்சியைக் காணவில்லை. தற்போது சீன அதிபர் ஜின்பிங் முன்வைக்கும் சமூகவுடமைக் கொள்கை
சீனாவை “அரை முதளாளித்துவ நாடு” என்ற நிலையில் இருந்து விலக்கி முழுமையான சமூகவுடமை
நாடு என்ற நிலையை நோக்கி நகர்த்தினாலும் சீனா தனது தனியார் துறை தொடர்ந்து பொருளாதார
வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கின்றார். சீனா அமெரிக்காவை
விஞ்சி பொருளாதாரத்தில் வளராது என்கின்றார் கலிபோனியப் பல்கலைக்கழகமொன்றில் அரசறிவுத்துறைக்கு
பொறுப்பான சீனரான MINXIN PEI.
சீனச்
செல்வந்தர்கள்
ஒரு பில்லியன்
டொலர்களுக்கும் அதிக சொத்துக்களை கொண்ட செல்வந்தர்கள் அமெரிக்காவில் 724பேரும் சீனாவில்
626பேரும் இந்தியாவில் 140பேரும் உள்ளனர். அதிக செல்வந்தர்கள் இருப்பது ஒரு முதலாளித்துவ
நாடாக இருக்கும் அமெரிக்காவிற்கு உகந்ததாக இருக்கலாம். ஆனால் சோசலிஸ நாடாக இருக்க முயலும்
சீனாவிற்கு அது உகந்ததல்ல என்பது சீன அதிபர் ஜீ ஜின்பிங்கின் கருத்து. சீனா இரசியாவிடமிருந்து
பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். இரசியா பொதுவுடமையைக் கைவிட்டு மக்களாட்சி நாடாக மாற்றப்பட்டாலும்
அங்கு சில பெரும் செல்வந்தர்கள் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இரசிய
அதிபர் விளடிமீர் புட்டீன் கூட ஒரு பெரும் செல்வந்தரே. சில பெரும் செல்வந்தர்கள் கையில்
ஒரு நாட்டின் பொருளாதாரமும் ஆட்சியும் இருப்பதை சிலராண்மை (Oligarchy) என்பர். இது
மக்களாட்சிக்கும் சமுக்வுடமை ஆட்சிக்கும் முரணானதாகும். அதனால் சீனாவில் பெரும் செல்வந்தர்கள்
உருவாகுவதை சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஐயத்துடன் நோக்குகின்றார். சீனாவின் பெரும் செல்வந்தர்களில்
ஒருவரான ஜக் மாவிற்கு சொந்தமான நிறுவனம் தனது பங்குகளை பொது மக்களுக்கு விற்பனை செய்ய
முற்பட்ட போது ஜீ ஜின்பிங் அதைத் தடை செய்தார். அதைத் தொடர்ந்து ஜக் மாவிற்கு சொந்தமான
நிறுவனங்களின் பங்குகளின் விலை வீழ்ச்சியடைந்ததால் அவரது செல்வம் பத்து பில்லியன் டொலர்களால்
குறைந்து போனது.
நடுத்தர
வருமானப் பொறியை சீனா தவிர்க்க வேண்டும்
வருமானம்
குறைந்த மக்களைக் கொண்ட நாட்டில் ஊழியக் கொடுப்பனவு குறைந்த அளவில் இருப்பதால் அங்கு
செய்யப்படும் வெளிநாட்டு முதலீடுகள் வருமானம் கூடிய நாடுகளில் செய்யப்படும் முதலீடுகளிலும்
பார்க்க அதிக இலாபத்தைத் தரும். தொடர்ச்சியான வெளிநாட்டு முதலீட்டால் மக்களின் வருமானம்
அதிகரித்து வேலைவாய்ப்பின்மை குறைந்து கொண்டு போகும். அதனால் அந்த நாடு நடுத்தர வருமான
நாடாக வளரும். அப்போது அந்த நாட்டில் ஊழியக் கொடுப்பனவு அதிகமாகும். அதனால் அந்த நாட்டில்
வெளிநாட்டு முதலீடு குறையத் தொடங்கும். மக்கள் தொடர்ச்சியாக நடுத்தர வருமானமுள்ளவர்களாக
மட்டும் இருப்பார்கள். இதை நடுத்தர வருமானப் பொறி என்பர். இதனால் நாட்டின் பொருளாதார
வளர்ச்சி குறையத் தொடங்கும். சீன அரசு தமது நாடு நடுத்தர வருமானப் பொறிக்குள் சிக்காமல்
இருக்க பெரு முயற்ச்சி செய்கின்றது. சீனாவில் நடுத்தர வருமானம் கொண்ட மக்கள் தொகை தற்போது
400 மில்லியன்களாகும். இதை 2025இல் இருமடங்காக உயர்த்த சீன அரசு திட்டமிட்டுள்ளது.
சீன அதிபரினதும்
தலைமை அமைச்சரினதும் புதிய கொள்கைகளுக்கு இணங்க சீனாவின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான
மா ஹுவாரெங்கிற்கு சொந்தமான டென்செண்ட் (Tencent) நிறுவனம் பொதுச் செழுமைக்கு என
7.7பில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு குறைந்த வருமானமுள்ள மக்களின்
நலன்களுக்காகப் பயன்படுத்தப்படும். இது போன்று மேலும் பல செல்வந்தர்கள் நன் கொடைகளை
வழங்கியுள்ளனர்.
செல்வந்தர்களின்
பிள்ளைகளின் கல்வியில் கைவைத்த சீனா
சீனாவில்
உள்ள பல தனியார் கல்வி நிறுவனங்கள் வெளிநாட்டு முதலீடுகளுடன் இயங்குகின்றன. இவற்றில்
பல செல்வந்தர்களின் பிள்ளைகள் கல்வி கற்று வந்தனர். அதனால் அவர்களின் கல்வித்தரம் மற்றப்
பிள்ளைகளின் கல்வித்தரத்துடன் ஒப்பிடுகையில் மிகவும் உயர்ந்த்தாகவும் உலகத் தரமானவயாகவும்
இருந்தன. சீன அரசு ஒரே நாளில் அந்த கல்வி நிறுவனங்களை மூடி விட்டது. இதனால் பல வெளிநாட்டு
முதலீட்டாளர்கள் பெரும் இழப்பீட்டைச் சந்தித்தனர். கல்வியில் சமத்துவம் நிலவ வேண்டும்
என்ற எண்ணத்துடன் இதைச் செய்ததாக சீன அரசு அறிவித்தது.
சீனப்
பொதுவுடமைக் கட்சியிலும் ஆட்சியிலும் தனக்கு என ஓர் அசைக்க முடியாத இடத்தை பெற்றுள்ள
ஜீ ஜின்பிங் மக்கள் மத்தியிலும் ஓர் அசைக்க முடியாத இடத்தைப் பெறுவதற்காக “பொதுச் செழுமை”,
சமூகவுடமை போன்ற பதங்களை கையில் எடுத்துள்ளாரா என்ற ஐயமும் எழுந்துள்ளது. பெரும் செல்வந்தர்கள்
ஒன்றிணைந்து சீனாவின் ஆட்சி முறைமையையே மாற்றியமைக்க முயல்வார்களா என்ற கேள்வியும்
எழுந்துள்ளது. ஜீ ஜின்பிங் பல கலைஞர்கள் புகழின் உச்சிக்கு போவதற்கு எதிராகவும் நடவடிக்கைகள்
எடுத்து வருகின்றார். பெரும் புகழ் பெற்ற சீன நடிகை ஒருவர் தண்டிக்கப்பட்டுள்ளார்.
கலைஞர்களுக்கு இரசிகர் மன்றம் அமைப்பவை போன்றவற்றையும் அவர் தடை செய்துள்ளார். இவை
செல்வ சம பங்கீட்டுகாக அல்ல.
தலிபான்களின்
ஆதரவில் அல் கெய்தா மீண்டும் தலையெடுக்குமா?
ஆப்கானிஸ்த்தானில்
பல் வேறு இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் பத்தாயிரம் வரையில் இருக்கலாம்
என எதிர்பார்க்கப்படுகின்றது. அதில் ஹக்கானி அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆறாயிரமும் ஐ.எஸ்-கே
அமைப்பைச் சேர்ந்தவர்கள் இரண்டாயிரமும் அல் கெய்தா அமைப்பைச் சேர்ந்தவர்கள் இருநூறும்
இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தலிபான் அமைப்பினர் அல் கெய்தாவுடன் நல்லுறவை
வைத்திருக்கின்றனர். ஹக்கானி அமைப்பினர் தலிபான்களுடனும் ஐ.எஸ் கே அமைப்பினருடனும்
நல்லுறவை வைத்திருக்கின்றனர். தலிபான்கள்லும் பார்க்க ஹக்கானை அமைப்பினர் காபூல் நகரை
கையாள்வதில் வல்லவர்கள். இதனால் தலிபான்கள் தமது நட்பு அமைப்பான ஹக்கானி அமைப்பினரிடம்
காபூல் நகரப் பாதுகாப்பை ஒப்படைத்திருந்தனர். இதனால்தான் ஹக்கானி அமைப்புடன் நட்புடைய
ஐ.எஸ்-கே அமைப்பினரால் காபூல் விமான நிலையத்தின் மீது தாக்குதல் செய்து 16 அமெரிக்கர்கள்
உட்பட பலரைக் கொல்ல முடிந்தது.
அமெரிக்காவின்
தெரிவிக்கப்படும் அச்சம்
அமெரிக்க
நாடாளுமன்ற உறுப்பினர் மைக்கேல் மக்கோல் “நாம் 9/11இற்கு முன்பிருந்த நிலைக்குத் திரும்பிக்
கொண்டிருக்கின்றோம் – ஆப்கானிஸ்த்தான் மீண்டும் பயங்கரவாத உற்பத்தி நிலம்” என்றார்.
அமெரிக்கப் படைத்தளபதி அல் கெய்தாவும் ஐ.எஸ்.ஐ.எஸ் தங்கள் வலையமைப்புக்களை ஆப்கானிஸ்த்தானில்
துரிதமாக மீளக் கட்டியெழுப்பலாம் என எச்சரித்துள்ளார். அமெரிக்காவும் தலிபான்களும்
கட்டார் தலைநகர் டோஹாவில் நடத்திய பேச்சு வார்த்தையில் அல் கெய்தா போன்ற அமெரிக்கா
விரும்பாத திவிரவாத அமைப்புக்களின் வளர்ச்சிக்கோ அல்லது செயற்பாட்டிற்கோ தலிபான்கள்
ஆப்கானிஸ்த்தானில் இடம் கொடுக்க மாட்டார்கள் என்ற உறுதி மொழி வழங்கியிருந்தனர்.
பஞ்சீர்
தலையிடி
காபூலில்
இருந்து வட கிழக்காக 150கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மரகத கல் நிறைய உள்ள பஞ்சீர்
பள்ளத்தாக்கில் வட கூட்டமைப்பு என்னும் போராளி அமைப்பு திரண்டுள்ளது. ஆப்கானிஸ்த்தானின்
துணை அதிபர் அமருல்லா சாலெ கூட அங்கு போயிருக்கின்றார்.
தலிபான் தாக்குதலின் போது தப்பி ஓடிய ஆயிரக் கணக்கன அரச படையினரும் அங்கு தப்பி ஓடியுள்ளனர்.
இவர்களின் பெரும்பாலானவர்கள் தஜிக் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு தஜிக்கிஸ்த்தான்
நாடு ஆதரவு வழங்கலாம். தலிபான்களால் கொல்லப்பட்ட முன்னாள் வட கூட்டமைப்பின் தளபதியின்
மகனான அஹமது மசூத்தும் பஞ்சீர் பள்ளத்தாக்கில் இருக்கின்றார். இவர்களுக்கு வெளிநாட்டு
உதவிகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தலிபான்களை எதிர்க்கும்
குழுக்களுக்கு படைக்கலன்களை அனுப்பவில்லை என்கிறது தஜிக்ஸ்தான் நாடு. அது எங்கப்பன்
குதிருக்குள் இல்லை என்பது போலிருக்கின்றது.
தலிபான்களைப்
பாராட்டிய அல் கெய்தா ஆதரவு ஊடகம்
தலிபான்களின்
வெற்றி உலகெங்கும் உள்ள பல இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களுக்கு பெரும் ஊக்கத்தைக் கொடுத்துள்ளது.
இந்தியா வைத்திருக்கும் கஷ்மீர் பிரதேசத்தில் உள்ள திவிரவாத அமைப்புக்கள் அமெரிக்காவிற்கு
ஆப்கானிஸ்த்தானில் நடந்தது உங்களுக்கும் நடக்கும் என இந்தியாவைப் பார்த்து சொல்கின்றன.
இந்தியா வசம் இருக்கும் கஷ்மீர் பிரதேசதைப் பிரித்து பாக்கிஸ்த்தானுடன் இணைக்க வேண்டும்
என்ற கொள்கையுடைய ஹிஸ்புல் முஜாஹிதீன் என்ற அமைப்பு தமக்கு தலிபான்கள் உதவி வழங்க வேண்டும்
என பகிரங்கமாக கோரிக்கை விடுத்துள்ளது. தலிபானின்
வெற்றிக்கு அல் கெய்தா தனது ஊடகத்தில் பாராட்டு தெரிவித்தது. “ஆப்கான் வெற்றி கொள்ளப்பட்டுவிட்டது,
இது இஸ்லாமின் வெற்றி” என்றது அல் கெய்தா.
அல் கெய்தா
– தலிபான் வேறுபாடு
அல் கெய்தா
அமைப்பு அமெரிக்காவை அழித்த பின்னர்தான் ஓர் இஸ்லாமிய அரசை அமைக்கலாம் என்ற நம்பிக்கை
கொண்டது. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு இஸ்லாமிய அரசை அமைத்த பின்னர் அமெரிக்காவை அழிக்கலாம்
எனக் கருதியது. தலிபான் அமைப்பு ஆப்கானிஸ்த்தானில் இஸ்லாமிய அரசை அமைக்க வேண்டும் என்ற
கருத்துடையது. அது வெளிநாடுகளில் தாக்குதல் செய்வதில்லை. தலிபான் அமைப்பு பஸ்ருன் இனத்துக்கு
உரியது என்ற கருத்து நிலவுகின்றது. அல் கெய்தா இனங்களுக்கு அப்பாற்பட்ட கொள்கையுடையது.
அல் கெய்தா சியா மற்றும் சுனி என்ற பிளவையே விரும்புவதில்லை. ஆப்கானிஸ்த்தானில் 14
ஏற்றுக் கொள்ளப்பட்ட இனக்குழுமங்கள் உள்ளன. ஆப்கானிஸ்த்தானில் நாற்பது முதல் ஐம்பது
விழுக்காடு பஸ்ருன் இனத்தவர் வாழ்கின்றனர் என மதிப்பிடப்படுள்ளது. ஆப்கானிஸ்த்தானின்
வட பகுதியிலும் தென் மேற்குப் பகுதியிலும் பஸ்ருன் இனக்குழுமத்தினர் இல்லை எனச் சொல்லுமளவிற்கு
குறைந்த அளவில் வாழ்கின்றனர். தஜிக் இனக்குழும மக்கள் 25விழுக்காட்டினர் உள்ளனர். உஸ்பெக்
இனக்குழுமத்தினர் 9 விழுக்காட்டினர் வாழ்கின்றனர். ஆப்கானிஸ்த்தான் நிலப்பரப்பின் நூறு
விழுக்காடும் தலிபான்கள் தற்போது தலிபானக்ளின் கட்டுப்பாட்டில் இல்லை. பல நிலப்பரப்புக்கள்
உள்ளூர் போர்ப்பிரப்புக்கள் கட்டுப்பாடிலும் பல நிலப்பரப்புக்கள் யாருடைய கட்டுப்பாட்டிலும்
இல்லாத நிலையில் உள்ளன. 2001-ம் ஆண்டு நடந்த இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கு முன்பு
இருந்ததிலும் பார்க்க அதிக அளவு நிலப்பரப்பு ஆப்கானிஸ்த்தானில் யாருடைய கட்டுப்பாட்டிலும்
இல்லாத நிலையில் இருக்கின்றது. அல் கெய்த தேவை ஏற்படும் போதெல்லாம் புதிய பெயரில் புதிய
அமைப்புக்களை உருவாக்குவதுண்டு. அந்த வகையில் ஆப்கானிஸ்த்தானில் கட்டுப்பாடு இல்லாமல்
இருக்கும் பிரதேசங்களில் அல் கெய்தா வேறு புதிய பெயரில் இயக்கத்தை ஆரம்பிக்கலாம். அது
அமெரிக்காவிற்கு டோஹா நகரில் தலிபான்கள் வழங்கிய உறுதி மொழிக்கு முரணானதல்ல என தலிபான்கள்
வாதிடலாம்.
தலிபான்களின்
வலி தனி வலி
தலிபான்
தனது பொருளாதாரத்திலும் உலக நாடுகள் தம் அரசை அங்கீகரிப்பதிலும் உடனடிக் கவனம் செலுத்தும்.
இவற்றை நிறைவேற்றுவது தலிபானகளுக்கு பெரும் தலைவலியாக இருக்கும். அல் கெய்தாவிற்கு
ஆதரவு வழங்குவது இந்த இரண்டு முயற்ச்சிகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். பஸ்ருன்
அல்லாத இனக் குழுமங்களின் எதிர்ப்பை சமாளிக்க வேண்டிய நிலையிலும் தலிபான் இருக்கின்றது.
பிரித்தானியா ஆப்கானிஸ்த்தானிற்கு 1919இல் சுதந்திரம் வழங்கிய போது பஸ்ருன் இன மக்கள்
பெரும்பான்மையினராக வாழும் நிலப்பரப்பை இரண்டாகப் பிரித்து ஒரு பகுதியை ஆப்கானிஸ்த்தானுடன்
இணைத்தது. மற்றப் பகுதியை அப்போது தான் ஆண்டு கொண்டிருந்த தற்போது பாக்கிஸ்த்தானாக
இருக்கும் நிலப்பரப்புடன் சேர்த்து வைத்தது. இதே வகையில் தான் குர்திஷ் மக்கள் வாழும்
பிரதேசத்தையும் துருக்கி, சிரியா, ஈராக் போன்ற நாடுகளுடன் இணைத்தது. எதிர் காலத்தில்
பல்வேறு இனக்குழுமங்கள் தமக்குள் மோதிக் கொள்ளக் கூடிய வகையில் தனது குடியேற்ற ஆட்சிப்
பிரதேசங்களை பிரித்தானியா நாடுகளின் எல்லைகளை வகுத்துக் கொண்டது. தலிபான் போராளிகளில்
பலர் பாக்கிஸ்த்தானில் பஸ்ருன் இன மக்கள் வாழும் பிரதேசம் ஆப்கானிஸ்த்தானுடன் இணைக்கப்படவேண்டும்
என்ற கொள்கையுடையவர்கள். தலிபான் தலைமைக்கு இப்போது பாக்கிஸ்த்தானின் உறவு அவசியம்
என்ற நிலையில் பாக்கிஸ்த்தான் ஆப்கானிஸ்த்தான் எல்லையை மாற்றியமைக்க விரும்பும் தலிபான்களை
சமாளிப்பது பெரும் பிரச்சனையாக இருக்கும். அந்த நிலையில் இன்னொரு தீவிரவாத அமைப்பை
மீள்கட்டி எழுப்புவதில் தலிபான் தலைமை கவனம் செலுத்த முடியாது. அவை மட்டுமல்ல தொழில்நெறிஞர்கள் (Professionals) பலர் ஆப்கானிஸ்த்தானில்
இருந்து வெளியேறியுள்ளனர். இதனால் தமது அரசை முகாமை செய்வதில் தலிபான்கள் நெருக்கடியை
எதிர் நோக்கலாம்.
குறைந்த
அளவிலான அல் கெய்தா
அல் கெய்தாவிற்கும்
தலிபான்களுக்கும் இடையில் இருபது ஆண்டு கால நெருங்கிய உறவு உண்டு. அல் கெய்தா அமைப்பினர்
தலிபான் அமைப்புக்குள் ஊடுருவியும் உள்ளனர் என நம்பப்படுகின்றது. அமெரிக்க உளவுத் துறையும்
வெளியுறவுத் துறையும் “ஆப்பாக்” கொள்கை என ஒன்றை வகுத்திருந்தன. அது ஆப்கானிஸ்த்தானையும்
பாக்கிஸ்த்தானையும் ஒரு பிரதேசமாகக் கருதி வகுக்கப்பட்டவை. தலிபானின் வெற்றி மற்ற இஸ்லாமிய
தீவிரவாத அமைப்புக்களுக்கு தூண்டுதலாக அமையும். அல் கெய்தாவின் தலைவர்கள் பலர் அமெரிக்க
ஆளில்லாப் போர் விமானங்களால் கொல்லப்பட்டுவிட்டனர். இப்போது ஆப்கானிஸ்த்தானில் அல்
கெய்தா போராளிகள் இருநூறு பேர் இருக்கலாம என மதிப்பிடப்பட்டுள்ளது. அல் கெய்தாவிற்கு
என்று ஓர் உலகளாவிய தலைவர் என்று சொல்லும்படி யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. நாடுகளுக்கு
என்றே தலைவர்கள் இருக்கின்றார்கள். ஐ எஸ் ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு அல்
கெய்தாவின் எதிரியாகவே செயற்படுகின்றது. ஆபிரிக்காவின் சஹாராவடி நிலப்பரப்பில் செயற்படும்
பொக்கோ ஹரம், அல் ஷஹாப் போன்ற அமைப்புக்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினருடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளனர்.
அல் கெய்தாவின் கிளை அமைப்பான அரபுக் குடாநாட்டிற்கான அல் கெய்தா யேமனில் முடங்கிப்
போயுள்ளது. மேற்கு நாடுகளினதும் இஸ்ரேலினதும் உளவுத் துறையினர் அல் கெய்தாவை தொடர்ந்து
கண்காணிதுக் கொண்டிருக்கும் நிலையில் அக் கெய்தாவால் தலையெடுக்க முடியாது.
அமெரிக்கா ஆப்கானிஸ்த்தானில் வைத்திருந்த “படைத்தளத்திற்கு” மாற்றீடாக இலங்கை திருகோணமலயில் இடம்
தேடுகின்றது என சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்கா
தனது கேந்திரோபாய நோக்கங்களுக்காகவும் தனது உலக ஆதிக்கத்தை நிலை நிறுத்தவும் உலகெங்கும்
படைத்தளங்களை தனது நட்பு நாடுகளிலும் தனது ஆதிக்கத்தில் உள்ள நாடுகளிலும் வைத்திருக்கின்றது.
அதே காரணங்களுக்காக உலகில் பல போர் முனைகளையும் தொடர்ச்சியாக திறந்து கொண்டிருக்கின்றது.
ஆப்கானிஸ்த்தானில் அமெரிக்கப் படைகள் இருபது ஆண்டுகள் நிலை கொண்டமைக்கு காரணம்:
1. அங்குள்ள
தனக்கு ஆபத்தான தீவிரவாத அமைப்புக்களை ஒழிப்பது
2. அங்கு
தனது படையினருக்கு ஒரு போர்ப்பயிற்ச்சிக் களத்தை உருவாக்குவது.
3. அங்குள்ள
கனிம வளங்களைச் சுரண்டுவது
ஆக ஆப்கானிஸ்த்தான்
அமெரிக்காவிற்கு ஒரு போர்க்களமாகவும் போர்ப்பயிற்ச்சிக் களமாகவும் பொருளாதார நலன்களுக்காகவும்
பாவிக்கப் பட்டது. இருபது ஆண்டுகளில் சுழற்ச்சி முறையில் எட்டு இலட்சத்திற்கும் அதிகமான
அமெரிக்கப் படையினருக்கு நேரடிப் போர்ப்பயிற்ச்சி வழங்கப்பட்டுள்ளது. அதுவும் மிக கடினமான
பூகோள அமைப்பைக் கொண்ட நிலப்பரப்பில் பயிற்ச்சி பெற்றுள்ளனர் அமெரிக்கப் படையினர்.
ஆப்கானிஸ்த்தான்
பேரரசுகளின் புதைகுழி என ஒரு புறம் அழைக்கப்பட்டாலும் மறுபுறம் அது வளங்களின் தொட்டில்
எனவும் அழைக்கப்படுகின்றது. ஒன்று முதல் மூன்றுவரையிலான ரில்லியன் டொலர் பெறுமதியான
கனிம வளங்கள் அங்கு உள்ளன. ஒரு புறம் ஆப்கானிஸ்த்தானில் அமெரிக்கப் படைகள் போர் புரிந்து
கொண்டிருக்க மறுபுறம் அமெரிக்க நிறுவனங்கள் அங்குள்ள கனிம வளங்களை வரியின்றி தடையின்றி
அகழ்ந்து எடுத்துக் கொண்டன.
ஒரு நாடு
இன்னொரு நாட்டில் படைத்தளம் அமைத்து ஒரு எதிரி நாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க
முயலும் போது படைத்தளம் அமைக்கப்பட்டுள்ள நாட்டில் படைத்தளம் அமைக்கும் நாட்டிற்கு
கடும் எதிர்ப்பு இருக்கக் கூடாது. அமெரிக்கா பிரித்தானியா, ஜேர்மனி, ஜப்பான், தென்
கொரியா போன்ற நாடுகளில் அமைத்தது போல் ஆப்கானிஸ்த்தானில் அமைக்க முடியாது. அமைக்கவும்
கூடாது.
இலங்கை
திருகோணமலையில் பல ஏக்கர் நிலம் அமெரிக்காவிற்கு வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
அதை சிங்களத்து அரிச்சந்திரன் கெஹலிய ரம்புக்வெல மறுத்தும் உள்ளார். இலங்கையில்
1980களில் அமெரிக்காவிற்கு திருக்கோணமலையில் ஒரு எரிபொருள் மீள் நிரப்பு நிலையமும்
சிலாபத்தில் நீர்மூழ்கிகளுக்கான அதிதாழ் அலைவரிசை (Ultra-Low wave) தொடர்பாடல் நிலையமும்
தேவைப்பட்டது. தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி அத்தேவையை இல்லாமற் செய்துள்ளது. அமெரிக்கா
நீண்ட காலம் கடலில் பயணிக்கக் கூடிய அணுவலுவில் இயங்கும் கடற்கலன்களை இப்போது உருவாக்கிக்
கொண்டிருக்கின்றது.
1990களில்
தொடர்ச்சியாக கடலில் பயணிக்கும் தம் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கும் நிலையம் இலங்கியின்
கிழக்கு கரையோரத்தில் தேவைப்பட்டது.
தற்போது
அமெரிக்காவின் விமானம் தாங்கிகளையும் அதன் பரிவாரக் கப்பல்களையும் பாதுகாக்க அதிக அளவு
ஆளில்லா விமாங்கள் தேவைப்படுகின்றன. விமானம் தாங்கி கப்பல்களில் மட்டுப்படுத்தப்பட்ட
இடம் உள்ள படியால் அவை பயணிக்கும் கடற்பரப்பில் உள்ள நாடுகளில் அமெரிக்கா புதிதாக உலகெங்கும்
பல ஆளில்லா போர்விமானத்தளங்களை பெற முயல்கின்றது. தற்போது அமெரிக்கா இலங்கையில் தனக்கு
என ஒரு நிலப்பரப்பு வேண்டும் என்ற நிலையில் இருப்பது அதற்காக மட்டுமே. அதன் ஓர் அம்சமாக
அமெரிக்கா திருக்கோணமலையில் கண் வைத்திருக்கலாம்.
1994இல்
மைக்குறோசொஃப்ற்றின் பில் கேட்ஸ் வங்கித்தொழில் அவசியம் ஆனால் வங்கிகள் அவசியமில்லை
என்றார். இப்போது வங்கிகளுக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே பணவைப்பீடு, பணம்
மீளப்பெறல், பங்குகள் வாங்குதல் போன்ற பல நடவடிக்கைகளை கைப்பேசிகளில் உள்ள செயலிகள்
மூலம் செய்ய முடியும். செயலிகள் மூலம் வங்கிகளில் எந்த நேரமும் வாடிக்கயாளர்கள் தங்கள்
நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். பொருளாதார வளர்ச்சி, படைத்துறை வளர்ச்சி, போன்றவற்றிற்கு
கணித் தொழில்நுட்பத்தின் பல்வேறுவகைகளிலும் முன்னேற வேண்டும் என்பதைச் சீனா உணர்ந்துள்ளது.
சீனாவின் இணையவெளிப் பொருளாதாரம் அதன் மொத்த தேசிய உற்பத்தியின் 4.4 விழுக்காடாகும்.
இது அமெரிக்கா, ஜேர்மனி போன்ற நாடுகளினதிலும் பார்க்க அதிகமானதாகும். இந்தத் துறையை
மேம்படுத்துவதன் மூலம் சீனா கைத்தொழில் உற்பத்தி துறையில் குன்றும் வளர்ச்சியை ஈடு
செய்யலாம்.
கைப்பேசிச்செயலித்
துறையில் முன்னோக்கிப் பாய்ந்த சீனா
மீகச்செயலி(SUPER
APP) என்பது பல செயலிகள் செய்யக்கூடியவற்றைச் செய்யக் கூடிய ஒரே செயலி ஆகும். மீகச்செயலிகளை
உருவாக்கி பயன்பாட்டில் விடுவதில் சீனா உலகில் முன்னணியில் இருக்கின்றது. சீனாவின்
வீச்சற் (WeChat) என்னும் செயலிக்குச் சொந்தக்காரர்கள் முதலில் மீகச்செயலியை உருவாக்கினர்.
அதைத் தொடர்ந்து அலிப்பே என்னும் செயலி மூலம் பணக்கொடுப்பனவு செய்யும் நிறுவனம் வெற்றீகரமாக
மீகச்செயலியை உருவாக்கிப் பயன்படுத்தியது. சீனாவைத் தொடர்ந்து பல ஆசிய நாடுகள் மீகச்செயலிகளை
உருவாக்கியுள்ளன. மேற்கு நாட்டின் ஊபர் என்னும் வாடகைப் போக்கு வரத்து நிறுவனத்தின்
செயலியிலும் பார்க்க மிகச் சிறந்த மீகச்செயலியை ஆசிய நாடுகளில் பயன்படுத்தப்படுவதால்
மிகச்செயலிகள் ஊபர் நிறுவனத்தின் வர்த்தகத்தைத் தோல்வியடைய வைத்தன.
நிதித்
தொழில்நுட்பத்தில் முன்னோக்கிப்பாய முயலும் சீனா
நிதிச்சேவைகள்
(Financial Services) என்பது நிதித்துறையில் செயற்படும் வங்கிகள், காப்புறுதி நிறுவனங்கள்,
முதலீட்டு வங்கிகள், பங்குச் சந்தை, வீடு விற்பனை முகவரகங்கள் போன்றவை வழங்கும் சேவைகளாகும்.
நிதிச் சேவைகள் துறைக்கு தேவையான மென்பொருள்களையும் வன்பொருள்களையும் வழங்குவது நிதித்தொழில்நுட்பம்
(FinTech) என அழைக்கப்படுகின்றது. இத்துறையில் ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா, சிங்கப்பூர்,
லித்துவேனியா, சுவிற்ச்சலாந்து, நெதர்லாந்து, சுவீடன், ஒஸ்ரேலியா, கனடா, எஸ்த்தோனியா
ஆகிய நாடுகள் முதற்தரப் பத்து நாடுகளாகப் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆனால் சீனா அப்பட்டியலில்
21-ம் இடத்தில் இருக்கின்றது. 21-ம் இடத்தில் இருந்தாலும் சீனா கடந்த சில ஆண்டுகளாக
நிதித்தொழில்நுட்பத் துறையில் முன்னோக்கிப் பாய்ந்து கொண்டிருக்கின்றது. சீனப் பொருளாதாரத்தில்
செய்யப்படும் கொடுப்பனவுகளில் 66விழுக்காடு கைப்பேசிச் செயலிகளூடாகச் செய்யப்படுகின்றன.
சீனாவின் 1408மில்லியன் மக்களில் 780மில்லியன் மக்கள் கைப்பேசிச் செயலிகளூடாக தமது
கொடுப்பனவுகளைச் செய்கின்றனர். சீனாவில் கைப்பேசிச் செயலிகளூடாகச் செய்யப்படும் கொடுப்பனவுகலின்
பெறுமதி 52 ரில்லியன் டொலர்களாக இருக்கையில் அமெரிக்காவில் அது 98 மில்லியன்கள்
மட்டுமே.
அகன்ற
அலைவரிசையில் அதிகம் பாய்ந்த சீனா
தற்போது
பல நாடுகளிலும் பாவிக்கப்படும் அகன்ற அலைவரிசையின் 4ஜீ (நான்காம் தலைமுறை) எனப்படுவது
Long Term Evolution (LTE) என்பதாகும். அது அது 3ஜீ இலும் பார்க்க பத்து மடங்கு வேகமாக
தகவற் பரிமாற்றம் செய்யக் கூடியது. 5ஜீ அலைக்கற்றை 4ஜீ அலைக்கற்றையிலும் நூறு மடங்கு
வேகத்தில் செயற்படக் கூடியது. 4ஜீ
தொழில்நுட்பமுள்ள கைப்பேசியில் இரண்டு மணித்தியாலத் திரைப்படத்தை தரவிறக்கம் செய்ய ஏழு
நிமிடங்கள் எடுக்கும். 5ஜீ
தொழில்நுட்பம் உள்ள கைப்பேசிக்கு 6 செக்கன்கள்
மட்டுமே எடுக்கும். கைப்பேசிகளில் மட்டுமல்லதானாக இயங்கு மகிழூந்துகள், ஆளில்லாப் போர்விமானங்கள் போன்றவற்றிலும்
5ஜீ பாவிக்கப்படும். ஒரு நாட்டில் இருக்கும் மருத்துவர்கள் இன்னொரு நாட்டில் உள்ள நோயாளிகளைப்
பரிசோதிப்பதையும் சிகிச்சை செய்வதையும் 5ஜீ தொழில்நுட்பம் மேலும் இலகுவானதாகவும் சிறப்பானதாகவும்
மாற்றும். போக்குவரத்து, தொழிற்றுறை உற்பத்தி,
வர்த்தகம் போர்முறைமை போன்றவற்றை இலத்திரனியல் மயப்படுத்தும் நான்காம் தொழிற்புரட்சியை 5ஜீ தொழில்நுட்பம் இலகுவாகவும்
துரிதமாகவும் சாத்தியமானதாக்கும். கணினிகள் தாமகச் சிந்திந்து செயற்படும் செயற்கை
நுண்ணறிவுப் பாவனைக்கும் 5ஜீ தொழில்நுட்பம் வழிவகுக்கும்.
உதாரணத்திற்கு ஆளே இல்லாத கடையில் ஒருவர் போய் தனக்குத் தேவையான பொருட்களை எடுத்து
வீடு வரலாம். அதற்குரிய பணத்தை உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து அந்தக் கடைக்கு
உரியவர் எடுத்துக் கொள்வார். உங்கள் முகத்தை வைத்தும் நீங்கள் வாங்கும் பொருளில்
உள்ள இலத்திரனியல் குறியீடுகளை வைத்தும் இவை செய்யப்படும். 5ஜீ தொழில்நுட்பத்தில் முன்னோடியாகச்
செயற்படும் நாடு உலகப் பொருளாதாரத்தில் முன்னோடியாகச் செயற்படும் என நம்பப்படுகின்றது.
5ஜீ தொழில்நுட்பத்தில் சீனாவின் ஹூவாவே நிறுவனம் உலகின் முன்னோடியாக உருவெடுத்ததைத்
தொடர்ந்து மேற்கு நாடுகள் அது தம் நாடுகளில் உளவு பார்க்கின்றது எனக் குற்றம் சாட்டி
ஹூவாவே நிறுவனம் தம் நாடுகளில் செயற்படுவதைத் தடை செய்துள்ளன.
நாணயத்தை எண்மிய மயப்படுத்தும் சீனா
வளர்ச்சியடைந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில்
சீனாவில் அதிக அளவு நிதிக்கொடுப்பனவுகள் இணையவெளியூடாக நடைபெறுவதால் சீனா தனது தேசிய
நாணயமான யூவானை எண்மிய மயப்படுத்தியுள்ளது. அமெரிக்கா பிரித்தானிய போன்ற நாடுகள் தமது
நாணயங்களை எண்மியப்படுத்தும் திட்டத்தை வரைந்து கொண்டிருக்கையில் சீனா அதை வெற்றிகரமாக
அறிமுகம் செய்துள்ளது. உலக அரங்கில் அமெரிக்க டொலரின் இடத்தை சீனாவின் யுவான் நாணயம்
பிடிக்க வேண்டும் என்ற சீனக் கனவை நிறைவேற்றும் முதற்படியாக சீனாவின் எண்மிய நாணயம்
அமையும் என சீன ஆட்சியாளர்கள் நம்புகின்றார்கள். சீனாவைப் பின்பற்றி மற்ற நாடுகளும்,
முக்கியமாக ஈரான், இரசியா போன்ற நாடுகள் தமது நாணயத்தை எண்மியப் படுத்தினால் அவை தமக்கிடையேயான
கொடுப்பனவுகளை டொலர் மூலம் செய்வதை விட்டு எண்மிய நாணயங்களால் செய்ய முடியும்.
செயற்கை
விவேகம்
சீனா
தனது நாட்டில் கொவிட்-19 தொற்று நோயைக் கட்டுப்படுத்தியதில் அதன் செயற்கை விவேகம் பெரும்
பங்காற்றியது. முகமினங்காணல் தொழில்நுட்பத்தின் மூலம் சீனா நாட்டில் குற்றச் செயல்களையும்
தீவிரவாதத்தையும் குறைக்க முயல்கின்றது. சீனாவில் 2.6மில்லியன் கண்காணிப்புக் ஒளிப்பதிவுக்
கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இது உலகிலேயே அதிகமான எண்ணிக்கையாகும். உலகிலேயே அதிக
அளவு மக்களைக் கொண்ட சீனாவில் அரசும் தனியார் துறையினரும் மிக அதிக அளவு தரவுகளைக்
கையாளவேண்டிய சூழ்நிலை நிலவுகின்றது. இது செயற்கை விவேகம் மூலம் தரவுகளைக் கையாள வேண்டிய
அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் செயற்கை விவேக மேம்பாட்டிற்கு சீனாவில் அதிக அளவு
நிதி ஒதுக்கப்படுவதால் சீனாவில் செயற்கை விவேகம் வேகமாக முன்னேறி வருகின்றது.
எண்மியத்
தொழில்நுட்பம் வளரும் வேகத்தில் எண்மிய குற்றச் செயல்களும் வளர்ந்து வருகின்றது. இதில்
எல்லா நாடுகளும் இணைந்து செயற்பட்டால் மட்டுமே எண்மியத் தொழில்நுட்பத்தின் முன்னேற்றம்
மக்களுக்கு பயனுடையதாக அமையும்.
சிலர்
இந்தியாவின் படைத்துறை வலிமையை மிகைப்படுத்தி காட்டும் காணொலிப் பதிவுகளைத் தொடர்ச்சியாக
யூடியுப்பில் பதிவேற்றிக் கொண்டே இருக்கின்றார்கள். தங்கள் பார்வையாளர்களை அதிகரித்து
தம் வருமானத்தை அதிகரிக்கும் நோக்குடன் உண்மைக்கு மாறான தகவல்கள் பரப்பப்படுகின்றன.
பாவம் அவர்களது பார்வையாளர்கள். கர்ணனிடம் அவன அழிக்க முடியாத கவச குண்டலங்கள் இருந்தன.
அதனால் அவர் வில்வித்தை கற்கத் தவறவில்லை, பரசுராமரிடம் வில்வித்தை கற்று சாபம் வாங்கினாலும்
அவர் கொடுத்த விஜய தனுசு என்ற வில் அவனிடம் இருந்தது அதனால் அவன் 17-ம் நாட்போரில்
எதிரிகள் பலரைக் கொன்றான். சிவபெருமானுக்காக விஸ்வகர்மா வடிவமைத்த விஜய தனுசு என்ற
வில்லை சிவன் முப்புரம் எரித்த பின்னர் இந்திரனிடம் கொடுத்தார். அதை இந்திரன் பரசுராமரிடம்
கொடுத்தான். இரசியாவின் எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமை கவச குண்டலம் என்றால் F-35
விஜய தனுசைப் போன்றது.
ரஃபேல்
F-35இலும் சிறந்ததா?
ஜெய்
ஹிந்த் என்னும் வாசகத்துடன் தம் பதிவுகளை முடிக்கும் ஆரிய ஆதிக்கத்தின் வால்பிடிகள்
F-35 இலும் பார்க்க ரஃபேல் சிறந்த விமானம் எனவும் காட்ட முயல்கின்றனர். படைத்துறையில்
முன்னணியில் இருக்கும் எல்லாம் நாடுகளும் ஐந்தாம் ஆறாம் தலைமுறைப் போர்விமானத்தையும்
ஆறாம் தலைமுறைப் போர் விமானத்தையும் பெற தொடர்ச்சியாக முயன்று கொண்டிருக்கின்றன. ரஃபேல்
நான்காம் தலைமுறைப் போர்விமானங்களில் ஒரு மேம்படுத்தப்பட்ட வகையைச் சார்ந்த விமானம்.
நான்காம் தலைமுறைப் போர்விமானங்களுக்கும் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களுக்கும் இடையில்
உள்ள வித்தியாசத்தை பழைய விரல் வைத்து சுழற்றும் தொலைபேசிகளுக்கும் தற்போது உள்ள ஐ-போன்களுக்கும்
இடையிலான வித்தியாசத்திற்கு ஈடானது. ஐந்தாம் தலைமுறைப் போர்விமானத்தில் உள்ள இலத்திரனியல்
செயற்பாடுகள் அப்படிப்பட்டவை. முன்னணி போர்விமான உற்பத்தி நாடுகள் பல இணைந்து உருவாக்கப்பட்டது
F-35. எந்த ஒரு நாட்டிலும் தங்கியிருக்காமல் தனக்குத் தேவையான படைக்கலன்களை தானே உற்பத்தி
செய்யவேண்டும் என்ற கொள்கையுடைய பிரான்ஸ் உருவாக்கிய விமானம் ரஃபேல். F-35 போர் விமானங்களில்
விரைவில் லேசர் படைக்கலன்களும் ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளும் இணைக்கப்படும். அதற்கான
வாய்ப்பு ரஃபேலில் உள்ளனவா என்பது கேள்விக் குறி. F-35ஐ வடிவமைக்கும் போது எதிர்காலத்தில்
உற்பத்தி செய்யக் கூடிய ஏவுகணைகளையும் பொருத்தக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டது. F-22இல்
கிடைத்த அனுபவத்தை வைத்தே அமெரிக்கா இந்த அம்சத்தை F-35இல் உள்ளடக்கியது. செய்மதிகளுடன்
தொடர்பாடல்கள் வைத்துச் செயற்படக்கூடிய தன்மையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. F-35 விமானத்தைச்
செலுத்த விமானியின் பங்களிப்பு மிகவும் குறைந்த அளவே தேவைப்படும் அளவிற்கு அதன் தானியங்கித்
தன்மை உள்ளது. இதனால் அதை ஓட்டும் விமானி எதிரியின் நகர்வு, இலக்கு, தாக்குதல் போன்றவற்றில்
அதிக கவனம் செலுத்த முடியும். பார்க்க ரஃபேல் அதிக வேகமாகப் பறக்கக் கூடியது என்பது
உண்மை. பொதுவாக F-35இலும் புலப்படாத்தன்மை (Stealth) கொண்ட விமானங்கள் மிக அதிக வேகமாகச்
செல்வதில்லை. அதன் இயந்திரங்கள் அதற்கு ஏற்ப வடிவமைக்கப்படும். இயந்திர வேகம் அதிகரிக்கும்
போது புலப்படாத்தன்மை இழக்கப்படும். உலகிலேயே ஊழல் குறைந்த நாடுகளில் ஒன்றான சுவிற்சலாந்து
போர் விமானங்கள் வாங்கும் முடிவை எடுக்கும் போது ரஃபேலா F-35ஆ என்ற கணிப்பில் F-35ஐயே
தெரிவு செய்தது. இந்தியா ரஃபேல் விமானம் வாங்குவதாக எடுத்த முடிவில் ஊழல் இல்லை என
ஆரிய வாற்பிடிகளால் உறுதியாகச் சொல்ல முடியுமா?
நாய்ச்சண்டையைச்
செல்லுபடியற்றதாக்கிய F-35
F-35
நாய்ச் சண்டையை செல்லுபடியற்றதாக உருவாக்கப்பட்ட வானாதிக்க விமானம் ஆகும். போர் விமானங்களிடையே
நடக்கும் Dog fight எனப்படும் நாய்ச்சண்டை என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எதிரி
விமானங்கள் குறுகிய தூரத்தில் நின்று ஒன்றை ஒன்று தாக்குவதாகும். F-35 வானாதிக்கம்
(Air Dominance) மற்றும் வான்மேன்மை (Air superiority) போன்றவைக்கு உகந்தவையாக வடிவமைக்கப்பட்டவை. ஒரு விமானம்
ஒரு குறித்த வான்பரப்பில் பறக்கும்போது அது மற்ற விமானங்களை அவ்வான்பரப்பில் பறக்க
அனுமதிக்காது என்றால் அவ்விமானம் வானாதிக்க விமானமாகும். ஒரு குறித்த விமானம் எதிரியின்
விமானங்களிலும் பார்க்க மேன்மயானதாக இருந்தால் அது வான்மேன்மை விமானமாகும். அதனால்
F-35 விமானத்தை எதிரி விமானம் கண்டறிய முன்னரி F-35 எதிரி விமானங்களை கண்டறிந்துவிடும்.
அதனால் எதிரி விமானம் F-35ஐ அண்மிக்க முன்னர் அதை F-35ஐ அழித்துவிடும். அதனால் நாய்ச்சண்டைக்கு
வாய்ப்பில்லை. குளவித் தாக்குதல் முறைமையில் F-35 விமானத்தை அணுகினால் அதன் பரிவாரங்களாக
வரும் பல ஆளில்லா போர்விமானங்களால் குளவித் தாக்குதலுக்கு வரும் விமானங்கள் அழிக்கப்பட்டுவிடும்.
நிலைமை இப்படியிருக்க ஆரிய ஆதிக்க வாற்பிடிகள் நாய்ச்சண்டையில் ரஃபேல் F-35ஐ சுட்டு
விழுத்திவிடும் எனத் தம்பட்டமடிக்கின்றனர்.
The F-35 has the most advanced sensor suite of any fighter in history, including the Active Electronically Scanned Array (AESA)
radar, Distributed Aperture System (DAS), Electro Optical Targeting System
(EOTS) and advanced electronic warfare capabilities to locate/track enemy
forces, jam radars and disrupt attacks.
Sensor Suite
The
F-35 has the most advanced sensor suite of any fighter in history, including
the Active Electronically Scanned Array (AESA) radar, Distributed Aperture
System (DAS), Electro Optical Targeting System (EOTS) and advanced electronic
warfare capabilities to locate/track enemy forces, jam radars and disrupt
attacks.The F-35
serves as an information and communications gateway, sharing its operational
picture with the ground, sea and air assets.
Sensor Fusion
The F-35's advanced sensor fusion enables pilots to draw on
information from all of their on-board sensors to create a single integrated
picture of the battlefield that greatly enhances awareness and survivability.
F-35
செலவு மிக்கதா?
F-35 செலவு மிக்க விமானம்
என்கின்றனர் சிலர். ஆனால் எதிரியைத் தோற்கடிக்க செலவுக்கான பயன்பாடு உடைய விமானம் என்கின்றனர்
அதன் உற்பத்தியாளர்கள். As the most cost-effective solution for
defeating our increasingly sophisticated adversaries, the F-35 will accomplish
what would otherwise require a far greater number of less capable aircraft to
achieve. F-35 ஐ உருவாக்கியவர்கள் தொடர்ச்சியாக அதை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.
அதன் மூலம் அதன் வானாதிக்கத்தையும் வான்மேன்மையையும் பேண முடியும்.
ரஃபேலைக்
குறைத்து மதிப்பிடக்கூடாது
பறப்பு
நேரம், பறப்பு தூரம் போன்றவற்றில் F-35இலும் பார்க்க ரஃபேல் சிறந்தது. கடல்
மட்டதில் இருந்து உயரமான தளங்களில் இருந்து பறப்பை மேற்கொள்ளக் கூடிய ரஃபேல் சீன எல்லையில்
மிகவும் பயனுள்ளதாகும்
SPECTRA (Self-Protection Equipment to Counter
Threats for RAFALE Aircraft) has been jointly developed by MBDA and Thales
to provide an integrated self-protection system for the new Rafale combat
aircraft now in service with the French Air Force and Navy. The SPECTRA integrated
electronic warfare suite provides long-range detection, identification and
accurate localisation of infrared, electromagnetic and laser threats. The
system incorporates, radar warning, laser warning and missile warning
receivers for threat detection plus a phased array radar jammer and a
decoy dispenser for threat countering. ரஃபேலை உருவாக்க
46பில்லியன் யூரோ செலவிடப்பட்டது. F-35ஐ உருவாக்க 400பில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டது.
சிலர் F-35ஐ உருவாக்க 1.6ரில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டது என்கின்றனர்.
இந்தியாவிற்கு
ரஃபேல் போதாது.
இந்தியாவின்
மிகப் பெரிய அச்சுறுத்தல் சீனாவின் ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளே. அதிலும் பெரிய அச்சுறுத்தலாக
வரவிருப்பது. சீனா அந்த ஏவுகணைகளை அல்லது அதன் தொழில்நுட்பத்தை பாக்கிஸ்த்தானுக்கு
விற்பனை செய்வதாகும். அதனால் F-35இலும் பார்க்க மேம்பட்ட புலப்படாத் (Stealth) தன்மை
கொண்ட விமானங்களும் லேசர் படைக்கலன்களும் இந்தியாவிற்கு அவசியமாகும். ஹைப்பர் சோனிக்
ஏவுகணைகளை இந்தியாவிடமிருக்கும் எஸ்-400 விமான எதிப்பு ஏவுகணைகளால் அழிக்க முடியாது.
பாக்கிஸ்த்தான் அல்லது இரசியாவுடன் ஒரு போர் என்றுவரும் போது இந்தியாவிடம் புலப்படாத்
தன்மை கொண்ட விமானங்கள் மூலம் எதிரியின் ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை எதிரி நாட்டுக்குள்
வைத்தே அழிக்க முடியும்.
பல ஊடகங்களில்
படைக்கலன்களைப் பற்றி எழுதப்படும் கட்டுரைகளில் படைக்கல விற்பனையாளர்களினதும் அவர்களது
முகவர்களதும் தாக்கம் இருக்கும். அவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும். சரியான தொழில்நுட்ப
அறிவைத் தேடிப் பெற்றுக் கொள்ளுதல் அவசியம். “Rafale Jets won’t save Indian Air
Force” என்னும் தலைப்பில் Foreign Policy என்ற அமெரிக்க சஞ்சிகையில் ஒரு கட்டுரை வந்தது.
அதை ரஃபேலுக்கு போட்டியாக இந்தியாவிற்கு தமது விமானங்களை விற்பனை செய்ய முயன்று தோல்வியடைந்தவர்களின்
குரலாகவே நான் பார்க்கின்றேன்.
மூன்றாம்
தர Youtube Channelகள் பற்றி கவனமாயிருங்கள்.
2021
ஓகஸ்ட் 8-ம் திகதி அமெரிக்கா தனது யூ.எஸ்.எஸ். ஜெரால்ட் ஆர் ஃபோர்ட் விமானம்
தாங்கிக் கப்பலின் வெள்ளோட்டதை நிறைவு செய்தது. இந்தியாவின் ஐ.என்.எஸ் விக்ராந்த்
விமானம் தாங்கிக் கப்பலும் தனது வெள்ளோட்டத்தை ஓகஸ்ட் 4-ம் திகதி ஆரம்பித்தது.
விமானம் தாங்கிக் கப்பல்களை முதலில் கடலில் இறக்கி பல்வேறு தேர்வுகளுக்கு உட்படுத்தப்படும்.
கடலில் பயணிக்கும் விதம் குண்டு வெடிப்பு அதிச்சியைத் தாங்கும் திறன், இயந்திரம் மற்றும்
பல்வேறுகருவிகளின் செயற்பாடு போன்றவை தேர்வுக்கு உட்படுத்தப்படும். இந்தியா அமெரிக்காவிற்கும்
பிரான்சையும் அடுத்து 1957-ம் ஆண்டில் இருந்தே விமானம் தாங்கிக் கப்பலைப் பயன் படுத்துகின்றது.
விமானம்
தாங்கிக் கப்பல்களின் வகைகள்
ஒரு விமானம்
தாங்கிக் கப்பலின் திறன் அது தாங்கிச் செல்லும் விமானங்களின் எண்ணிக்கையிலும் திறனிலும்
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எந்தனை விமானங்கள் அதிலிருந்து பறந்து செல்லும் போன்றவற்றில்
தங்கியிருக்கின்றன. விமானம் தாங்கிக் கப்பல்களை மூன்றாக வகைப்படுத்தலாம்: 1. மீகை-
விமானம் தாங்கிக் கப்பல்கள் (Super-carriers) இவை 100,000 தொன் எடையுள்ளவை. 90 விமானங்களைக்
கொண்டவை. 2. நடுத்தர விமானம் தாங்கிக் கப்பல்கள். இவை 40,000 தொன் எடையுடவை. 40 விமானங்களைக்
கொண்டவை. 3. தாழ்ந்த தரமான விமானம் தாங்கிக் கப்பல்கள் இவை விமானம் தாங்கிக் கப்பல்
உற்பத்தியிலும் கடற்போரிலும் அனுபவமில்லாத நாடுகள் வைத்திருக்கும் கப்பல்கள். இரசியா
கடற்போர் அனுபவம் குறைந்த நாடு. சீனா கடற்போர் அனுபவமில்லாத நாடு.
செலவு
மிக்க வி/தா கப்பல்கள்
1988இல்
இரசியா 70விமானங்கள் தாங்கிச் செல்லக்கூடிய 85,000 தொன் எடையுள்ள அணுவலுவில் இயங்கும்
விமானம் தாங்கிக் கப்பலை கட்ட முடி செய்திருந்தது. ஆனால் அதைப் பின்னர் கைவிட்டது.
அதில் இரசியா சந்திக்கவிருக்கும் நிதிப் பிரச்சனை தொழில்நுட்பப் பிரச்சனை ஆகியவற்றைக்
கருத்தில் கொண்டு திட்டம் கைவிடப்பட்டது. சீனாவிடம் லியோனிங் என்னும் விமானம் தாங்கி
கப்பல் உள்ளது. அது மேலும் ஒன்றை நிர்மாணித்துக் கொண்டிருக்கின்றது. இந்தியாவின் ஐ.எஸ்.எஸ்
விக்ராந்த 23,000 கோடி ரூபாக்களில் உருவாக்கப்பட்டது. அமெரிக்காவின் யூ.எஸ்.எஸ்.
ஜெரால்ட் ஆர் ஃபோர்ட் விமானம் தாங்கிக் கப்பலிற்கான மொத்தச் செலவு $12.8பில்லியன்.
அரசுறவில் பெரும் பங்கு வகிக்கும் விமானம்
தாங்கிகள்
அமெரிக்கா 11 விமானம் தாங்கிக் கப்பல்களையும்
சீனாவும் இந்தியாவும் பிரித்தானியாவும் இத்தாலியும் இரண்டு விமானம்
தாங்கிக்கப்பல்களையும் பிரேசில், இரசியா, பிரான்ஸ், ஸ்பெயின், தாய்லாந்து ஆகியவை ஒரு விமானம் தாங்கிக்
கப்பல்களையும் வைத்திருக்கின்றன. சீனா தனது மூன்றாவது விமானம் தாங்கிக் கப்பலை
நிர்மாணித்துக் கொண்டிருக்கின்றது. 2030-ம் ஆண்டு சீனா ஐந்து அல்லது ஆறு விமானம்
தாங்கிக் கப்பல்களை வைத்திருக்கும் என எதிர் பார்க்கப்படுகின்றது.ஹென்றி கிஸ்ஸிங்கர்:
ஒரு விமானம் தாங்கிக் கப்பல் 100,000 தொன் அரசுறவுக்கு ஈடானது. (An aircraft
carrier is 100,000 of diplomacy)
இரண்டும்
தேறின
2021
ஓகஸ்ட் மாதம் உள்ள கணக்கின்படி உலகில் 41 விமானம் தாங்கிக் கப்பல்கள் உள்ளன. அதில்
11 அமெரிக்காவிற்கு சொந்தமானது. அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல்கள் அணுவலுவில் இயங்கும்
பாரிய அளவிலானவை. ஒவ்வொன்றும் 80விமானங்களைக் காவிச்செல்ல வல்லவை. அமெரிக்காவின் USS
GERALD FORD கப்பலுக்கு அருகில் மூன்று தடவை குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டு பரிசோதனைகள்
மேற்கொள்ளப்பட்டது. மூன்றாவது வெடிப்பு 3.9ரிக்டர் அளவுகோல் பூமி அதிச்சிக்கு ஈடானது.
Kochin Shipyard Ltd என்னும் இந்திய அரசுக்கு சொந்தமான நிறுவனம் இந்தியாவின் விக்ராந்தை
உற்பத்தி செய்துள்ளது. அதற்கான கடற் கடற்தேர்வுகளில் அது தேறியுள்ளதாக இந்தியக் கடற்படை
அறிவித்தது. விக்ராந்த் வெடிப்புக்கு உள்ளாக்கி தேர்வு செய்யப்பட்டுள்ளதா எனத் தகவல்
இல்லை.
மலையும் மடுவும்
262மீட்டர்
நீளம் 62மீட்டர் அகலம். 14அடுக்குகள், 2300 அறைகள் கொண்டது விக்கிரந்த். அதில்
1700பேர் செயற்படுவர். விக்ராந்தின் மிதப்பு வேகம் 18கடல் மைல்கள். அதி உயர் வேகம்
28கடல் மைல்கள்.அமெரிக்க
ஃபோர்ட் வகை விதா கப்பல்களில் 25 அடுக்குகள், வேகம் 30கடல் மைல்கள். அது 4539ஆளணிகளையும்
2700 அறைகளையும் கொண்து. ஃபோர்ட் கப்பல்கள் குறைந்த அளவு ஆட்கள் தேவைப்படும் அளவிற்கு
பல தானியங்கி முறைமைகளைக் கொண்டுள்ளது.
விமானங்கள் கப்பலில் இருந்து பல்வேறு வழியில் கிளம்பிச்செல்லும்:
1. catapult-based launch system (CATOBAR)- பாரம்
குறைந்த விமானங்கள்
2. Short Take-Off, Barrier Assisted Recovery
(STOBAR)
3. Short Take-Off and Landing (STOL)
4. Vertical take-off and short landing (VSTOL)
விக்கிராந்த்தில் STOBAR முறைமை உண்டு. ஃபோர்ட்டில் VSTOL முறைமை செயற்படுகின்றது. அத்துடன்
மின்காந்த உந்து முறைமையும் பாவிக்கப்படுகின்றது. விக்கிராந்தில் மிக்-29கே அல்லது
தேஜஸ் போன்ற நான்காம் தலைமுறைப் போர்விமானங்கள் பயன்படுத்தப்படலாம். ஃபோர்ட்டில் ஐந்தாம்
தலைமுறைப் போர்விமானங்கள் ஈடுபடுத்தப்படும். நான்காம் தலைமுறைப் போர்விமானத்திற்கும்
ஐந்தாம் தலைமுறைப் போர் விமானத்திற்கும் உள்ள வித்தியாசம் பழைய விரல்விட்டு சுழற்றும்
தொலைப்பேசிக்கும் தற்போது உள்ள ஐ-போனுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் போன்றது. விக்ராந்த்
டீசல் மூலம் தன் வலுவைப் பெறுகின்றது. ஃபோர்ட் அணுவலுவால் இயக்கப்படுகின்றது. விக்ராந்த
தொடர்ச்சியாக 6000மைல்கள் பயணிக்கும். ஃபோர்ட் பயணிக்கும் தூரத்திற்கு வரையறை இல்லை
அது இருபது ஆண்டுகள் கடலில் பயணிக்கலாம்.
இந்தியாவிற்கு விக்ராந்த்அவசியம்
தேவை
இந்தியாவின் கரையோரம் 7516கிலோ மீட்டர் நீளமானது. சீனாவின் கரையோரம் 32,000கிலோ மீட்டர் நீளமானது. சீனாவின் கரையோரங்களில் உள்ள தென் கொரியா, ஜப்பான், வியட்னாம், பிலிப்பைன்ஸ்
ஆகிய நாடுகளை சீனா சமாளிக்க வேண்டியுள்ளது. இந்தியா பங்களாதேசம், மியன்மார், இலங்கை பாக்கிஸ்த்தான் ஆகிய நாடுகளை தன்
கரையோர அயல் நாடுகளாகக் கொண்டுள்ளது. இந்தியாவிற்கு கடல் வழியாக வந்த தீவிரவாதிகள்
2008-ம் ஆண்டு மும்பை நகரை தொடர்ந்து 64 மணித்தியாலங்கள் தாக்கினர். இந்தியா கடல்வழியாக தீவிரவாதிகளின்
அச்சுறுத்தலையும் எதிர் கொள்கின்றது. இந்தியாவின் அடுத்த விமானம் தாங்கி கப்பலாக
விகிரமாதித்தியா வரவுள்ளது. அமெரிக்கா ஃபோர்ட் போன்று மேலும் பத்து கப்பல்களை உருவாக்கவுள்ளது.
அமெரிக்காவின்
ஃபோர்ட் வகை வி/தா கப்பல்களிற்கு முந்திய தலைமுறைக் கப்பல்களான நிமிட்ஸ் வகைக் கப்பல்களை
அழிக்க்க் கூடிய ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை சீனா உருவாக்கியது. அவற்றைத் தடுக்க அமெரிக்கா
தனது வி/தா கப்பல்களை பாதுகாக்கும் ஆழி பேர்க் வகை நாசகாரக் கப்பல்களில் சிறந்த ரடார்களையும்
ஏவுகணை எதிர்ப்பு முறைமையையும் இணைத்துள்ளது. அதனால் சீனா பாரிய எண்ணிக்கையில் குளவித்
தாக்குதல் பாணியில் அமெரிக்க வி/தா கப்பல்களில் மீது தாக்குதல் செய்யும் திட்டத்துடன்
உள்ளது. அதை முறியடிக்க அமெரிக்கா லேசர் படைக்கலன்களைப் பாவிக்கவுள்ளது. ஆனால் பாவம்
இந்தியாவின் விக்ராந்த் சீன ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளுக்கு நின்று பிடிக்குமா?
காளி அம்மாள் காப்பாற்றுவாளா?
இந்தியாவின்Defence Research and Development Organisation (DRDO)யும் Bhabha Atomic Research Centre (BARC)உம் இணைந்து இலத்திரன் அதிர்வுகளை வீசும் கருவிகளை உருவாக்கியுள்ளன. அதற்குப் பொருத்தமாக காளி எனப் பெயரும் சூட்டியுள்ளனர். Kilo Ampere Linear Injectorஎன்பதன் முதலெழுத்துக்களே காளி என அழைக்கப்படுகின்றது. அது எதிரியின் ஏவுகணைகளை நோக்கி pulses of Relativistic electron beamஇலத்திரன் அதிர்வுகளைக் கொண்ட கதிர்களை வீசும். லேசர் கதிர்கள் எதிரியின் இலக்கில் துளையிடும். ஆனால் இந்தியாவின் காளியின் கதிர்கள் எதிரியின் இலக்கில் படும் போது அவற்றின் இலத்திரனியல் செயற்பாட்டை முற்றாக அழிக்கும். அதனால் ஏவுகணை செயலிழந்து போகும். எதிரியின் விமானங்கள் மற்றும் பல எண்ணிக்கையில் வரும் ஆளில்லா விமானங்களையும் காளி இடைமறித்து அழிக்கக் கூடியது. KALI 80, KALI 200, KALI 1000, KALI 5000 and KALI 10000 என இந்திய தொடர்ச்சியாக காளியை மேம்படுத்திக் கொண்டிருக்கின்றது. அந்த வழியில் தொடர்ச்சியாக முயன்று கொண்டிருந்தால் இந்தியாவால் நுண்ணலைக் கதிர்களை (Microwave) உற்பத்தி செய்யும் படைக்கலன்களை விரைவில் உருவாக்க முடியும்.ஒளியின் வேகத்தில் பாயும்நுண்ணலைக் கதிர்கள் மூலம் எதிரியின் ஏவுகணைகளையும் விமானங்களையும் இடையில் வைத்தே கருக்கி அழிக்க முடியும்.